ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது

4 posters

Go down

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Empty ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது

Post by M.Jagadeesan Mon 22 May 2017 - 17:24

ஆமையிடம் தோற்றதிலிருந்து முயல் கடுகடுவென்று இருந்தது . தனக்குத்தானே புலம்ப ஆரம்பித்துவிட்டது .

" சே ! ஒரு சோம்பேறிப் பயலிடம் போய் தோற்றுவிட்டோமே ! எல்லா மிருகங்களும் என்னைக் கேலிசெய்ய ஆரம்பித்துவிட்டன . நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துவிடலாம் என்று இருக்கிறது . பேசாமல் அவன்பாட்டுக்கு சென்றுகொண்டிருந்தான் . நான்தான் வலியப்போய் வம்புக்கு இழுத்தேன் . என்னோடு ஓட்டப்பந்தயத்துக்கு வருகிறாயா ? என்று கேட்டேன் . முதலில் அவன் மறுத்தான் . நான்தான் விடாமல் அவனை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தேன் .  நான் ஓடுகின்ற ஓட்டத்திற்கு நானல்லவா ஜெயித்திருக்கவேண்டும் ! எல்லாம் என்னுடைய திமிர் , ஆணவம் , கர்வம் என்னைத் தோற்கடித்துவிட்டது . அந்தப் பாழாய்ப்போன தூக்கம் வந்திருக்காவிட்டால் நான்தான் ஜெயித்திருப்பேன் . காட்டு ராஜா சிங்கத்தையே கிணற்றில் தள்ளிக் கொன்றவன் நான் ! கேவலம் ஒரு ஆமையிடம் தோற்றுவிட்டேன் . எனக்கு ஏற்பட்ட இந்தக் களங்கத்தை நான் துடைத்தே ஆகவேண்டும் .

மீண்டும் அவனைப் போட்டிக்கு அழைத்து வென்று காட்டுவேன் . அப்போதுதான் போன மானம் திரும்ப வரும் . அதுவும் இன்றே போட்டிக்கு அழைப்பேன் ! "

என்று சொல்லிய முயல் ஆமையின் வீட்டுக்குச் சென்றது .

" அடேய் ! வெளியே வா ! உன்னுடன் கொஞ்சம் பேசவேண்டும் ! "

" யாரது ? "

" நான்தான் முயல் பேசுகிறேன் ; கொஞ்சம் வெளியில் வா ! உன்னுடன் பேசவேண்டும் ! "

ஆமை , மெதுவாக வெளியில் வந்து எட்டிப்பார்த்தது . முயலைக் கண்டதும்

" வாங்க ! முயலண்ணா ! என்ன இந்தப் பக்கம் ? "

" மறுபடியும் நாம் இருவரும் ஓட்டப்பந்தயம்  ஓடுவோம் ! அதுவும் இன்றே ஓடவேண்டும் ; தயாரா இரு ! '

" நேற்றுதானே ஓடினோம் ; மறுபடியும் ஏன் ஓடவேண்டும் ? இன்னொரு நாளைக்கு வைத்துக் கொள்ளலாமே ! "

" அதெல்லாம் முடியாது ; இன்றே ஓடவேண்டும் ! நரியே நடுவராக இருக்கட்டும் ! வா ! நரி வீட்டுக்குப் போவோம் . "

" இல்லை ; முயலண்ணா ! நேற்று பந்தயம் ஓடியது காலெல்லாம் வலிக்கிறது ; இன்று என்னால் முடியாது ; எனக்கு ஓய்வு தேவை . மேலும் இன்று மழை வரும்போல் இருக்கிறது . ஆகவே பந்தயத்தை நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் ."

" அதெல்லாம் முடியாது ; இன்றே பந்தயத்தை வைத்துக் கொள்வோம் ! வா ! நரியண்ணா வீட்டுக்குப் போவோம் . அவரே நடுவராக இருந்து பந்தயத்தை நடத்தட்டும் .

வேறு வழியின்றி , ஆமை வீட்டைப் பூட்டிவிட்டு முயலுடன் கிளம்பியது . இருவரும் நரியின் வீட்டை அடைந்தார்கள் .நரியிடம் பந்தயம் நடத்துவது பற்றி முயல் பேசியது .

அதற்கு நரி , " நேற்று நடந்த பந்தயத்தில் நீ தோற்றுப் போனாய் ! மறுபடியும் இன்று எதற்காகப் பந்தயம் நடத்தவேண்டும் ? "

" அதெல்லாம் முடியாது ; இன்று கண்டிப்பாக பந்தயத்தை நடத்தவேண்டும் . பந்தயத்தில் நான் ஆமையை வென்றால்தான் எனக்கு ஏற்பட்ட அவமானத்தை நான் போக்கிக் கொள்ளமுடியும் . மற்ற மிருகங்களிடம் தலை நிமிர்ந்து பேசமுடியும் ." என்றது முயல் .

நான் சொல்வதைக்கேள் ! இன்று மழை வரும்போல் இருக்கிறது ; நாளைக்கு வைத்துக் கொள்ளலாம் " என்றது நரி.

வேறு வழியின்றி முயல் ஒத்துக்கொண்டது .

' காலை 10 மணிக்கு வந்துவிடுங்கள் ; நேற்று ஓடிய இடத்திலேயே பந்தயத்தை வைத்துக்கொள்வோம் . எல்லா மிருகங்களுக்கும் சொல்லிவிடுகிறேன் ' என்றது நரி .
மறுநாள் காலை 10 மணி .

முயலுக்கும் , ஆமைக்கும் நடக்கும் ஓட்டப் பந்தயத்தைக் காண எல்லா மிருகங்களும் கூடிவிட்டன .
நடுவராக இருந்த நரி , ஊளையிட்டு ஓட்டப் பந்தயத்தை தொடங்கி வைத்தார் .

அவ்வளவுதான் ! முயல் பிய்த்துக்கொண்டு ஒடத் தொடங்கியது . ஆமை மெதுவாக நகரத் தொடங்கியது . ஆனாலும் நம்பிக்கையை இழக்கவில்லை . முயல் மிகவும் கர்வமாக திரும்பிப் பார்த்தது . ஆமை கிளம்பிய இடத்திலேயே இருந்தது . தன் வெற்றி உறுதி என்று நினைத்த முயல் கெக்கலி கொட்டி சிரித்தது . முயலுக்கு இன்னும் சில அடி தூரமே பாக்கியிருந்தது .  வெற்றிக்கம்பத்தைத் தொட்டுவிடுவோம் என்று முயல் நினைத்த மாத்திரத்தில் , அதற்கு அங்கே பேரிடி காத்திருந்தது . ஆம் ! முந்தாநாள் பெய்த மழையில் , வெள்ளம் பெருக்கெடுத்து ஆறுபோல் ஓடிக்கொண்டிருந்தது .அந்த ஆற்றைக் கடந்தால்தான் வெற்றிக் கம்பத்தைத் தொடமுடியும் . முயலுக்கு என்னசெய்வதென்று தெரியவில்லை . வேறுவழி ஏதாகிலும் இருக்கிறதா என்று சுற்றி சுற்றிப் பார்த்தது . எந்த வழியும் தென்படவில்லை .

இதற்கிடையில் ஆமை மெதுவாக முன்னேறிக் கொண்டிருந்தது . நேரம் சென்றுகொண்டே இருந்தது . முயலால் ஆற்றைக் கடக்கமுடியவில்லை . இதற்கிடையில் ஆமை ஆற்றின் அருகில் வந்துவிட்டது . எதிரே ஓடும் ஆற்றைப் பார்த்த ஆமை , கொஞ்சமும் அஞ்சாமல் , ஆற்றில் இறங்கி மறு கரையை  அடைந்தது . மிக எளிதாக வெற்றிக் கம்பத்தைத் தொட்டது . ஆமை மீண்டும் வெற்றி பெற்றதாக நரி அறிவித்தது .

முயலுக்கு அவமானம் தாங்க முடியவில்லை . எல்லா  மிருகங்களும் முயலைப் பார்த்து , " இது உனக்குத் தேவையா ? " என்று கேட்டன .

முயல் தனக்குள்ளே , " ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது " என்று முணு முணுத்துக் கொண்டது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Empty Re: ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது

Post by ayyasamy ram Mon 22 May 2017 - 20:03

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது 103459460 ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது 3838410834
-

இதன் மூலம் நாம் அறிவது :
நம்முடைய போட்டியாளரின் பலமறிந்து,
பிறகு தன்னுடைய பலத்திற்கேற்ப போட்டியிடும்
களத்தை முடிவு செய்ய வேண்டும்.
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83921
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Empty Re: ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது

Post by M.Jagadeesan Mon 22 May 2017 - 21:09

முதலைக்கு நீரிலே பலம் அதிகம் ; யானைக்கு நிலத்திலே பலம் அதிகம் . நீரிலுள்ள முதலையுடன் யானை போரிட்டால் தோற்றுத்தான் போகும் . நிலத்திலே போரிட்டால் யானை வென்றுவிடும் .எனவே  போரிடுவதில் பலத்தைக் காட்டிலும் , போரிடும் களம் முக்கியம் .

நெடும்புனலுள் வெல்லும் முதலை , அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற .

என்பார் ஐயன் வள்ளுவர் .

இந்தக் கதையைப் பொறுத்தவரையில் ஓடுகளம்  ஆமைக்கு சாதகமாக இருந்தது ; எனவே போட்டியில் வென்றுவிட்டது . முயலுக்குப் பாதகமாக இருந்தது ; அதனால் தோற்றுவிட்டது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Empty Re: ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது

Post by T.N.Balasubramanian Mon 22 May 2017 - 21:56

நல்ல கற்பனை M ஜெகதீசன்.
உங்கள் சிறு கதைகளை தொகுத்து புத்தகமாக வெளியிடுங்கள்.
வாழ்த்துகள் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Empty Re: ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது

Post by M.Jagadeesan Mon 22 May 2017 - 22:02

ஐயா !

தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Empty Re: ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது

Post by krishnaamma Mon 19 Jul 2021 - 1:13

மிக அருமையான கதை ஐயா புன்னகை.... சூப்பருங்க ,,,நான் கொஞ்சம் வேறு மாதிரி என் வீடியோவில் சொல்லி இருக்கிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது Empty Re: ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum