ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus )

3 posters

Go down

இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus ) Empty இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus )

Post by T.N.Balasubramanian Thu 18 May 2017 - 5:06

இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus )
10 அம்சங்கள்

இணையதள உலகிற்கு சவால் விடும் விதமாக உலகம் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட நாடுகளில்
3 லட்சத்திற்குள் அதிகமான கம்ப்யூட்டர்களை தாக்கி உள்ளது ரான்சம்வேர் வைரஸ். ஹேக்கர்களால்
பரப்பி விடப்பட்டு வரும் வான்னாக்ரை வைரசை பரப்ப உதவும் மால்சியஸ் சாப்ட்வேரே ரான்சம்வேர்
என கண்டறியப்பட்டுள்ளது.
ராம்சம்வேர் பற்றிய 10 விஷயங்கள் :
1. முதலில் இந்த வைரஸ் பரவலை கண்டுபிடித்துக் கூறியது ஆன்டிவைரஸ் நிறுவனமான அவஸ்த்தான்.
எடுத்த எடுப்பிலேயே இந்த வைரஸ் உலக அளவில் 75,000 கம்ப்யூட்டர்களை முடக்கி விட்டது. தற்போது
3 லட்சத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களை இது லாக் செய்துள்ளது.
2. படு வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்ப முழுமையான பாதுகாப்பு இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இண்டர்நெட் இணைப்பிலிருந்து கம்ப்யூட்டரை பிரித்து வைப்பது மட்டுமே
இப்போதைக்கு ஒரே தீர்வு என்கிறார்கள் இணையதள ஆய்வாளர்கள். ஃபயர்வால் மற்றும் ஆன்டி வைரஸ்
என எந்தத் தற்காப்பும் இந்த வைரசை தடுக்க கை கொடுக்கவில்லை என்பதே தற்போதைய நிலை. அதைத்
தாண்டி இந்த வைரஸ் படு வேகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
3. வங்கிகள் மற்றும் தொழில்துறை பண பரிமாற்றங்களை குறிவைத்தே இந்த வைரஸ் பரப்பப்பட்டு வருகிறது.
இந்தியாவிலும் கூட இந்த வைரஸ் பரவி வருகிறது. ஆந்திராவில் போலீஸ் இணையதளம், திருப்பதி
தேவஸ்தான அலுவலகம், கேரளாவில் ரயில்வே கோட்ட அலுவலக கம்ப்யூட்டர்களை குறிவைத்து இந்த
வைரஸ் பரவிஉள்ளது.
4. ரான்சம்வேர் சைபர் தாக்குதல் பயம் காரணமாக பல இடங்களில் ஏடிஎம்.,கள் மூடப்பட்டு வருகின்றன.
இதனால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவமதி அடைந்து வருகின்றனர். பல இடங்களில் ஆன்லைன்
பணபரிவர்த்தனையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
5. இந்த ரான்சம்வேர் பாதிப்பை தவிர்க்க இந்திய கம்ப்யூட்டர் அவசரகால மீட்பு குழு(சிஇஆர்டி) சில
எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது : உங்கள் கம்ப்யூட்டரில் பாதுகாத்து வைத்துள்ள
தகவல்கள் மற்றும் பேக்அப் தகவல்கள் ஆகியவற்றை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.
6. வேண்டாத இ-மெயில்களை பார்க்க வேண்டாம். வேண்டாத இ-மெயில்கள் தெரிந்தவர்களின்
மூலமாக வந்திருந்தாலும் பார்க்க வேண்டாம். இ-மெயிலில் உள்ள இணைப்பு வெப்சைட்களை
அப்படியே கிளிக் செய்து பார்க்காமல், அந்த வெப்சைட்களை பிரவுசர்கள் மூலமாக பார்க்கவேண்டும்.
7.ரான்சம்வேர் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள், பணம் செலுத்தினால்
கம்ப்யூட்டர் முடக்கம் சரியாகும் என யாராவது கூறினால் பணம்செலுத்த வேண்டாம். அவ்வாறு பணம்
செலுத்தினாலும், கம்ப்யூட்டர் பாதிப்பு சரியாவதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ரான்சம்வேர் பாதிப்புக்கு
ஆளாகியிருந்தால், அது பற்றிய தகவல்களை சிஇஆர்டி.,க்கு தெரிவிக்கவும்.
8. மிக பழைய விண்டோஸ் இயங்குதளங்கள் மற்றும் பழைய வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்கள்
வைத்திருப்பவர்கள் மிக ஜாக்கிரதையாக கையாளுவது மிக அவசியமாகும். இந்த தாக்குதலை
கட்டுப்படுத்தும் வகையிலான மேம்பாட்டை ஆன்ட்டி வைரஸ் நிறுவனங்கள் உருவாக்கி வருகின்றன.
9. விண்டோஸ் இயங்குதளங்களை மட்டுமே இந்த ரான்சம்வேர் எளிதில் தாக்கும். அதே சமயம் மைக்ரோசாப்ட் இயங்குதளங்களுக்கு ஆபத்து ஏதும் இல்லை.
10. ரான்சம்வேர் வைரசால் ஆன்டிராய்டு மொபைல்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ரான்சம்வேர் வைரஸ்
மிக பழைய விண்டோஸ் இயங்குதளங்களையே மிக எளிதில் தாக்கும் தன்மை உடையன. தற்போது பரவப்பட்டு
வரும் ரான்சம்வேர் வைரசால் இயங்குதளங்களை தாக்க முடியாது. இருப்பினும் ஹேக்கர்களின் அடுத்த குறி
மைக்ரோசாப்ட், ஆன்ராய்டாக இருக்கும் என்பதால் அதற்கான முன்னெச்சரிக்கை ஆன்ட்டி வைரஸ்களை
உருவாக்கும் முயற்சியில் நிறுவனங்கள் இறங்கி உள்ளன.

நன்றி தினமலர்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Thu 18 May 2017 - 5:10; edited 1 time in total (Reason for editing : edited once)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus ) Empty Re: இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus )

Post by Guest Thu 18 May 2017 - 13:20

தடுக்கும் மேலும் சில வழிகள்.
-விண்டோஸ் 10   இயங்குதளம் உள்ளவர்கள் கணினி
சில பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. காரணம் அப்டேட்டை நிறுத்தி வைத்ததால்(automatic update)  அப்டேட் செய்யப்படவில்லை. XP ....( Security Update for Windows (KB4012598) முதல் விண்டோஸ் 10 வரை (MS17-010) ஐயும் அப்டேட் செய்து கொள்வது,
- கணினியில் உள்ள அனைத்து மென்பொருளையும் அப்டேட் செய்து கொள்ளலாம்.
-கோப்புகளின் நீடிப்பை அக்டிவேட் செய்து  கொள்வதன் மூலம், (enable File extension ) exe,vbs,scr போன்ற நீடிப்பு உள்ள கோப்புகளை திறக்காமல் விடலாம்.
-முக்கியமாக, SMB 1.0 (Server Message Block 1.0 (SMBv1) ஐ கணினியில் disable செய்து வைப்பது, default இல் இது அக்டிவாக இருக்கும்.

ஹக்கர்ஸ் தற்போது code இல் சில மாற்றம் செய்து பரப்ப தொடங்கி உள்ளார்கள். இதனால் kill switch வேலை செய்யாது.
அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா ஒன்றாக இருக்கிறது.indiatoday தகவலின் படி…

Security experts say Russia is the most affected country followed by England, India, Ukraine.

இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus ) 138255eac153f01aba0f6a7067004888
avatar
Guest
Guest


Back to top Go down

இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus ) Empty Re: இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus )

Post by T.N.Balasubramanian Thu 18 May 2017 - 23:55

இதனால் kill switch வேலை செய்யாது.

முடிவே செய்துட்டாங்க போலிருக்கு, ஒரு வழி பார்த்துவிடலாமென்று!
எதற்கும் அவரவர் கணினி ஜாக்கிரதை..

"வேண்டாத ஒன்றை எல்லாம் திறக்கவேண்டாம் ,
வேதமென இம்மந்திரத்தை மறக்கவேண்டாம் ."

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus ) Empty Re: இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus )

Post by M.Jagadeesan Fri 19 May 2017 - 15:02

அப்புறம் ANTI VIRUS போட்டு என்ன பயன் ?

நான் எப்போதும் என் கணினியில் Anti -Virus பயன்படுத்துவதில்லை !.


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus ) Empty Re: இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus )

Post by Guest Fri 19 May 2017 - 17:45

நம்பிக்கையான தளங்களுக்குச் சென்றால் அன்டி வைரஸ் தேவைப்படாது. கணினியில் உள்ள பயர்வாலே அவற்றை தடுத்து விடும். அத்துடன் உலாவியும் சிலவற்றைத் தடுத்து விடும். தினமும் வைரஸ்கள் உருவாக்கப்படுவதால் அன்டி வைரஸ் ஏற்கனவே உள்ள வைரஸ்களை மட்டுமே தடுக்கும்.அதனால் தான் தினமும் அப்டேட் செய்து கொள்ள வேண்டும். எல்லா மால்வெயர்களையும்,ஹக்கர்ஸ் உள் நுழைவதையும் அன்டி வைரஸ் தடுக்காது. சில நல்லவர்கள் போல் நுழைந்து விடும்.

அத்துடன் ரன்சம்வெயர் வைரஸ் அல்ல, அது ஒரு மால்வெயர் ஆகும்.
avatar
Guest
Guest


Back to top Go down

இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus ) Empty Re: இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus )

Post by Dr.S.Soundarapandian Sun 21 May 2017 - 21:45

சோகம் சோகம் அதிர்ச்சி அதிர்ச்சி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus ) Empty Re: இணையதள உலகை கலங்கடிக்கும் ரான்சம்வேர் வைரஸ் ( wanna cry virus )

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum