ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!

4 posters

Go down

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! Empty அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!

Post by ayyasamy ram Thu May 25, 2017 4:51 am


அரசியல் செய்யாமலேயே கட்சி தொடங்காமலேயே தமிழகத்தில்
அரசியல் தலைவர்களுக்கு நிகராக பேசப்படும் நபராக
உருவாகியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

டீசர், ட்ரெய்லர், மெயின் பிக்சர் இப்படி ஒரு படத்துக்கு பரபரப்பு
கூட்டுவதுபோல், ரஜினியும் 'ஆண்டவன் நினைத்தால் வருவேன்',
'போர் வரும்போது சந்திப்போம்' என்றெல்லாம் பேசி அவரது
அரசியல் பிரவேசத்துக்கான எதிர்பார்ப்பை ஒரு மெயின்
பிக்சருக்கான எதிர்பார்ப்பைப் போல் அதிகரித்து வைத்திருக்கிறார்.

மெயின் பிக்சர் வெற்றி எப்படி ரசிகர்கள் கையில் இருக்கிறதோ
அப்படித்தான் ரஜினியின் அரசியல் வெற்றி மக்கள் அளிக்கும்
வாக்குகளில் இருக்கிறது.

ரஜினியின் அரசியல் வெற்றி தோல்வி எல்லாவற்றையும் மக்கள்
தீர்மானிக்கட்டும். ஆனால், அதற்குள்ளதாகவே அவரை
அரசியல்வாதியாகவே தீர்மானித்துவிட்டனர் அவரது ரசிகர்கள்.

அதற்கான அச்சாரம்தான் போயஸ் கார்டனை ஆக்கிரமித்து இருக்கும்
ரஜினி போஸ்டர்கள்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் போயஸ் கார்டன் பரபரப்பு
முற்றிலுமாக அடங்கிவிட்டது. அதிமுக தொண்டர்கள் இல்லை,
ஜெயலலிதாவுடனேயே இருந்த சசிகலாவும் இல்லை அவருடைய
உறவினர்களும் அங்கு வருவதில்லை.

தமிழகத்தின் அரசியல் அடையாளமாக இருந்த போயஸ் கார்டன்
இப்போது மற்றுமொரு குடியிருப்புப் பகுதியாக மட்டுமே இருக்கிறது.

ஆனால் மே 15-ம் தேதி தொடங்கி மே 20 வரை 5 நாட்கள்
ரஜினிகாந்த் அவரது ரசிகர்களை சந்தித்து அரசியல் பற்றி பூடகமாக
ஒருசில வார்த்தைகள் சொல்லிவைத்ததில் இருந்து மீண்டும்
போயஸ் கார்டனில் போஸ்டர்கள் வரத் தொடங்கியுள்ளன.

போயஸ் கார்டனில் இம்முறை இருப்பவை 'அம்மா' போஸ்டர்களோ
அதிமுக போஸ்டர்களோ இல்லை அத்தனையும் ரஜினிகாந்த்
போஸ்டர்கள்.

'ஏழைகளின் முதல்வரே.. போருக்கு தயார்...
மக்கள் வாழ நீங்கள்தான் ஆள வேண்டும்.. இந்திய அரசியல்
வான் கண்ட அற்புதம்' போன்ற வாசகங்களுடன் விதவிதமான
போஸ்டர்கள் போயஸ் கார்டனை அலங்கரித்துள்ளன.

ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தேவிட்டார் என்று வைத்துக்
கொள்வோம். அப்போது மீண்டும் பின்னி சாலையில் போலீஸ்
பாதுகாப்பு அதிகரிக்கும். போயஸ் கார்டனுக்கு 'தொண்டர்களாக
மாறிய ரசிகர்கள்' வந்து செல்ல நேரிடும்.

கால்ஷீட் தேதி ஒதுக்கிய ரஜினிகாந்த் கட்சி பொதுக்கூட்டத்துக்கான
தேதிகளை முடிவு செய்ய வேண்டியிருக்கும். அறிக்கைகள் வெளியிட
வேண்டியிருக்கும். மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங்கள்
நடத்த வேண்டியிருக்கும்.

போராட்டங்கள் எல்லாம் ஏசி ஹாலில் நடத்த முடியாது என்பதை
ரஜினி உணர்ந்திருக்க வேண்டும்.

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ரஜினியின் அரசியல் பிரவேசம்
தனிக்கட்சியா அல்லது தேசியக் கட்சியுடனான இணைப்பா என்பதைப்
பொருத்து ஊடகங்களுக்கான பேட்டியும் மாறும். இவையெல்லாம்
அனுமானங்களே.

ஆனால் வெறும் அனுமானங்களைக்கூட உணர்வுபூர்வமாக அணுகும்
ரசிகர்களால் தான் இன்று போயஸ் கார்டனுக்கு மீண்டும் ஓர் அரசியல்
மேக் ஓவர் கிடைத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் சில தினங்களுக்கு முன்னர் தமிழர் முன்னேற்றப்
படையினர் ரஜினி உருவ பொம்மையை எரித்துப் போராடியது
போயஸ் கார்டன் செல்லும் வழியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.

சசிகலா சிறை சென்ற பின்னர் யாரும் கண்டுகொள்ளாத ஏரியாவாக
இருந்த போயஸ் கார்டன், பின்னி சாலை பகுதியெல்லாம் நீண்ட
நாட்களுக்குப் பிறகு அன்றுதான் மீடியா வெளிச்சத்துக்கும் போலீஸ்
கவனத்துக்கும் வந்தன.

ஒற்றைக் கருத்தை சூசகமாக ரஜினி சொல்லிச் சென்றுவிட,
அது குறித்தே இன்றுவரை எல்லோரும் பேசிக் கொண்டிருப்பது
என்னவோ ரஜினி சொன்னது போல், ஒரு விதையை மண்ணில்
புதைத்ததோடு நிறுத்தாமல் அது வளர்ந்து துளிர்விட மேல்பரப்பை
செம்மைப்படுத்துவதுபோல் அமைந்துள்ளன ரஜினி மீதான
விமர்சனங்களும் ரஜினிக்கு எதிரான போராட்டங்களும்.

ஆனால் ஒரு தொண்டனுக்கும் ரசிகனுக்கும் நிறையவே வித்தியாசம்
இருக்கிறது. ஓர் இயக்கத்தின் மீதான காதலால் அதனுடன் தனது
மூச்சையும் எண்ணத்தையும் செயல்பாட்டையும் இணைத்துக் கொள்பவன்
உயிர்த்தொண்டன். அவனை அவ்வளவு எளிதாக அசைத்துப்பார்க்க
முடியாது. அந்த இயக்கத்தின் தலைமை மாறினாலும் தொண்டர்களின்
பலம் குறையாது.

ஆனால், ரசிகன் தனிப்பட்ட ஆளுமையின் ஈர்ப்பு விசையால்
உருவானவன்
ரசிகனுக்கு சலிப்பு ஏற்படலாம். ரசிகனின் விருப்பம் மாறலாம்.
ரசிகனைத் தக்க வைத்துக்கொள்ள அவன் எதிர்பார்ப்புக்கு
ஏற்றவாறெல்லாம் அந்த ஆளுமை வளைந்து கொடுக்க வேண்டியிருக்கும்.

எனவே, போயஸ் தோட்டத்தில் திடீரென முளைத்துள்ள போஸ்டர்கள்
ரஜினிக்கு அரசியல் உத்வேகம் அளித்தாலும்கூட தொண்டனாக மாறிவரும்
ரசிகனை தக்கவைத்துக் கொள்ள ரஜினி நிறையவே மெனக்கெட வேண்டும்
என்பது நிதர்சனம்.
-
பாரதி ஆனந்த்
படங்கள்: எல்.சீனிவாசன், தி இந்து

---------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! Empty Re: அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!

Post by ayyasamy ram Thu May 25, 2017 4:53 am


ரஜினிகாந்த் போஸ்டர்கள் சில..
--
அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! UU5CwkFfRXKCt4ALqudf+rr3_3167728a
-
அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! 0yN1mP4uTsHigtnBwgjw+rr4_3167729a
-
அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! J5pe7zMwS1O9KiOWEFIU+rr5_3167733a
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! Empty Re: அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!

Post by ayyasamy ram Thu May 25, 2017 4:55 am

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! PH8lHso9QkmELjMHyn73+rr6_3167734a
-
அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! Fm3LNuYEQ5Iel8uGjkuF+top_3_3167769g
-
அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! QxlWrG0Q26mkta2Mk8cg+top_1_3167767g
-
அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! EW9jKlfyQX23NAk0GdwY+top_2_3167768g
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83920
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! Empty Re: அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!

Post by M.Jagadeesan Thu May 25, 2017 6:49 am

இன்னும்கூட அரசியலுக்கு வருவது குறித்து ரஜினிகாந்த் தெளிவாகப் பேசவில்லை . நண்டு வளையில் இருக்கிறதா என்பதை அறிய , நரி தன் வாலைவிட்டு ஆட்டிப் பார்க்குமாம். அதுபோல தான் அரசியலுக்கு வருவதாக அறிவித்தால் , மக்களிடையே , தலைவர்களிடையே எப்படிப்பட்ட ஆதரவு மற்றும் எதிர்ப்புகள் இருக்கும் என்பதை அறிந்துகொள்ளவே இந்த போர்ப் பிரகடனத்தை ரஜினி செய்திருக்கிறார் .

இன்னும் சில நாட்களுக்கு இந்தப் பேச்சு இருக்கும் . அவருடை படம் வெளிவந்தவுடன் எல்லாம் அடங்கிவிடும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! Empty Re: அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!

Post by T.N.Balasubramanian Thu May 25, 2017 8:12 am

கஷ்டமிகு நாட்கள் தமிழகத்திற்கு !

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! QW9g4PH9TJiZy5JQaIdy+18619933_1788303668150099_797254031111484713_n

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! Empty Re: அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!

Post by இரா.மூர்த்தி Thu May 25, 2017 4:15 pm

சினிமாவில் தலைவனை தேடும் தமிழன் இருக்கும் வரை தமிழ்நாடு முன்னேறாது


வெல்க தமிழ் !
இரா.மூர்த்தி
இரா.மூர்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 63
இணைந்தது : 08/07/2014

Back to top Go down

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! Empty Re: அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!

Post by M.Jagadeesan Thu May 25, 2017 7:34 pm

கட்சி தொடங்குவது சம்பந்தமாக முக்கிய தலைவர்களுடன் ரஜினி ஆலோசித்து வருகிறாராம் . திரு . வைகோ அவர்கள் ஜாமீனில் வெளியே வந்திருப்பது , ரஜினிக்கு ஆலோசனை வழங்குவதற்காகத்தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு! Empty Re: அவர் எப்ப வருவார்.. எப்படி வருவார்னு தெரியாது.. ஆனால் போயஸ் கார்டனில் போஸ்டர் வந்தாச்சு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» போயஸ் கார்டனில் பாதாள அறையா?
» போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் சசிகலா!
» போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்தித்தார் அருண் ஜெட்லி
» சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
» போயஸ் கார்டனில் ரசிகர்களை நேரில் சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் ரஜினிகாந்த்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum