ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:47 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 4:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 4:36 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று 14.3.2017 காரடையான் நோன்பு !

Go down

இன்று  14.3.2017 காரடையான் நோன்பு !  Empty இன்று 14.3.2017 காரடையான் நோன்பு !

Post by krishnaamma Tue Mar 14, 2017 5:26 am

இன்று  14.3.2017 காரடையான் நோன்பு !

14.3.2017  4 to 5 pm  (பாம்பு பஞ்சாங்கம் படி)*


மாசியும் பங்குனியும் கூடும் வேளையில் நோற்கப்படுவது காரடையான் நோன்பு. மாசி மாத கடைசி நாள் இரவு ஆரம்பித்து பங்குனி முதல் நாள் காலையில் முடிப்பர். இந்த நோன்பை காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, சாவித்திரி விரதம் என்றும் சொல்வார்கள். சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் விருத்திக் காக காரடையான் நோன்பு அனுஷ்டிக்க வேண்டும். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி, பச்சரிசி மாவுடன் வெல்லம் கலந்து தயாரிப்பதே காரடை ஆகும்.

மந்திர தேசத்து மன்னன் அஸ்வபதியின் மகள் சாவித்திரி, வீரத்தில் சிறந்தவள். இவள் ஒருநாள் வேட்டைக்குச் செல்லும்போது, தியானத்தில் இருந்த சாளுவதேசத்து இளவரசன் சத்தியவானைப் பார்த்தாள். அவனது தந்தை ஒரு போரில் நாட்டை இழந்து விட்டார். அதனால், காட்டில் மகனுடன் வசித்தார். பார்வையற்ற பெற்றோரை சத்தியவான், அன்புடன் கவனித்துக் கொண்டான்.

அவனையே திருமணம் செய்வதென்று முடிவு செய்தாள் சாவித்திரி. மந்திர தேசத்திற்கு வந்த நாரதர், சாவித்திரியின் தந்தையிடம் இன்னும் ஓராண்டு காலத்தில் சத்தியவான் இறந்து விடுவான் என்றும், அதனால் சாவித்திரியை அவனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி விடாப்பிடியாக சத்தியவானையே திருமணம் செய்து கொண்டாள். கணவனையும், பார்வையற்ற மாமனார், மாமியாரையும் அவள் அன்புடன் கவனித்துக் கொண்டாள்.

அரண்மனைவாசியான அவள் காட்டில் பல சிரமங்களை அனுபவித்தாலும், பொறுமையுடன் ஏற்றுக் கொண்டாள்.

சத்தியவானின் ஆயுள் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியவே இல்லை. அவர்கள் காட்டில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். திடீரென சத்தியவான், மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மராஜா, எடுத்துச் சென்றார். சாவித்திரி எமனைப் பின்தொடர்ந்தாள். தலை சிறந்த கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், தைரியத்துடன் அவனை திருமணம் செய்து கொண்டதாலும், பார்வையற்ற முதியவர்களுக்கு தளராத சேவை செய்தவள் என்பதாலும் அவளுக்குக் காட்சி தந்த எமதர்மர், அவளை திரும்பிப் போகச் சொன்னார்.

அவரிடம், நான் என் கணவருடன் வாழ விரும்பு கிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும், எனக் கேட்டாள்.  இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது என மறுத்த எமதர்மர், அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருவதாகக் கூறினார். சாவித்திரி சமயோசிதமாக,என் மாமனார், மாமியாருக்கு மீண்டும் பார்வை வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், என்றாள்.

சற்றும் யோசிக்காத எமதர்மன் அந்த வரங்களைக் கொடுத்து விட்டார். எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே! அவரது உயிரை திரும்பக் கொடுங்கள், என யாசித்தாள் சாவித்திரி. எமதர்மராஜா அவளது அறிவின் திறனை வியந்து, சத்தியவானை அங்கேயே விட்டுச் சென்றார்.

மாசியும், பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.அதிலும் மாசி மாதம் இருக்கும்போதே, அதாவது பங்குனி பிறக்கும் முன் சரடு கட்டிக்கொள்ளவேண்டும்

மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படும்.

*விரதமுறை:* விரதம் இருக்கும் நாளில் பெண்கள் எண்ணெய் தேய்த்து குளித்து,  தரையில் சிறிய கோலமிட வேண்டும். அதன் மீது நுனி வாழை இலை போட்டு, இரண்டு அடையும், உருக்காத வெண்ணையும் வைக்க வேண்டும். இலையின் ஓரத்தில் வெற்றிலை, பாக்கு, இரண்டு வாழைப்பழம் வைக்க வேண்டும். அதன் மீதே நோன்புக் கயிற்றையும், புது தாலிச் சரடையும் வைக்க வேண்டும். அதன் முன் அமர்ந்து, இலையைச் சுற்றி நீர் தெளித்து நிவேதனம் செய்ய வேண்டும்.

பின்னர் நோன்பு  சரடை பெண்கள் தாங்களாகவே தங்கள் கழுத்தில் கட்டிக்கொள்ள வேண்டும். இறைவியர் படங்களுக்குச் சாற்ற வேண்டும். பிரசாதத்தை அனைவரும் உண்ணலாம்.

காரடையான் நோன்பன்று பெண்கள் மோர் சாப்பிடக் கூடாது.

*மஞ்சள் கயிற்றை கட்டிக் கொள்ளும்பொழுது சொல்ல வேண்டிய ஸ்லோகம்*

தோரம் கிருஷ்ணாமி சுபகே ஸஹாரித்ரம்

தராமி அஹம்!பர்த்து:ஆயுஷ்ய

ஸித்யர்த்தம் ஸுப்ரீதாபவ ஸர்வதா


*பலன்:* காரடையான் விரதம் இருக்கும் பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாக இருப்பர்.

*அடை செய்யும் முறை*

பெண்கள் காரடையான் நோன்புக்கு படைக்கவும், விரதம் முடிந்த பின்பு சாப்பிடவும் இந்த அடை செய்வார்கள். நோன்பின்போது மட்டுமல்ல சாதாரண நாட்களிலும் சமைத்து சாப்பிட சத்தான சிற்றுண்டி இது.

தேவையான பொருட்கள்:

வறுத்த பச்சரிசி மாவு 1 கப்
காராமணி 1/4 கப்
தேங்காய் சிறிய பற்களாக நறுக்கியது - அரை கப் ( துருவியும் போடலாம் )
வெல்லம் (பொடித்தது) 1 கப்
ஏலக்காய் பொடி  1 டீ ஸ்பூன்
தண்ணீர் 2 கப்

நோன்பு அடை செய்முறை:

காராமணியை நாகு வறுத்து, பின் வேகவிட்டு வடித்து வைத்துக் கொள்ளவும்.
வாணலி அல்லது உருளி இல் இரண்டு கப் தண்ணீர் விட்டு வெல்லத்தைப்போட்டு கொதிக்கவிடவும். வெல்லம் நன்றாக கரைந்ததும், வடிகட்டிக்கொள்ளவும்.
பிறகு மீண்டும் அடுப்பில் வைக்கவும், வெல்லத் தண்ணீர் "தள தள' என்று கொதிக்கும்போது, வேகவைத்த காராமணி,தேங்காய் துண்டுகள்,ஏலப்பொடி சேர்க்கவும்.
அடுப்பை சின்னதாக்கிவிட்டு, வறுத்துவைத்துள்ள மாவை ஒரு கையால் கொட்டிக்கொண்டே மறுகையால் கிளறவும்.
அடுப்பை அணைத்துவிட்டு நன்கு கிளறவும்.
மாவு நன்றாக பந்து போல சுருண்டு வந்ததும் ஒரு தாம்பாளத்தில் கொட்டிவைத்துக் கொள்ளவும்.
நன்கு ஆறினதும், நன்றாக அழுத்தி பிசையவும்.
ஒரு எலுமிச்சை அளவிற்கு மாவை எடுத்துக் கொண்டு அதை கைகளில் வைத்து அழுத்தி தட்டை போல செய்யவும்.
இது போல மொத்த மாவையும் செய்யவும்.
இவைகளை, அதாவது இந்த நோன்பு அடைகளை, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வைத்து, ஒரு பத்து நிமிடங்கள் ஆவி இல் இட்லி போல வேகவைத்து எடுக்கவும்.
பரிமாறும்போது உருகாத வெண்ணெயுடன் பரிமாறவும்.

குறிப்பு: இத்துடன் உப்பு அடையும் செய்யலாம். குறிப்பை என்னுடைய சமையல் பக்கத்தில் தருகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum