Latest topics
» இயற்கை வளம்!by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
+2
T.N.Balasubramanian
sugumaran
6 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
First topic message reminder :
ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
---அண்ணாமலை சுகுமாரன்
சித்தர்கள் என்றாலே இப்போதெல்லாம் பெரும்பாலோரின் மனச்
சித்திரிப்பு, உண்மைக்கு மாறான புரிதலுடன் கூடியதாகத்தான்
இருக்கிறது. தாடி வைத்து, சுலபத்தில் புரியாமல் பேசினால்
அவரைச் சித்தர் என ஒரு பொதுப் பெயர் சூட்டிப் பாராட்டிவிடுவது, இப்போது புழக்கத்தில் வந்துவிட்டது.
சித்தர்களில் தலை சிறந்த திருமூலர், “என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே” என்கிறார். சித்தர்கள் என்போர் அமுதூறும் தமிழில் பெரும் வித்தைகள் படைத்தோர். அரிய பல வாழ்வியல் கலைகளை நடைமுறைப்படுத்தும் முறை அறிந்த விற்பன்னர்கள்.சித்தர்கள் என்போர் வெறும் மருத்த்வர்கள் மட்டுமல்லர். வெற்று வேதாந்தம் பேசும் வறட்டுப் புலவர்களும் அல்லர். வெந்ததைத்
தின்று விதி வந்ததும் போகச் சொல்லும் கர்மவினையைப் போதிக்கும் வைதீக சமயக் கும்பலைச் சேர்ந்தவரும் அல்லர்.
அவர்கள் வாழும் போதே வாழ்வின் பயனை, மண்ணிலேயே
விண்ணைக் காணச் சொன்னவர்கள். தற்போது கிடைத்த உடலைக் கொண்டே, அதைக் கற்பங்கள் பல உண்டு, பல காலம் வாழும்
வழி அறிநது, மரணமில்லாப் பெருவாழ்வு வாழும் வித்தை அறிந்தவர்கள். கர்ம வினையை வாழும் போதே கழிக்கும் வித்தை அறிந்தவர்கள். பிறத்தலின் பயன் முடியும் வரை இங்கேயே வாழக் கற்றவர்கள். பிறத்தலின் பயனே பரிணாமத்தின் அடுத்தபடி போவதுதானே! விரும்பும் வரை இறப்பைத் தள்ளிவைக்கும் வித்தை கற்றவர்கள்.
இந்த அண்ட பிண்ட சராசரங்கள் அத்தனையையும் இயக்குகின்ற சக்தியை உணர்ந்தவர்கள். அவர்கள் காண்கின்ற எல்லையற்ற பரம்பொருள் இங்கும் எங்கும் விரவி இருப்பதை உணர்ந்தவர்கள். சமயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். எந்த மதத்தில் இருந்தாலும் பரம் பொருளை உணர்ந்தவர்கள்.
சொல்லப் போனால் மனித குலத்தில் யார ஒட்டுமொத்தமாக ஆனந்தமாக இருக்கிறார்கள்?
இறப்பு இல்லாத மனிதர்கள் யார்?
மூப்பு இல்லாத மனிதர்கள் யார்?
நோய் இல்லாத மனிதர்கள் யார்?
புத்தர் இறப்பு, மூப்பு, நோய் முதலிய மனிதனின் துக்கங்களைப்
பார்த்துத்தானே அதற்கு வழி காணத் துறவு பூண்டார் என்று
கதைகள் கூறுகின்றன. ஆனால் இதுவரை மனித குலத்தின் மாறாத இந்தத் துயரங்களுக்கு விடிவு வந்ததா? யாராவது, எந்த மதமாவது, இது செய்தால் இறப்பு, மூப்பு, நோய் வராது என்று அறுதி இட்டுக் கூறி, வழியைக் கூறி இருக்கிறார்களா?
ஆனால் சித்தர்கள் அனைவரும் மானுடத்தின் இத்தகைய
ஒட்டுமொத்த துயரங்களுக்கு வழி முறை கூறி இருக்கிறார்கள்.
அதுவும் ஒரே மாதிரி கூறியிருக்கிறார்கள்.
மரணமில்லாப் பெருவாழ்வே, அவர்கள் லட்சியம். வாழும் இதே
உடலில் இருந்தே முக்தி பெறும், விடுதலை பெறும் ஆர்வம்
கொண்டவர்கள்.
வாழ்வின் அத்தனை புதிர்களுக்கும் விடையைக் கண்டவர்கள்.
அவர்கள் தொடாத வாழ்வின் நெறிகளோ, உண்மைகளோ
எதுவும் இல்லை எனலாம். ஆனாலும் சித்தர்கள் எனப்படுவோர்,
மிகவும் நடைமுறை வாதம் கொண்டோர். அவர்களின் அறிவுப்
பாதையில் வெறும் வேதாந்த, சித்தாந்தப் பேச்சுகள் மட்டும் இல்லை. கூடவே அத்தனைக்கும் நடைமுறைப்படுத்தும் விதிமுறை அறிந்தவர்கள். வாழ்வின் அத்தனை விதி முறைகளும் அறிந்து வாழ்வின் விதியை வாழும் போதே மாற்றும் வல்லமை படைத்தவர்கள். வினையைப் போக்க மீண்டும் மீண்டும் பிறப்பதை மறுத்தவர்கள்.
தானே இறையென தெரிந்தவர்கள் மட்டுமல்லர்.
தானே இறையென முற்றும் உணர்ந்தவர்கள் .
இனி அவர்கள் சிந்தையில் மலர்ந்த அறிவியல் உண்மைகள்
சிலவற்றை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
தொடரும்
இந்தக்கட்டுரை 2011 இல் வல்லமை மின் இதழில் வெளிவந்தது .
முகநூல் நண்பர்களின் மீள் வாசிப்பிற்க்காக இங்கு பதிகிறேன்
நன்றி திரு கமலக்கண்ணன் அவர்களின் ஞானக் கனல்
-அண்ணாமலை சுகுமாரன்
14/3/17

sugumaran- இளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
Re: ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
அருமையான பதிவு தொடர வாழ்த்துக்கள்
www.orupenavinpayanam.blogspot.in
முகம்கண்டு பேசிப்பழகாத ஒருவரை வெறுக்கக்காரணம்
நம்மில் இருக்கும் அறியாமையும் அதிகமான பொறாமையும்தான்
Re: ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
ஆர்வத்தை தூண்டுகிறது .
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
படித்தால் பிரமிப்பாக இருக்கிறது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் !- 5
-அண்ணாமலை சுகுமாரன்
மருத்துவத்தின் இலக்கணம்
சித்தர்கள் கடைப்பிடித்த மருத்துவ முறை, சித்த வைத்தியம் ஆகும்.
சித்த வைத்தியம்,என்பது வருமுன்னர் காக்கும் ஒரு அதிசய வைத்தியம். சித்தர்களின் ஒரே குறிக்கோள், இறை உணர்ந்து, இறையுடன் கலக்கும் வரை மூப்பைத் தள்ளிவைத்து, நோய் இல்லாமல், இதே உடம்பை மரணமில்லாமல் தான் விரும்பும் வரை வாழும் மார்க்கம் அறிந்து ,
அந்த அறிவை மக்களுக்கு அறிவித்தவர்கள் தான் சித்தர்கள்.
Iமருத்துவம் என்றால் எவ்வாறு இருக்கவேண்டும் என்று இலக்கணம் வகுத்தவர்கள் சித்தர்கள்.
மறுப்பதுடல் நோய் மருந்தெனல் சாலும்
மறுப்பதுள நோய் மருந்தெனல் சாலும்
மருப்பதினி நோய் வாராதிருப்ப
மறுப்பது சாவை மருந்தென லாகும்.
மருந்து என்பது உடல் நோயை தீர்க்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
மருந்து என்பது உள நோயைத் தீர்க்கக் கூடியதாக இருக்கவேண்டும்.
மருந்து என்பது இனி நோய் வாராது இருக்கச் செய்யவேண்டும்.
மருந்து என்பது சாவு வாராமல் செய்ய வேண்டும்.
எத்தனை உயர்வான மருத்துவ முறை, பாருங்கள். உடல் நோய் மட்டுமல்ல, உள நோயையும் தீர்க்க வேண்டுமாம்.
இன்று நவீன மருத்துவம் கூறும் மனம் சார்ந்த நோய்களைப பற்றியும் எத்தனை காலம் முன்பே கூறியிருக்கிறார்கள் பாருங்கள்.
நோய் வந்த பின் தீர்ப்பது மட்டுமல்லாது, இனி நோய் வாராது இருக்கச் செய்ய வேண்டுமாம்.
மருந்துண்டால் சாவே வாராது செய்ய வேண்டுமாம்.
இத்தகைய உயர்வான மருத்துவ முறைகள் அறிந்திருந்த தமிழர் மருத்துவம், இன்று “போலி மருத்துவம்” என்று குறைகூறிச் சந்தேகிக்கப்படுகிறது.
நமது சொந்த மருத்துவம், நமது நாட்டிலேயே மாற்று முறை மருத்துவம் என்று அழைக்கப்படுகிறது.
ஒருகோடி சித்தருண்டு அவர்கள் பெயரை
ஓகோகோ எழுதிடவே அடங்காதையா
– சச்சிதானந்த சுழுமுனைச் சூத்திரம் 23
என்றவாறு கூறியபடி வாழையடி வாழையாக விளங்கி வரும் சித்தர்கள் வழங்கிய அறிவியல் உண்மைகளில் சிலவற்றையாவது நாம் நவீன ஆய்வுக்கு உட்படுத்தி, அவற்றை மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதே இப்போது காலத்தின் கட்டாயமாகிவிட்டது.
இது எனக்குப் புரிந்தது இதுவெயின் ஒரு பகுதி ,இதனைத்தொடர்ந்து சித்தர்கள் பிறப்பின் வகைகள் கர்மவினைப்பற்றிக் கூறியதை எழுதுகிறேன் .
நமது இச்சையால் நாம் பிறக்கவில்லை,இறப்பும் நம் வசம் இல்லை
பற்ப்பலபிறவியின் கர்ம வினைகளின் தொகுதியும்
சத்வம் ரஜோ தமோ எனும் முக்குண நிலையால்
உருவான வாசனையாலும்வந்து முளைத்தது இப்பிறவி !
நமது தாய் தந்தையை நாம் தேர்ந்தெடுக்வில்லை !
அவர்களும் நம்மை வேண்டி இருக்கவில்லை !
பின் எதுதான் நம்மைப் பிணைத்தது ?
எது இந்த உறவுகளை அமைத்தது ?
பிணைப்போ தொடர்வது
இன்று நேற்றல்ல ! கொடுக்கல்வாங்கல்
தீரும் வரை தொடரும் இத்தகைய பந்தங்கள் !
ஆனால்பாத்திரங்கள் தான் மாறுகின்றன !
நம் தாய் தந்தை நமக்கு தரவேண்டிய
தீர்க்க வேண்டிய கடனை சரிசெய்ய
நாம் அவர்களுக்கு பிள்ளையைபிறக்கிறோம்
இத்தகைய கொடுக்கல் வாங்கல் தீரும் வரை
இருவர் தொடர்பும் தொடர்திடும்,
பிறவி பிறவியாக அறுபடாமல் !
நமது சகோதர சகோதரிகளும் நண்பர்களும்
நாம் தொடர்பு கொள்ளும் அத்தனை
அத்தனை பேரும்ஒன்றும் தற்செயல் இல்லை !
நம் ஆயிரம் ஆயிரம் பிறவியிலே அறுபடாமல்
தொடரும் தொடர்புகள்தான் ! தீரும் வரை
கடன் பெற்ற ஊரும் நபர்களும்,தட்டாமல் வந்தே தீரும் ।!
இறைவனின் மாயா சக்தி இயற்க்கை !
மாயை என்றால் இல்லாமல் இருப்பது அல்ல
இருப்பதுவே இல்லாமல் இருப்பது !
இயற்கையின் பிரதிநிதி சந்திரன்
பரமனின் பிரதிநிதி சூரியன் !
பிறப்பின் ஆதாரம் பரவிந்து ,நாதம்
உடல் எடுக்க வேண்டிய உயிர்
சூரிய சந்திர கதிர்கள் மூலம் பரவி
உண்ணும் உணவின் மூலம் அவன் தாயின் உடலில் பரவி ,
தந்தையின் பிராணனின் உந்துதலுக்கு காத்திருக்கும் !
பிறப்பின் ஆயுள் என்பது புகும் பிராணனின்
அளவைப்பொறுத்தே அமைகிறது !
அந்த பெற்றோரின் புனித "உறவின்" போதே பிள்ளையின்
வாழும் காலம்ஆரோக்கியம் ,வாழும் வழி நிச்சயம்
ஆகிவிடுகிறது ।!
செய்த அந்த நல்வினை தீவினை, அவன் பெறும் பிறவியில்
அவனது தாய் தந்தை அமைவதும் உடலின் வண்ணமும் ,குணமும்
சுக துக்கமும் அமைவதாகும் !
கழிந்த பிறவியில் வறியவனாக இருந்தும்
வாழ்வில் சத்தியத்துடன் ,சகிப்புடன்தான் உண்ண வழி இல்லாமல் இருந்தும் தன் சுதர்மத்தை சரிவர்செய்தவன் ,
பிறர் பசி தீர்த்தவன் - பெறுவது
இப்பிறவியில் ஒரு புதிய பிறவி
அதில் உத்தம தாய் தந்தை
ஆரோக்கிய அமைதியுடன்
அவன் சஞ்சித கர்மம் தீர்க்க நிமதியான
ஒரு சுழல்அமைகிறது ! மாறாக உத்தம சுழல் அமைந்தும்
அதர்மமாக அடக்கமில்லா லோபியாக வாழ்தவன்
அடைவதோ தரித்திர குடும்பம் தீராத நோய்
பிறர் பழிப்பு இன்னபிற !
ஆயினும் அவன் பிறவியின் நோக்கம்மீதம் இருக்கும் சஞ்சிதம் தான் !
வாழ்வு என்னமோ ஒன்றுதான் ,ஆயினும்
ஒருவன் பயணம் மூன்றாம் வகுப்பு
நெருக்கடி துன்பமிகு ரயில் பயணம் !
நல்வினை புரிந்த மற்றவன் பெறுவது
குளிர்சாதன இன்ப முதல் வகுப்பு ரயில் பயணம் !
ஆனால் போவது என்னவோ ஒரே ஊருக்குத்தான் !
அண்ணாமலை சுகுமாரன்
25/3/17

ஆஹா ... தொடருங்கள் நண்பரே..
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --2
» வாய் பிளந்து காத்துக்கிடக்கும் நீலத்திமிங்கலங்கள்
» அறிவியல் வானின் விடிவெள்ளிபிப்ரவரி 28 சர்.சி.வி.ராமன்தேசிய அறிவியல்
» அறிவியல் களஞ்சியம் அறிவியல் ஆச்சர்யம்
» TNPSC தேவையான "பொது தமிழ்","அறிவியல்","சமூக அறிவியல்" வினா விடை அனைத்தும் ஒரே இடத்தில்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum