புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
60 Posts - 40%
Dr.S.Soundarapandian
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
7 Posts - 5%
T.N.Balasubramanian
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
2 Posts - 1%
prajai
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
2 Posts - 1%
Manimegala
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
2 Posts - 1%
Saravananj
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
426 Posts - 48%
heezulia
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
300 Posts - 34%
Dr.S.Soundarapandian
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
29 Posts - 3%
prajai
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_m10பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Mar 29, 2017 9:26 am

வரலாற்றுப்பார்வை - 3

பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை
அண்ணாமலை சுகுமாரன்

-- சோழ வரலாற்றின் மிகப்பெரிய மூன்று மன்னர்களின் அரசவையில் தலமைப் புலவராக ,ராஜ குருவாக விளங்கிய ஒட்டக்கூத்தரின் குருபூஜை வருடாவருடம் அவரின் .பள்ளிப்படைக் கோயிலில் நடைபெறுவதாக நண்பர் ஒருவர் கூறினார் .
எனக்கு ஒட்டக்கூத்தரைப்பற்றி இன்னமும் ஆழமாக அறிய ஆவல் பிறந்தது .இத்தனை செல்வாக்கோடும் அரசர்களின் ஆதரவும் இருந்தும் ஒட்டக்கூத்தருக்கு கம்பருக்கு கிடைத்த பிரசித்தம் ஏனோ கிடைக்கவில்லை .
விக்கிரம சோழன் ,இரண்டாம் குலோத்துங்கன் ,இரண்டாம் ராஜராஜன் போன்ற மூன்று மன்னர்களிஅரசவையை ஒட்டக்கூத்தர்அலங்கரித்திருக்கிறார் ..இந்த மாதிரி அரிய வாய்ப்பு வரலாற்றில் வேறு யாருக்கும் கிடைத்துள்ளதாகத் தெரியவில்லை .

இம்மூன்று மன்னர்களின் அவையை அலங்கரித்த ஒட்டக்கூத்தர் பல நூல்களை இயற்றியிருக்கலாம் .ஆனால் நமக்கு அறியக் கிடைப்பவை தக்காயப்பரணி ,கலிங்கத்துப்பரணி போன்ற சில மட்டுமே .
.
குலோத்துங்க சோழ மன்னனின் அவைப் புலவராக இருந்தஇவரால் பாடப்பட்ட தக்காய பரணி என்ற நூலின் சிறப்பையும் இவரது கவிபாடும் ஆற்றலைக் கண்ட குலோத்துங்க சோழன், ஒரு ஊரையே பரிசாகக் கொடுத்தார். அப்படி பரிசாக வழங்கப்பட்ட ஊர்தான் கூத்தனூர் என அழைக்கப்படுகிறது.
இந்த கூத்தனூரில் குடிகொண்டுள்ள அன்னை சரஸ்வதி தேவியின் அதீத அன்பைப் பெற்ற புலவர் ஒட்டக்கூத்தர். பரணி நூல் பாட சரஸ்வதி தேவி உதவி புரிந்ததாக கூறப்படுகிறது.

சிவனை அவமதித்து தக்கன் நடத்தும் யாகததிற்குச் சென்ற தேவர்கள்
மீதும் தக்கனின் மீதும் சிவனுக்குக் கடும் கோபம்.மூண்டது
தக்கனுக்கும் தேவர்களுக்கும் பாடம் புகட்ட நினைத்த சிவன், வீரபத்திரர் என்ற தனது விசேட படைத் தள பதியை தோற்றுவித்து அனுப்பினார்.
தக்கனின் ஆணவத்தையும் யாகத்தையும் அழித்த வீர செயலை விவரிப்பதே தக்காய பரணி .
பரணி இலக்கியத்தில் முதல் பரணியாக தக்காய பரணி இலக்கிய வரலாற்றில் கூறப்பட்டிருந்தாலும் , செயங் கொண்டாரின் கலிங்கத்துப் பரணியே நூலின் சிறப்பாலும் ,அதன் எளிமையாலும் பலராலும் வெகுவாக அறியப்பட்டுள்ளது .
முதல் குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகரத்தொண்டை மான் வடகலிங்க மன்னன் அனந்த வர்மனை வென்ற வீர திறனைக் கூறுவது கலிங்கத்துப் பரணி .
ஆனால் பலராலும் அறியப்படாத முதல் கலிங்கத்துப் பரணி ஒட்டக்கூத்தரின் பரணிதான் .
அந்த பரணி அந்தக்காலத்தில் இருந்ததற்கு சில இலக்கிய சான்றுகள் கிடைத்துள்ளன .ஆனால் அந்தக்கலிங்கத்துப்பரணிஇதுவ்ரைக்கிடைக்கவில்லை .

ஒட்டக்கூத்தர் எழுதிய கலிங்கத்துப்பரணி கூறுவது வேறு ஒரு யுத்தத்தைப்பற்றி .கருணாகரனின் வெற்றியைப்பற்றி அல்ல .
,
முதல் குலோத்துங்கன் காலத்தில் குலோத்துங்கனின் மகன் விக்கிரமன் தனது தந்தையின் சார்பில் வேங்கியை நிர்வகித்து வந்தான் .அந்த சமயத்தில் விக்கிரமன் தென் கலிங்கா வீமனை போரில் வென்றதை விவரிப்பதே ஒட்டக்கூத்தரின் முதல் கலிங்கத்துப்பரணி.

தென் கலிங்கத்தை விக்கிரம சோழன் வென்றதை விவரிப்பது ஒட்டக்கூத்தரின்முதல் கலிங்கத்துப்பரணி.,
வட கலிங்கத்தை கருணாகரத்தொண்டை மான் வென்ற வீர திறனைக் கூறுவது செயங்கொண்டாரின் இரண்டாவது கலிங்கத்துப் பரணி

தஞ்சை - குடந்தை சாலையில், குடந்தை நகருக்கு ஒரு கி.மீக்கு முன்னதாகவே, அரிசிலாற்றங்கரையில் அமைந்திருக்கிறது தாராசுரம்.

அழியாத மூன்று சோழர் பெருங்கோயில்கள் என போற்றப்படும் மூன்று சோழர் கோயில்களுள் ஒன்றான ஐராவதீஸ்வரர் கோயில் இங்கு தான் உள்ளது. இக்கோயிலுக்குப் பின்பக்கம் இருக்கும் வீரபத்ரர் கோயிலில் தான் ஒட்டக்கூத்தருக்கு பள்ளிப்படை அமைக்கப்பட்டுள்ளது .
ஒட்டக்கூத்தர் தாராசுரம் வீரபத்திர சுவாமியை நோக்கி தக்கயாக பரணி பாடியுள்ளார். மேலும், இக்கோயிலின் பின்புறத்தில் சமாதி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.,நமபசப்படுகிறது .
இங்கு ஒட்டக்கூத்தருக்கு ஆண்டுதோறும் குருபூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது.
சோழர் காலத்தில் பள்ளிப்படையும், வீரபத்திரர் ஆலயமும் கற்றளியாக இருந்து பின்னாளில் திருப்பணிகளுக்கு இலக்காகியுள்ளன என்பதை கோபுரம் மற்றும் பிற பகுதிகளில் காணப்பெறும் சோழர் கால கல்வெட்டுகளின் உடைந்த பகுதிகள் வாயிலாக உறுதி செய்யமுடிகிறது.

கருவறையில் நின்ற கோலத்தில் வாள், கேடயம், வில், அம்பு ஆகியவற்றை நான்கு கரங்களிலும் பிடித்த நிலையில் வீரபத்திரர் திருமேனி காணப்படுகின்றது. சிதிலமான நிலையில் ராஜகோபுரம் உள்ளது. நந்தி மண்டபம், முகமண்டபத்துடன் கூடிய கருவறை, கருவறையின் பின்புறம் ஒட்டக்கூத்தர் சமாதி ஆகியவை காணப்படுகின்றன. சமாதிக்கோவில் சுற்றுச்சுவர் எதுவுமின்றி திறந்த வெளியில் இருக்கிறது.

ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படைதிருச்சுற்று மண்டபத்தின் மேற்குப் பகுதியில் வீரபத்திரரின் கருவறைக்குப் பின்புறம் காணப்படுகின்றது. சமாதியின் மேல் ஒரு சிறிய லிங்கம் காணப்படுகிறது

இரண்டாம் இராஜராஜன் தனது ராஜகுருவாக இருந்த ஒட்டக்கூத்தரின் மீது மிகுந்த அன்பும் ,மரியாதையும் கொண்டிருந்ததால் , வீர புத்திரருக்கு சிறந்த கோயில் அமைத்ததும் ,தனது அரசவை தலைமை புலவர் மறைவுக்குப்பின் அந்தக்கோயிலிலேயே அவருக்கு சமாதியும் அமைத்தார் .

தனது குருவின் மேல் கொண்ட பற்றின் காரணமாக இரண்டாம் இராஜராஜன் தனது மறைவுக்கு பின் ஒட்டக்கூத்தரின் சமாதி அருகில்தனக்கும் ஒரு பள்ளிப்படை அமைத்துக்கொண்டார் போலும் .
அந்தக்கோயில் வளாகத்தில் பழங்கால செங்கல் மேடை ஒன்று காணப்படுகிறது .அது இரண்டாம் இராஜராஜனின் பள்ளிப்படை எனக் கருதப்படுகிறது .
இவ்வாறு பரணி பாடி ஒரு ஊரேயே தனது பெயரால் பெற்றதும் , அவரின் வழிபடுதெய்வத்திற்கு அவருக்காக ஒரு கோயில் கட்டிக்கொடுக்கப்பட்டதும் ,அவரது மறைவுக்கு பின் அவரின் சமாதி அங்கேயே அமைந்ததும் , அவரது சமாதிக்கு அருகிலேயே தனது பள்ளிப்படையை அமைத்து கொண்ட மன்னன் என இத்தனை சிறப்புடன்
தமிழ் புலவர்கள் வரலாற்றில் வாழ்திருப்பதுதமிழ்புலவர்கள் அப்போதைய காலத்தில் பெற்றிருந்த பீடும் ,பெருமையும் தெரிவிக்கிறது .

ஆனால் தற்போது ,அப்போது அத்தனை செல்வாக்காக இருந்த புலவர் அத்தனை புகழோடு இல்லாது இருப்பதுவிந்தையாகும்
,புகழ் ப்பெறுவதற்கும் பெரும் பேறு செய்திருக்கவேண்டும் என்பதைத் தெரிவிக்கிறது .
அண்ணாமலை சுகுமாரன்
29/3/17
ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படைக்குறித்து கீற்று இதழில் சில ஆண்டுகளுக்கு முன் வந்திருப்பதை தேடும் பொது கண்டேன் .

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 29, 2017 11:04 am

நல்ல தகவல்கள் ஐயா !...............
.
.
.
." ஒட்டக்கூத்தரின் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்" என்று சொல்லி ஒரு கதை சொல்வார்களே ஐயா, அது தெரியுமா?.............சின்ன வயதில் கேட்டது.....எனக்கு  முழுவதுமாய் நினைவில் இல்லை...ஏதோ ஒரு ராணி கோபித்துக்கொண்டு ஓர் அறை இன் உள்சென்று தாள் இட்டுக்கொண்டாளாம், அரசன் எத்தனை கேட்டும் திறக்கவில்லையாம், உடனே ஒட்டக்கூத்தர் 'நான் பாடினால் ராணி கதவை திறந்து விடுவார்' என்று சொல்லி , பாடினாராம்.ஆனால், அந்தோ பரிதாபம் அவள் மேலும் ஒரு தாழ்ப்பாளை இட்டுக்கொண்டாளாம். என்று சொல்வார்கள்............
.
.
.
உங்களுக்கு இது பற்றி மேல்  விவரம் தெரியுமா ஐயா?.............
.
.
.
யாருக்காவது மேலும் விவரம் தெரிந்தால் விளக்கவும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Wed Mar 29, 2017 11:37 am

படித்து கருத்து பகிர்த்ததற்கு நன்றி சகோதரி !
ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்கிற சொலவடை நானும் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

ஒட்டக்கூத்தர் காலத்தில் ஆண்டுவந்த சோழமன்னன் குலோத்துங்கனின் மனைவியானவள் இராஜகுமாரிஎனக்கூறப்படுகிறது
.
பட்டத்து இராணி இராஜகுமாரியின் ஆசான், நளவெண்பா பாடிய புகழேந்திப்புலவர். அவர் பாண்டிய நாட்டில் இருந்து மணம் முடித்து சோழ நாட்டுக்கு வந்த இராஜகுமாரியின் அழைப்பின் பேரில், சோழ நாட்டில் வந்து சிலகாலம் தங்கி இருந்தார்.

அந்த காலகட்டத்திலே, சோழ நாட்டுப் புலவரான ஒட்டக்கூத்தருக்கும் பாண்டிய நாட்டுப் புலவரான புகழேந்திப் புலவருக்கும் எது குறித்தோ மனத்தாங்கல் என்றாகிவிட, அதன் விளைவாய் புகழேந்திப் புலவர் சிறையில் அடைப்படுகிறார்.

இதுகேட்ட மகாராணி இராஜகுமாரி, கடும் சினங்கொண்டு அந்தப்புரத்தில் உள்ள அறைக்குச் சென்று தாழிட்டுக் கொண்டு ,உண்ணா நோன்பில் ஆழ்ந்து விட, குலோத்துங்க சோழன் தன்னாட்டுப் புலவரான ஒட்டக்கூத்தரை விட்டு இராணியைப் புகழ்ந்து பாடி, எப்படியாவது அவரைக் கோபத்திலிருந்து விடுவிக்குமபடி கேட்டுக் கொள்கிறார்.

அவ்விதமே ஒட்டக்கூத்தரும் அந்தப்புரத்திற்கு சென்று, அறையின் வெளியே நின்று கொண்டு பாடுகிறார்.

ஆண் சிங்கம் போன்றதொரு வீரனாகிய மன்னன் குலோத்துங்கன் வர, உன் தாமரை போன்ற கைகள் தானாக வலியச் சென்று கதவைத் திறந்திடச் செய்யுமன்றோ எனப் பாடுகிறார்.

தனது ஆசானும், பாண்டிய நாட்டுப் புலவருமான புகழேந்திப் புலவரைச் சிறையிலடைக்கக் காரணமான ஒட்டக்கூத்தரின் குரலைக் கேட்டு மேலும் பல மடங்கு சினங்கொண்ட இராஜகுமாரி, இருந்த மற்றுமொரு தாழ்ப்பாளைப் போட்டுக் கொண்டாள்.

அதன்பிறகு, ஒட்டக்கூத்தரால் புகழேந்திப் புலவர் சிறையில் அடைக்கப்பட்டதுதான் மனைவியின் சினத்திற்குக் காரணம் என்பது மன்னனுக்குத் தெரியவர, பின்னர் புகழேந்திப் புலவர் விடுவிக்கப்பட்டு, அவர் சென்று பாடியதும் இராணி அந்தப்புரத்தில் இருந்து வெளிப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு கற்பனைக்கு கதைகள் ,பல்வேறுபுலவர்களைப்பற்றி சென்ற நூற்றாண்டில் எழுந்தன .
இவைகள் ஆதாரம் அற்றவை என நான் கருதுகிறேன் .
இத்தகைய கதைகள் மக்கள் மனதில் பதிந்ததாலக் ,மக்கள் ஒட்டக்கூத்தருக்கு தரவேண்டிய மதிப்பையும் பெருமையும் தர மறந்தனர் .
மூன்று பெரும் மன்னர்களின் அவையில் தொடர்ந்து இருந்தது நினைத்துப்பார்த்தால் பெரிய சாதனையே .
இது குறித்து இன்னமும் ஆய்வு நடத்தப்படவேண்டும் .
அண்ணாமலை சுகுமாரன்
29/3/17
நன்றி http://maniyinpakkam.blogspot.in/

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 29, 2017 11:41 am

உங்களின் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி ஐயா ! ............ஆமாம் ஐயா, நீங்கள் சொல்வது போல , இத்தகைய கதைகள் மக்கள் மனதில் பதிந்ததால் தான் மக்கள் ஒட்டக்கூத்தருக்கு தரவேண்டிய மதிப்பையும் பெருமையும் தர மறந்தனர் .மூன்று பெரும் மன்னர்களின் அவையில் தொடர்ந்து இருந்தது நினைத்துப்பார்த்தால் பெரிய சாதனை தான் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82735
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Mar 29, 2017 5:52 pm

பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  103459460
-
பரணி பாடிய ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை  YozCwgZJR5IcATlPuVYc+images(2)

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக