ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:38 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:05 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:39 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 11:10 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:26 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:58 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:19 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Yesterday at 7:33 pm

» கருத்துப்படம் 02/08/2024
by mohamed nizamudeen Yesterday at 6:51 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 6:05 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:48 am

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:18 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» வர்ணனைக்குள் அடங்காதவள்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

» குலசாமி – புதுக்கவிதை
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:09 pm

» இரண்டும் இருந்தால் பலசாலி!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:08 pm

» பெருமாளுக்கு வாத்சல்யம் என்ற குணம்…
by ayyasamy ram Wed Jul 31, 2024 7:25 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:17 pm

» இதெல்லாம் நியாயமா...!
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:13 pm

» அப்பாவி எறும்புகள் - புதுக்கவிதை (தொடர் பதிவு)
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:07 pm

» இன்றைய செய்திகள்- ஜூலை 31
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:03 pm

» ஒலிம்பிக் - விளையாட்டு செய்திகள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 2:02 pm

» பல் சுவை களஞ்சியம்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:57 pm

» கருடனை வழிபட்டால் கிடைக்கும் பலன்கள்
by ayyasamy ram Wed Jul 31, 2024 1:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏப். 2 - உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்

Go down

ஏப். 2 - உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் Empty ஏப். 2 - உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்

Post by ayyasamy ram Sun Apr 02, 2017 12:05 pm

ஏப். 2 - உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் BxPMuqyCQ2m66ksZj6rg+autism_2310686f
-


ஆட்டிசம் என்றால் என்ன?

ஆட்டிசம் ஒரு குறைபாடே தவிர நோய் அல்ல.
இதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து முறையான பயிற்சிகளை
அளித்தால், குழந்தைகளை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச்
செல்ல முடியும் என்கிறார் ஆட்டிச விழிப்புணர்வு பயிற்சியாளர்
பாலபாரதி.

இதுகுறித்து மேலும் பேசும் அவர்,

வெளியில் இருந்து பார்த்தால் கண்டுபிடிக்க முடியாத குறைபாடு
ஆட்டிசம். ஆட்டிச குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும்
நல்ல வளர்ச்சி பெற்றிருப்பர். ஆனால் சிந்திப்பதை சரியாக வெளிப்
படுத்த தெரியாத/ முடியாத நிலை இருக்கும். அதனாலேயே சமூகம்
அவர்களை அதிகம் கேலிக்குள்ளாக்குகிறது.

இந்தக் குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்க
முடியாததால், இதற்கான மருந்தும் கண்டுபிடிக்கப் படாமலேயே
இருக்கிறது. அமெரிக்காவில் 68 பேருக்கு ஒருவர் ஆட்டிசத்தால்
பாதிக்கப்படுகிறார். உலகளவில் ஆண் குழந்தைகளுக்கே இதில்
அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.

5 ஆட்டிசக் குழந்தைகளில் நால்வர் ஆணாகவும் ஒருவர்
பெண்ணாகவும் இருக்கின்றனர் என்கிறது ஓர் ஆய்வு.

அமெரிக்கா போன்ற நாடுகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள்
குறித்த புள்ளிவிவரங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில்
அதுபற்றிய விவரம் எதுவும் இல்லை. இந்தியாவில் சுமார் 20 லட்சம்
குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல்
இருக்கிறது. 1000 பேருக்கு 2 முதல் 6 பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்
பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆட்டிசத்துக்கான அறிகுறிகள் என்னென்ன?

* பெயர் சொல்லி அழைத்தால் திரும்பி பார்க்காமல் இருப்பது.

* கண்கள் வேறெங்காவது நிலைகுத்தி இருக்கும். எதிரில்
இருப்பவருடன் நேராகப் பார்த்துப் பேச மாட்டார்கள்.

* பாவனை விளையாட்டுகளை விளையாட மாட்டார்கள்.
(immitation)

* தனக்கு வேண்டிய பொருளை விரல் நீட்டி சுட்டிக் காண்பிக்கத்
தெரியாது.

* பொருட்களை நீளமாக, வரிசையாக அடுக்கி விளையாடுவதில்
அதீத ஆர்வம் இருக்கும். (ரயில்)

* புலன்களின் உணர்வு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் இருக்கும்.
(குறிப்பிட்ட உணவைப் பார்த்தால் வாந்தி, இயல்பான சத்தத்தை
தாங்க முடியாதது)

* ஒரு இடத்தில் நிலைகொள்ள முடியாத நிலை.

* பொதுவெளிகளில் அவர்களின் நடத்தை சிக்கலாக இருப்பது.

* மனநிலை தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும்.

எப்போது கண்டுபிடிக்கலாம்?

குழந்தையின் 10-வது மாதத்திலேயே ஆட்டிசக் குறைபாட்டைக்
கண்டுபிடிக்கலாம். ஆனால் உலக சுகாதார நிறுவனம் 5 வயதுக்கு
உட்பட்ட குழந்தைகளின் மீது அறிவுசார் முத்திரையைக் குத்தக்
கூடாது என்று கூறியிருப்பதால் 5 வயது வரை ஆட்டிச அம்சம்
இருக்கிறது என்று மட்டுமே மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83369
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஏப். 2 - உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் Empty Re: ஏப். 2 - உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம்

Post by ayyasamy ram Sun Apr 02, 2017 12:05 pm



என்ன செய்ய வேண்டும்?

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இயன்முறை பயிற்சி,
பேச்சுப்பயிற்சி, அறிவுசார் பயிற்சி ஆகியவை அளிக்கப்படுகின்றன.
அங்கே குழந்தைக்கு அளிக்கப்படும் பயிற்சியின்போது
பெற்றோரும் உடனிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். அதை
வீட்டுக்கு வந்த பிறகும் தொடர்ந்து செய்யப் பழக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகள் பயிற்சிகள் மிகவும் குறைந்த
கட்டணத்துக்கு அளிக்கப் படுகின்றன. ஆனால் ஒரு பயிற்சிக்கு
தனியார் மையங்கள் ஒரு மணி நேரத்துக்கு குறைந்தபட்சம்
ரூ.300 கட்டணம் வசூலிக்கின்றன.

பெற்றோரே ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையின் முதல்
ஆசிரியர். 1 மணி நேர பயிற்சிக்குப் பிறகு 23 மணி நேரம்
உடனிருப்பவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

பயிற்சி மையங்களின் விவரம்

சென்னை, முட்டுக்காட்டில் மத்திய அரசின் பல்வேறு குறை
பாடுடைய நபர்களின் மேம்பாடு குறித்த நிறுவனம் (NIEPMD)
இயங்கிவருகிறது. அங்கு ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளை பயிற்சி அளிக்கலாம். அங்கு அனைத்து விதமான
பயிற்சிகளுக்கும் ரூ.25 - 300 வரை மட்டுமே செலவாகிறது.
வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு அந்தக் கட்டணமும்
இல்லை.

சென்னையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவனை, எழும்பூர்
குழந்தைகள் நல மருத்துவமனை, அண்ணா சாலை பல் நோக்கு
உயர் சிறப்பு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஆட்டிசம் சார்ந்த
பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. குறைந்த அளவிலான தனியார்
மையங்களே நம்பகத்தன்மையுடன் இயங்குகின்றன.

அரசின் பங்கு

* ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முறையான
ஆய்வை அரசு கட்டாயம் மேற்கொள்ள வேண்டும்.
ஆய்வு மூலம் அவர்களின் மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கப்பட
வேண்டும்.

* ஆட்டிசம் குறித்த அரசின் நலத்திட்டங்களை சாமான்யர்களும்
அறிந்துகொள்ளும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

* மாவட்டம் தோறும் அரசு பொது மருத்துவமனைகளில் ஆட்டிசம்
குறித்து பயிற்சி அளிக்க, பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
அவர்கள் வாரம் ஒரு முறையோ அல்லது மாதம் இருமுறையோ
தாலுகாக்களுக்கும் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும்.

* ஆட்டிச பிரச்சினை அதிகமாக இருப்பதால் போலி மருத்துவர்கள்
பெருகி வருகின்றனர். இதைக் கட்டுப்படுத்த வேண்டிய மாற்றுத்
திறனாளிகளுக்கான வாரியம் (RCI) உரிய முறையில் செயல்பட
வேண்டும்.

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட
குழந்தைகளுக்கு அவர்களின் 18 வயது வரை கல்வி இலவசம்.

அத்துடன் அவர்களின் பெற்றோருக்கு மாதமொரு முறை வீடு தேடி
வந்து, வல்லுநர்கள் மன நல ஆலோசனை வழங்குகின்றனர்.
அத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலையை நினைத்து
வேதனையே மிஞ்சுகிறது. இந்நிலை மாற வேண்டும்.

சமுதாயத்தின் பங்களிப்பு

ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்களை இயல்பாக இருக்கவிட்டால்
போதும். அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் பெரிய உதவியாக
இருக்கும். அவர்களைப் புரிந்துகொண்டு சமூகத்துடன் அவர்களைக்
கலந்துபேச அனுமதிக்க வேண்டும். நிறுவனங்கள் ஆட்டிசத்தால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்க முன்வர
வேண்டும்'' என்கிறார் பாலபாரதி.
-
------------------------------------------
தி இந்து
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83369
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum