ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... Empty ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Post by T.N.Balasubramanian Tue Mar 21, 2017 7:52 pm

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... உங்க வயிறு புண்ணானால் ஒன்இந்தியா பொறுப்பல்ல!! 

குறிப்பு : இந்தப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே தவிற எந்த ஒரு தனிப்பட்ட மனிதரையோ, சம்பவங்களையோ குறித்து எழுதப்பட்டது அல்ல. (கவுண்டர் ஸ்லாங்லயே படிங்க) 

கவுண்டர் மெக்கானிக் ஷாப்ல உக்கார்ந்து மோட்டாரை ரிப்பேர் செஞ்சிட்டு இருக்காரு. அப்ப அந்த வழியா வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை வெள்ளை துண்டு போட்ட ஒருத்தர் நடந்து போறார். 

கவுண்டர் : ஏனுங் சின்னக் கவுண்டரே வணக்கமுங்..... (அவர் திரும்பாமல்) ஆங்... வணக்கம் வணக்கம்... என்றபடி போய்க் கொண்டே இருக்கிறார்...

கவுண்டர் : இந்தக் கொரலை நா எங்கயோ கேட்டுருக்கனே....
 கவுண்டரே கொஞ்சம் நில்லுங்க... அப்டியே மூஞ்சியக் கொஞ்சம் திருப்புங்க... (திரும்பினால் அது செந்தில்) கவுண்டர் : இஹ்ஹ்ஹ்ஹ்... டேய் நீயா.... இந்த வாயால உன்ன சின்னக் கவுண்டர்னு சொல்ல வச்சிட்டியேடா... சின்னக் கவுண்டருக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிதுன்னா அவர் மனசு எவ்வளவு பாடுபடும்? வீட்டுக்கு போன உடனே அரை லிட்டர் டெட்டால் ஊத்தி வாயக் கழுவனும்.. 

ஆமா அது என்ன தார் டின்ன சுத்தி சுண்ணாம்பு அடிச்ச மாதிரி ஒரே வெள்ளையும் சொள்ளையுமா கெளம்பிட்ட? 

செந்தில் : அதுவாண்ணே.. எலெக்சன்ல நிக்கப் போறேன்... அதான் நாமினேஷன் தாக்கல் பன்னலாம்னு போய்கிட்டு இருக்கேன்... 

கவுண்டர் : என்னது எலெக்சனா? இப்பதானடா நம்மூர்ல எலெக்‌ஷன் முடிஞ்சிது... இப்ப வேற எதுவும் எலெக்சன் இல்லையே? 

செந்தில் : இங்க இல்லைண்ணே... ஆர்கே நகர்ல நிக்கப்போறேன்.. 

கவுண்டர் : ஓ... இந்த ஆறு மாசத்துக்கு ஒருக்கா எலெக்சன் வப்பானுங்களே அங்கயா... ஆமா ஆர்.கே நகர் எங்க இருக்குன்னு தெரியுமா நாயே? 

செந்தில் : எதோ மெட்ராஸுக்கு பக்கம்னு சொன்னாங்க... அங்கப் போயி தேடிக் கண்டுபுடிச்சிக்கற வேண்டியதுதான்... 

கவுண்டர் : தொகுதி எங்க இருக்குன்னே தெரியாம நாமினேஷன் தாக்கல் பன்னக் கெளம்புன மொத ஆள் நீதாண்டா... ஆமா யாருமே தெரியாத ஊர்ல யாரு உனக்கு ஓட்டுப் போடுவா? 

செந்தில் : அது ரொம்ப ஈஸிண்ணே... ஒவ்வொரு வீடா போயி 'உண்மையான தமிழனா இருந்தா எனக்கு ஓட்டுப் போடுங்' ன்னு சொல்லுவேன். அவங்க போட்டுருவாங்க... கவுண்டர் : டேய் வாடிவாசல் வாயா... அத ஒரு தமிழன் போய்க் கேட்டாலே இவனுங்க போட மாட்டானுக.. நீ வேற ஆப்பிரிக்க நீர்யானை மாதிரி இருக்க... நீயெல்லாம் அங்க போனியின்னா புள்ளை புடிக்கிறவன்னு நினைச்சி போலீஸ்ல புடிச்சிக் குடுத்துருவாங்க. அப்புறம் பெங்களூர் ஜெயில்தான்... களி தான்.. அதுகூட பரவால்ல அங்க போயி உன்னோட கொரங்கு சேட்டைய காமிச்சியன்னா கரண்டு ஷாக் வச்சி உன்ன கொன்னுபோட்டு நீயே தற்கொலை பன்னிக்கிட்டன்னு ஊரயே நம்ப வச்சிருவானுங்க... இதெல்லாம் உனக்குத் தேவையா? 

செந்தில் : அய்யோ அண்ண்ணே... 

கவுண்டர் : பயமா இருக்குதல்லோ... மொதல்ல போய் இந்த கருமாந்திரத்தையெல்லாம் கழட்டி போட்டுட்டு, எலி செத்த நாத்தம் அடிக்கிற ஒரு டவுசர் வச்சிருக்கியல்லோ... அத போட்டுக்கிட்டு அந்தா பார்..புள்ளையார் கோயில்ல பொங்க சோறு குடுக்குறாங்களாம்... போய் வாங்கித்திண்ணு...  

செந்தில் : (சோகமாக) என்னைத்தான் நிக்க விட மாட்டேங்குறீங்க.. அப்ப நீங்களாவது நில்லுங்க... 

கவுண்டர் : நானா... ச்ச.. ச்ச... இந்த அரசியல் கருமாந்திரம்னாலே எனக்கு அலர்ஜிடா.. அதுக்குன்னு ஒருத்தன் இருக்கான் 

செந்தில் : யாரு? 

கவுண்டர் : எம் மாப்ள பழ்னிசாமி

..............................................................................................................
தொடரும் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... Empty Re: ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Post by T.N.Balasubramanian Tue Mar 21, 2017 8:09 pm

தொடர்ச்சி ...............


பழனிச்சாமியாக சத்யராஜ்... பழனிச்சாமி அம்மாவாக வடிவுக்கரசி (சத்யராஜ் வீடு) கவுண்டர் வீட்டுக்குள் வேகமாக நுழைகிறார். 

கவுண்டர் : பழ்னிச்சாமி.. மாப்ள பழ்னிச்சாமி.... எங்க பொய்ட்டான் இவன்? (சத்யராஜ் பூஜை அரையில் கண்ணை மூடிக்கொண்டு சம்மணம் போட்டு உக்கார்ந்திருக்கார்) கவுண்டர் : யோவ் மாப்ள உன்ன எங்கல்லாம் தேடுறேன்.. நீ என்னன்னா பள்ளிக்கூடத்துப் பையன் கணக்கு பீரியட்ல உக்காந்துருக்க மாதிரி உக்காந்துருக்க... சத்யராஜ்: (மெல்ல கண்ணைத் திறந்து, மென்மையான குரலில்) நா தியானம் பன்னிட்டு இருக்கேன் மாம்ஸ். 

கவுண்டர் : மாப்ள என்னாச்சி உனக்கு.. வழக்கமா நாலு ரவுண்ட் போட்டப்புறம் தானே இந்தமாதிரி தியானம்லாம் பன்னுவ.. இன்னிக்கு என்ன காலையிலயே கட்டிங்க போட்டுட்டியா? 

சத்யராஜ் : கிண்டல் பன்னாதீங்க மாம்ஸ்... இப்பல்லாம் நாட்டுல தியானம் பண்றதுதான் ஃபேஷன்... 

கவுண்டர் : மாப்ள.. அவனுங்களுக்கு என்ன பன்றதுன்னு தெரியாம தியானம் பண்ணிட்டு இருக்கானுங்க.. ஆனா நம்ம அப்டியா.. நமக்கு ஆயிரத்தெட்டு வேலை கிடக்கு... பழ்னிச்சாமி...மொதல்ல எழுந்திரி...

சத்யராஜ் : என்னை பழனிச்சாமி என்று அழைக்காதீர்கள்.. பழனியோகி என்று அழையுங்கள்... 

கவுண்டர் : யக்கா அந்த செருப்ப எடு.... 

வடிவுக்கரசி : ஏண்டா எப்பப் பாத்தாலும் என் புள்ளைய திட்டிக்கிட்டே இருக்க... கவுண்டர் : பின்ன என்னக்கா... நா எவ்வளவு முக்கியமான விஷயம் பேச வந்துருக்கேன்.. இவன் என்னனா டிவில கண்ட கண்டதெல்லாம் பாத்துட்டு வந்து உளறிக்கிட்டு இருக்கான். 

வடிவுக்கரசி : அப்புடி என்னடா முக்கியான விஷயம் சொல்லு... நாங்களும் கேக்குறோம். 

கவுண்டர் : மாப்ள... எழுந்திரி... (சத்யராஜ் எழுகிறார்) 

கவுண்டர் : கை ரெண்டயும் கும்புட்ட மாதிரி வச்சிக்க (சத்யராஜ் கும்பிடுகிறார்) கவுண்டர் : அப்டியே கும்பிட்ட மாதிரியே குனி (சத்யராஜ் குனிகிறார்) கவுண்டர் : இன்னும் நல்லா குனி (சத்யராஜ் இன்னும் குனிகிறார்) 

கவுண்டர் : உன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு குணி (சத்யராஜ் குனிந்த படியே தரையைத் தொடுகிறார்..) 

கவுண்டர் : யப்பா சாமி... இதுவரைக்கும் இந்த அம்சம் யாருக்குமே இருந்ததில்லையே.. நீ அதுக்குண்ணே அளவெடுத்து செஞ்சா மாதிரி இருக்கியே... மாப்ள பேசாம நீ எலெக்சன்ல நின்னு ஜெயிச்சிரு.. 

வடிவுக்கரசி : என்னடா சொல்ற... குனிஞ்சா ஜெயிச்சிடலாமா? 

கவுண்டர் : யக்கா முன்னாடியெல்லாம் ஒரு கட்சில எத்தனை பேரு ஜெயிச்சி போறாங்களோ அதான் கட்சிக்கு பலம்.. இப்பல்லாம் கட்சில இருக்கவங்க எவ்வளவு குனியிறானோ.... அதான் கட்சிக்கு பலம்.. இந்த மாதிரி குனியிற ஆளுங்களையெல்லாம் ஆளுங்கட்சி அவங்களே சப்போர்ட் பண்ணி சுயேட்சைல ஜெயிக்க வச்சி சட்ட சபையில அவங்க ஆளுங்களா வச்சிக்கிறாங்க... சரி மாப்ள உங்க அம்மா வடிவுக்கரசி பேர ஒருக்கா சொல்லு... 

சத்யராஜ் : மாண்புமிகு மனிதகுலமாணிக்கம் காவல் தெய்வம் எங்கம்மா வடிவுக்கரசி... 

கவுண்டர் : அட சாமி... இப்பவே பாதி ஜெயிச்ச மாதிரிடா... 

வடிவுக்கரசி : ஏண்டா... எலெக்சன்ல நிக்கனும்னா இந்த ஆதார் கார்டெல்லாம் கேப்பாங்களேடா... 

கவுண்டர் : யக்கா எலெக்‌ஷன்ல நிக்க அந்தக் கருமாந்திரமெல்லாம் தேவையே இல்லக்கா... ரேசன் கடையில அரிசி பருப்பு வாங்குறது... பள்ளிக்கூடத்துல சத்துணவு சாப்புடுறது... பப்ளிக் டாய்லெட்டுல ஒண்ணுக்கு போறது.. இதுக்கு மட்டும்தாங்க்கா நம்மூர்ல ஆதார் கார்டு தேவை.. 

சத்யராஜ் : மாம்ஸ்.. மாம்ஸ்... அப்ப நம்ம ஒரு கட்சி ஆரம்பிச்சி அந்தக் கட்சிலயே எலெக்சன்ல நிப்போம்.... 

கவுண்டர் : அதுவும் நல்ல ஐடியாதான்.. நம்ம ஊரு மக்கள் தொகைய விட கட்சிகளோட எண்ணிக்கை அதிகமாயிப் போச்சி... சரி உடு... ஆரம்பிச்சிருவோம் சத்யராஜ் : கட்சிக்கு ஒரு நல்ல பேரா சொல்லுங்க மாம்ஸ். 

கவுண்டர் : பேரா... சரி உங்க தாத்தா பேரு என்ன? 

சத்யராஜ் : புலிக்குட்டி 

கவுண்டர் : உங்க ஆத்தா பேரு? 

சத்யராஜ் : நாச்சியம்மா, குப்பாயி 

கவுண்டர் : என்ன ஆத்தா பேரக்கேட்டா ரெண்டு சொல்ற.. 

சத்யராஜ் : அவருக்கு டபுள்ஸ் மாம்ஸ்.... 

கவுண்டர் : ஓ இது வேறயா... சரி.. உங்க தாத்தா ஆத்தா பேரு எல்லாத்தையும் சேத்து "புலிக்குட்டி நாச்சியம்மா குப்பாயிக்கா பேரவை"ன்னு வைச்சிக்க 

சத்யராஜ் : என்ன மாம்ஸ் கட்சி பேரு இவ்வளவு கேவலாமா இருக்கு 

கவுண்டர் : இதவிடக் கேவலமான கட்சி பேரல்லாம் நம்மூர்ல இருக்கு மாப்ள... நம்ம கட்சி பேருக்கு என்ன.... புலிக்குட்டி நாச்சியம்மா குப்பாயிக்கா பேரவை.... சுருக்கமா பு .நா .கு பேரவை... புண்ணாக்கு பேரவை.... அட்ரா அட்ரா.... ஆர்.கே. நகருக்கு போறோம்....ஜெயிக்கிறோம். ******
---------------------------------------------------------------------

தொடரும் 


ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... Empty Re: ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Post by T.N.Balasubramanian Tue Mar 21, 2017 8:18 pm

தொடர்ச்சி 

இடம் : ஆர்.கே. நகர்.... கவுண்டர், சத்யராஜ், செந்தில் மூவரும் ப்ரச்சரம் செய்துகொண்டு செல்கின்றனர்.... 

கவுண்டர் : அம்மா பாருங்க... அய்யா பாருங்க... ஆறடி ஒசரத்துலே ஒரு ஆளூ... ஜெயிச்சிப் போனா நம்ம ஊருக்குப் பெருமே... நாட்டுக்குப் பெருமே... 

இவர்களைப் பார்த்ததும் மீடியா சிலர் மைக்கை எடுத்துக்கொண்டு ஓடி வருகின்றர் மீடியா : சார்.. நீங்க எந்தக் கட்சி சார்பா போட்டியிடுறீங்க? 

கவுண்டர் : புண்ணாக்கு பேரவை.... 

மீடியா : அப்டி ஒரு கட்சியா? நாங்க கேள்விப்பட்டதே இல்லையே... 

கவுண்டர் : ( நாங்களே
இப்பதான் கேள்விப்படுறோம்... ).... 


மீடியா: என்னது? 

கவுண்டர் : இ... து... புண்ணாக்கு பேரவை தெரியாதுங்களா? இந்தியாவுலயே மிகப்பெரிய கட்சியாச்சே.. நாங்க முழுசும் நார்த் இண்டியாவுல ஃபோகஸ் பண்ணதால உங்களுக்கு நம்ம கட்சியப் பத்தி அதிகம் தெரியல போல... இல்ல மாப்ள... 

மீடியா : சரி அதெல்லாம் இருக்கட்டும்... இந்த ஆர்.கே. நகர் தொகுதில உங்க வெற்றி வாய்ப்பு எப்டி இருக்கு 

சத்யராஜ்: இந்த இடைத்தேர்தலில் நான் சுமார் 5 லட்சம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி பெறுவேன் 

கவுண்டர் : இஹ்ஹ்ஹ்ஹ்.... (சத்யராஜ் காதிற்குள்) யோவ் மாப்ள.. மொத்த ஓட்டே ஒண்ணே முக்கா லட்சம்தான்ய்யா... (மீடியா பக்கம் திரும்பி) இ.. து... மாப்ள நார்த் இந்தியா ஓட்டையும் சேத்து சொல்லிட்டான்... அதான் அஞ்சி லட்சமாகிப்போச்சு... மீடியா : நீங்க ஜெயிச்சா முதல்வர் ஆவுவீங்களா? 

சத்யராஜ் : முதல்வராகும் எண்ணமெல்லாம் எனக்கு இல்லை 

கவுண்டர் : அக்காங்... உள்ளூர்ல நின்னா எவனும் ஓட்டுப் போட மாட்டானுங்கன்னுதான் நம்ம யாருன்னே தெரியாத இடத்துல வந்து எலெக்சன்ல நிக்கிறோம்... இதுல முதலமைச்சர் வேற.. ஆனா கட்சி ஆரம்பிச்சி இன்னும் 24 மணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள முதல்வர் ரேஞ்சிக்கு போனாம் பாருங்க... that is my மாப்ள பழ்னிச்சாமி! 

மீடியா : சார் அப்புறம் இன்னொரு கேள்வி 

கவுண்டர் : எக்ஜூஸ் மீ... எங்களுக்கு வாக்கு சேகரிக்க வேண்டிய வேலை நிறைய பாக்கி இருக்கு... ஜெயிச்சதுக்கப்புறம் சாவுகாசமா ஓரு நாள் பேட்டி குடுக்குறோம் வரட்டுங்களா.... என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பும் போது, ரெண்டடி முன்னே சென்று விட்டுத் திரும்பி... 

கவுண்டர் : அலோ மீடியா மேடம்.. மறக்காம Breaking news ன்னு போட்டு 'புண்ணாக்கு பேரவையைச் சேர்ந்த பழ்னிச்சாமி வாங்கு சேகரிக்க வந்தார்'னு டிவில போட்டுருங்க... அந்த மீயூசிக்கயும் மறந்துடாதீங்க.... ஏன்னா அந்த மியூசிக்கப் போட்டு நியூஸ் வாசிச்சீங்கன்னா சாதா நியூஸ் கூட ப்ரேக்கிங் நியூஸ் மாதிரி ஆயிருது... வரட்டுங்களா பாப் கட்டிங் மேடம்...! புண்ணாக்கு பேரவை ஜெயிச்சிதா... கவுண்டரோட அடுத்த கவுன்ட்டர் என்னன்னெலே்லாம் அடுத்த கட்டுரைல சொல்றோம்... வர்ட்டா! - 



முத்து சிவா

-----------------------------------------------------------------------------------------------
நன்றி தட்ஸ்தமிழ் 

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... Empty Re: ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Post by ayyasamy ram Tue Apr 11, 2017 1:24 pm

புன்னகை புன்னகை
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... Empty Re: ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Post by ஜாஹீதாபானு Tue Apr 11, 2017 5:00 pm

ஹா ஹா நல்லா இருக்கு சூப்பருங்க


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... Empty Re: ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Post by krishnaamma Thu Apr 13, 2017 12:34 am

வெகுநாட்களுக்குப் பிறகு .................. சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
.
.
..
இனியவன் எங்கே .....வருவதே இல்லையே ஐயா? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... Empty Re: ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Post by T.N.Balasubramanian Thu Apr 13, 2017 2:06 am

krishnaammaa wrote:இனியவன் எங்கே .....வருவதே இல்லையே ஐயா?

யினியவன் மட்டுமா வருவதில்லை? இன்னும் பலர் !
நீங்களே , யினியவன் ஸ்பெல்லிங்கையே மறக்கக் கூடிய அளவுக்கு
அவர்கள் வருவதில்லை..

அவர்களும் ஈகரை தளத்தை மறந்துவிட்டனர் போலும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... Empty Re: ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Post by M.Jagadeesan Thu Apr 13, 2017 7:25 pm

யினியவன் ,சரவணன் பின்னூட்டங்கள் கலகலப்பாக இருக்கும் . அவர்களுக்கு என்ன வேலையோ ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... Empty Re: ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Post by krishnaamma Thu Apr 13, 2017 7:34 pm

T.N.Balasubramanian wrote:
krishnaammaa wrote:இனியவன் எங்கே .....வருவதே இல்லையே ஐயா?

யினியவன் மட்டுமா வருவதில்லை? இன்னும் பலர் !
நீங்களே , யினியவன் ஸ்பெல்லிங்கையே மறக்கக் கூடிய அளவுக்கு
அவர்கள் வருவதில்லை..

அவர்களும் ஈகரை தளத்தை மறந்துவிட்டனர் போலும்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1238576

இல்லை ஐயா, நான் எப்பொழுதுமே இதே ஸ்பெல்லிங் இல் தான் எழுதுவேன் புன்னகை .whatsup ழும் பதிலே இல்லை....தொலைபேசி எண்ணை மாற்றிவிட்டார் போல் இருக்கிறது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... Empty Re: ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Post by krishnaamma Thu Apr 13, 2017 7:35 pm

M.Jagadeesan wrote:யினியவன் ,சரவணன் பின்னூட்டங்கள் கலகலப்பாக இருக்கும் . அவர்களுக்கு என்ன வேலையோ ?
மேற்கோள் செய்த பதிவு: 1238697

ம்ம்.. மிகவும் பிசி போல் இருக்கிறது சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்... Empty Re: ஆர் கே நகரில் நம்ம கவுண்டர்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum