Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'தோனி தான் சிறந்த ஃபினிஷர்' : புனே அணி உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா அந்தர் பல்டி!
3 posters
Page 1 of 1
'தோனி தான் சிறந்த ஃபினிஷர்' : புனே அணி உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா அந்தர் பல்டி!
-
இன்று சன்ரைசர்ஸுடன் நடந்த போட்டியில் சிறப்பாக
ஆடிய தோனியை பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்
புனே அணியின் உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா.
-
கடந்த சில போட்டிகளுக்கு முன்பு புனே அணியின்
உரிமையாளர் ஹர்ஷ் கோயங்காவின் கருத்துக்கள்
சமூக வலைதளங்களில் சர்ச்சைகளை கிளப்பி வந்தன.
இந்த ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக விளையாடி
வரும் தோனி முதலில் கேப்டன் பதவியில் இருந்து
நீக்கப்பட்டார். இதையடுத்து ஸ்டீவ் ஸ்மித் தான் சிறந்த
கேப்டன் என ஹர்ஷ் கோயங்கா ட்விட்டரில் பதிவிட்டார்
-
.மேலும் முதற்கட்ட ஆட்டங்களில் தோனி ரன் குவிக்க
தடுமாறிய போது ஹர்ஷ் கோயங்கா புனே அணி
வீரர்களின் சராசரியை ட்வீட்டாக போட்டு தோனி
ரசிகர்களை மேலும் வெறுப்பேற்றினார்.
-
இதையடுத்து தோனியின் மனைவி சாக்ஷி மாலிக்
உள்பட பலர் கோயங்காவை, திட்டியும், கலாய்த்தும்
ஸ்டேட்டஸ் தட்டினர். அவர்களை கோயங்கை ஃப்ளாக்
செய்தார்.
-
இந்நிலையில், தற்போது 'தோனியே சிறந்த ஃபினிஷர்'
என அவர் பதிவிட்டுள்ளார் கோயங்கா. சன்ரைசர்ஸ்
உடன் நடந்த போட்டியில் தோனி அரைசதம் அடித்ததோடு,
கடைசி வரை நின்றுதான் ஒரு சிறந்த ஃபினிஷர் என்பதை
மீண்டும் நிரூபித்துள்ளார். இதையடுத்து,'தோனியின்
சிறப்பான ஆட்டம். அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்திருப்பது
மகிழ்ச்சி' என கூறியுள்ளார் கோயங்கா.
இதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் தோனியின்
ரசிகர்கள் கோயங்காவின் ட்வீட்டை வைத்து அட்டகாசம்
செய்து வருகின்றனர்.
-
---------------------------------------
விகடன்
Re: 'தோனி தான் சிறந்த ஃபினிஷர்' : புனே அணி உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா அந்தர் பல்டி!
"பாட்ஷா.. மாணிக் பாட்ஷா!" - தோனி ரிட்டர்ன்ஸ்
-
-
கேப்டன் பதவி பறிப்பு, புனே உரிமையாளர்
கோயங்காவின் நக்கல் ட்வீட், மோசமான ஃபார்ம்,
ஓய்வு சர்ச்சைகள் என தோனிக்கு கொஞ்ச நாள்
போதாத காலம்.
இப்படியே ஆடிக்கொண்டிருந்தால் புனே அணியில் ஒரு
வீரராக கூடத் தொடர முடியாது எனும் அளவுக்கு
சொதப்பல் இன்னிங்ஸ் ஆடிக்கொண்டிருந்தார் தோனி.
புனே நிர்வாகத்துக்கும் தோனிக்கும் என்ன புகைச்சலோ
தெரியவில்லை. அவர் சொதப்பல் ஆட்டம் ஆடுவதை
ஒரு வகையில் ரசித்துக் கொண்டிருந்தனர். ரசிகர்கள்
தோனி பக்கம் நின்றார்கள்.
தோனி இனியும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை
என சப்போர்ட்டுக்கு வந்தார் வார்னே.
முதல் மூன்று ஆட்டங்களில், தோனி பேட் பிடிக்க வந்தால்
பவுலர்கள் குஷியாகும் அளவுக்கு நிலைமை இருந்தது.
பெங்களூருக்கு எதிரான போட்டியில் ஸ்டேடியத்தை விட்டு
வெளியே செல்லும் அளவுக்கு ஒரு இமாலய சிக்ஸர் வைத்த
தோனி, தனது மின்னல் வேக ஸ்டம்பிங்கால் டிவில்லியர்ஸை
பெவிலியனுக்கு அனுப்பி புனேவுக்கு வெற்றியை
உறுதிப்படுத்தினார்.
கடந்த போட்டியில் லேசாக ஃபார்முக்கு வரும் அறிகுறி
தெரிந்தது.
இதோ இன்று பழைய பன்னீர் செல்வமாக திரும்பி
வந்திருக்கிறார் தோனி.
-
-----------------------------------

சன் ரைசர்ஸ் அணியும், புனே அணியும் இன்று புனே
மைதானத்தில் மோதின. புனே மைதானத்தை பொறுத்த
வரையில் அது ஸ்லோ பிட்ச். அதிரடி ஆட்டம் ஆடுவது
அவ்வளவு எளிதல்ல. டேவிட் வார்னரும், ஷிகர் தவனும்
முதல் பத்து ஓவர்களில் ஒன்றிரண்டாகவே ரன்களைச்
சேர்த்தனர்.
அதிரடி வீரர் வார்னர் களத்தில் இருந்தபோதும் ரன் ரேட்
7ஐ கூட தொடவில்லை. கடைசி கட்ட ஓவர்களில்
மோசஸ் ஹென்றிக்ஸ் அதிரடி காட்ட 175 ரன்கள் என்ற
கவுரமான இலக்கை அடைந்தது.
இந்த பிட்சில் 170 ரன்கள் என்பது நல்ல இலக்கு தான்.
ஆகவே புனே வெற்றி பெறுவது அவ்வளவு சுலபமல்ல
என்றே எல்லோரும் கருதினார்கள்.
ஸ்லோ பிட்ச்களில் நன்றாக ஆடக் கூடிய ரஹானே
இரண்டே ரன்களில் திருப்திபட்டார். ஸ்மித் பந்தை தவறாக
கணித்து அவுட் ஆனார். இன்னொரு முனையில் அசாத்திய
இன்னிங்ஸ் ஆடிக் கொண்டிருந்தார் ராகுல் திரிபாதி.
நிஜத்தில் இன்று பாராட்டப்பட வேண்டிய இளம் வீரர்
அவர் தான். வேகப்பந்து வீச்சாளர்களை இறங்கி வந்து
அவர் சாத்திய விதத்தை பார்க்கும் போது, அவர்
நீல ஜெர்சியில் ஆடப்போகும் நாள் அவ்வளவு தூரம் இல்லை
என்றே தோன்றியது .
ஒரு கட்டத்தில் திரிபாதி அவுட் ஆகும் போது அணியின்
ஸ்கோர் 98 / 3 .
6.5 ஓவர்களில் 78 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலை.
களத்தில் தோனியும், ஸ்டோக்சும் இருந்தார்கள். இருவருமே
முழு ஃபார்மில் இல்லை என்பதால், புனே அணி அவ்வளவு
தான் என தோன்றியது. எதிர்பார்த்தது போலவே ஸ்டோக்ஸ்
10 ரன்னில் அவுட் ஆகினார்.
புவனேஸ்வர் குமாருக்கு இன்னும் இரண்டு ஓவர் மீதம்
இருந்தது. இந்த சீசனில் புவனேஸ்வர் குமார் மிக அற்புதமாக
வீசி வருகிறார். அவரது பந்துவீச்சை எதிர்கொண்டு விக்கெட்டைக்
கொடுக்காமல் ஆடினாலே போதுமானது என்ற மனநிலையில்
தான் ஆடுகிறார்கள் எதிரணி பேட்ஸ்மேன்கள்.
துல்லியமான புவியின் ஓவரை எப்படிச் சமாளிக்கப் போகிறது
புனே அணி என மிகப்பெரிய கேள்வி எழுந்தது.
முதல் 26 ரன்களை எடுக்க 23 பந்துகளை எடுத்துக் கொண்ட
தோனி, அதன் பின்னர் முதல் கியரில் இருந்து தடலாடியாக
நான்காவது கியருக்கு மாற்றினார். 3 ஓவருக்கு 46 ரன் அடிக்க
வேண்டும் என்ற நிலையில், 18 வது ஓவரை வீசிய
முகமது சிராஜ் ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி வீசினார்.
மிக முக்கியமான 19 வது ஓவரை வீச வந்தார்
புவனேஸ்வர் குமார். அவரின் முதல் பந்தை எல்லைக்
கோட்டுக்கு அனுப்பி வரவேற்றார் தோனி. இரண்டாவது
பந்தில் கிட்டதட்ட தேர்ட்மேன் திசையில் ஒரு அட்டகாச
பவுண்டரி அடித்தார். மூன்றாவது பந்தை ஒரு முரட்டு சிக்ஸர்
அடித்தார்.
மேட்ச் புனே பக்கம் திரும்பியது. கடைசி ஓவரில் 11 ரன் எடுக்க
வேண்டும் புனே. தனது பாணியில் பவுண்டரி விளாசி
மேட்ச்சை முடித்து வைத்தார் தோனி.
இந்த போட்டியில் தோற்றிருந்தால் பிளே ஆஃப் செல்லும்
வாய்ப்பு மங்கியிருக்கும். தோனி, மனோஜ் திவாரி,
ராகுல் திரிபாதி ஆகியோரின் ஆட்டத்தால் தப்பித்தது புனே.
நீண்ட நாட்களுக்கு பிறகு மேட்ச் முடிந்த பிறகு நடக்கும்
பிரசன்டேஷன் நிகழ்வில் தோனி கலந்து கொண்டார்.
அவர் தான் மேன் ஆஃப் தி மேட்ச்.
"கொஞ்சம் கஷ்டமான தருணம் தான். ஆனால் எங்களிடம்
நல்ல பேட்ஸ்மேன் வரிசை இருந்தது . எங்கள் திட்டப்படி
ஆடி ஜெயித்தோம். இந்த போட்டியில் மனோஜ் திவாரியின்
பங்களிப்பு மிக முக்கியமானது. பாராட்டப்பட வேண்டியது"
என்றார்.
ஐபிஎல் முடிந்து சாம்பியன்ஸ் டிராபி ஆரம்பிக்கவுள்ள
சூழ்நிலையில், தோனியின் ஃபார்ம் மிக முக்கியம்.
அவரின் பங்களிப்பு இல்லாமல் கோலி கோப்பையை தூக்குவது
இப்போதைக்கு கடினமே. கொஞ்ச நாட்களாக தோனியின்
ரசிகர்கள் சோகத்தில் இருந்தார்கள். சிஎஸ்கே ரசிகர்களும்
தான்.
அவர்களுக்கு தோனியின் இந்த இன்னிங்ஸ் உற்சாக டானிக்காக
அமைந்திருக்கிறது.
-
--------------------------
-விகடன்

ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: 'தோனி தான் சிறந்த ஃபினிஷர்' : புனே அணி உரிமையாளர் ஹர்ஷ் கோயங்கா அந்தர் பல்டி!
மஞ்சள் சட்டையில் தோனி கலக்கப்போகும் ஆட்டங்களை எதிர்பார்த்தது காத்துக்கொண்டிருக்கிறோம்
Similar topics
» உலகின் சிறந்த தலைவரான தோனி என் மீது நம்பிக்கை வைத்தார்: வாட்சன் பேட்டி
» பெற்றோர் நன்கு விசாரித்து பிள்ளைகளை சேர்க்க வேண்டும்: ராதிகா அந்தர் பல்டி!
» அண்ணே! நான் தமாஷா பேசுனது எல்லாம் நீங்க உன்மைனு நம்பீட்டிங்க...ஹையோ ஹையோ!!!!!!! - வடிவேலு அந்தர் பல்டி
» சிறந்த நடிகை என்பதை விட, சிறந்த பாடகி எனக் கூறுவதை தான் விரும்பிய பானுமதி
» செல்லமாகத் தான் என் தலையில் வைத்து தட்டினார்--பல்டி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|