புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
66 Posts - 41%
Dr.S.Soundarapandian
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
4 Posts - 2%
Karthikakulanthaivel
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
2 Posts - 1%
prajai
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
2 Posts - 1%
சிவா
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
432 Posts - 48%
heezulia
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
29 Posts - 3%
prajai
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_m10மார்ச் 1 முதல் 15 வரை  ஜோதிடப் பலன்கள் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மார்ச் 1 முதல் 15 வரை ஜோதிடப் பலன்கள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:49 pm

மேஷம்

மார்ச் 1 முதல் 15 வரை

தன்னம்பிக்கைக்கு மதிப்பளித்து அதனால் வெற்றி பெறும் உங்களுக்கு, இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் ராசியில் சஞ்சாரம் செய்கிறார். எனவே மனதில் தெம்பு உண்டாகும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குருவின் பார்வையால் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதியே பார்க்கிறார். மேலும் லாபஸ்தானத்தை குரு பார்க்கிறார்.

தொழில், வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகள் சாதகமான பலனைத் தரும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். தொழில் சார்ந்த பயணங்கள் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். உத்தியோகஸ்தர்களுக்குப் பணவரத்து திருப்தி தரும். மேலிடத்தின் கனிவான பார்வையால் குதூகலம் பெறுவீர்கள்.

குடும்ப ஸ்தானாதிபதி சுக்கிரன் உச்சமாக இருக்கிறார். குடும்ப ஸ்தானத்தை சனி பார்க்கிறார். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். புத்தி சாதூர்யத்தால் எல்லாவற்றையும் சமாளித்து வெற்றி காண்பீர்கள். வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்பதில்லையே என்ற வருத்தம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். வீடு, மனை சார்ந்த முயற்சிகளை எடுக்கும் போது கவனம் தேவை.

பெண்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு ராசிநாதன் சுக்கிரனுடன் சேர்வதும், சுக்கிரன் சுய சாரம் பெறுவதும் மிக நன்மையான காலகட்டமாகத் தெரிகிறது.

தைரியமாக எந்த வேலையையும் செய்து முடிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களால் நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு, சூரியன் நீச நிலையில் இருந்தாலும் ராசியைப் பார்ப்பதாலும், சூரியன் இருக்கும் ஸ்தானத்திற்கு ராசிநாதன் செவ்வாய் பாதகஸ்தானத்தில் இருப்பதாலும் புதிய முடிவுகள் எடுக்கும்போது கவனம் தேவை. ரகசியங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறும். வீண்கவலையைத் தவிர்ப்பது நல்லது. எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல் போகலாம். அதிக சிரத்தை எடுப்பது நன்மை தரும்.

பரிகாரம்:

முருகனுக்கு செவ்வரளிப் பூவால் அர்ச்சனை செய்து வணங்க எல்லா கஷ்டங்களும் நீங்கி மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வியாழன், வெள்ளி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:51 pm

ரிஷபம்

மார்ச் 1 முதல் 15 வரை

சமயோசிதமான பேச்சினால் அனைவரிடமும் நற்பெயர் வாங்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ராசிநாதனான சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். எனவே உங்களுக்கு நன்மையே நடக்கும். பணவரத்து இருக்கும். செவ்வாய் சஞ்சாரத்தால் எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியங்களை மீண்டும் செய்து முடிக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மனதில் உற்சாகமும், தைரியமும் உண்டாகும். தொழில் ஸ்தானத்தில் புதன், கேது மற்றும் சூரியன் சேர்க்கை பெற்று இருக்கின்றனர். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதில் சிந்தனை செலுத்துவீர்கள். ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்னைகள் குறையும். அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். மேலிடத்திலிருந்து பாராட்டுகள் குவியும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். குடும்ப ஸ்தானாதிபதி புதன் ரணருணரோக ஸ்தானத்தில் இருக்கிறார். குடும்பத்தில் நிலவிய பிரச்னைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மனக்கசப்பு மாறும். குழந்தைகள்  நலனில் அக்கறை செலுத்துவீர்கள். புதிய நண்பர்களின் சேர்க்கை ஏற்படும். அவர்களால் உதவி உண்டாகும். புதிய வாகனம், ஆபரணங்கள் சேரும். பெண்கள் தடைபட்ட காரியங்களை செய்து முடிக்க மீண்டும் முயற்சிகள் மேற்கொள்வீர்கள். உற்சாகம் உண்டாகும். பணிபுரியும் பெண்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு எதிலும் கவனம் தேவை. உடன் பணிபுரிபவர்களிடம்  சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. ஆக்கப் பூர்வமான யோசனைகள் தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.  அரசியல் துறையினர், மற்றவர்களுடன் கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. புதிய ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடுமுன் அதிலுள்ள க்ஷரத்துகளை கவனமாக படித்து பின் கையொப்பமிடவும். எதை செய்வதாயிருந்தாலும் தகுந்த ஆலோசனை பெற்றே செய்யவும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும். சக மாணவர்களின் ஆதரவால் நன்மைகள் அதிகரிக்கும். ஆசிரியர்களின் ஆதரவு உண்டு.

பரிகாரம்:

நவகிரக சுக்கிரனுக்கு மொச்சை சுண்டல் நைவேத்யம் செய்து விநியோகம் செய்ய, பணத் தட்டுப்பாடு நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

புதன், வியாழன், வெள்ளி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:51 pm

மிதுனம்

மார்ச் 1 முதல் 15 வரை
நிதானமான போக்கால் அனைவரையும் வசீகரிக்கும் குணமுடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ராசிநாதனான புதன் பாக்கிய ஸ்தானத்தில் இருக்கிறார். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். சிக்கலான சில விஷயங்களை சாதுர்யமாகப் பேசி முடித்து விடுவீர்கள். அதேசமயம் அனாவசிய, வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது.
தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். தொழில், வியாபாரத்தில் முன்பு இருந்ததைவிட முன்னேற்றம் காண்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். கூட்டு வியாபாரம் அனுகூலத்தைத் தரும். எதிர்பார்த்த வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் தங்களது சாமர்த்தியமான பேச்சால் எல்லாவற்றையும் திறம்பட செய்து முடித்து பாராட்டு கிடைக்கப் பெறுவார்கள். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் உறவினர் வருகை இருக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களைக் குறைப்பதன் மூலம் குடும்பத்தில் அமைதி ஏற்படும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உண்டு. பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடலாம். குடும்பத்தில் கருத்துப் பரிமாற்றம் செய்யும்போது கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. பெண்கள் சாதூரியமான பேச்சின் மூலம் சிக்கலான பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டுவிடுவீர்கள். பயணங்கள் செல்ல நேரிடலாம்.

கலைத்துறையினர் அனுசரித்துப் போவது நன்மைதரும். வீண் பேச்சை குறைப்பது நல்லது. எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவருக்கு உதவி செய்வதில் கவனம் தேவை. பணவரத்து திருப்தி தரும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். அரசியல்வாதிகள், தாம் எடுத்திருக்கும் பணிகளை மிகவும் கவனமாக மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு மற்றும் நிலுவையில் உள்ள பணம் வருவது தாமதப்படும். நண்பர்களிடம் நிதானமாகப் பேசுவது நல்லது. மேலிடத்தை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய பாடுபடுவீர்கள். கல்வித் தொடர்பான பயணம் செல்ல நேரிடலாம்.

பரிகாரம்:

ஸ்ரீ ரங்கநாதரை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

ஞாயிறு, வியாழன், வெள்ளி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:52 pm

கடகம்

மார்ச் 1 முதல் 15 வரை
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாத நீங்கள் இந்த காலகட்டத்தில் மிக அனுகூலமான பலன்களை அடையப் போகிறீர்கள். எல்லா வகையிலும் நல்ல பலன்கள் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கூடும். பணவரத்து அதிகரிக்கும். ஆனாலும் சம்பந்தமில்லாதப் பிரச்னைகளில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. தொழில் ஸ்தானத்தை குரு பார்க்கிறார். தொழில், வியாபாரம் தொடர்பான மனக்கவலை தோன்றி மறையும். ஆனால் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். புதிய ஆர்டர்கள் வாங்குவது தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய நன்மைகள் கிட்டும். உத்தியோகஸ்தர்கள் எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்துப் போவதும் நல்லது. மேலிடத்தின் அனுசரணையால் சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போவீர்கள்.

எதிர்பார்த்திருந்த சம்பள உயர்வு, இடமாற்றம் அனைத்தும் கிடைக்கும். குடும்பத்திலிருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து சேருவார். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணைக்காக செலவு செய்ய நேரிடும். கோபத்தை குறைத்து இனிமையாக பேசுவதன் மூலம் குடும்பத்தில் அமைதி உண்டாகும். வெளியூர் பயணம் செல்ல வேண்டியது இருக்கலாம். பிள்ளைகளால் மனக்கஷ்டம் ஏற்பட்டு நீங்கும். பெண்கள் எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவருக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை. கலைத்துறையினர் வெளியில் தங்க நேரிடும். அதிகமான பிரயாணங்களால் சோர்வு ஏற்படலாம். வீண்கவலை இருக்கும்.

பிறர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகளில் கவனம் தேவை. ஆனாலும் பணவரத்து திருப்தி தரும். அரசியல் துறையினருக்கு அலைச்சல் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். மாணவர்கள் பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை. தேர்விற்கு மனதை சிதற விடாமல் சிரத்தை எடுப்பது நன்மை தரும்.

பரிகாரம்:

துர்க்கையை திங்கட்கிழமைதோறும் வழிபட்டு வருவது காரியத் தடையை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

ஞாயிறு, செவ்வாய், வியாழன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:52 pm

சிம்மம்

மார்ச் 1 முதல் 15 வரை
தனது நடவடிக்கையால் அனைவரையும் ஆக்கிரமிக்கும் குணமுடைய உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சூரியன் ராசியைப் பார்க்கிறார். மனதில் சிறு சஞ்சலம் ஏற்பட்டு மறையும். ஆனாலும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும். நல்லது எது கெட்டது எது என்று பிரித்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். ராசிநாதன் சனி வீட்டில் இருக்கிறார். தொழில், வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாகப் பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உங்கள் நிறுவனத்திற்கான பங்குகளின் மதிப்பு உயரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் ஆணையிடக்கூடிய அதிகாரப் பதவி கிடைக்கப் பெறுவார்கள். எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். குடும்பாதிபதி புதன் உங்கள் ராசியைப் பார்க்கிறார். ஆனாலும் ராசியிலுள்ள ராகுவால் குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். கணவன்மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது.
பெண்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு டென்ஷன் உண்டாகலாம். உடன் இருப்பவர்களிடம் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம் விட்டு பேசுவது நல்லது. எதிலும் திருப்தி இல்லாதது போல் தோன்றும். எடுத்த காரியத்தை செய்து முடிக்க அலைய வேண்டி இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. அரசியல்துறையினர் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வீண் செலவுகள் உண்டாகும். மற்றவர்களால் மனக்கஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டியிருக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.

பரிகாரம்:

வில்வ அர்ச்சனை செய்து சிவனை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். முயற்சிகள் வெற்றி பெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வியாழன், வெள்ளி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:52 pm

கன்னி

மார்ச் 1 முதல் 15 வரை
கடுமையாக உழைக்கும் சுபாவத்தால் அனைவரையும் வசீகரிக்கும் திறன் படைத்த உங்களுக்கு இந்த காலகட்டத்தில் சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்க்கிறார். ராசிக்கு முன்னும் பின்னும் இருக்கும் கிரகங்களை உத்தேசித்து எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது. எல்லா காரியங்களிலும் அனுகூலம் கிடைக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். ராசிநாதனே தொழில் ஸ்தானாதிபதியும் ஆகிறார். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்வது நன்மை தரும். கூட்டு வியாபாரம் திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். மேலிடத்தின் கனிவான அனுசரணையால் சந்தோஷம் கொள்வீர்கள். குடும்ப ஸ்தானத்தில் குரு இருக்கிறார். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவகை கவலையும் இருந்துவரும். வாழ்க்கைத் துணையுடன் எதையும் பேசி, தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால், அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுபநிகழ்வுகளில் இருந்த தடைகள் நீங்கும்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு லாபம் என்றில்லாவிட்டாலும் சுமாராக வரும். அதேசமயம் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும். சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அரசியல்வாதிகளைப் பொறுத்தவரை மேலிடத்திற்கும் உங்களுக்கும் திடீர் இடைவெளி ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சங்கடங்கள் வரும். மாணவர்கள் பாடங்களை சுறுசுறுப்புடன் படிப்பீர்கள். மற்றவர்களை விட கூடுதலாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறவேண்டும் என்ற எண்ணம் உண்டாகும்.

பரிகாரம்:

புதன்கிழமையில் விஷ்ணு ஸஹஸ்ர நாமம் படித்து பெருமாளை வழிபட காரிய வெற்றி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், புதன், வெள்ளி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:53 pm

துலாம்

மார்ச் 1 முதல் 15 வரை
வரவையும் செலவையும் சரிசமமாக வைத்துக் கொள்ளும் வித்தை தெரிந்த உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ராசிநாதன் சுக்கிரன் ரணருணரோக ஸ்தானத்தில் இருக்கிறார். தைரிய ஸ்தானாதிபதியும், ரணருணரோக ஸ்தானாதிபதியுமான குரு ராசியில் சஞ்சரிக்கிறார். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். பணவரத்தில் நிறைவு இருந்தாலும் செலவுகளும் அதிகமாக இருக்கும். லாபஸ்தானத்தில் இருக்கும் ராகுவாலும், லாப ஸ்தானத்தைப் பார்க்கும் சூரியன் மற்றும் கேதுவாலும் தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததைவிட சற்று நிதானமாகவே நடக்கும். ஏற்ற இறக்கங்கள் காணப்படும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். புதிதாக தொழில் ஆரம்பிப்பதற்கு ஏற்ற சூழல் கிடைக்கும்.

அரசாங்க அனுகூலம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பீர்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் மறைந்து மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். குடும்ப ஸ்தானத்தை அதன் அதிபதி செவ்வாய் பார்க்கிறார். இதன் மூலம் வலுப்பெறும் குடும்ப ஸ்தானத்தால் குடும்பத்தில் கலகலப்பு காணப்படும். வாழ்க்கைத் துணை உங்களை அனுசரித்துச் செல்வார். இதனால் மனதில் இருந்த கவலைகள் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் எதிர்காலம் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வழக்குகளில் நிதானப் போக்கு காணப்படும். பெண்களுக்கு எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மனக் குழப்பம் நீங்கும்.

கலைகாரனும் ராசிநாதனுமாகிய சுக்கிரன் ஆறாமிடத்தில் இருப்பதால், கலைத்துறையினர் எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கிச் சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும். தொழிலில் லாபம் கூடும். அரசியல் துறையினர் வாக்கு வன்மையால் உங்கள் இருப்பை தக்கவைத்துக் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன பதவி உயர்வு மற்றும் வரவேண்டிய பணம் வந்து சேரும். எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது.

பரிகாரம்:

கெஜலட்சுமியை வெள்ளிக்கிழமையில் பூஜித்து வர பொருள் வரத்து கூடும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், புதன், வியாழன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:53 pm

விருச்சிகம்

மார்ச் 1 முதல் 15 வரை
தனது இடைவிடாத உழைப்பாலும் பேச்சுத் திறமையினாலும் உயரும் தன்மை கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ராசிநாதன் செவ்வாய் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கிறார். ராசியை ராசிநாதனே எட்டாம் பார்வையாக பார்க்கிறார். ராசிநாதனை குரு பார்க்கிறார். பணவரத்து அதிகரிக்கும். ராசிநாதன் சஞ்சாரத்தால் எடுத்த காரியங்கள் எல்லாம் கைகூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்கக்கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும். தொழில் ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கிறார். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பேச்சில் இனிமை மற்றும் புத்திசாலித்தனத்தால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும்.

ஏற்றுமதி சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய நபர்கள் அறிமுகவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேலதிகாரிகளைக் கவர்ந்து விடுவார்கள். அதனால் எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாகப் பாதுகாத்துக்கொள்வது நல்லது. மேற்கொள்ளும் வேலைகளை மிகச்சரியாக செய்து நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

குழந்தைகள் உங்கள் சொல்படி கேட்டு நடப்பது மனதிற்கு இதமளிக்கும். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. பெண்களுக்கு எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை புதியவர்களிடம் கூறாமல் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையினருக்கு எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும்போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம்.

அரசியல் துறையினருக்கு, கிரகநிலை எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும். பணவரத்து கூடும். புதிய காரியங்களை முடிக்க அதிகம் அலைய வேண்டியிருக்கும். கூடுதலாக உழைக்க வேண்டிவரும். செயல் திறன் அதிகரிக்கும். மாணவர்கள், புதனுடன் கேது இணைந்திருப்பதால் மற்றவர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடக்கும் முன்பு அது சரியா தவறா என்று யோசித்து பார்ப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கவனம் தேவை. கெட்ட நண்பர்களின் சகவாசத்தை உடனடியாக கைவிடுவது சிறந்தது.

பரிகாரம்:

துர்க்கை அம்மனை செவ்வாய்க்கிழமையில் எலுமிச்சை தீபம் ஏற்றி வணங்க எதிர்ப்புகள் விலகும். காரியத் தடைகள் நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், வியாழன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:53 pm

தனுசு

மார்ச் 1 முதல் 15 வரை
அடுத்தவரின் சொல்லுக்கு எப்போதும் மதிப்பளிக்கும் உங்களுக்கு இந்த காலகட்டத்தில் ராசிநாதன் குரு லாப ஸ்தானத்தில் இருக்கிறார். எதிலும் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது. பணவரவு இருக்கும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். மனம் விரும்பியது போல செயல்படுவீர்கள். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. தொழில் ஸ்தானத்தை சுக்கிரன் பார்க்கிறார். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். புதிய கிளைகள் தொடங்குவது போன்ற விரிவாக்க பணிகளை தள்ளிப் போடுவது நல்லது. துணைத் தொழில் ஆரம்பிக்க எண்ணுபவர்கள் அதற்கான வேலைகளில் இறங்கலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகள் டென்ஷனை கொடுக்கும். மேலதிகாரிகள் ஆதரவும் இருக்கும். சக ஊழியர்களும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்பத்தில் அமைதியான சூழ்நிலை காணப்படும். உறவினர் வருகை இருக்கும். குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான நிலை காணப்படும். சொத்து பிரச்னைகளில் அனுகூலம் உண்டாகும். பெண்களுக்கு அவர்களது செயல்களுக்கு இருந்த தடைகள் நீங்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.

கலைத்துறையினர், உடன் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம். அரசியல்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு புதன் நல்ல நிலையில் இருப்பதால் விரும்பியதைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது நல்லது.

பரிகாரம்:

தட்சிணாமூர்த்திக்கு நெய்தீபம் ஏற்றி கொண்டைக்கடலை சுண்டல் நைவேத்தியம் செய்து விநியோகம் செய்ய செல்வம் சேரும். மன அமைதி உண்டாகும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

ஞாயிறு, திங்கள், புதன்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 01, 2017 11:54 pm

மகரம்

மார்ச் 1 முதல் 15 வரை
காலத்திற்கு மிகுந்த மரியாதை அளிக்கும் தன்மை கொண்ட உங்களுக்கு இந்த காலகட்டத்தில் எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த காரியத்தை மீண்டும் செய்து முடிக்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வெளியூர் தகவல்கள் சாதகமானதாக இருக்கும். தொழில் ஸ்தானத்தில் குரு இருக்கிறார். தொழில், வியாபாரம் தொடர்பான பணிகள் வேகமாக நடைபெறும். தடைகள் அகலும். எதிர்பார்த்த அளவு வியாபாரம் பெருகி பணவரத்தும் இருக்கும். தொழிலாளர்களால் மிகுந்த லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். சக ஊழியர்களால் உதவியும் இருக்கும்.

உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு பொன்னான வாய்ப்புகள் கைகூடி வரும். குடும்ப ஸ்தானத்தில் சூரியன், கேது மற்றும் புதன் ஆகியோரின் கிரக கூட்டணியால் குடும்ப ஒற்றுமை பலம் வாய்ந்து காணப்படுகிறது. வாழ்க்கைத் துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நிவர்த்தியாகி உங்கள் சொற்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்வீர்கள். வழக்கு விவகாரங்களில் கால தாமதம் ஏற்படும். பெண்கள் தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடித
போக்குவரத்து சாதகமான பலன் தரும்.

கலைத்துறையினருக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆனால் அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. அரசியல் துறையினர் சூரியன் சஞ்சாரத்தால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். சக அரசியல்வாதிகளிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. கவனத்தை சிதறவிடாமல் உழைப்பது அவசியம். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். மற்றவர் பிரச்னைகளுக்கு வலியச்சென்று உதவி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களைப் பற்றிய கவலை நீங்கும். மனதில் உற்சாகம் பிறக்கும்.

பரிகாரம்:

திங்கட்கிழமைகளில் விநாயகருக்கு நெய்தீபம் ஏற்றி வர கடன் தொல்லை குறையும். காரியத் தடை நீங்கும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

திங்கள், புதன், வெள்ளி.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக