ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

2 posters

Go down

கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் Empty கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

Post by ayyasamy ram Sat May 06, 2017 12:30 pm

கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் NGQVUSN0QM6i6g1H6sSk+butterfly_3161580f
-
சேஷாசலம் வனப் பகுதியின் செம்மரக்காடு காய்ந்துகிடக்கிறது.
வறண்ட ஓடையில் ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள். நீண்ட
நேரம் அசைவில்லை. மெதுவாக தொட் டால் காய்ந்த சிறகாய்
உதிர்கின்றன. அத்தனையும் இறந்துவிட்டன!
-
உலகில் எங்கோ நிகழும் ஒரு வண்ணத்துப்பூச்சியின்
சிறகசைப்பு மற்றொரு இடத்தில் பெரும் பிரளயத்தை
ஏற்படுத்தலாம். இதை ‘வண்ணத்துப்பூச்சி விளைவு’
என்பார்கள்.

தற்போது தமிழகத்தில் வறட்சியின் வடிவத்தில் வந்திருக்கும்
பிரளயத்தை வண்ணத்துப் பூச்சிகளே முன்னறிவிப்பு
செய்துள்ளதுதான் இயற்கையின் அரிய முரண்களில் ஒன்று.

தமிழகத்தில் சுமார் 340 வகையான வண்ணத் துப்பூச்சிகள்
இருக்கின்றன. இதில் சுமார் 298 வகையான வண்ணத்துப் பூச்சிகள்
சமீப ஆண்டுகளில் காணக் கிடைக்கவில்லை.

பொதுவாக வண்ணத்துப்பூச்சிகள் உணவு, இனப்பெருக்கத்துக்காக
வலசை போகின்றன. இந்த முறை வண்ணத்துப்பூச்சிகளின்
வலசை வெகுவாக நின்றுவிட்டிருக்கிறது.

இதுகுறித்து வண்ணத்துப் பூச்சிகள் ஆய்வாளர் வடிவழகன்,
‘தி இந்து’விடம் கூறியதாவது:
-
----------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் Empty Re: கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

Post by ayyasamy ram Sat May 06, 2017 12:33 pm

கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் EPMpDzctTeueAecgnrZe+sir3_3161582a
-
வண்ணத்துப்பூச்சிகளின் வலசைக் காலம் ஏப்ரல்
தொடங்கி ஆகஸ்ட் வரை நீடிக்கும்.

கோடையில் பூக்கும் தாவரங்கள் அதிகம். அவற்றில்
சுரக்கும் இனிப்பான ‘நெக்டார்’ திரவம் வண்ணத்துப்
பூச்சிகளின் விருப்ப உணவு. நீண்ட தூரம் பறக்க
வண்ணத்துப்பூச்சிகளுக்கு சில கனிமச் சத்துக்கள்
தேவை.

இவை ஆறுகள், ஓடைக் கரைகளில் கரிய நிறத்தில்
சேகரமாகும் தாது மணல்வெளிகளில் கிடைக்கும்.
யானை சாணத்திலும் இவை நிறைய இருக்கும்.

அவற்றை வண்ணத்துப்பூச்சிகள் விரும்பி உண்ணும்.
ஆனால், தொடக்க நிலை வறட்சியிலேயே
வண்ணத்துப்பூச்சி களுக்கான உணவு ஆதாரங்கள்
அழிந்துபோனதால் இந்த முறை வண்ணத்துப்
பூச்சிகளின் வலசையும் நின்றுபோயிருக்கிறது.

இதை வரப்போகும் வறட்சியின் முன்னறிவிப்பாக
எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
-
-------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் Empty Re: கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

Post by ayyasamy ram Sat May 06, 2017 12:35 pm



மேற்குத் தொடர்ச்சி மலையின் நீலகிரி வனத்தில்
முக்குருத்தி, தெங்குமரஹெடா, ஆனைக்கட்டி,
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை பாலருவிக்கு
மேலே தென்மலை ஆகிய இடங்களுக்கும் வண்ணத்துப்
பூச்சிகள் இந்த முறை வரவில்லை.

இயற்கை மீதான மனிதத் தாக்கு தல் இதற்கெல்லாம்
முக்கிய கார ணம். காவிரியின் பிறப்பிடமான கூர்க்கில்
மட்டும் சமீபத்தில் 70,000 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
சோலைக்காடுகளை ஒட்டிய மலைவாசஸ்தலங்களில்
கான்கிரீட் கட்டிடங்கள் பெருகிவிட்டன.
சபரிமலையில் விமான நிலையம் கட்ட ஏற்பாடு
நடக்கிறது.
-
வழக்கமாக கோடையில் ஆயிரம் மீட்டர் உயரத்துக்கு
கீழே இருக்கும் இலையுதிர் காடுகள் மட்டுமே
காய்ந்திருக்கும். ஆயிரம் மீட்டருக்கு மேலே இருக்கும்
சோலைக் காடுகள் ஈரப்பதத்தை தக்கவைத்திருக்கும்.

அங்கிருக்கும் நீர் நிலைகளில் தண்ணீர் இருக்கும்.
விலங்குகள் அங்கு இடம்பெயர் வதன் மூலம் உயிர்
பிழைக்கும். இந்த முறை சோலைக்காடுகளும் வறண்டு
விட்டன. குடிக்க தண்ணீர் இல்லாமல் யானைகள்
இறக்கின்றன. கீழே சமவெளிக்காடுகளில் புற்கள்
காய்ந்து கிடக்கின்றன.

பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், எறும்புகள், கரையான்கள்
இவை எல்லாம் இயற்கை நிகழ்வுகளை முன்கூட்டியே
எடுத்துரைக்கும் வழிகாட்டிகள். எப்போதும் வலசை வரும்
வண்ணத்துப் பூச்சிகளை இப்போது காண வில்லை.
அவை சொல்ல வருவதை எப்போது நாம் புரிந்துகொள்ளப்
போகிறோம்?

மகரந்த சேர்க்கை…

இந்தியாவில் வண்ணத்துப்பூச்சிகள் அதிகபட்சம் 300 கி.மீ.
வரை வலசை செல்கின்றன. தமிழகத்தில் வண்ணத்துப்
பூச்சிகள் 100 கி.மீ. வரை வலசை செல்கின்றன.

வண்ணத்துப்பூச்சியின் சராசரி ஆயுள்காலம் 4 – 6 மாதங்கள்.
இந்த காலக்கட்டத்தில், புழுவாக இருக்கும் முதல் ஒன்றரை
மாதம் தவிர்த்து, எஞ்சிய காலம் முழுவதும் தினந்தோறும்
நூற்றுக்கணக்கான முறை மகரந்த சேர்க்கையில்
ஈடுபடுகின்றன.

இதன்மூலம் வனத்தின் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவுகிறது.
குறிப்பாக, மாற்று மகரந்த சேர்க்கை மூலம் இயற்கையான
மரபணு மாற்றுப் பயிர்களும் பூக்களும் மனிதர்களுக்கு
கிடைக்கின்றன.
-
------------------------------------

டி.எல்.சஞ்சீவிகுமார், தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் Empty Re: கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

Post by Dr.S.Soundarapandian Sat May 06, 2017 6:33 pm

சோகம் அதிர்ச்சி


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள் Empty Re: கூட்டமாக வலசை போவது நின்றுவிட்டது: வறட்சியை முன்னறிவிக்கும் வண்ணத்துப்பூச்சிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum