புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
96 Posts - 49%
heezulia
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
7 Posts - 4%
prajai
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
2 Posts - 1%
Barushree
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
2 Posts - 1%
cordiac
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
223 Posts - 52%
heezulia
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
16 Posts - 4%
prajai
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
5 Posts - 1%
Barushree
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_m10அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த  விவசாயம் !                Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த விவசாயம் !

B.VENKATESAN
B.VENKATESAN
பண்பாளர்

பதிவுகள் : 170
இணைந்தது : 13/04/2015

PostB.VENKATESAN Sat Apr 29, 2017 9:51 am

அந்தநாள் ஞாபகம் – வாழ வைத்த விவசாயம் ! - பா.வெ.

வயல்வெளி நோக்கி
வளையும் சாலைகள்
ஊர் நெருங்குவதை
உறுதிப்படுத்தும்!

சாலையின் இருமருங்கிலும்
சரியான இடைவெளிகளில்
தென்னை மரங்கள்
தெளிவாய் நிற்கும்!

சாலையில் எதிரே
சங்கீதம் ஏந்திய
டிராக்டர் ஒன்றை
சந்திக்க நேரிடும்!

இடைக்கால இசையில்
இனிமையான பாடலொன்று
இதயம் தீண்டி
இமைப்பொழுதில் தாண்டி
செல்லும்!

ஆற்றுநீர் வாய்க்கால் வழியோடி
நாற்றங்கால் வரை
நன்றாகவே பாய்ந்திருக்கும்!

வரப்பு மடை வரை
வருகை தரும் நீர்
வழியெங்கும் கண்ணாடி
விற்று வரும்!

முகம் பார்க்க மட்டுமின்றி
அள்ளிப் பருகவும்
ஆசை வரும்!

நத்தை நகர்ந்த தடம் கூட
நன்றாக தெரியும்
நகராமல் நின்ற நீரில்!

வரப்பு மீது வழிவிட்டு நின்று
வழித்தடம் அமைக்கும்
புல்லினங்கள்!

வரப்பிடை நீண்ட
நீரோடை வழியே
வழி மாறி வந்த மீன்களை
வான்வரை வழி அனுப்ப
ஒற்றைக்கால் விரதத்தில்
காத்திருக்கும்
கொக்கினங்கள்!

வரப்பு ஒரத்தில்
வழிகின்ற உளைகள்
நயமாய் வனைந்த
நண்டின் வளைகள்!

சட்டைக்குள் வைக்கோல் திணித்த
சட்டித்தலை உருவமொன்று
இரவுப் பறவைகள் அமர்ந்து
வேட்டையாட ஏதுவாய்
வரப்பின் மீது
வளர்ந்து நிற்கும்!

எரு கலப்பை உரமாக்க
ஏர் கலப்பை நிலம் கீற
எருது இரண்டு களமிறங்கும்!

வரப்பு வரை வாகு எடுத்து
வட்டமடித்து வயல் முழுதும்
உழுது வரும்!
மண்ணில் உரம் சேர்க்க
மாற்று வழி தேடியதில்லை!
மாட்டுச் சாணமும்
மக்கிய தழைகளும்
விறகு அடுப்பு
விட்டு வைத்த சாம்பலும்
தின்று திணரும் குப்பைக்குழியில்
தினம்தினம் சேரும்
இயற்கை உரம்!

தழைச்சத்து, மணிச்சத்து,
சாம்பல் சத்து என
எல்லாம் தரும்
இந்த உரம்!

சாலையில் கிடத்தி
சக்கையாகிப் போன
வேப்பங்கொட்டைகள்
சக உரமாய்
சேர்ந்து வரும்!

விதைக்கப்பட விதிக்கப்பட்ட
நெல் மூட்டைகள்
நெடுநேரம் நீரில் ஊறும்!
சணல் சாக்கின்
சல்லடைத் துளைகளில்
முளைவிட்ட நெல் மணிகள்
மூச்சுத் திணறி கரை ஏறும்!

விதைகள் தெளிக்க
விரைவில் முளைக்க
வேண்டிய உயரம் வளர
விடப்பட்ட நாற்றங்கால்
நீர் பருகி நிலம் குழைந்து
நெகிழ்ந்து நிற்கும்!

நாற்றங்காலில் தெளித்த விதைகள்
நன்றாக வளர்ந்த பின்பு
நாற்றுகள் பறிக்கப்பட்டு
நடவுக்கு காத்திருக்கும்!

வழிபாடும் வழிவழியாய்
வரும் பாடலும்
நடவை தொடங்கி வைக்கும்!

நேர் கோட்டில்
நேர்த்தியாக நடுவதற்கு
கயிறு பிடிக்கும்
கலை ஒன்று
காலங்காலமாய் உண்டு!

களைக்காமல் மலைக்காமல்
காலை வெயிலில் சளைக்காமல்
நடவுதனைத் தொடர
நடவின் நடுவே
நம் மனதை நடும்
நாட்டுப்புற பாடல் ஒன்று!

உச்சி வெயில் தின்று
உரமேறிப் போன
உடல்களில்
நிழல் இறங்கி
நிலம் தொட மறுக்கும்
மதிய வேளையில்
ஒருவேளை உணவை
யாசிக்கும் பசி!

களைப்பு உழைப்பை கலைக்க
கரையேறும் கூட்டம்…
கரையோர மர நிழலில்
களைப்பாற அமர்ந்து
கதை பேசியபடி
உணவருந்தும்!

தூக்கு வாலிகள் சுமந்த
பழைய சோற்றில்
கடைந்த மோரின் வாசம்
காற்றில் தூக்கும்!

வருத்த கருவாடு
வற்றல் மிளகாய்
வடுமாங்காய்
வெங்காய ஊறல்
சுண்டிய மீன் குழம்பு
சுவையான ஊறுகாய் என
வித விதமாய் தொட்டுக்கொள்ள
விரல் நுனிகள் துடிக்கும்!

மரக்கிளை சுமந்த
தொட்டில் ஒன்றில்
மர நிழல் மத்தியில்
மாசற்ற காற்று வாங்கி
மதிமயங்கி உறங்கும் குழந்தை
மதியவேளை விழித்து அழும்!

உடன் எழுந்து பாலூட்டி
உறங்க வைத்த பின்பே
உணவைத் தொடர்வாள்
உடல் வற்றிய தாய்!

கஞ்சி வாலிகளை
கண்மாய் நீரில்
கழுவிய பின்னர்
காட்டுக் கருவேல
மரக்கிளைகளில்
கணக்காய் அமர்த்தி விட்டு
கடமை தொடரும்
நடவு வயலில்!

கருப்பு குடையின் கீழ்
காதோரம் நரை தின்ற
கனத்த உருவில்
கால் மறையாத வேட்டியில்
கரை மீது நின்று
கவனிப்பார் பண்ணையார்!

நடவு முடிந்து நாற்று வளர
நடுநடுவே நீர் விடலும்
நன்றாக களை எடுத்தலும்
நன்றாகவே நடக்கும்!

வரப்பு வரை நீரை
வழிய விடுவதும்
வடிய விடுவதும்
வழிவழியாய் வரும்
தலையாரிகள்!

முண்டாசுக் கட்டும்
முதுகு சூழ்ந்த கம்பளியும்
கையில் தடியும்
கம்பி பிடியில்
அரிக்கன் விளக்கும்
களத்துமேட்டில் தலையாரியுடன்
காவலுக்கு வரும்!

வளர்ந்த பயிர்களின்
வனப்பை உரசும் காற்று
வழிதோறும் வாசம் வீசும்!

அடர்ந்த பச்சை வண்ணம்
படர்ந்த பயிர்கள் எங்கும்
ஆனந்த அலைகள்
அடுக்கடுக்காய் பேசும்!
அந்தி வானம்
சிந்தும் மஞ்சளை
அரைத்து சிவந்த
ஆதவனை தம்முள்
பதுக்கி வைக்கும்
பனை மரங்கள்!

வரப்பில் அமர்ந்த பறவைகள்
வானில் கூட்டாய் பறக்கும்போது
வட்டமிட்டு வரையும் உருவங்கள்
வானில் வட்டமிட்டு வைக்கும்!

பச்சை மங்கி
பழுப்பேறும் தருணம்
விளைந்த நிலம் நீங்க
விருப்பமற்று வருத்தமுற்று
நேசமொடு நிலம் நோக்கும்
நெற்கதிர்கள்!

நீருக்கு வாடியதாய்
வரலாறு இல்லை!
நிலம் நீங்க வாடுவது
நேசத்தின் எல்லை!

கதிர்கள் முற்றி
கனம் நிறைந்து
காற்றில் உதிரும்
நெல்மணிகளை
கவர்ந்து செல்லும்
புறாக்கூட்டம்!

வரப்போகும் காலத்தை
வாட்டமின்றி கழிக்க
வரப்போர வளைகளில்
நெல்மணிகளை
நிறைக்கும் எலிகள்!

வளை வரை சிந்திய
வைர நெல்மணிகள்
வழித்தடம் அமைக்க
எலிகள் வாழ்விடம்
எளிதில் தெரியும்!

அறுவடை செய்ய என்றும்
அதே ஊர் நபர்களை நாடுவது
நாளும் வளர்ந்த நம்பிக்கையும்
நன்றி மறவாத நற்குணமும்!

வானத்து சூரியனை வணங்கி
வயலில் இறங்கும் கூட்டம்
கருக்கு அரிவாள் கொண்டு
கதிர் அறுத்து கட்டு கட்டி
களத்துமேடு வரை
கொண்டு சேர்க்கும்!

கருங்கல் மீது கட்டு அடித்து
காளைகள் கொண்டு கிடாவடித்து
கதிர் உதிர்த்த நெல்மணிகளை
களத்தில் தூற்றி கருக்காய் பிரித்து
கனமாய் நிரம்பும்
நெல் மூட்டைகள்!

காவற்கூலியும் கதிர் அறுத்த கூலியும்
காசாகவும் கல நெல்லாகவும்
கணக்கு பார்த்து கொடுக்கப்படும்
களத்துமேட்டில்!

களம் கண்ட நெல்மூட்டைகள்
காளை மாட்டு வண்டியில்
கண்படாத குறையாய்
வீடு வந்து சேரும்!

வண்டிமாடுகள் இழுத்து வந்த
வைக்கோல் கட்டுகளை
வழியெங்கும் மரக்கிளைகள்
உரசிப்பார்க்கும்!
வழிச்சிதறலில் மீதமே
வீட்டுக் கொல்லையில்
குவிந்து நிற்கும்!

கதிர்கள் விட்டுச்சென்ற
காலடித் தடத்தில்
தாளடி பருவத்திற்கு
தயாராகும் பயறுவகைகள்!
தழைச்சத்து தழைத்தோங்க
தாளடி பருவம் தலையாயது!

குறுவை சம்பா தாளடி என
முப்போகம் பயிர் விளைய
மும்மாரி மழை பொழிய
ஊர்செழிப்பும் உள நிறைவும்
உலவிய காலம்... !!!

மன உளைச்சலும்
மண்டைக் குடைச்சலும்
பணி சுமையும்
பார மனமும் பற்றிடாத
பழைய காலம்... !

இயற்கைவளம் கெடாது
இயல்பாய் பணி அமைந்த
இறந்த காலம்!!!

எண்ணம் போல் வாழ்வு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக