ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Today at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Today at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

3 posters

Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by ayyasamy ram Thu Apr 13, 2017 7:04 pm

கடந்த ஐம்பதாண்டு கால தமிழ் இலக்கிய தளத்தில்
தனக்கென்று தனியிடம் பெற்றவர் எழுத்தாளர் அசோகமித்திரன்.

அண்மையில் தனது 85 ஆம் வயதில் காலமானார். அவருக்கு
அஞ்சலி செலுத்தும் வகையில் தங்கள் நினைவுகளை இங்கே
பகிர்ந்து கொள்கிறார்கள் சில பிரபலங்கள்.

இலக்கியத்தில் புதிய பாதை வகித்தவர்
சா. கந்தசாமி (அசோகமித்திரன் குறித்த ஆவணப் படம் எடுத்தவர்)
அசோகமித்திரன் தமிழின் பாபுலர் பத்திரிகைகளில் கதைகள் எ
ழுதினாலும், அந்தக் கதைகள் பத்திரிகைகளில் வெளியாகிற
மற்ற கதைகளில் சேராமல் தனித்து இருக்கும்.

காரணம், கதைகளில் இடம் பெற்றிருக்கும் நுணுக்கமான
விவரங்கள்தான். கதாபாத்திரங்களின் குணாதிசயங்கள்கூட
வழக்கத்திலிருந்து மாறுபட்டே இருக்கும். அவர் ஒரு தமிழ்
எழுத்தாளர் என்பதைவிட தமிழில் எழுதிய சர்வதேச எழுத்தாளர்
என்பது பொருத்தமாக இருக்கும்.

அவர் ஒர் தூய இலக்கியவாதி மட்டுமில்லை;
தனி வாழ்க்கையிலும் ஒழுக்கவாதி; அவரிடமும் சரி, அவர்
எழுத்துக்களிலும் சரி ஆடம்பரம் என்பது மருந்துக்கும் இருக்காது.
மக்கள் ரசனைக்கு ஏற்ப எழுதாமல், மக்களின் ரசனையை
மேம்படுத்தும் அளவுக்கு எழுத்துக்கள் மொழியைக் கடந்த
இலக்கியம்.

அவருடைய படைப்புகள் காலத்தால் பழசாகாது. வாசகன்
அவருடைய எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகக் தன்னையே
அறிந்து கொள்வான். உள்நோக்கிப் பயணப்படுவான்.

அவர் ஒரு சிறந்த படைப்பாளியாக தன்னை அடையாளப்படுத்திக்
கொண்ட போதிலும் கணையாழியின் ஆசிரியர் பொறுப்பில்
இருந்த கால கட்டத்தில் ஏராளமான புதிய படைப்பாளிகளை
அடையாளம் கண்டு அறிமுகப்படுத்தியவர்;

அவர்களைப் பாராட்டி, ஊக்குவித்தவர், இதன் மூலமாகத் தமிழ்
இலக்கியத்தில் புதிய பாதை போட்டவர். தன்னை முன்னிறுத்திக்
கொள்ளாதவர்.
-
--------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by ayyasamy ram Thu Apr 13, 2017 7:14 pm


எளிமையானர்-
பால் ஜகாரியா ( மலையாள எழுத்தாளர்)
இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால், நான்
அசோகமித்திரனின் எழுத்துக்களைப் படித்திருந்தால்,
என் எழுத்தின் ஆழம் அதிகமாக இருந்திருக்கும்

அவரைப் பற்றிய ஆவணப்படம் ஒன்று எடுக்கும் வாய்ப்பு
எனக்குக் கிடைத்தது. அப்போது, அசோக மித்திரன் என்ற
மனிதர் எத்தனை எளிமையானவர் என்பதை அனுபவ
பூர்வமாகக் கண்டேன்.

அவர் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் கையெழுத்திட்டு
எனக்குக் கொடுப்பார். அவர் எனக்க என்றென்றும் ஒரு
பொக்கிஷம்.
-
-----------------------------------------------

பிறமொழி இலக்கியவாதிகள் மத்தியிலும் மிளிர்ந்தவர்
பத்ரி சேஷாத்ரி (கிழக்கு பதிப்பகம்)
எழுத்தாளர் பிரபஞ்சன் அசோகமித்திரனின் அரை நூற்றாண்டு
இலக்கியப் பணியைக் கௌரவிக்கும் வகையில் ஒரு விழா
நடத்த விரும்பியபோது, அந்த விழாவைச் சிறப்பாக நடத்த
ஏற்பாடு செய்தோம். அசோகமித்திரனின் சிறுகதைகள், நாவல்கள்
எல்லாம் புத்தகங்களாக வெளியாகி இருந்தபோதிலும்,
அவர் கட்டுரைகளைத் தொகுத்து பதிப்பிக்கப்படவில்லைஎன்ற
சூழ்நிலையில், அதைச் செய்யும் நோக்கத்தோடு அவரை
அணுகினோம்.

தாம் எழுதிய அனைத்தையும், அவர் எத்தனை கச்சிதமாக
ஃபைலில் சேகரித்து வைத்திருக்கிறார் என்பதை கண்டு அசந்து
போனேன். சுமார் இரண்டாயிரம் பக்கங்களில் அவரது அனைத்த
கட்டுரைகளும் இரண்டு தொகுதிகளாக வெளியானது.

பொதுவாக, அசோகமித்திரன் போன்ற கனமான
எழுத்தாளர்களின் புத்தக விற்பனை கடினமாக இருக்கும்
என்றாலும், நாங்கள் வெளியிட்ட கட்டுரைத் தொகுப்புகள் 
வாசகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

அசோகமித்திரனின் சில படைப்புகளை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்து வெளியிட்டபோதிலும், பெரிய ஆங்கில
பதிப்பாளர்கள் போல எங்களால் பெரிய அளவில் விற்பனை
செய்ய முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு உண்டு.

ஆனாலும், ஆங்கிலம் தெரிந்த பிற மொழி இலக்கியவாதிகள்
மத்தியில் அசோகமித்திரன் பற்றித் தெரிந்து கொள்ள அது
உதவியது.
-
-------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by ayyasamy ram Thu Apr 13, 2017 7:15 pm


ருசியும் ரசனையும் கலந்தவர்
அழகிய சிங்கர்
விருட்சம் பத்திரிகையை ஆரம்பித்த போது அதில் அவர்
தொடர்ந்து கட்டுரை எழுதனார். என்னையும் மற்ற பிரபல
பத்திரிகைகளுக்கும் எழுதும்படி ஊக்குவிப்பார்.

நான் வங்கிப் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் வாரம்
ஒருமுறையாவது அவரை போய் பார்த்துவிட்டு வருவேன்.
அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதில்
எனக்கு அலாதியான திருப்தி.
நான் ஒவ்வொருமுறை அவர் வீட்டிற்குச் செல்லும்போது
மேற்கு மாம்பலம், ஆர்யகௌடா ரோடில் உள்ள
வெங்கடேஷ்வரா போளி ஸ்டாலில் இருந்து ஒரே ஒரு
மிளகாய் பஜ்ஜி வாங்கிச் செல்வேன்.

காரணம், அசோகமித்திரன் ஒரு பஜ்ஜிக்கு மேல் சாப்பிட
மாட்டார். 'இந்த பஜ்ஜி என் விலை?' என்று கேட்பார்.
ஐந்து ரூபாய் என்பேன். ஐந்து ரூபாய்க்கு இவ்வளவு
சுவையான பஜ்ஜியா? என்பார் ரசனையோடு ருசித்தபடி.
அவர் புகழ் என்றெனறும் வாழும்.

- எஸ். சந்திரமௌலி
கல்கி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by krishnaamma Thu Apr 13, 2017 7:32 pm

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! ZcXN8P9tQ9ubJnYSHCsy+10THASHOK_350068f__3018841f

மிக அற்புதமாக எழுதுவார் ! புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by krishnaamma Thu Apr 13, 2017 7:35 pm

ராம் அண்ணா, தலைப்பில் 'அசோகமித்திரன்' என்று அவரின் பெயரையும் இணைத்து விட்டேன்புன்னகை \

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by M.Jagadeesan Thu Apr 13, 2017 8:27 pm

இவருடைய எழுத்துக்களை நான் இதுவரையில் படித்ததில்லை ! படிக்க ஆவலாக உள்ளது .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by krishnaamma Thu Apr 13, 2017 8:37 pm

M.Jagadeesan wrote:இவருடைய எழுத்துக்களை நான் இதுவரையில் படித்ததில்லை ! படிக்க ஆவலாக உள்ளது .

மேற்கோள் செய்த பதிவு: 1238714

இந்த லிங்க் இல் அசோகமித்திரன் அவர்கள் எழுதிய சிறுகதைகள் இருக்கிறது ஐயா, படித்து மகிழவும் புன்னகை

( இங்கு வெளி தள லிங்குகள் பதிவிட அனுமதி கிடையாது, எனவே உங்களுக்கு தனி மடலில் அனுப்புகிறேன் ஐயா புன்னகை

மேலும் , google il போட்டால் நிறைய லிங்க் கள் கிடைக்கும் ஐயா புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் ! Empty Re: மொழியைக் கடந்த இலக்கிய நாயகன் - அசோகமித்திரன் !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum