ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஞ்சாப்: 16-இல் அமரீந்தர் பதவியேற்பு

Go down

பஞ்சாப்: 16-இல் அமரீந்தர் பதவியேற்பு Empty பஞ்சாப்: 16-இல் அமரீந்தர் பதவியேற்பு

Post by ayyasamy ram Mon Mar 13, 2017 6:11 am

பஞ்சாப்: 16-இல் அமரீந்தர் பதவியேற்பு PjN6uhdR3aWHeUYqj8jg+Amarinder-singh
-----
Amarinder-singh பஞ்சாப் ஆளுநர் வி.பி.சிங் பத்னோரை
ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மலர்க்கொத்து வழங்கிய
அந்த மாநிலத்தின் அடுத்த முதல்வரும், மாநில காங்கிரஸ்
கட்சித் தலைவருமான அமரீந்தர் சிங்.
-------------------------

பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்
கேப்டன் அமரீந்தர் சிங் வரும் 16-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
-
பஞ்சாபில் நடந்து முடிந்துள்ள சட்டப் பேரவைத் தேர்தலில்
மொத்தமுள்ள 117 இடங்களில் 77 இடங்களில் வெற்றி பெற்று
காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. இதன் மூலம்
சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணியின் 10 ஆண்டு
கால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 20 இடங்களைக் கைப்பற்றி
எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

ஆட்சியில் இருந்த சிரோமணி அகாலிதளம்-பாஜக கூட்டணி
18 இடங்களில் மட்டும் வென்று மூன்றாவது இடத்துக்குத்
தள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சண்டீகரில் பஞ்சாப் மாநில காங்கிரஸ்
தலைமையகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற எம்எல்ஏக்கள்
கூட்டத்தில் சட்டப் பேரவை கட்சித் தலைவராக அமரீந்தர் சிங்
ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தக் கூட்டத்தில் நவ்ஜோத் சிங் சித்து, ராஜ்குமார் வெர்க்கா
ஆகிய புதிய எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

இதனிடையே, அவர் சண்டீகரில் உள்ள பஞ்சாப் ஆளுநர் மாளிகை
சென்று, ஆளுநர் வி.பி.சிங் பத்னோரைச் சந்தித்து ஆட்சியமைக்க
உரிமை கோரினார். அதன் பின், அமரீந்தர் சிங் செய்தியாளர்களிடம்
கூறியதாவது:

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து,
மாநிலத்தில் புதிய அரசை அமைப்பது குறித்து விவாதிப்பதற்காக
நான் வரும் 14-ஆம் தேதி தில்லி செல்ல உள்ளேன். புதிய அரசு
பதவியேற்பு விழா வரும் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது.

புதிய அரசில் எத்தனை அமைச்சர்கள் இடம்பெறுவார்கள் என்பதைக்
கூற இயலாது. மாநில அரசுக்குப் பொறுப்புடையதாக காங்கிரஸ் அரசு
இருக்கும் என்றார் அமரீந்தர் சிங்.

அவரைத் தொடர்ந்து, அமிருதசரஸ் மேற்கு தொகுதி எம்எல்ஏ
ராஜ்குமார் வெர்க்கா கூறுகையில், “சிரோமணி அகாலிதளம்-பாஜக
கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் செழித்து வளர்ந்துள்ள
போதைமருந்துக் கடத்தலுக்கு முடிவு கட்டுவதே காங்கிரஸ் அரசின்
முன்னுரிமைப் பணியாக இருக்கும். இதற்காக விரிவான திட்டம்
ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது’ என்று தெரிவித்தார்.

பிரகாஷ் சிங் பாதல் ராஜிநாமா

பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் சிரோமணி அகாலிதளம்-
பாஜக கூட்டணி தோல்வி அடைந்ததையடுத்து, முதல்வர் பதவியை
பிரகாஷ் சிங் பாதல் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தார்.

பஞ்சாப் சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி
77 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிரோமணி அகாலி தளம் (15),
பாஜக (3) கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்றன. இதையடுத்து
காங்கிரஸ் முதல்வர் பதவி வேட்பாளரான அமரீந்தர் சிங் தலைமையில்
காங்கிரஸ் அரசு விரைவில் பதவியேற்கவுள்ளது.

சட்டப் பேரவை கலைப்பு: இதனிடையே, முதல்வர் பதவியிலிருந்து
பிரகாஷ் சிங் பாதல் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, பஞ்சாப்
சட்டப் பேரவையை அந்த மாநில ஆளுநர் வி.பி. சிங் பட்னூர்
ஞாயிற்றுக்கிழமை கலைத்தார்.
-
-----------------------------------
தினமணி

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum