புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10 
336 Posts - 79%
heezulia
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_m10சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Tue May 02, 2017 8:19 am

First topic message reminder :

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?


இப்போது அவைகளை வேகமாக அழித்தபின் புதிய விவாதம் தொடங்கியுள்ளது கண்கெட்டபின் சூரிய வணக்கம் செய்யமுடியுமா ?
யாரைத்தான்நம்புவதோ பேதை நெஞ்சம் என கலக்கம்
ஒண்ணுமே புரியலே என்னமோ நடக்குது என மயக்கம் !
தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட மே 11 வரை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இன்றைய தமிழ் ஹிந்துவில் ஒரு சுவையான கட்டுரை வந்துள்ளது
தகவலுக்காக நன்றியுடன் பகிர்கிறேன்



உவர் நிலத்தின் ஆலகால விஷத்தை உண்டது சீமைக்கருவேல மரங்கள்: ஆச்சர்யமூட்டும் ஓர் ஆய்வு

கா.சு.வேலாயுதன்
சூழலை பாதிக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட வில்லை!’ என்ற மனுவை முன்வைத்து தமிழகத்தில் சீமைக்கருவேல மரங்களை வெட்ட மே 11 வரை இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐஐடி இயக்குநர் பதிலளிக்கவும், வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கும் மாற்றி உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம். இதன் பின்னணியில் சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா? என்ற சர்ச்சை கச்சை கட்டி நிற்கின்றன. காரைக்கால், பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்கல்லூரி முன்னாள் முதல்வரும், உழவியல் துறை பேராசிரியருமான முனைவர் வி. செல்லமுத்து இந்த சீமைக்கருவேல மரங்கள் குறித்து 1992- 1995ல் ஆய்வு செய்து பிஎச்டி பட்டம் பெற்றவர். தி இந்து சார்பாக அவரிடம் பேசிய போது பகிர்ந்து கொண்டவை:

நான் விருதுநகர் மாவட்டத்தின் கிழக்கு கடைகோடி நரிக்குடி கிராமத்தை சேர்ந்தவன். பழைய ராமநாதபுரம் மாவட்டம் கடும்வறட்சிக்கு இலக்கான போது அங்கிருந்து தஞ்சாவூருக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக பஞ்சம் பிழைக்க சென்றார்கள். ஒரு கட்டத்தில் அப்படி கிராமங்களை விட்டு சென்ற 5 மாவட்ட மக்களின் வாழ்வையே மாற்றியது சீமைக்கருவேல மரங்கள். அவர்கள் இருந்த பூமியில் இந்த சீமைக் கருவேலன்கள் நன்றாக வளர்ந்தது. அதை வெட்டி விறகாக்கி, கரியாக்கி உள்ளூரில் மட்டுமல்ல; வெளியூர், வெளி மாநிலங்களுக்கும் அனுப்பத் தொடங்கினார்கள். சுண்ணாம்பு சூளை, கொல்லம்பட்டறை என பயன்பட்டிருக்கிறது. அதனால் அவர்கள் வாழ்வு மேம்பட்டது. அங்கே இதை விற்பனை செய்தே கோடீஸ்வரர் ஆனவர்களும் உண்டு. எனவே என் ஆராய்ச்சிக்கு இதையே எடுத்துக் கொண்டேன். அதை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொண்டபோது பலரும் சிரித்தார்கள். கேலி செய்தார்கள். எனக்கு தெரிந்து இதில் என்னைப்போல் ஆய்வு செய்து 4 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்கள்.

சீமைக்கருவேலம் 1870களில் மெக்ஸிகோ நாட்டிலிருந்து ஜோத்பூர் மகாராஜா ராஜஸ்தான் முழுக்க கொண்டு வந்து நட செய்திருக்கிறார். ராஜஸ்தான் பாலைவனங்களில் வீசும் காற்றின் வேகத்தால் மணல் மலைக் குன்றுகள். அது குடியிருப்புகளின் வீட்டையே மூடிவிடும். கதவுகளை திறக்க முடியாது. மணல்குன்றுகளை மண்வெட்டி, கடப்பாரை போன்ற ஆயுதங்களை வைத்து அகற்றுவது மனித சக்திக்கு பெரும்பாடாக இருந்தது. அந்த நிலத்திலும் விளையக்கூடிய தாவரமாக இது இருந்ததோடு, மணல் குன்றுகளை உருவாவதை தடுக்கும் அபூர்வ மரமாகவும் விளங்கியது. எனவே ROYAL TREE என்றே இதை வர்ணித்தார் அந்த மகராஜா. அது மட்டுமல்ல, இந்த மரங்களை வெட்டுபவர்கள் தலை துண்டிக்கப்படும் என்றும் சட்டம் போட்டு தடுத்திருக்கிறார். அதனால்தான் இன்றைக்கு ராஜஸ்தான் முழுப் பாலைவனமாகாமல் தடுக்கப்பட்டிருக்கிறது.

காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த சீமைக்கருவேல மரங்கள் தமிழகத்திற்குள் கொண்டு வரப்பட்டன. ஒரு மரத்திலிருந்து ஆயிரக்கணக்கான விதைகள் விழுவதால் ஆயிரக்கணக்கான நாற்றுக்களும் முளைத்தன. இந்த மரத்தின் விதைகளை சாப்பிட்ட கால்நடைகள் போடும் சாணம் மூலமாகவும் விதைகள் விழுந்து முளைத்து பெருக ஆரம்பித்தது. அப்படி மட்டும் இது வந்து பெருகாமல் இருந்திருந்தால் நம் மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளே எரிபொருளுக்காக அழிக்கப்பட்டிருக்கும். அந்த காலத்தில் களர் உவர் நிலங்களை சலவைத்தொழிலாளர்கள் தேடிச்சென்று துணி துவைக்கும் சோடா உப்பு எடுப்பார்கள் என்பதை கேள்விப்பட்டிருப்பீர்கள். அந்த நிலையை அடியோடு மாற்றியது இம்மரங்கள். கடலோர பிரதேசங்களில் இது வளர்ந்து கடல் உப்புமண் உள்நாட்டிற்குள் ஊடுருவாமல் தடுத்தது. உப்பள நிலத்தில் நிறைந்திருக்கும் சோடியம் குளோரைடு, சோடியம் சல்பேட் உப்புக்களை உறிஞ்சி சாப்பிட்டு தானாகவே வளர்ந்தது (இந்த நிலத்தில் மற்ற மரங்கள் வைத்தால் கருகிவிடும்) அமிர்தம் கடையும்போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை உண்டு சிவன் அருள் புரிந்ததுபோல் சோடியம் என்ற நஞ்சை உண்டு நிலத்தை சொஸ்தப்படுத்திய இந்த தாவரத்தை WONDER CHILD OF NATURE என்று வர்ணித்திருக்கிறார் ஒரு விஞ்ஞானி.

ஆடு, மாடுகள் இந்த இம்மரங்களின் காய்களையே சாப்பிட்டு வளர்ந்தன. வீட்டிற்கும், தோட்டத்திற்கும், காடுகளுக்கும், சிறுதொழிற்சாலைகளுக்கும் தடுப்பு வேலியாக இந்த மரங்களே பயன்பட்டது. விறகாக, கரியாக, கரித்துகளாக மாற்றம் செய்யப்பட்ட இம்மரம் சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கும், வெடிமருந்து தொழிற்சாலைகளுக்கும், நீராவியால் இயங்கும் ஆலைகளுக்கும், ஊதுபத்தி கம்பெனிகளுக்கும் சென்றது. தவிர கார்பன் எலக்ட்ரோடுகளாக ஆய்வகங்களிலும், இண்டஸ்ட்ரிகளிலும் பயன்பட்டது. இப்பவும் பரமக்குடி, மானா மதுரை போன்ற பகுதிகளில் இப்பவும் குஜராத் மாநில வியாபாரிகள் இம்மரத்தின் கரிகளை லாரி, லாரியாக வாங்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அவை மும்பை, கல்கத்தா பகுதிகளிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.

அது எங்கே போகிறது. எதற்கு கொண்டு செல்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளவில்லை. 100 சதுர கிலோமீட்டர் இந்த சீமைக்கருவேல மரங்கள் இருந்தால் நெய்வேலி லிக்னைட் தொழிற்சாலை ஒன்றை போட முடியும். அதை கரியா எரிச்சு புகையா விட்டால்தான் சூழல் கேடு, அதையே ஸ்டீம் எனர்ஜியாகவும், எலக்ட்ரிசிட்டியாகவும், பயோ கேஸ், பயோ ப்யூல் என மாற்றிப் பயன்படுத்தினால் ஒரு கேடும் இல்லை என்கிறார் ஒரு விஞ்ஞானி. ஒரு காலத்தில் காகிதக்கம்பெனியில் இதன் பயன்பாடு அதிகம் இருந்தது. இந்த மரங்கள் வளைவாகவும், முள்ளோடும் இருப்பது இதை பயன்படுத்துவதற்கு சிரமங்களை ஏற்படுத்தியது. அதை சமவாக்கில் முள் இல்லாமல் புதிய வடிவில் விளைவிக்க விதை ஆய்வு முயற்சிகள் நடந்துள்ளது. அது தொடரவில்லை.

இதன் கீழே எந்த தாவரமும் வளராதுதான். கண்மாய், ஏரி என நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இவை நின்றதால் அதன் நீர்பரப்பு குறைந்தது. அல்லினோபதி என்ற வேதியியற் பொருள் மிகையாக இருப்பதால் எளிதாக நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது என்கிறார்கள். ஆனால் இதனால்தான் நிலத்தடி நீர் குறைந்தது என்று நிரூபிக்கப்படவில்லை. மாறாக இம்மரங்கள் எங்கெல்லாம் அதிகமாக உள்ளதோ அங்கு தண்ணீர் நிறைய இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. கலிபோர்னியாவில் 100 அடி, 200 அடி நிலத்தடி நீர் உள்ள பகுதிகளை இந்த தாவரம் வளர்ந்ததை வைத்தே அறிந்துள்ளார்கள். உலகில் 3ல் ஒரு பங்கு சீமைக்கருவேல மரங்கள் 40 இனங்களாக இருக்கிறது. இந்தியாவில் 2 இனங்கள் மட்டுமே உள்ளது.

அதில் ஓர் இனமே தமிழ்நாட்டில் உள்ள ‘ப்ரோசோபிச் சூலிஃப்லோரா! (PROSOPIS JULIFLORIA)’. இதில் முட்கள் உள்ளது. இலைகளை ஆடுமாடுகள் சாப்பிடாது. காய்களை மட்டுமே சாப்பிடுகிறது. மனிதர்களுக்கு உணவாக பயன்படுவதில்லை. இந்த இனம் ஆர்டிக், அண்டார்டிகா தவிர அனைத்து நாடுகளிலும் உள்ளது. ஆனால் ராஜஸ்தானில் உள்ள சீமைக்கருவேலம் ப்ரோசோபிச் சினரேரியாவிற்கு (PROSOPIS CINERARIA) முட்கள் கிடையாது. அதில் உள்ள இலைதலைகளை ஆடு, மாடுகள் சாப்பிடுகிறது. அதில் உள்ள விதைகளை மக்கள் பச்சைப்பயிறு போல உணவுக்கு பயன்படுத்துகிறார்கள். அந்த சீமைக்கருவேலம் மத்திய பிரதேசத்திற்கு கீழே மட்டுமே உள்ளது.

எந்த உயிரினமும் சிறிய அளவில், சிறுபான்மையாக இருக்கும்போது, அதன் தேவை அதிகமாக இருக்கும். அப்போது அதை அழைத்து விருந்து வைப்பது மனிதனின் வழக்கம். அதுவே மிகுதியானால், தேவை குறைந்தால் சமுதாயப்பேரழிவுக்கே இதுதான் காரணம் என விரட்டுவோம். உதாரணத்திற்கு கங்காரு ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு. அதுவே அதிகமாகி விவசாய நிலங்களுக்குள் நுழைந்து விளைச்சலை அழித்தால் பேரழிவு சுட்டுக் கொல்ல சொல்லுகிறார்கள். அதே நிலைதான் தற்போது சீமைக்கருவேலனுக்கும் ஏற்பட்டுள்ளது. விளைநிலத்தை வீடுகளாக்கக்கூடாது; வீடுகள் உள்ள நிலத்தை விளைநிலமாக்க முயற்சிக்கக்கூடாது என்பதுதான் இயற்கை நியதி. அதுபோல இது தேவையற்ற இடங்களில் விளைய விடாமல் தடுப்பதும், தேவையான இடங்களில் வளர்வதும் அவசியமானது. இது இல்லாமலே போய்விட்டால் வரும் காலங்களில் மற்ற காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க முடியாது.


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri May 05, 2017 2:09 pm

நன்மையையும் உண்டு தீமையும் உண்டும்
விவசாய நிலத்தில் இருந்தால் - தீமை.
உவர்நிலம் மற்றும் கடலோரத்தில் இருந்து மண்ணை காப்பாற்றினால் - நன்மை.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon May 08, 2017 8:44 pm

சரவணன் wrote:நன்மையையும் உண்டு தீமையும் உண்டும்
விவசாய நிலத்தில் இருந்தால் - தீமை.
உவர்நிலம் மற்றும் கடலோரத்தில் இருந்து மண்ணை காப்பாற்றினால் - நன்மை.
யோசிக்க வேண்டிய விஷயம் தான். இது பற்றி விரிவாக சமீபத்தில் ஒரு whats app பதிவும் ஒன்று எனக்கு வந்தது.



சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonசீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Mon May 08, 2017 9:03 pm

இயற்கையின் படைப்பில் பாம்பு , புலி , சிங்கம் போன்றவை கொடியவைதான் . மனிதனுக்குத் தீங்கு பயப்பவைதான் .

ஆனால்

எலிகளின் பெருக்கத்தைப் பாம்பு கட்டுப்படுத்துகிறது . பாம்புகள் கருடன் போன்ற பறவைகளுக்கு உணவாகின்றன . பறவைகளை மனிதன் உண்கிறான் .இந்த சுழற்சி இல்லையென்றால் உலகத்தின் இயக்கம் நின்றுபோகும் .

எனவே தாவரங்களும் அப்படித்தான் .நல்ல தாவரம் , கெட்ட தாவரம் என்று இனம் பிரிக்கமுடியாது . வேம்பின் கசப்பில் நன்மை இருப்பதுபோல் , கரும்பின் இனிப்பில் தீமையும் உண்டு . எனவே எல்லாவற்றிலும் " குணம் நாடிக் குற்றம் தவிர்த்தல் " நம்முடைய கடனாகும் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 08, 2017 11:50 pm

சூப்பருங்க
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84851
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue May 09, 2017 5:46 am


சீமை கருவேலமரம்
இது தேவையற்ற இடங்களில் விளைய விடாமல் தடுப்பதும்,
தேவையான இடங்களில் வளர்வதும் அவசியமானது
-
சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 09, 2017 2:35 pm

M.Jagadeesan wrote:இயற்கையின் படைப்பில் பாம்பு , புலி , சிங்கம் போன்றவை கொடியவைதான் . மனிதனுக்குத் தீங்கு பயப்பவைதான் .

ஆனால்

எலிகளின் பெருக்கத்தைப் பாம்பு கட்டுப்படுத்துகிறது . பாம்புகள் கருடன் போன்ற பறவைகளுக்கு உணவாகின்றன . பறவைகளை மனிதன் உண்கிறான் .இந்த சுழற்சி இல்லையென்றால் உலகத்தின் இயக்கம் நின்றுபோகும் .

எனவே தாவரங்களும் அப்படித்தான் .நல்ல தாவரம் , கெட்ட தாவரம் என்று இனம் பிரிக்கமுடியாது . வேம்பின் கசப்பில் நன்மை இருப்பதுபோல் , கரும்பின் இனிப்பில் தீமையும் உண்டு . எனவே எல்லாவற்றிலும் " குணம் நாடிக் குற்றம் தவிர்த்தல் " நம்முடைய கடனாகும் .
நல்ல உதாரணம் ஆனால் எதற்கு இந்த பதிவில் இட்டுள்ளீர்கள் என்று தெரியவில்லை ,

நீங்கள் சொல்லியுள்ள எலி , பாம்பு , புலி சிங்கம் பூமியின் உயிர்சங்கிலி அறுந்துவிடாமல் தொடர இயற்கை ஏற்படுத்தியது.

ஆனால் இது போன்ற தாவரங்களால் , ஒரு இடத்தின் தட்பவெப்பத்திற்கு மட்டுமே பழக்கப்பட்ட அந்தந்த ஊர் தாவரங்கள் பூண்டோடு அழிக்கப்படுகின்றனவே.

நன்கு படித்தவர்கள் கூட இந்த விஷயத்தில் ஒரு பக்கமாகவே சிந்திக்கிறார்கள் , இது தான் விந்தையாக உள்ளது.


ஒரு விவசாயியின் மகனான எனக்கு விவசாயத்தில் இன்னும் ஆர்வமுள்ளது அதனால் தான் இன்றும் சொந்த ஊரில் விவசாயத்தை தொடர்ந்துகொண்டும் உள்ளேன்.அப்படியிருக்கும் நான் ஏன் ஒரு தாவரத்தை வேரோடு அழிக்கவேண்டும் என்று சொல்லுபவர்களுக்கு ஆதரவு தருகிறேன்.

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 09, 2017 4:12 pm

நம்முடைய நிலத்திலே சீமைக் கருவேல மரங்களை முளைக்காமல் பார்த்துக் கொள்வதில் தவறில்லை . ஆனால் உலகத்தில் அது எங்கும் இருக்கக்கூடாது என்பது என்ன நியாயம் ?

புகையிலை கெடுதி என்று தெரிந்தும் பயிரிடுவதில்லையா !

டினோசார் என்ற விலங்கு முற்றிலும் அழிந்து போய்விட்டது ; இப்போது சிட்டுக்குருவி இனம் மெல்ல மெல்ல அழித்துகொண்டு வருகிறது . இனி வருங்கால குழந்தைகள்  " சிட்டுக்குருவி " என்றால் " அது எப்படி இருக்கும் ? " என்று கேட்பார்கள் .

அதுபோல சீமைக்கருவேல மரத்தை வருங்கால சந்ததியினருக்கு காட்டவேண்டிய கடமை தாவர இயலாருக்கு உள்ளது . மனித சமுதாயத்திற்கு உள்ளது .

முகர்ந்தால் வாடிவிடும் அனிச்சப்பூ திருக்குறளில் பேசப்படுகிறது . அது முற்றிலுமாக அழிந்துவிட்டது . இப்போது இலக்கியத்தில் மட்டும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது .

இறைவனின் படைப்பில் சீமைக்கருவேல மரம் தவறு என்று சொல்ல நாம் யார் ?

இயற்கை காரண காரியத்தோடுதான் இயங்குகிறது . ஆலமரத்தில் சிறிய பழமும் , சிறிய கொடியில் பெரிய பூசணிக்காயும் இருப்பதை ஒருவன் கேலி செய்தான் . அவனுக்கு இயற்கை எவ்வாறு பாடம் கற்பித்தது என்பதை நாம் அறிவோம் .

எனவே இயற்கையின் படைப்பில் எதுவுமே தவறில்லை !

வள்ளுவர் கூட

" இளைதாக முள்மரம் கொல்க " என்று சொன்னாரே தவிர முற்றிலுமாக அழிக்கவேண்டும் என்று சொல்லவில்லை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue May 09, 2017 4:58 pm

M.Jagadeesan wrote:நம்முடைய நிலத்திலே சீமைக் கருவேல மரங்களை முளைக்காமல் பார்த்துக் கொள்வதில் தவறில்லை . ஆனால் உலகத்தில் அது எங்கும் இருக்கக்கூடாது என்பது என்ன நியாயம் ?
புரியவில்லையா இல்ல புரியாத மாதிரி பதிவிடுகிறீரா புரியவில்லை.

உலகத்தில் எங்குமே இருக்க கூடாது என்று சொல்லவில்லை , இது தமிழக தாவரம் கிடையாது, நம் மண்ணின் இயற்கையாக வளர கூடிய தாவரங்களை அழிக்கும் குணம் கொண்டது , இதன் அடியில் பல்லுயிர்பெருக்கிகள் வளர முடியாது.


வேண்டுமென்றால் இன்று இங்குள்ள பாலைவனத்தில் எந்த வித தண்ணீரும் இல்லாமல் வளர்ந்து இருக்கும் கருவேலமரத்தை புகைப்படம் எடுத்து போடுகின்றேன், வருடதிற்கு இரண்டு நாள் அல்லது அதிகபட்சம் ஒரு வாரம்  பேயும் மழையால் தான் இந்த மரம் உயிரோடு உள்ளது என்றும் அல்லது நிலத்தடி நீரை கிலோமீட்டர் (இங்கு நிலத்தடி நீர் எவ்வளவு ஆழத்தில் உள்ளது என்றும் , மண் பெரும்பாலும் வெள்ளை நிற சுண்ணாம்பு பாறைகள் என்றும் கூகிளில் தேடினால் தெரிந்துகொள்ளலாம்) கணக்கில் தனது வேரை பூமிக்கடியில் செலுத்தி நீரை உறிஞ்சி வாழ்கிறது என்றும் சொன்னால்  அதன் பிறகு நான் பின்னூட்டம் இடுவதில் பயனில்லை புன்னகை

avatar
Guest
Guest

PostGuest Tue May 09, 2017 5:02 pm

PROSOPIS CINERARIA -Khejri tree -வன்னிமரம்,பரம்பை  என்பது, இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தின் மாநில மரமும், பாக்கிஸ்தான் சிந்து மாகாணத்தின் மாகாண மரமும் ஆகும். ஆனால் இன்று குழப்பமடைந்திருக்கும் மரம் வேறானது.

கருவேல மரம் மருத்துவக் குணம் கொண்ட மூலிகை மரமாகும்.
அதனால் தான் ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி  என்று சொல்லப்பட்டது.இது கருவேல மரம், சீமைக் கருவேல மரமல்ல. இந்தப் பெயர்க் குழப்பமே இன்றைய குழப்பம்.

தமிழ் நாட்டில் இயற்கையாக வளரும் கருவேலமரத்தையும் (Acacia nilotica/ ACACIA ARABICA)  வெளியில் இருந்து (சீமையில்) அறிமுகப் படுத்திய சீமை கருவேலமரத்தையும் (Prosopis juliflora) ஒன்றாகக் கருதியதால் இன்று குழப்பம் வந்துள்ளது.இரண்டும் ஒன்று போல் இருந்ததாலும் அடிப்படையில் இவ்விரண்டும் வெவ்வேறு மரங்களாகும்.

இது ஆபத்தான வேளாண் கொல்லி ,சீமைக் கருவேல மரம்(வேலிக்காத்தான்)

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 800px-A_scene_of_Prosopis_juliflora

இது மருத்துவ குணம் கொண்ட சோழர் காலத்து தமிழக கருவேலமரம்

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 %E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

இது ராஜஸ்தானில் இருப்பது.இதற்காக முத்திரை ஒன்றும் வெளியிட்டுள்ளார்கள்.

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 Khejro_Lopping

எல்லாம் ஒன்று போலவே உள்ளது.
நன்றி.விக்கிபீடியா,என்சைக்ளோபீடியா.

இது,கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தின் பல்லுயிர் பரவல் துறை விஞ்ஞானி குன்னிகண்ணன் சொன்னது.

சீமைக்கருவேலம் மரத்தை பொறுத்தவரை, இதன் நன்மை மிகவும் குறைவு. பாதிப்பு அதிகம். இது சிறிய இலை உள்ள தாவரமாகும். பொதுவாக சிறிய இலை தாவரங்கள் வளர, அதிகம் தண்ணீர் தேவைப்படாது. அதனால்தான் வறண்ட நிலத்தில் கூட இது வளர்கிறது.விறகாகவும், கரியாகவும் மட்டும் தான் அதிகம் பயன்படுகிறது. வறண்ட நிலங்களில் வெயிலை தாங்கி பசுமையை தக்க வைக்கிறது. இதனால், வெப்பத்தின் தாக்கம் குறைகிறது. மற்றபடி வேறு எந்த ஒரு ஆக்கப்பூர்வமான செயல்களுக்கும் பயன்படுவதில்லை.இது கார்பன்டை ஆக்சைடை வெளியிடும் தாவரம் என்பதால், அகற்றப்பட வேண்டிய தாவரம்தான். ஆனால், இதை அகற்றினால் மிகப்பெரிய சிக்கலும் காத்திருக்கிறது. இந்த மரம் அதிகம் உள்ள இடத்தில், முழுவதையும் அகற்றும் போது, அப்பகுதி பசுமையற்ற வெற்றிடமாகிறது.அப்போது அங்கு சூரிய வெப்பத்தின் தாக்கம் மிகவும் அதிகரிக்கும். குறிப்பாக, தென் மாவட்டங்களில் இதைத்தவிர வேறு மரங்கள் இல்லாத பகுதிகள் நிறைய உள்ளன. இதை ஈடு செய்ய, அப்பகுதியில் வெப்பம் தாங்கி வளரும் மரங்களை நடவேண்டும். சீமைக்கருவேலத்தை அகற்றினாலும், அதன் விதைகள் மண்ணுக்குள் புதைந்துள்ளன.எனவே, 100 ஆண்டுகள் ஆனாலும் மீண்டும் முளைத்து விடும். அதை வளரவிடாமல் தடுப்பது அவசியம். அதிகமாக இருந்த தாவரம் முற்றிலும் அகற்றப்படும்போது, அந்த இடத்தின் தட்ப வெப்பம் உடனே மாறும்; அதை ஈடு செய்ய மாற்று நடவடிக்கை தேவை.

வெளி நாட்டில் இருந்து வந்த கருவேல மரத்தை (சீமைக்) வெட்டிடலாம்.அது ஆபத்தானது தேவையற்றது. நம் நாட்டு கருவேல மரத்தை வெட்டக் கூடாது.அது மூலிகை மரம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue May 09, 2017 5:55 pm

சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 1571444738 சீமைக்கருவேல மரங்கள் நல்லவையா? கெட்டவையா?  - Page 2 1571444738 தகவலுக்கு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக