ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

+5
VIJAY
தாமு
ரூபன்
mdkhan
Tamilzhan
9 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Empty பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

Post by Tamilzhan Wed Dec 02, 2009 12:12 am

First topic message reminder :

அனிதா உபயோகிக்கும் செல்போனுக்கு அடிக்கடி `ராங் கால்' ஒன்று வந்து கொண்டிருந்தது. எதிர்முனையில் பேசிய ஆண், தனது பெயரை கேட்க முயற்சிப்பது அவளுக்கு நன்றாகவே தெரிந்தது.
அடிக்கடி அந்த `ராங் கால்' வந்ததால் என்னவோ, அந்த செல்போன் எண் அவளது மனதில் அப்படியே பதிந்தும் போய்விட்டது.
அன்றும் வழக்கம்போல் அதே `ராங் கால்' வந்தது. அனிதாவுக்கு வந்த கோபத்திற்கு, அந்த நபரை கடித்து குதற வேண்டும் என்பதுபோல் இருந்தது.
எடுத்த எடுப்பிலேயே, "உங்களுக்கு வேறு வேலையே கிடையாதா? நீங்கள் எதிர்பார்க்கும் பெண் நான் இல்லை என்று எத்தனை தடவைதான் சொல்வது?'' என்று கேட்டு, விளாசுவிளாசு என்று விளாசிவிட்டாள்.

`ராங் கால்' பார்ட்டிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பல நேரங்களில் நம்பரை பார்த்த மாத்திரத்தில் இணைப்பை துண்டித்து விடுபவள், இன்று ஏகத்துக்கும் எகிறிப் பேசியதால், அவனுக்கு தலைக்கு மேலே பேன் ஓடியும் வியர்த்துப்போனான்.
டாப் கியரில் போன அனிதாவின் `அர்ச்சனை'களால் அவனே செல்போன் இணைப்பை துண்டித்துக் கொண்டான். இனி, அவளுக்கு `ராங் கால்' பேசுவது இல்லை என்றும் அப்போதே முடிவெடுத்தும் கொண்டான்.

இரண்டு நாள் ஓடியிருக்கும்.

அனிதா, தன்னை அறியாமலேயே அந்த அவஸ்தையால் தவித்துக் கொண்டிருந்தாள். `ராங் கால் தானே கொடுத்தான்? அதுக்கு இவ்வளவு கேவலமாக அவனை திட்டியிருக்க வேண்டுமா?' என்று தனக்குள்ளேயே அடிக்கடி கேட்டுக்கொண்டாள்.
அந்த `ராங் கால்' பார்ட்டியிடம் ஒரு சின்ன சாரியாவது அவளுக்கு கேட்க வேண்டும் என்பதுபோல் தோன்றியது. உடனே, தனது பேக்கிற்குள் போட்டிருந்த செல்போனை எடுத்தாள். போன் புக்கிற்குள் வேகமாக நுழைந்து ஒரு நம்பரை `கிளிக்' செய்தாள். `மிஸ்டர் ராங் கால்' என்று அதில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.

அதைப் பார்த்த மாத்திரத்தில் அவளுக்கு சட்டென்று சிரிப்பு வந்தது. முந்தையநாள் இரவுதான், ராங் கால் பார்ட்டியின் செல்போன் நம்பரை அப்படி டைப் செய்து பதிவு செய்திருந்தாள்.
அந்த நம்பருக்கு டயல் செய்ய ஆன் பட்டனை அழுத்த முயன்றாள். ஆனால், என்ன நினைத்தாளோ, டயல் செய்யாமல் விட்டுவிட்டாள்.

`எவனோ ஒருவன்தானே அவன்? அவனுக்கு ஏன் நான் போன் செய்து சாரி கேட்க வேண்டும்?' என்று எண்ணிக்கொண்டே, பேக்கிற்குள் இருந்து எடுத்த செல்போனை, அதற்குள் மீண்டும் போட்டுவிட்டாள்.
அன்று அலுவலகத்தில் அனிதாவுக்கு வேலையே ஓடவில்லை. பலநேரங்களில், அந்த ராங் கால் பார்ட்டியின் கற்பனை வடிவம்தான் வந்துவிட்டுப் போனது.

எத்தனை நாட்களுக்குத்தான் இந்த அவஸ்தையால் தவிப்பது? என்று யோசித்தவள், அன்று இரவுக்குள் ஒரு தீர்க்கமான முடிவு எடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்துகொண்டாள்.
இரவு அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பி, சாப்பிட்டு முடித்துவிட்டு, `அப்பாடா...' என்று பெட்டில் சோம்பலாய் வந்து விழுந்தபோது மணி எட்டை தாண்டியிருந்தது.

அவளது அப்பா வெளியில் சென்றிருந்தார். அம்மா, பக்கத்து வீட்டு மாமி அழைத்ததால் அவரது வீட்டிற்கு சென்றிருந்தாள். ஒரே பெண் என்பதால், அப்போது அனிதா மட்டுமே வீட்டில் இருந்தாள்.
இதுதான் ராங் கால் பார்ட்டியிடம் `சின்ன சாரி' கேட்க சரியான நேரம் என்று உறுதி செய்தவள், அந்த மிஸ்டர் ராங் கால் நம்பரை டயல் செய்தாள். எதிர்முனையில் ரிங் போவது இவளுக்கு நன்றாகவே கேட்டது.

சட்டென்று என்ன நினைத்தாளோ, இணைப்பை துண்டித்துவிட்டாள். அவளது நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று படபடத்தது.
`நாம் செய்வது சரிதானா? இல்லை... தவறா? என்றே தெரியவில்லையே...' என்று, அந்த படபடப்பிலும் தலையை பிய்த்துக் கொண்டாள்.அடுத்த நொடியே அழகான மெல்லிசை பாடலோடு சிணுங்கியது அவளது செல்போன். வேகமாக அதை எடுத்துப் பார்த்தாள். மிஸ்டர் ராங் கால் பார்ட்டியிடம் இருந்து அழைப்பு வந்து கொண்டிருந்தது.

செல்போனை ஆன் செய்யவா? அல்லது ஆப் செய்யவா? என்று, அந்த சில நொடிகளில் அவளுக்குள் ஒரு பட்டிமன்றமே ஓடிக்கொண்டிருந்தது. அதற்குள் ரிங் கட் ஆகிவிட்டது.
அனிதாவுக்குள் படபடப்பு லேசாக தணிந்தபோது, மீண்டும் சிணுங்கியது அவளது செல்போன். பார்த்தாள்... அதே ராங் கால் பார்ட்டிதான்.தைரியத்தை வரவழைத்துக்கொண்டவள் செல்போனை ஆன் செய்தாள். எதிர்முனையில் ராங் கால் பார்ட்டியே முதலில் பேசினான். அவனுக்குள் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டு இருந்தது, அவனது மகிழ்ச்சியான பேச்சிலேயே தெரிந்தது.

"நான்தாங்க அருண் பேசுறேன். நீங்க என் நம்பருக்கு டயல் செய்வீங்க, நான் உங்ககிட்ட பேசுவேன்னு நெனைக்கவே இல்லீங்க...'' என்ற அவனது பேச்சில் சந்தோஷம் வெள்ளப்பெருக்காக ஓடிக்கொண்டிருந்தது.
அனிதாவுக்கு பேச்சு வர மறுத்தாலும், நிதானமாக பேசினாள்.

"நான் அன்னிக்கு உங்களை மோசமான வார்த்தைகளால திட்டிட்டேன். அது தப்புன்னு பிறகுதான் தோணுச்சு. அதுக்கு ஒரு சாரி கேட்கலாமேன்னுதான் உங்களுக்கு டயல் பண்ணினேன்...'' என்ற அனிதாவின் வார்த்தைகளில் இருந்த மென்மை அருணுக்கு இன்னும் சந்தோஷத்தை கொடுத்தது.
அவனும், தான் `ராங் கால்' கொடுத்தது தப்புதான் என்று கூறி அவளிடம் இறங்கி வந்தான். இவளோ, நான் திட்டினதுதான் தப்பு என்று சற்று இறங்கிப்போனாள்.

கடைசியில், இருவரும் மாறி மாறி சாரி கேட்டுக்கொண்டு, தங்களைப் பற்றிய விவரங்களை லேசாக பகிர்ந்துகொண்டு, இணைப்பை துண்டித்துக்கொண்டனர்.

மறுநாள் காலையில் அருணிடம் இருந்து அனிதாவின் செல்போனுக்கு மெசேஜ் ஒன்று வந்திருந்தது. அதை திறந்து பார்த்தாள்... படித்தாள்...! அவளுக்குள் சட்டென்று ஒரு பரவசம் பொங்கி அமிழ்ந்து போனது.
ஆம்... அருண் அனுப்பி இருந்த தத்துவ வரிகள் அனிதாவுக்கு ஏற்கனவே பிடித்தமான வரிகள். அந்த வரிகளை எதிர்பாராமல் பார்த்த அவளுக்கு இன்ப அதிர்ச்சியாகத்தான் இருந்தது. பதிலுக்கு, ஒரு நன்றியுடன் அருணுக்கு இவளும் ஒரு மெசேஜை அனுப்பி வைத்தாள்.

நாட்கள் வேகமாக கடந்தன. இருவரும் செல்போன் மூலம் அடிக்கடி பேசி தங்கள் நட்பை வளர்த்தனர். அந்த நட்பே காதலாகவும் மலர்ந்தது. ஒருநாள் குறிப்பிட்ட இடத்தில் சந்தித்து பரவசப்பட்டார்கள்.
ஏற்கனவே இருவரும் மனதால் நெருங்கிவிட்டதால், அவர்களது தோற்றங்கள் பிரச்சினையை தரவில்லை. ஆனால், வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால்

காவல்நிலையத்தில் கரம் பிடிக்க வேண்டியதாயிற்று.

- இந்த சம்பவம் ஒரு உண்மை சம்பவம்தான்.
இன்றைய சூழ்நிலையில் மலரும் பெரும்பாலான காதல்களுக்கு முக்கிய காரணமே இந்த செல்போன்தான். இதே செல்போனால் உண்மைக் காதலும் மலரலாம், `டைம் பாஸ்' காதலும் வந்து, சோகத்தை தந்துவிட்டு போகலாம்.

உங்களுக்குள் சின்னதாக சுயபரிசோதனை செய்துகொண்டால், ராங் கால் காதலில் உறுதியான முடிவு எடுக்கலாம்.

* எதிர்முனையில் பேசுபவர் திருமணம் ஆனவரா? ஆகாதவரா? என்பதை உடனே உறுதி செய்ய முடியாது. உண்மைகள் மறைக்கப்படலாம்.

* நீங்கள் நல்ல பொறுப்பில் உள்ளவராக, நல்ல குடும்பத்தில் பிறந்தவராக இருக்கலாம். ஆனால், எதிர்முனையில் முகம் தெரியாமல் பேசுபவர், தன்னை நல்லவர், வல்லவர், நாணயமானவர் என்றெல்லாம் பொய் சொல்லலாம்.

* சிலநேரங்களில், உங்களை எங்கேயோ பார்த்து, உங்கள் மீது ஆசை கொண்டு, அதன்தொடர்ச்சியாக எப்படியோ உங்கள் செல்போன் நம்பரை கண்டறிந்து, உங்களை அடைவதற்காக அவர் பேசலாம்.

* ராங் கால் போட்டு பேசுவதில் சுகம் காணும் நபர்களும் இருக்கிறார்கள். இவர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது முக்கியம்.

* நெருங்கிப் பழகுபவர்களையே நம்ப முடியாத இந்த காலத்தில், யாரென்றே தெரியாத நபரிடம் நட்பு பாராட்டுவது சரிதானா?

- இந்த கேள்விகளை உங்களுக்குள் கேட்டு, சிந்தித்துப் பார்த்தாலே தெளிவான விடை கிடைக்கும்.
முக்கியமாக, பெண்கள் தங்கள் செல்போனுக்கு ராங் கால் வந்தால் அதுபற்றி போலீசில் புகார் செய்துவிடுங்கள். மேற்கொண்டு அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

அதைவிட்டுவிட்டு, ராங் கால் பார்ட்டியிடம் நட்பு வளர்ப்பது, காதல் கொள்வது பெரும்பாலும் பிரச்சினையையே ஏற்படுத்தும். அனிதா விஷயத்திலும் அப்படித்தான். அவளின், இந்த காதலால் குடும்பத்தையே பிரிய நேரிட்டது.

எப்படித்தான் அலசி ஆராய்ந்து பார்த்தாலும், `ராங் கால்' நட்பு - காதல் 99.99 சதவீதம் பிரச்சினையைத்தான் தரும். இதுதான் நடைமுறை உண்மை.
உங்கள் செல்போனுக்கும் எதிர் பாலினரிடம் இருந்து `ராங் கால்' வந்தால் உஷாராகி விடுங்கள். எச்சரிக்கையாகவும் இருங்கள்!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down


பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Empty Re: பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

Post by ராஜா Wed Dec 02, 2009 11:20 am

Tamilzhan wrote:சதிஷ் அப்படி செய்யமாட்டார் சவுதியில பயங்கரமானசட்டம் இருக்கு அங்கே இழுத்து வச்சி அறுத்துடுவாங்க...! பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Icon_lol

எத ?
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Empty Re: பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

Post by Tamilzhan Wed Dec 02, 2009 11:21 am

அத...! பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Empty Re: பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

Post by சதீஷ்குமார் Wed Dec 02, 2009 11:22 am

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 705463 பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 705463 பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 705463
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Empty Re: பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

Post by ராஜா Wed Dec 02, 2009 11:25 am

Tamilzhan wrote:அத...! பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Icon_lol

ஓ... அதா ?!!! பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 230655 பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 230655
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Empty Re: பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

Post by சதீஷ்குமார் Wed Dec 02, 2009 11:29 am

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 755837
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Empty Re: பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

Post by Tamilzhan Wed Dec 02, 2009 11:29 am

ஓடுனாலும் விடமாட்டாங்க ஓட ஓட அறுப்பாங்க... பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Empty Re: பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

Post by ராஜா Wed Dec 02, 2009 11:32 am

Tamilzhan wrote:ஓடுனாலும் விடமாட்டாங்க ஓட ஓட அறுப்பாங்க... பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Icon_lol

இனிமேல் சதீஷ் அவர் மொபைல்ல இருந்து outgoing கால் பண்ணவே மாட்டாரு(ராங்
நம்பர் யாருக்காவது போச்சுன்னா ) , ஒன்லி இன்கமிங் கால் மட்டும் தான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Empty Re: பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

Post by Tamilzhan Wed Dec 02, 2009 11:33 am

அப்போ நம்பர் என்னானு சொல்லுங்க நம்ம போன் பேசி கலாச்சுடுவோம்..! பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Icon_lol


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Empty Re: பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

Post by சதீஷ்குமார் Wed Dec 02, 2009 11:37 am

அப்படியெல்லாம் இல்லையே ,

மாட்டிகாம ஒடுவொமுல்ல‌ பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 230655
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Empty Re: பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

Post by அபிராமிவேலூ Wed Dec 02, 2009 11:37 am

செல்போனில் மட்டும் அல்ல தோழர்களே இன்டெர் நெட் சாட்டிங்கிலும் இதன் பிரச்சனை சற்று அதிகமாகவே உள்ளது


வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 7cc6bbddf869102c5cb6f3e
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Back to top Go down

பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..! - Page 2 Empty Re: பெண்களை கவிழ்க்கும் `தப்பான' அழைப்புகள்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum