புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
59 Posts - 55%
heezulia
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
54 Posts - 55%
heezulia
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10இளைப்பாறல் - பகுதி-1 Poll_m10இளைப்பாறல் - பகுதி-1 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளைப்பாறல் - பகுதி-1


   
   

Page 1 of 2 1, 2  Next

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Tue May 16, 2017 10:03 pm

இளைப்பாறல் - பா.வெ.

தெளிவற்ற தேடலில்
தினம்தினம் தேய்ந்து
திக்கற்ற ஓட்டத்தில்
ஓடி நாளும் ஓய்ந்து

நவீனமும் நாகரிகமும்
நையப்புடைத்த நம்மை,
மிச்சமின்றி உச்சமாய்
விழுங்கி நிற்கும் -
செல்ஃபோனும் சின்னத்திரையும்
இடைவிடாத இணையமும்,
மிச்சம் வைத்த எச்சத்தையும்
விடவில்லை பணப்பேய்!

அவசரகதியில் உணவு,
அலுவல் சுமைகள்,
ஆர்ப்பரிக்கும் பரபரப்பு,
விரைவில் தொலைந்த மனிதம்,
வீண் ஆடம்பர விரயம்,
வெறுமை வீசும் வரவு -
இவை அழைத்த தடம் -
நம் அன்றாடம் !!!

விதி வலிந்து விதைத்ததோ
மதி பிறழ்ந்து தொலைத்ததோ
ம(றை)றந்துபோன வாழ்வியல் தேடி
மகத்தான பயணம் இதோ...
இறுக்கம் நீக்கும் ஓர் இளைப்பாறலாய்...!!!

நகரமயமாதலில் சிக்காத கிராமங்களில்
நரகம் தோன்ற நாளாகும்போலும்...
வாழ்வியல் வற்றாது வாழும்!

வெள்ளந்தி மனிதர் கூட்டம்
வெகுவாய் கவரும் வனப்பு
வேளாண் வளம் சார்ந்த வாழ்வு -
வெளிப்படுத்தும் அடையாளம் -
கிராமம்!

ஓயாத ஒலிகளற்ற ஒற்றைப் பேருந்து
ஒலிக்கும் ஒலி ஊர்நடுவே கேட்கும்
உள்ளே வந்து பார்க்கும்!

கால்கடுக்க காத்திருக்கையில்
கதையொன்று காற்றில் வரும்!
நடப்பு பற்றி
நடவு பற்றி
நாட்பட்ட பேச்சு முளைக்கும்!
நாலு வீட்டு சேதி
நடுவே புகுந்து வளர்க்கும்!

கடகடத்த கடைசி இருக்கைகளில்
கைக்குட்டை போட்டு இடம் பிடிக்கும்
மாந்தர்தம் வெகுளித்தனம் நம்
மனதிலும் இடம் பிடிக்கும்!

பள்ளம் மேடு பார்த்து
பரதம் ஆடும் பேருந்தில்
ஜன்னலோர இருக்கைக்கே
மவுசு அதிகம்!

வேடிக்கையாக இருந்தாலும்
வேடிக்கை பார்க்கவே இந்த
வினோத ஆசை!

நகர்ந்தோடும் பேருந்து எதிரே
நடந்து வரும் மரங்கள்,
நயமாய் வரைந்த
விளம்பர ஓவியங்கள்,
வயல்வெளிப் பறவைகள்,
வற்றாத ஆறுகள்,குளங்கள்,
அந்திநேர மஞ்சள் வானம்,
அசையாமல் துரத்தி வரும்
இரவுப்பயண முழுநிலவு என
அழகிய காட்சிகள் நம் மனதை ஈர்க்கும்!
அன்றைய கவலையாவது
அநேகமாக நீர்க்கும்!

ஊர்நடுவே கோவிலொன்றில்
உண்டியல் குலுக்கும் சத்தம் வரவே
பாதி வழியில் நின்று பயணம் சிறக்க
பயபக்தியாய் வணங்கியபின்
பாதுகாப்பாய் பயணம் தொடரும்!

ஊர் முழுதும் ஒய்யாரமாய்
வலம்வரும் பேருந்தை
ஓரம் நிறுத்தி வம்பிழுக்கும்
கால்நடைகள்!
ஒலிப்பானுக்கு ஒதுங்காமல்
ஓட்டுனரையும் கீழிறக்கும்!

எதிர்பாராது வந்த வாகனம்
எதிரே ஓரமாய் நிற்க
அடிமேல் அடிவைத்து
அசையும் பேருந்து!

வாக்குவாதம் முடிந்து
வழிவிடும் நேரத்தில்
சாய்ந்திடாமல் கடந்துசெல்லும்
சாமர்த்தியம் ஓட்டுனருக்கே!

நிறுத்தம் நின்று கிளம்புகையில்
நீண்ட குரலொன்று கேட்கும்
ஒரு மைல் தூரத்தில்
ஓடி வரும் உருவம்,
நடந்து வந்தாலும் காத்திருக்கும்
நடத்துனர் - பொறுமையின் சிகரம்!

இயலாதோர் ஏற இறங்க உதவுவார்;
தன் இருக்கை தந்து நிற்பார்;
இறுதிவரை இணக்கமான
மனிதராய் ...!

வேண்டிய நிறுத்தம் வந்ததும்
விரைவின்றி இறங்கும்போது
வேண்டியவர் வாகனம்
வந்து நிற்கும்!

அழைத்து செல்லவோ
அனுப்பி வைக்கவோ
அவரவர் வசதிக்கேற்ப
மிதிவண்டியேனும்
மிகையாய் நிற்கும்!

ஊருக்குள் வரவேற்கும்
முதல் நபராய் டீக்கடை நிற்கும்!
கரிபடிந்த கூரைக் கொட்டகையில்
கருப்பு வெள்ளை புகைப்படங்கள்
கம்பீரமாய் காலம்கடந்து நிற்கும்!

நீண்ட கம்பிவழி
நிரம்பும் அலைவரிசையில்
நிதானமாய் காது திருகிய
வானொலி இசைக்கும் கானம்
வருடலாய் மனதை அசைக்கும்!

கண்ணாடிப் பெட்டிக்குள்
கச்சிதமாய் அடுக்கப்பட்ட
சூடான வடைகளும்
சுவையான பூரியும்
சுண்டி இழுக்கும் சுண்டலும்
சுரக்க வைக்கும் உமிழ்நீரை!

பாத்திரம் கொண்டுவந்து
பத்திரமாய் கொண்டுசெல்லும்
சிறுவர் கூட்டம்
சிற்றுண்டி வாங்க
பக்குவமாய் பை கொண்டுவரும்!

பளபளப்பான பலகையில் அமர்ந்து
பன்னும் டீயும் சாப்பிடும்போது
பறந்தோடிப்போகும் பாதி பசி!
பாமர மக்களுக்கு
இதிலேதான் குஷி!

இலையில் நீர் தெளித்து
இரண்டு இட்லி தின்ற பிறகு
"இங்க யார் வீடு தம்பி?" என்று
செய்தித்தாள் வாசிக்கும் கூட்டம்
செவிவழி நம்மையும் வாசிக்கும்!

அகலமான ஆற்றின் குறுக்கே
அகலம் குறைந்த பாலம் ஒன்று
அடுத்த கரை போய்ச் சேர
அழைப்பு விடுக்கும்!

அடுத்த கரை செல்வதற்குள்
அதன்மீது ஏறி நின்ற
சிறார் பட்டாளம்
அடுத்தடுத்து அணிவகுத்து
ஆற்றில் குதிக்கும்!

அடிபடாத ஆழத்திற்கே
ஆற்றிலும் நீர் இருக்கும்
அடியில் படிந்த மணலும்
அவ்வப்போது அரவணைக்கும்!

முதுகு வளைந்த
மூங்கில் நுனியில்
கட்சி கொடிகள்
காற்றில் பறக்கும்!
அரசியல் அழுத்தம்
அங்கே பிறக்கும்!

ஊர்ப்புற எல்லையில்
ஓங்கி வளர்ந்த உருவமொன்று
வெள்ளைக் குதிரை மேல்
வீச்சரிவாள் ஏந்தி
வேட்டை நாயுடன்
ஊரைக் காத்து நிற்கும்!

காது வரை மீசை நீட்டி
கண் இரண்டும் பெரிதாய் காட்டி
கையில் கொண்ட ஈட்டி பற்றி
கதையொன்று உண்மை பேசும்!

நேர்த்திக் கடனாய்
நெடுநாள் ஆசையாய்
நேர்ந்துவிடப்பட்ட
கோயில் கிடா ஒன்று
ஊரெல்லாம் மேய்ந்து
பலம் பெறும்!
உறங்க மட்டுமே
கோயில் வரும்!

ஊரைக் காக்கும்
காவல் தெய்வம்
ஒரு குலத்தை
தனியே காப்பதும் உண்டு!
பங்காளி கூடி
படை திரண்டு வந்து
படையல் போடுவதும் உண்டு!




எண்ணம் போல் வாழ்வு
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 18, 2017 8:41 am

அதிக சமாச்சாரங்களை (எப்போதும் போல்) உள்ளடக்கிய கவிதை ஜோர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35063
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu May 18, 2017 8:45 am

நாளொன்றுக்கு ஒரு கவிதையாக ,மற்றவை வரும் நாளில்.
அப்போதுதான் ரசிக்கமுடியும் என நினைப்பது எந்தன் எண்ணம்.புன்னகை புன்னகை பா வெ

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu May 18, 2017 9:30 am

இளைப்பாறல் - பகுதி-1 3838410834 இளைப்பாறல் - பகுதி-1 3838410834

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Thu May 18, 2017 1:22 pm

மிக்க நன்றி ஐயா! மூன்று பகுதிகளும் சேர்த்து ஒரே கவிதை தான் ஐயா. நீளம் பதிவேற்ற விடவில்லை.நானும் விடவில்லை.



எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Thu May 18, 2017 1:23 pm

மிக்க நன்றி அய்யாசாமி ஐயா!



எண்ணம் போல் வாழ்வு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 18, 2017 2:32 pm

இளைப்பாறல் தேடியே கிராமம் சென்றேன் !
...இருந்திட்ட நிம்மதி எல்லாம் போச்சு !
விளைகின்ற நிலங்கள் எல்லாம் இப்போ
...வீடுகளாய் மாறிவிட்ட கொடுமை கண்டேன் !

பம்பரம் விளையாடும் சிறுவர் கூட்டம்
...பல்லாங் குழியாடும் பாவையர் கூட்டம்
தும்பிகளைப் பிடிக்கின்ற வாண்டுகள் கூட்டம்
...தூரத்துக் கனவாகப் போனது அம்மா !

செக்கிழுக்கும் மாடுகளை ஓட்டிய கைகள்
...செல்போனை எப்போதும் நோண்டக் கண்டேன் !
வக்கணையாய் சமைக்கின்ற பெண்கள் கூட்டம்
...சீரியலில் சீரழியும் காட்சி கண்டேன் !

மரக்கிளையில் குழந்தைக்குத் தொட்டில் கட்டி
...மண்வெட்டிக் களைபறித்து நீரைப் பாய்ச்சி
உரமிட்டு பயிர்வளர்க்கும் பெண்கள் எல்லாம்
...உதிர்க்கின்றார் கண்ணீரை டாஸ்மாக் முன்னே !

இக்கரைக்கு அக்கரை பச்சை என்று
...இருக்கின்ற நகர்விட்டுக் கிராமம் சென்றேன் !
அக்கரைக்கு இக்கரையே பச்சை என்று
...அடுத்தநொடி நகருக்கே திரும்ப வந்தேன் ! .




...



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Thu May 18, 2017 3:00 pm

இளைப்பாறல் - ம(றை)றந்துபோன வாழ்வியலை வரிகளில் மீட்கும் முயற்சி இது. இந்த வரிகள் இழந்த வாழ்வியல் மீதான நம் உள்ளார்ந்த ஏக்கத்தை சற்று தணிக்கலாம்; அன்றைய வாழ்வியலில் சிறந்தவற்றை ஏற்கும்படி சிலவற்றை திணிக்கலாம்; வரிகளோடு சென்று அழகாய் வாழ்ந்த அந்தநாட்களை கண்டு இளைப்பாறி வருமாறும் பணிக்கலாம்.
வரிகளையே கேட்டு பார்ப்போம்... வாருங்கள்...!




எண்ணம் போல் வாழ்வு
B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Thu May 18, 2017 3:08 pm

ஜெகதீசன் ஐயா ...நிசர்சனம் நிரம்பிய தங்கள் வரிகள் சிறப்பு! அன்றைய வாழ்வை இனி நினைவுகளில் அசைபோடவே இயலும்.அதற்காகவே இந்த கவிதை.



எண்ணம் போல் வாழ்வு
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Thu May 18, 2017 4:25 pm

கிராமத்து வாழ்க்கைக்கு ஆசைப்பட்டான் பாரதி ; ஆனால் அவனுக்குக் கிராமத்தில் வாழக் கொடுத்துவைக்கவில்லை ! பரபரப்பான சென்னையிலேயே அவன் வாழ்ந்து மறைந்தான் .

அவனுடைய ஆசையைப் பாருங்கள் !


காணி நிலம் வேண்டும் - பராசக்தி
...காணி நிலம் வேண்டும், - அங்கு
தூணில் அழகியதாய் - நன்மாடங்கள்
...துய்ய நிறத்தினதாய் - அந்தக்
காணி நிலத்தினிடையே - ஓர்மாளிகை
...கட்டித் தரவேண்டும் - அங்கு
கேணியருகினிலே - தென்னைமரம்
...கீற்று மிளநீரும்.

பத்துப் பன்னிரண்டு - தென்னைமரம்
...பக்கத்திலே வேணும் - நல்ல
முத்துச் சுடர்போலே - நிலாவொளி
...முன்பு வரவேணும், அங்கு
கத்துங் குயிலோசை - சற்றே வந்து
...காதிற் படவேணும், - என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே - நன்றாயிளந்
...தென்றல் வரவேணும்.

பாட்டுக் கலந்திடவே - அங்கேயொரு
...பத்தினிப் பெண்வேணும் - எங்கள்
கூட்டுக் களியினிலே - கவிதைகள்
...கொண்டுதர வேணும் - அந்தக்
காட்டு வெளியினிலே - அம்மா! நின்றன்
...காவலுற வேணும், - என்றன்
பாட்டுத் திறத்தாலே - இவ்வையத்தைப்
...பாலித்திட வேணும்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக