Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நமது உணவுப் பழக்க வழக்கங்கள் - மாற்றம் தேவை!
+2
ரிபாஸ்
தாமு
6 posters
Page 1 of 1
நமது உணவுப் பழக்க வழக்கங்கள் - மாற்றம் தேவை!
இன்றைய வேகமான வாழ்க்கை முறை, நமது 15-20 ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறையை விடவும், ஒரு தலைமுறைக்கு முந்தைய வாழ்க்கை முறையை விடவும் பெரிதும் வேறுபட்டுள்ளதென்பதில் சந்தேகமில்லை. உடலுழைப்புக்கான தேவை இயந்திர மயமாக்கத்தால் குறைந்து விட்டிருக்கிறது. பெரும்பாலான வீடுகளில் பெண்களுக்கான வேலைகளில் பலவற்றை மிக்ஸிகளும் கிரைண்டர்களும் குறைத்திருக்கின்றன. ஆண்கள் மற்றும் குடும்பத்தினரின் போக்குவரத்துப் பழக்கங்கள் சைக்கிள் மற்றும் பஸ்களிலிருந்து பைக்குகள் மற்றும் கார்களுக்கு மாறிவிட்டது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை பெரிதும் இருப்பதால், நடை மற்றும் உடலுழைப்பு குறைந்துவிட்டது. மாலைகளில் வீதிகளில் விளையாடியிருந்த பிள்ளைகள் குடும்பத்துடன் தொலைக்காட்சிப் பெட்டிகளில் மயங்கிக் கிடக்கின்றனர். எல்லா விதத்திலும் முன்பிருந்த உடலுழைப்பு மிகப் பெரும்பாலானவர்களுக்கு குறைந்துவிட்டது.
நமது உணவுப் பழக்கம் இதற்கு நேரெதிரே மாறியுள்ளது மட்டுமல்லாமல் என்ன உண்ணுகிறோம் எதற்காக உண்ணுகிறோம் என்பது குறித்த விழிப்புணர்வும் அறிவும் மிகவும் குறைவாகவே உள்ளது.
பயறுவகைகள் மற்றும் காய்கறிகளின் பயன்பாடு குறைந்து அரிசியின் அளவு கூடியிருக்கிறது. எண்ணெய் மற்றும் இனிப்பு வகைகளின் நுகர்வு மிக மிக அதிகரித்துள்ளது.
முன்னெப்போதுமில்லாதவாறு, சிறு பிள்ளைகளிடையே உள்ள உடற் பருமன் தொடர்பான நோய்களும், சர்க்கரை நோயின் தாக்கமும் மற்றும், வளர்ந்தவர்களிடையே பருத்த உடல்களும், உடற்பருமன், உடற்கொழுப்பு நோய்களும் அவற்றுக்கான மருத்துவச் சிகிச்சைக்கான தேவையின் அதிகரிப்பும் இதை நிரூபிக்கும். வேகமான நமது வாழ்க்கையில் விவேகமான உணவுப் பழக்கத்தை கைக்கொள்ள மறந்து விட்டிருக்கிறோம், நிச்சயமாய் நமது உணவுப் பழக்கத்தை முழுதாய் மாற்ற வேண்டிய நாள் வெகுதூரத்தில் இல்லை.
இனிக்கும் சர்க்கரையின் கசக்கும் உண்மை
உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) அறிக்கையின்படி, உலக நாடுகளிலேயே அதிக அளவில் சர்க்கரை நோயாளிகள் உள்ள நாடு இந்தியா!
மூன்று கோடிக்கும் மேலான இந்தியர்களைப் பாதித்திருக்கும் இந்த சர்க்கரை நோய், 2030 வாக்கில் ஏழு கோடிக்கும் மேலான இந்தியர்களை பாதிக்கும் வாய்ப்பிருப்பதாக தெரியவருகிறது.
நம்மிலும் மக்கள் தொகை கூடியுள்ள சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
வல்லரசா இல்லை பேரரசா (பெருத்த அரசா)?
வயது வந்தவர்களிடையே தொந்திப் பருமன் குறித்து 60 உலக நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், இந்திய ஆண்களில் 58 சதவிகிதத்தினருக்கு மேலும், பெண்களில் 75 சதவிகிதத்தினருக்கு மேலும் அதிகத் தொந்திப் பருமனுடையவர்களென அறியப்பட்டுள்ளது. இவர்களில் பத்தில் ஆறு பேருக்கு சர்க்கரை நோய் உட்பட பல நோய்கள் வருவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகமுள்ளது.
பள்ளிப் பிள்ளைகளின் உணவுப் பழக்கங்களும் நோய்களும்
டெல்லி நீரிழிவு நோய் ஆராய்ச்சி மையத்தின் தற்போதைய அறிக்கையின்படி, 10 முதல் 14 வயதுள்ள பள்ளிப் பிள்ளைகளி டையே நடத்திய ஆய்வின்படி, சர்க்கரை நோயுள்ள 85% பிள்ளைகள் அதிக உடற் பருமனுடையவர்களெனவும் அவர்களினுடைய உணவுப்பழக்கங்கள் ஆரோக்கியமாக இல்லாததே முக்கியக் காரணமென கூறப்பட்டுள்ளது.
உடல் நலனுக்கு எது அளவுகோல்?
முதலாவதாக ஒருவரின் இடுப்பளவு அவர்களின் உடல்நலனைச் சுட்டிக்காட்டும் ஒரு அளவுகோல், இது மெட்டபோ (metabo) என்றும் அழைக்கப்படுகிறது.
உலக நீரிழிவு நோய்க் குழுமத்தின் முடிவின்படி
ஆசிய & ஜப்பானியர்களில் - வயது வந்த ஆண்களில் இடுப்பளவு 33.5 அங்குலத்திற்கு கீழும் பெண்களில் 35.4 அங்குலத்திற்கு கீழுமாக உள்ளவர்களுக்கு
உடற்பருமன் மற்றும் அது குறித்த நோய்கள் வருவதற்கான வாய்ப்பு குறைவு.
வெள்ளை இனத்தவர்களுக்கு - வயது வந்த ஆண்களில் இடுப்பளவு 37 அங்குலத்திற்கு கீழும் பெண்களில் 31.5 அங்குலத்திற்கு கீழுமாக உள்ளவர்களுக்கு

கடந்த ஜூன் முதல், ஜப்பானிய அரசு இது குறித்த ஒரு சட்டமே இயற்றியுள்ளது, அளவுகோலின்படி இடுப்பளவு மிகுதியாக உள்ளவர்களுக்கு, உணவுக் கட்டுப்பாட்டு முறைகளினைக் குறித்த கல்வியும் தொடர் விழிப்புணர்வும் ஏற்படுத்துவதுடன், அடுத்த நான்காண்டுகளில், உடற்பருமனாக இருப்பவர்களில் பத்து சதவிகித்தினரினைக் குறைக்கும் குறிக்கோளோடு செயல்பட்டுவருகிறது. தற்போது நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதில் ஈடுபடத் துவங்கியுள்ள இந்திய அரசு, அடுத்த ஐந்து அல்லது பத்தாண்டுகளில் இத்துறையில் மேலும் தீவிரமாகச் செயல்பட்டாக வேண்டும்.
அடுத்ததாக, Body Mass Index (BMI) எனப்படும் உடற் பருமன் சுட்டி, உடல் எடையையும் உயரத்தையும் ஒப்பிடும் இந்தச் சுட்டி ஒருவரை, சராசரி எடையுள்ளவர், அதிக அல்லது குறைந்த எடையுள்ளவரென பாகுபடுத்துவதன் மூலம் உடல் எடை குறித்த விழிப்புணர்வை அளிப்பது.
உடற் பருமன் சுட்டி (BMI) அளவுகள்:-
குறைந்த எடையுள்ளவர்கள் = 18.5க்கு கீழுள்ளவர்கள்
சராசரி எடையுள்ளவர்கள் = 18.5 to 24.9
அதிக எடையுள்ளவர்கள் = 25 to 29.9
உடற் பருமன் அதிகமுள்ளவர்கள் = 30 அல்லது அதற்கு மேலுள்ளவர்கள்
மூன்றாவதாக, ஓவ்வொருவரும் தமது உடல் இயக்கத் தேவைக்கான உணவை உட்கொள்வது. உதாரணமாக, 31-இலிருந்து 50 வரை வயதுள்ள ஒரளவுக்கு உடல் உழைப்பு உள்ள ஆண்கள் ஒரு நாளைக்கு 2200-இலிருந்து 2400 கலோரி உணவு எடுத்துக் கொள்ளலாம். அதே வயதுப் பிரிவிலுள்ள பெண்கள் 1800 கலோரி உணவு எடுத்துக் கொள்ளலாம்.
உடற்பருமனுக்கான முக்கிய காரணங்கள்
உடற் பருமனுக்கான முக்கிய காரணங்களாக ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுவன:-
1) மரபியல் - பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ உடல் பருமனாக இருத்தல்
2) அதிகம் உண்ணுதல்
3) உடலுழைப்பு குறைவாக இருத்தல்
4) மன நோய் மற்றும் உடலில் உள்ள நோய்கள் - மனக்கவலை, மன அழுத்தம், மெடாபாலிசக் (உடற் செயல்பாட்டு) குறைவு, தைராய்டு குறைவாக இருத்தல் போன்றன
5) மருத்துவ சிகிச்சைகளின் விளைவு - உயர் இரத்த அழுத்த சிகிச்சை, மன அழுத்த சிகிச்சை மருந்துகள் போன்றன
நீங்கள் எங்கே நிற்கிறீர்கள்?
1) உங்களின் மெட்டபோ (metabo) அளவை அறிந்துகொண்டு சரியான அளவிலிருக்கிறதா எனப் பார்க்கலாம்.
2) உங்களின் உடற் பருமன் சுட்டி (BMI) சரியான அளவிலிருக்கிறதா எனப் பார்க்கலாம்.
3) மேலுள்ள இரண்டு அளவுகளுடன், முழு மருத்துவப் பரிசோதனை ( குறைந்தபட்சம் இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை) செய்வதன் மூலம், உடற் கொழுப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு இல்லாமல் உங்களின் உடல் நலன் உள்ளதா என அறிந்துகொள்ளலாம்.
உடற் பருமன் மற்றும் உடற் கொழுப்பைக் குறைக்க விரும்புபவர்கள் என்னென்ன செய்யலாம்?
உடற்பருமன் மற்றும் உடற்கொழுப்பு குறைக்க விரும்புபவர்களுக்கு எனக்குத் தெரிந்த சில யோசனைகள்
1) உணவில் அரிசியின் அளவைக் குறைத்து காய்கறிகளையும், பயறு வகைகளையும் கூட்டுங்கள்.
2) மாமிச உணவு உண்பவர்கள், அளவைச் சிறிதளவேனும் குறைத்தும், அடிக்கடி உண்ணுவதைத் தவிர்க்கவும் முயலலாம்.
3) முட்டை உண்ணுபவர்கள், மஞ்சள் கருவைத் தவிர்ப்பது நல்லது.
4) எண்ணெய் மற்றும் இனிப்பு உணவு வகைகளை உண்ணுவதைக் குறைக்கலாம்.
5) பீட்ஸா மற்றும் பர்கர்கள் போன்ற அதிக கலோரியுடைய உணவுகளினை உண்ணுவதைக் குறைத்தல்.
6) தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உடற்பயிற்சி செய்யவேண்டும். நடைபயிலுதல் முதற்கொண்டு உடற்பயிற்சிக் கூடம் செல்லுதல் வரை இயன்ற உடற்பயிற்சியைத் தவிர்க்காமல் செய்யவேண்டும்.
7) மது, சிகரெட் முடிந்தால் முற்றிலும் தவிர்க்கவும்.
8) அதிக தண்ணீர் அருந்துதல் மற்றும் செயற்கை குளிர்பானங்களைத் தவிர்த்தல்
by successyouth

Re: நமது உணவுப் பழக்க வழக்கங்கள் - மாற்றம் தேவை!
அருமையான தகவல்
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: நமது உணவுப் பழக்க வழக்கங்கள் - மாற்றம் தேவை!
மெட்டபோ மற்றும் BMI இதை பற்றி கொஞ்சம் விளக்கி சொல்லமுடியுமா தாமு........
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Similar topics
» நல்ல பழக்க வழக்கங்கள்
» நல்ல பழக்க வழக்கங்கள்
» சில மோசமான பழக்க வழக்கங்கள்
» நல்ல பழக்க வழக்கங்கள்
» தமிழர்களின் 12 வகை உணவு பழக்க வழக்கங்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|