புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
21 Posts - 4%
prajai
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
7 Posts - 1%
mruthun
 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_m10 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

[u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை


   
   
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Sat Apr 01, 2017 8:34 am


கடலோரக்கோயில்கள் -1
கடலில் கரைந்த கழிப்பாலை
- அண்ணாமலை சுகுமாரன்

இந்தக்கட்டுரையின் கரு எனக்குத்தோன்றி சற்றேறக்குறைய 47 வருடங்கள் ஆகிவிட்டது . நினைக்கும் போது எனக்கேவியப்பாக இருக்கிறது ..சமீபத்தில் நண்பர் திரு தேவராஜ் முகநூலில் எழுதிய வேளாங்கண்ணி பற்றியது தொடரையும் ,அதில் அவர் குறிப்பிட்டு இருந்த கடற்கரை ஆலயங்களைப்பற்றிய குறிப்பைப் பாத்ததும் எனக்கும் நினைவுகள் பின்னோக்கி சென்றது .
எனக்கு இப்போது 67 வயது ஆகிறது .
எனது 20 வயதில் நான் தமிழ் நாடு மின்வாரியத்தில் சிதபரத்தில் பணிபுரிந்து வந்தேன் . அப்போது சிதம்பரத்தில் இருந்து நாகை ,வேதாரண்யம் கோடிக்கரை வரை இருக்கும் கடற்கரை ஒரஅனைத்து கிராமங்களுக்கு முதல் முதலாக மின் வசதி செய்து தரும் பணியை செய்தென் .புதிதாக கம்பங்கள் மின்மாற்றிகள் நிறுவி ஊருக்கு மின் இணைப்பு தருவது அந்தப்பணி .அதனால் கடற்கரை ஓர அனைத்து ஊர்களுக்கும் செல்லும் வாய்ப்பு அப்போது எனக்கு வாய்த்தது .

பொதுவாக படித்தவர்கள் அலுவலகத்தில் அமர்ந்து அதிகம் அலட்டிகொல்லாமல் வேலை செய்ய விரும்பும் சூழலில் ,நான் தினமும் ஒரு ஊருக்கு செல்லும் , நாள்தோறும் புதிய புதிய மனிதர்களை சந்திக்கும் ,அதே சமயம் அதிக கடினமான ,வெயிலில் சுற்றவேண்டிய வேலையை விரும்பி ஏற்றேன் .கடற்கரை ஒர கிராமங்களில் அடி அடியாக அலைந்திருக்கிறேன் .

அப்போதுதான், 1971 வருடம் என்று நினைக்கிறேன் , நான் கிழ திருக்கழிப்பாலை ,மேலைத்திருக்கழிப்பாலை எனும் இரண்டு ஊர்களுக்கு மின்வசதி செய்துதரும் பணிக்காக சென்றேன் .
எனது அதிஷ்டம் என்றுக் கூறவேண்டும் எனக்குத்துணையாக வந்தவர்
திரு தக்ஷணாமூர்த்தி என்பவர்
அவருக்கு அப்போது 50 வயது இருக்கும் .
எனக்கு அப்போது 20 தான் .
அவர்தான் எனக்கு திரு மூலரை முதலில் அறிமுகம் செய்துவைத்தார் .
இருவகிரும் மின் கம்பங்கள் நடுவதற்காக ,அளவீடு செய்ய விவசாய நிலங்களில் ,அளந்து கொண்டும் ,அலைந்து கொண்டு இருக்கும் போதே ,அங்கே விளைந்திருக்கும் மணிலா கடலைகளை பச்சையாக ,பிஞ்சாக பறித்துச்அவர் தரத்தர அதை சாப்பிட்டபடியே திருமூலரைக்குறித்து அவர்தந்த விளக்கங்கள் ,எனக்கு திரு மூலரைக் குறித்த நல்ல ஒரு அறிமுகமாக அமைந்தது .இன்றுவரை அந்த ஆர்வத்தீ அணையாமல் இருக்கிறது .

அப்போதுதான் கழிப்பாலை எனினும் கடல் கொண்ட ஊரைப்பற்றியும் ,
அந்த ஊரில் உறைந்த இறைவனைப்பற்றியும் அறிந்தேன் .
பின்பு அந்த ஊர் பெரியவர்களிடமும் பேசி அந்த ஊர்களைப்பற்றிய முழு தகவல்களையும் சேகரித்தோம் .
அப்போதிலிருந்து அவைகளை பகிர என்னுள் ஆர்வம் என்றும் நீடித்துவந்தது .
நண்பர் தேவ ராஜனின் கட்டுரை இத்தனை வருடங்களுக்குப்பின் ,
அதற்க்கு ஒரு வடிகாலைத் தந்தது .என்னுடைய நினைவில் இருந்தும் ,
கூகுளின் துணையுடனும் கிழ திருக்கழிப்பாலை குறித்த கட்டுரையைத் தொடருகிறேன் .

திருக்கழிப்பாலையில் இருந்த அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலைஎனும் ஊரில்தற்போது இல்லை

சிதம்பரத்தில் இருந்து 13 கி.மி. தென்கிழக்கே கொள்ளீடம் நதியின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்து வந்த இந்த தலம் ஒரு சமயம் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதம் அடைந்த போது அருகில் உள்ள திருநெல்வாயல் என்ற மற்றொரு பாடல் பெற்ற தல கோவிலின் அருகே ஒரு புதிய ஆலயத்தின் உள்ளே மூலவர் பால்வண்ண நாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.

திருநெல்வாயல் தலத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் தற்போதைய திருக்கழிப்பாலை ஆலயம் உள்ளது.

திருக்கழிப்பாலை (தற்போது சிவபுரி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர் பால்வண்ண நாதர்
இறைவி பெயர் வேதநாயகி

திருநாவுக்கரசர் - 5,
திருஞானசம்பந்தர் - 2
சுந்தரர் - 1
ஆகிய மூவராலும் ஆதியில் பாடல்பெற்ற திருக்கழிப்பாலை ,கடல் கொண்ட காரணத்தால் தற்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்,
வழியே கவரப்பட்டு செல்லும் சாலையில் சிவபுரி எனும் ஊரில் இப்போது விளங்குகிறது .
திருநாவுக்கரசர் ,திருஞானசம்பந்தர் சுந்தரர் மூவரும் அந்த ஊரில் இருந்த இறைவனைப்பற்றி பாடிய பாடல்கள் பல நல்ல தரவுகளைத் இவ்வூர் ஆலயத்தைப் பற்றி தருகிறது.

தில்லையில் நடராஜப் பெருமானின் திருக்கோலம் கண்டு மகிழ்ந்த பின்னர், அப்பர் அருகில் இருந்த வேட்களம்( அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ), கழிப்பாலை முதலிய தலங்கள் சென்று அங்கும் பதிகங்கள் அருளி சிவபிரானை வழிபட்டார்.
கழிப்பாலையில் பல பதிகங்கள் அருளியதாக சேக்கிழார் பெரிய புராணத்தில் குறிப்பிடுகின்றார்.
நமக்கு தற்போது கிடைத்துள்ள அப்பர் பிரானின் பதிகங்கள் ஐந்து.
இந்த ஐந்து பதிகங்களில் காந்தாரப் பண்ணில் அமைந்துள்ள பதிகமும் (வனபவள வாய் திறந்து என்று தொடங்கும் பதிகம் - 4.06), இந்தப் பதிகமும் அகத்துறைப் பாடல்களாக அமைந்துள்ளன.

நாமும் சிவபிரான் பால் ஆராத காதல் கொண்டு அவனது நினைவாகவே எப்போதும் இருக்கவேண்டும் என்பது அப்பர் பிரானின் உள்ளக் கருத்து போலும். நாமும் சிவபிரான் பால் ஆராத காதல் கொண்டு அவனது நினைவாகவே எப்போதும் இருக்கவேண்டும் என்பது அப்பர் பிரானின் உள்ளக் கருத்து போலும். கழிப்பாலை தலத்திற்கு அப்பர் பிரான் சென்றதை குறிப்பிடும் சேக்கிழார், மண்ணோர் வாழ இந்த தலத்தின் பதிகங்களை அருளினார் என்று கூறுகின்றார். . மேலும் இந்த பதிகத்தின் கடைப் பாடலில், துஞ்சும் போதும் துணை எனலாகுமே என்று உணர்த்துவதன் மூலம், சிவபிரானின் நினைவுகளை நாம் இறக்கும் சமயத்தில் கொண்டால், உய்யலாம் என்று அப்பர் பிரான் உணர்த்துவதால், மண்ணோர் வாழ வழி வகுக்கும் பதிகம் என்று சேக்கிழார் குறிப்பிட்டார் போலும்.
மண்ணோர் வாழ வழி வகுக்கும் பதிகம்
என்று பதிகம் பாடிய தலம் தற்போது அங்கு இல்லை .ஆயினும் மண்ணோர் வாழ வழி வகுக்கும் வண்ணம் சிவபுரியில் அருள்பாலிக்கிறார் .

சிறிய கோயில்.தான் சுற்று மதிற்சுவர் கிலமாகியுள்ளது.
ராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. வாயிலின் இரு புறங்களிலும் அதிகார நந்தியர் துணைவியருடன் தரிசனம் தருகின்றனர். கொடிமரம் ஏதுமில்லை. பிராகாரத்தில் சூரியன், விநாயகர், கிராதமூர்த்தி, மகாவிஷ்ணு, சுப்பிரமணிர், மகாலட்சுமி, நவக்கிரகம், காலபைரவர், சந்திரன் சந்நிதிக்ள உள்ளன.

வலம் முடித்துப் படிகளேறி மண்டபத்துள் சென்றால் அழகிய முத்திரைகளோடு - ஒன்று வலக்கைச் சுட்டுவிரலைச் சுட்டிச் சாய்த்தும், மற்றது வலக்கையை மேலுயர்த்தியும் - விளங்குகின்ற துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம்.
அம்பாள் சந்நிதி வலப்பால் உள்ளது.
தெற்கு நோக்கிய தரிசனம் - நின்ற திருமேனி. நடராசசபையில் சிவகாமியின் திருமேனி. தோழியர் இருவர் சூழ ஒரே பீடத்தில் அமைந்துள்ளது.

துவார விநாயகரை, தண்டபாணியைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம். பெயருக்கேற்ப வெண்ணிறமாக உள்ளது.
மிகச் சிறிய பாணம். மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் இலிங்கத் திருமேனி காட்சி தருகின்றது.
அதிசயமான அமைப்பு. அபிஷேகத்தின்போது பால்மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான்.

மூலவருக்குப் பின்னால் இறைவன் இறைவி வடிவங்கள் சுவரில் நின்ற நிலையில் செதுக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள கல்வெட்டொன்ற கோயிலுக்கு நாளன்றுக்கு ஒரு நாழி தும்பை மலர்கொண்டு வந்துதர, தொகையை நிபந்தம் ஏற்படுத்திய செய்தியைத் தெரிவிக்கிறது.

'வானுலாந் திங்கள் வளர்புன்

சடையானே என்கின்றாளால்

ஊனுலாம் வெண்டலை கொண்டூருர்

பலிதிரிவான் என்கின்றாளால்

தேனுலாம் கொன்றை திளைக்குந்

திருமார்பன் என்கின்றாளால்

கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச்

சேர்வானைக் கண்டாள் கொல்லோ."

(அப்பர்)
இவ்வாறு கழிப்பாலைச்சேர்வானைக் கண்டாள் கொல்லோ." என்றே
இறைவனை வர்ணித்துவிடுகிறார் அப்பர் ஐந்து பாடல்களில் ,அந்த செய்தியை கட்டுரையின் அடுத்தப்பகுதியில் காணலாம் .
தொடரும் ---
அண்ணாமலை சுகுமாரன்
1/4/17

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Apr 02, 2017 10:13 pm

நன்றி நன்றி



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 5:52 am

திருக்கழிப்பாலை (தற்போது சிவபுரி என்று வழங்குகிறது)
-
கட்டுரையில் இடம்பெற்ற இந்த தகவலை சரி பார்க்க  
கோருகிறேன்
-
காரைமேடு கிராமத்தில் இருந்த கோயில்
மீண்டும் புனரமைக்கப்பெற்று திருக்கழிப்பாலை
என்ற ஊரில் அமையபெபெற்றது
என்பதே சரியானது
-
சிவபுரியில் இருப்பது உச்சிநாதர் கோயில்

தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத்
தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும்.

அகத்தியமுனிவருக்கு சிவபெருமான் காட்சியளித்த
தலமாகும்.

திருஞான சம்பந்தரும், அவருடன் அறுபத்து மூன்று சைவ
அடியார்களும் இத்தலத்திற்கு வரும்பொழுது, உச்சி
காலமானது. அந்நேரம் மிகுந்த பசியோடு இருந்தவர்களுக்கு, இ
றைவன் கோவில் பணியாளர் வடிவில் வந்து
உணவளித்தமையால் உச்சிநாதர் என்ற பெயர்பெற்றார்.

இக்கோயிலின் அம்பிகை பெயர் கனகாம்பிகை என்பதால்
இக்கோயிலை இவ்வூர் மக்கள் கனகாம்பிகை கோயில் எனவும் வழங்குகின்றனர்.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 03, 2017 5:58 am

 [u][b]கடலோரக்கோயில்கள் -1[/u] கடலில் கரைந்த கழிப்பாலை  Nw4Gc4gRiEqQYMNO3lgA+T_500_846
-
சிவபுரி உச்சிநாதர் கோயில்
முற்காலத்தில் “திருநெல்வாயில்’ என அழைக்கப்பட்டது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Apr 04, 2017 7:04 pm

கட்டுரைக்கும் படங்களுக்கும் நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக