Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14by ayyasamy ram Today at 8:39 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கொழுந்தியா - மனைவியின் தங்கை
Page 1 of 1
கொழுந்தியா - மனைவியின் தங்கை
நாகரீகம் என்று கருதி
என் முன்னோர் கொடுத்தவற்றை அழித்து வந்திருக்கிறேன். இன்னமும் என்
நினைவில் இருக்கும் மிச்ச மீதி சொற்களை எல்லாம் ஏதாவதொரு இடத்தில் பதிவு
செய்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது.
நண்பர்
ஒருவரிடம் சொன்னதற்கு, கொங்கு வட்டார சொற்களை மதுரை, சென்னையை
சார்ந்தவர்கள் படித்தால் என்ன வரப்போகிறது என்றார். அவரின் இந்த
வினாவுக்கு என்னிடம் சரியான பதிலில்லை. இந்த கேள்வி என் வேகத்தை
குறைக்கிறதோ என்று தோன்றுகிறது.
செய்வதைச் செய்யலாம்.
1.மோனக்காரர் - விவசாயத்தொழிலுக்கு கூலி ஆட்களை அழைத்து வருபவர். கிட்டத்தட்ட மேஸ்திரி போல்.
2.
பண்ணையத்தாளு - ஒரு வருடத்திற்கு இவ்வளவு பணம் என்று பேசி முடிவு
செய்திருப்பார்கள். அந்த ஆள் அந்த வருடம் முழுவதும் அந்த விவசாயியிடம்
பணியாற்ற வேண்டும். எனக்குத் தெரிந்தே பத்து வருடங்களுக்கு முன்பு வரை கூட
ஒரு விவசாயியிடம் ஒரு ஆள் தன் வாழ்வின் கடைசிக் கட்டம் வரை இருப்பார்.
இப்பொழுது இது மிக அரிதாகிக் கொண்டிருக்கிறது.
3. முறைமைக்காரன் - முறைக்கு சொந்தக் காரன்
உதாரணமாக்,
மாரியம்மன் கோவிலில் மாவிளக்கு பூஜையின் போது கிடாவெட்டும் உரிமை
ஒருவருக்கு கொடுக்கப்பட்டால் அவர் அந்த நிகழ்வின் முறைமைக்காரர்.
4.
தண்ணிவாக்கி - வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுபவர். வயல்களின் உரிமையாளர்கள்
கூடி, நீர் பாய்ச்சவென ஒருவரை நியமித்திருப்பர். அவர்தான் சரிசமமாக,
கவனமாக தண்ணீர் பாய்ச்சுவார். ஒவ்வொரு போகமும் முடிந்த பின் குறிப்பிட்ட
பொதி நெல் வாங்கிக் கொள்வார்.
5. பொதி - மூன்று அல்லது நான்கு மூட்டை நெல் ஒரு பொதி எனப்படும்.
6. கருக்காய் - குறையுள்ள நெல்மணிகள்.
7. கொறத்திக் குஞ்சு - இளம் தவளை. (தலைப்பிரட்டை)
நீர்
நிலைகளில் கிட்டத்தட்ட மீன் குஞ்சு போல் இருக்கும். எளிதில்
சிக்கிவிடுமாகையால் சிறுவர்கள் இதனைப்பிடித்து வைத்து மீன் என்று சொல்லிக்
கொண்டிருப்பார்கள்.
8. ஒறட்டாங்கை - இடது கை. வலது கையை, சோத்தாங்கை என்பார்கள்.
9. ரோட்டா - நீர்க் குடுவை (டம்ளர்) (Lota என்னும் ஆங்கிலச் சொல்)
10. அங்கராக்கு - சட்டை
11. பாப்பராண்டி - அரணை. (ஊர்வன வகையினைச் சார்ந்தது.)
12. செம்பூத்து - செண்பகப் பறவை
13. கழுமுண்டராயன் -ஆஜானுபாகுவான மனிதன்.
அவனுக்கென்ன கழுமுண்டராயன் மாதிரி இருக்கறான் என்று சொல்வது வழக்கு.
14. புறடை - புரூடா (பொய்)
அங்க போறான் பாரு. அந்த ஆளு செரியான புறட மன்னண்டா.
15. தெல்லவாரி, தேசாபோகம் - ஊதாரித்தனமானவன்.
சொற்றொடர்: இவுனுக்கு தெல்லவாரி, தேசாபோகத்துக் கூடதான் சாவுகாசமே.
16. சாவுகாசம் - சகவாசம்
17. ரவைக்கு - இரவுக்கு
சொற்றொடர்: ரவைக்கு சித்தப்பன காவலுக்கு போவச் சொல்லு.
18. போத்தாலை - புகையிலை.
19. கொழுந்தனார் - கணவனின் தம்பி
20. கொழுந்தியா - மனைவியின் தங்கை
21. நங்கையா - மனைவியின் அக்கா.
22. பொன்னாம்பூச்சி - பொன்வண்டு
23. தொருசு - ஊதாரியாக, பொறுப்பற்று சுற்றுதலைக் குறிக்கும் (ஆண்பால், பெண்பால் வேறுபாடற்றது).
நான் "கடைக்கு போயிட்டு வர்றேன்" என்று சொன்னால், என் அம்மா நக்கலாக,
"செருப்புத் தொட்டுட்டு தொருசு கிளம்பிடுச்சு பாரு" என்பார்கள்.
24.
தொண்டு - கொங்குப் பகுதியில் குறிப்பாக கோபி வட்டாரத்தில் தொண்டு என்றால்,
பல பேருடன் தகாத உறவு கொண்டிருப்பதைக் குறிக்கும். (ஆண்பால், பெண்பால்
வேறுபாடற்றது)
25. மொளைக்க போடுதல் - முளைக்கப் போடுதல். தொலைத்து விடுதல் என்னும் பொருளில் எடுத்தாளப்படும்.
சொற்றொடர்: அவன்கிட்ட போயி கொடுத்த பாரு. அவன் மொளைக்க போட்டுறுவான்னு உனக்குத் தெரியாதா?
26. கொட்டை போட்டுட்டாரு - இறந்து விட்டார்.
அந்த மனுஷன் எப்பவோ கொட்டை போட்டுட்டாரு.
27. நலங்கு - உடல்நலமற்றுப் போதல்.(குழந்தைகளுக்கு மட்டுமே இச்சொல்லை உபயோகப்படுத்துவார்கள்)
குழந்தை நலங்கி போச்சு
28. கதக்கு - குழந்தை வாந்தி எடுத்தல்
குழந்தை கதக்கி வெச்சுடுச்சு.
29. மோடம், கருக்கல் - மேகம்
30. கும்மாயம் - சமையலறையில் உபயோகப்படுத்தும் கருவி (மத்து)
31. சடஞ்சு - சோர்வடைந்து
மனுஷன் சடஞ்சு போயி வந்தா நச்சாம இருக்க மாட்டயா?
32. நேக்கு - கவனமாக,சரியாக
நேக்கு பாத்து ஒரே போடா போட்டேன். வக்காரோலுது ரெண்டா போயிடுச்சு
33. எச்சா - அதிகமாக
சோறு கொஞ்சமா போனா கூட போச்சாது. பையனுக்கு கறி எச்சா வை.
34. நேசர் பாரு - உளவு, உண்மை நிலை
எதுக்கால ஊட்ல(எதிர் வீடு) போயி சண்டையான்னு நேசர் பாத்துட்டு வா. போ
35. பூலவாக்கு -உண்மை நிலை.
டேய் சும்மா பேசாத. கடன் வாங்கீட்டு போனா எப்படித் தருவ? உன்ற பூல வாக்கு எனக்கு தெரியாதா?
36. பண்டம் பாடி - கால்நடைகள்
37. பீத்து - பெருமை
அவ பையன் பத்தாவதுல நெறயா மார்க்கு வாங்கி தள்ளிட்டானாம். பீத்து பீத்துன்னு பீத்தறாப்பா.
38. பீத்தை - பழைய
அந்த வண்டியவா வாங்குற? அது பீத்த வண்டி டா.
38. சீக்கு- நோய்
39. பிலுக்கு - பந்தா.
அவிய அமத்தா பப்ஸ் வாங்கிட்டு வந்திருக்குதாம். ஒரே பிலுக்கு அவளுக்கு.
40. கொக்காணி - தனக்கு மட்டும் ஒரு பொருள் கிடைக்குமிடத்து கிடைக்காதவரைப் பார்த்து பழிப்பாக செய்யப்படும் செய்கை.
41. பொறந்தவன்/ பொறந்தவள் - சகோதரன்/சகோதரி
என்ன சுப்பாயா...பொறந்தவனூட்டுக்கு கெளம்பீட்டாப்ல இருக்குது?
42. தொண்டுபட்டி - கால்நடைகளை கட்டி வைக்கும் இடம்.
நன்றி மணிகண்டன்

வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.
[You must be registered and logged in to see this image.]
அபிராமிவேலூ- வி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum