புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
79 Posts - 68%
heezulia
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
20 Posts - 17%
mohamed nizamudeen
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
3 Posts - 3%
prajai
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
3 Posts - 3%
Barushree
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
1 Post - 1%
nahoor
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
133 Posts - 75%
heezulia
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
20 Posts - 11%
mohamed nizamudeen
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
7 Posts - 4%
prajai
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
3 Posts - 2%
Barushree
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
1 Post - 1%
nahoor
இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10இளைப்பாறல் - பகுதி-2 Poll_m10இளைப்பாறல் - பகுதி-2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைப்பாறல் - பகுதி-2


   
   
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Tue May 16, 2017 10:08 pm

இளைப்பாறல் - பா.வெ.

மிதிவண்டிகளில்
மிதந்த காலம் அது!
ஊருக்குள் புதியவராயினும்
உதவி கேட்டால் மறுக்காமல்
மிதிவாங்கும் மிதிவண்டியில் கூட
மெல்ல ஏற்றிச் செல்லும்
மனிதர்களின் மாண்பு
மகத்தானது!

உப்பு,கோலமாவு,ஐஸ் வண்டி,
வளையல் வண்டி,எண்ணெய் வண்டி,
பால்காரர், பாத்திரக்காரர் என
ஊருக்குள் ஓடாய் தேயும்
உழைப்பாளிகள் பலரின்
ஒரே வாகனம் மிதிவண்டி!

கொளுத்தும் வெயிலிலும்
மிதிவண்டிப் பயணம் ...
கொழுப்பில்லை; இரத்தக்
கொதிப்பில்லை; சர்க்கரை
சற்றும் இல்லை!

உடல் உழைப்பிற்கு பஞ்சமில்லை
உள்ளே நோய் கொஞ்சமும் இல்லை
உடற்கட்டும் தனியே உருவாக்கியதில்லை!

அரை அனா காசுக்காக
அவர்கள் இடும்
அறைகூவல்
அடுத்த தெரு வரை போகும்
ஆயுளும் சேர்ந்து நோகும்!

பெற்ற லாபத்தில் பாதி
பேரத்தில் போனாலும்
பெருமிதமாய் ஏற்கும் மனதில்
தொழில் தர்ம லாபமும்
தோற்றுப் போகும்!

அதிக லாபம் பற்றி
அறவே யோசிக்காத
அப்பாவித்தனத்தில்
அறமும் இருந்தது;
பொருளும் இருந்தது!

அன்றாட வாழ்வில்
நம்மோடு ஒருவராய்
அடுத்த தொழில் பற்றி
அறியாதவராய்
அதே தொழிலைப் பற்றி நின்று
ஆனந்தம் தேடும்
இவர்தம் தன்னம்பிக்கை
என்றும் வாழும்!

பெயர் தாங்கிய
பெட்டிக்கடைகள்
பெயர் பலகையற்று
பெயரளவில் ஒன்றிரண்டு
ஊருக்குள் இருக்கும்!

கற்றைக் கீற்று வேய்ந்த
தட்டிக் கதவை
ஒற்றை மூங்கில் நின்று
தாங்கிப் பிடிக்கும்!

சைக்கிள் சக்கர கம்பிகளில்
சரளமாய் தொங்கும் தீனிகள்
சற்றே திணறி
இருக்கை அமைக்கும்!

அரை அடி உயர
ஆர்லிக்ஸ் பாட்டிலில்
அடைக்கப்பட்ட
மிட்டாய் வகைகள்
அனேக வாய்களில்
உமிழ்நீர் சமைக்கும்!

விலாசம் பெறவும்
விசாரணை செய்யவும்
பெட்டிக்கடைகளே
பிராதான மையங்கள்!

வெற்றிலை சீவல்,
விருந்தாளிக்கு கலர்,
விடிந்தும் விடியாத காலையில்
கடை திறக்க காத்திருக்கும்
குழந்தைகளுக்கு
குச்சி மிட்டாய், குருவி ரொட்டி,
கமர்கட்,கைமுறுக்கு, கடலை உருண்டை,
தேன் மிட்டாய், சூட மிட்டாய் என
அமோக வியாபாரம்
அன்றாடம் அரங்கேறும்!

கடிந்து கொண்டாலும்
கடன் தர மறுக்காத
கருணை உள்ளம்
கடைக்காரருக்கே சொந்தம்!

திரி நீண்ட
தகர விளக்கும்
திரி குன்றிய
அரிக்கன் விளக்கும்
தினமும் இரவை
அலங்கரிக்கும்!

கற்பூர தீபம் ஒன்று
கடை வாசலில் நின்று
கடைசியாக திருஷ்டி
கழிக்கும்!

அடிதோறும் அசராத
அடிகுழாய் ஒன்று
அனைவருக்கும் நீர் தர
ஊர் பொதுவில் நிற்கும்!

கயிறு ஏறிய கழுத்துடன்
காலி குடங்கள்
மிதிவண்டியில் மெல்ல
குடிநீர் கொண்டு வரும்!

பாசி பிடித்த
பாறைக்கல் நடுவே
பதமாய் நின்ற நீரை
பறவைகள் மெல்ல
பருகும்!

பக்கவாட்டில் பிடியில் சிக்கி
பம்பர ஆணி கூட
கழன்று வரும்!

கோடையிலும்
குறை ஆழத்தில்
நீர் சுரக்கும்!
குடித்த ருசி
நினைத்தாலே
இனிக்கும்!

எருமைகள் ஊற
இடங்கொடுக்கும்
என்றும் வற்றாத
குட்டையொன்று!

மழைக்கால
தவளை சேர்க்கையில்
மண்டி கிடக்கும்
தலைப்பிரட்டைகள்
மல்லுக்கு நிற்கும்
மீன் குஞ்சுகளோடு!

நெய்வேலி காட்டாமனி
நெருங்கி படர்ந்த குட்டையில்
நெடுநேரம் ஊரும் எருமை மீது
நேசமாய் அமரும்
பறவையினங்கள்!

குட்டைக் கரை மேலே
குறைவில்லா வயதுடன்
ஆலமரம் ஒன்று
நீண்ட நெடுங்காலமாய்
நிழல் பரப்பி நிற்கும்!

நிறைந்த விழுதுகள்
நிலத்தில் விழும்!
நீண்ட வேர்கள்
நிலத்தை உழும்!

தரைகோதும் விழுதுகள் பற்றி
தலைகீழாக ஆடியும்
தாவி பிடித்து ஓடியும்
ஓயாத ஊஞ்சல் ஆட்டம்
ஒவ்வொரு நாளும் நீளும்!

அடர்ந்த கிளைகளில்
அந்தி வேளையில்
அனேக பறவைகள்
அடைக்கலம் நாடும்!
ஆனந்தமாய் பாடும்!!

வயல்வெளி நோக்கி
வளையும் சாலைகள்
ஊர் நெருங்குவதை
உறுதிப்படுத்தும்!

சாலையின் இருமருங்கிலும்
சரியான இடைவெளிகளில்
தென்னை மரங்கள்
தெளிவாய் நிற்கும்!

சாலையில் எதிரே
சங்கீதம் ஏந்திய
டிராக்டர் ஒன்றை
சந்திக்க நேரிடும்!

இடைக்கால இசையில்
இனிமையான பாடலொன்று
இதயம் தீண்டி
இமைப்பொழுதில் தாண்டி
செல்லும்!

ஆற்றுநீர் வாய்க்கால் வழியோடி
நாற்றங்கால் வரை
நன்றாகவே பாய்ந்திருக்கும்!

வரப்பு மடை வரை
வருகை தரும் நீர்
வழியெங்கும் கண்ணாடி
விற்று வரும்!

முகம் பார்க்க மட்டுமின்றி
அள்ளிப் பருகவும்
ஆசை வரும்!

நத்தை நகர்ந்த தடம் கூட
நன்றாக தெரியும்
நகராமல் நின்ற நீரில்!

வரப்பு மீது வழிவிட்டு நின்று
வழித்தடம் அமைக்கும்
புல்லினங்கள்!

வரப்பிடை நீண்ட
நீரோடை வழியே
வழி மாறி வந்த மீன்களை
வான்வரை வழி அனுப்ப
ஒற்றைக்கால் விரதத்தில்
காத்திருக்கும்
கொக்கினங்கள்!

வரப்பு ஒரத்தில்
வழிகின்ற உளைகள்
நயமாய் வனைந்த
நண்டின் வளைகள்!

சட்டைக்குள் வைக்கோல் திணித்த
சட்டித்தலை உருவமொன்று
இரவுப் பறவைகள் அமர்ந்து
வேட்டையாட ஏதுவாய்
வரப்பின் மீது
வளர்ந்து நிற்கும்!

எரு கலப்பை உரமாக்க
ஏர் கலப்பை நிலம் கீற
எருது இரண்டு களமிறங்கும்!

வரப்பு வரை வாகு எடுத்து
வட்டமடித்து வயல் முழுதும்
உழுது வரும்!

மண்ணில் உரம் சேர்க்க
மாற்று வழி தேடியதில்லை!
மாட்டுச் சாணமும்
மக்கிய தழைகளும்
விறகு அடுப்பு
விட்டு வைத்த சாம்பலும்
தின்று திணரும் குப்பைக்குழியில்
தினம்தினம் சேரும்
இயற்கை உரம்!

தழைச்சத்து, மணிச்சத்து,
சாம்பல் சத்து என
எல்லாம் தரும்
இந்த உரம்!

சாலையில் கிடத்தி
சக்கையாகிப் போன
வேப்பங்கொட்டைகள்
சக உரமாய்
சேர்ந்து வரும்!

விதைக்கப்பட விதிக்கப்பட்ட
நெல் மூட்டைகள்
நெடுநேரம் நீரில் ஊறும்!
சணல் சாக்கின்
சல்லடைத் துளைகளில்
முளைவிட்ட நெல் மணிகள்
மூச்சுத் திணறி கரை ஏறும்!

விதைகள் தெளிக்க
விரைவில் முளைக்க
வேண்டிய உயரம் வளர
விடப்பட்ட நாற்றங்கால்
நீர் பருகி நிலம் குழைந்து
நெகிழ்ந்து நிற்கும்!

நாற்றங்காலில் தெளித்த விதைகள்
நன்றாக வளர்ந்த பின்பு
நாற்றுகள் பறிக்கப்பட்டு
நடவுக்கு காத்திருக்கும்!

வழிபாடும் வழிவழியாய்
வரும் பாடலும்
நடவை தொடங்கி வைக்கும்!

நேர் கோட்டில்
நேர்த்தியாக நடுவதற்கு
கயிறு பிடிக்கும்
கலை ஒன்று
காலங்காலமாய் உண்டு!

களைக்காமல் மலைக்காமல்
காலை வெயிலில் சளைக்காமல்
நடவுதனைத் தொடர
நடவின் நடுவே
நம் மனதை நடும்
நாட்டுப்புற பாடல் ஒன்று!

உச்சி வெயில் தின்று
உரமேறிப் போன
உடல்களில்
நிழல் இறங்கி
நிலம் தொட மறுக்கும்
மதிய வேளையில்
ஒருவேளை உணவை
யாசிக்கும் பசி!

களைப்பு உழைப்பை கலைக்க
கரையேறும் கூட்டம்…
கரையோர மர நிழலில்
களைப்பாற அமர்ந்து
கதை பேசியபடி
உணவருந்தும்!

தூக்கு வாலிகள் சுமந்த
பழைய சோற்றில்
கடைந்த மோரின் வாசம்
காற்றில் தூக்கும்!

வருத்த கருவாடு
வற்றல் மிளகாய்
வடுமாங்காய்
வெங்காய ஊறல்
சுண்டிய மீன் குழம்பு
சுவையான ஊறுகாய் என
வித விதமாய் தொட்டுக்கொள்ள
விரல் நுனிகள் துடிக்கும்!

மரக்கிளை சுமந்த
தொட்டில் ஒன்றில்
மர நிழல் மத்தியில்
மாசற்ற காற்று வாங்கி
மதிமயங்கி உறங்கும் குழந்தை
மதியவேளை விழித்து அழும்!

உடன் எழுந்து பாலூட்டி
உறங்க வைத்த பின்பே
உணவைத் தொடர்வாள்
உடல் வற்றிய தாய்!

கஞ்சி வாலிகளை
கண்மாய் நீரில்
கழுவிய பின்னர்
காட்டுக் கருவேல
மரக்கிளைகளில்
கணக்காய் அமர்த்தி விட்டு
கடமை தொடரும்
நடவு வயலில்!

கருப்பு குடையின் கீழ்
காதோரம் நரை தின்ற
கனத்த உருவில்
கால் மறையாத வேட்டியில்
கரை மீது நின்று
கவனிப்பார் பண்ணையார்!

நடவு முடிந்து நாற்று வளர
நடுநடுவே நீர் விடலும்
நன்றாக களை எடுத்தலும்
நன்றாகவே நடக்கும்!

வரப்பு வரை நீரை
வழிய விடுவதும்
வடிய விடுவதும்
வழிவழியாய் வரும்
தலையாரிகள்!

முண்டாசுக் கட்டும்
முதுகு சூழ்ந்த கம்பளியும்
கையில் தடியும்
கம்பி பிடியில்
அரிக்கன் விளக்கும்
களத்துமேட்டில் தலையாரியுடன்
காவலுக்கு வரும்!

வளர்ந்த பயிர்களின்
வனப்பை உரசும் காற்று
வழிதோறும் வாசம் வீசும்!

அடர்ந்த பச்சை வண்ணம்
படர்ந்த பயிர்கள் எங்கும்
ஆனந்த அலைகள்
அடுக்கடுக்காய் பேசும்!

அந்தி வானம்
சிந்தும் மஞ்சளை
அரைத்து சிவந்த
ஆதவனை தம்முள்
பதுக்கி வைக்கும்
பனை மரங்கள்!

வரப்பில் அமர்ந்த பறவைகள்
வானில் கூட்டாய் பறக்கும்போது
வட்டமிட்டு வரையும் உருவங்கள்
வானில் வட்டமிட்டு வைக்கும்!

பச்சை மங்கி
பழுப்பேறும் தருணம்
விளைந்த நிலம் நீங்க
விருப்பமற்று வருத்தமுற்று
நேசமொடு நிலம் நோக்கும்
நெற்கதிர்கள்!

நீருக்கு வாடியதாய்
வரலாறு இல்லை!
நிலம் நீங்க வாடுவது
நேசத்தின் எல்லை!

கதிர்கள் முற்றி
கனம் நிறைந்து
காற்றில் உதிரும்
நெல்மணிகளை
கவர்ந்து செல்லும்
புறாக்கூட்டம்!

வரப்போகும் காலத்தை
வாட்டமின்றி கழிக்க
வரப்போர வளைகளில்
நெல்மணிகளை
நிறைக்கும் எலிகள்!

வளை வரை சிந்திய
வைர நெல்மணிகள்
வழித்தடம் அமைக்க
எலிகள் வாழ்விடம்
எளிதில் தெரியும்!

அறுவடை செய்ய என்றும்
அதே ஊர் நபர்களை நாடுவது
நாளும் வளர்ந்த நம்பிக்கையும்
நன்றி மறவாத நற்குணமும்!

வானத்து சூரியனை வணங்கி
வயலில் இறங்கும் கூட்டம்
கருக்கு அரிவாள் கொண்டு
கதிர் அறுத்து கட்டு கட்டி
களத்துமேடு வரை
கொண்டு சேர்க்கும்!

கருங்கல் மீது கட்டு அடித்து
காளைகள் கொண்டு கிடாவடித்து
கதிர் உதிர்த்த நெல்மணிகளை
களத்தில் தூற்றி கருக்காய் பிரித்து
கனமாய் நிரம்பும்
நெல் மூட்டைகள்!

காவற்கூலியும் கதிர் அறுத்த கூலியும்
காசாகவும் கல நெல்லாகவும்
கணக்கு பார்த்து கொடுக்கப்படும்
களத்துமேட்டில்!

களம் கண்ட நெல்மூட்டைகள்
காளை மாட்டு வண்டியில்
கண்படாத குறையாய்
வீடு வந்து சேரும்!

வண்டிமாடுகள் இழுத்து வந்த
வைக்கோல் கட்டுகளை
வழியெங்கும் மரக்கிளைகள்
உரசிப்பார்க்கும்!

வழிச்சிதறலில் மீதமே
வீட்டுக் கொல்லையில்
குவிந்து நிற்கும்!

கதிர்கள் விட்டுச்சென்ற
காலடித் தடத்தில்
தாளடி பருவத்திற்கு
தயாராகும் பயறுவகைகள்!
தழைச்சத்து தழைத்தோங்க
தாளடி பருவம் தலையாயது!

குறுவை சம்பா தாளடி என
முப்போகம் பயிர் விளைய
மும்மாரி மழை பொழிய
ஊர்செழிப்பும் உள நிறைவும்
உலவிய காலம்... !!!

மன உளைச்சலும்
மண்டைக் குடைச்சலும்
பணி சுமையும்
பார மனமும் பற்றிடாத
பழைய காலம்... !

இயற்கைவளம் கெடாது
இயல்பாய் பணி அமைந்த
இறந்த காலம்!!!




எண்ணம் போல் வாழ்வு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 18, 2017 10:32 pm

இயற்கைவளம் கெடாது
இயல்பாய் பணி அமைந்த
இறந்த காலம்!!!

ம்ம் ம்ம் ம்ம் ம்ம் நன்றாக உள்ளது .

நாளை அடுத்தது.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Thu May 18, 2017 11:13 pm

மிக்க நன்றி ஐயா!



எண்ணம் போல் வாழ்வு
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 21, 2017 8:24 pm

கவிதை நன்றுதான் !
ஆனால்?
அமெரிக்காவிலிருந்து பால் பௌடர் வரவேண்டி இருந்ததே?
அமெரிக்காவிலிருந்து கப்பலில் கோதுமை வரவேண்டி இருந்ததே?
இந்தியர்களைப் ‘பாம்பாட்டிகள்’ என்று பிற நாடுகள் தூற்றினவே?
‘கொள்ளை நோய்’ வந்து மக்கள் ஆங்காங்கே மடிந்தனரே?
ஐம்பதைத் தாண்டினால் கோல் ஊன்றி நடக்கும் நிலை இருந்ததே?
திண்ணைகளில் கண் தெரியாமல் அமர்ந்துகொண்டு ‘யாரு செல்லத்தாயி மகளா’? என்று கேட்டனரே?
- இவற்றையும் சேர்த்துத்தான் நாம் பார்க்கவேண்டும் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sun May 21, 2017 9:32 pm

நன்றி ஐயா! அரைக்குவளை தண்ணீரை பார்த்து நான் பாதி குவளை நிரம்பியிருக்கிறது என்றே சொல்ல முயல்கிறேன்.



எண்ணம் போல் வாழ்வு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக