ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 7:17 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!

2 posters

Go down

பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!  Empty பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!

Post by krishnaamma Wed Mar 08, 2017 10:59 am

பண்டிதமணி வாசஸ்பதி மிச்ரர் வியாசரின் வேதாந்த தரிசனத்துக்கு விளக்கவுரை எழுதியவர். எப்போது பார்த்தாலும் படிப்பதும் எழுதுவதுமாகவே இருக்கிறாரே என்று வருத்தப்பட்ட பெற்றோர், அவருக்கு பாமதி என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். திருமண மேடையில் கூட அவருடைய கையில் ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் இருந்தது.

பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!

பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!  AAd8LS8lS1Oq4PvJn6Su+women_(1)_20196

திருமணத்துக்குப் பிறகு வாசஸ்பதியும் பாமதியும் ஒரு பர்ணசாலையில் தங்கி இருந்தனர். அழகான இயற்கைச் சூழலில், அழகும் இளமையும் பொருந்திய பாமதி அருகில் இருந்தும்கூட, அவளை ஏறெடுத்தும் பார்க்காமல், படிப்பதிலும் எழுதுவதிலுமே பொழுதைப் போக்கினார்.

அழகும் இளமையும் கொண்டிருந்த பாமதி, நற்பண்புகளின் உறைவிடமாகத் திகழ்ந்தாள். தினமும் காலையில் அவர் நீராடுவதற்கு தண்ணீர் தயாராக வைக்கப்பட்டிருக்கும். அவர் சிந்தனை செய்துகொண்டே நீராடுவார். நீராடி முடித்ததும் துவைத்து மடிக்கப்பட்ட ஆடைகள் தயாராக இருக்கும். அணிந்து கொள்வார். நீராடி முடித்ததும், பக்குவமாக சமைத்த உணவை அவருக்கு அருகில் கொண்டு வந்து வைப்பாள். அவர் சாப்பிட்டதும் கை அலம்ப ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரும் வைப்பாள். சாப்பிட்டு முடித்து கை அலம்பியவர் கைகளைத் துடைத்துக்கொள்ள ஒரு துணி நீட்டுவாள்.

சிலநாள் பாதி குளிக்கும்போதே சொட்டும் நீரோடு கரையில் வைத்திருக்கும் ஓலைச் சுவடியை எடுத்து எழுத ஆரம்பித்துவிடுவார். பாமதியின் இரண்டு வளைக் கரங்கள் தலையைத் துவட்டிவிடும். அதுமட்டுமல்ல, அவர் விடிய விடிய எழுதிக்கொண்டிருக்கும்போது, விளக்கில் எண்ணெய் குறையாமலும், திரி கருகாமலும், காற்றில் அணைந்துவிடாமலும் பார்த்துக்கொள்வாள்.

கோடைக் காலத்தில் அவருக்கு வியர்க்காமல் இருக்க இதமாக விசிறுவாள். மழைக்காலத்தில் சாரல் அடிக்காமல் திரை போட்டுத் தடுப்பாள். தன்னை மறந்த நிலையில் அவர் எழுத்தாணியும் கையுமாக உறங்கும் வேளையில், குவிந்து கிடக்கும் ஓலைச்சுவடிகளை வரிசைப்படுத்தி வைப்பாள். இத்தனை பணிவிடைகளையும் செய்வது யார் என்று ஒருநாளும் அவர் நினைத்துக்கூட பார்த்தது இல்லை.

அவர் நினைத்தால் பல்விளக்குவார், குளிப்பார், பசிக்கும்போது வட்டிலில் இருக்கும் உணவை என்னவென்றுக் கூடப் பாராமல் சாப்பிடுவார். திடீரென்று கை கழுவிவிட்டு எழுத ஆரம்பித்துவிடுவார்.

இப்படி ஒரு நாளா, இரண்டு நாளா... ஐம்பது ஆண்டுகள்!

அன்று விளக்கைத் தூண்டும்போது திரி சுருண்டு விளக்கு அணைந்துவிட்டது.

பரபரப்பாய் விளக்கை ஏற்றுகிறாள். பஞ்சுப் பொதிபோல் தலை நரைத்திருக்கும் அந்த மாது.

"அம்மா! தாங்கள் யார்?" என்றார் மிச்ரர்.

"ஐயோ! ஏன் இந்த மரியாதை அழைப்பு! விளக்கை ஜாக்கிரதையாய் கவனித்துக் கொள்ளாதது குற்றம்தான்! அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? தங்கள் பணிக்கு இனி ஊறு நேராது என்றாள் அந்த அம்மாள்.

"இல்லை... நீங்கள் யாரென்று சொன்னால்தான் மேற்கொண்டு எழுதமுடியும்" என்று கூறி, ஓலைகளையும் எழுதுகோலையும் கீழே வைத்துவிட்டார் மிச்ரர்.

"சுவாமி! நான் உங்கள் மனைவி பாமதி. பெயர் சொல்லி ஒருமையில் அழையுங்கள். நீங்கள் என்று கூப்பிட்டு பாவியாக்காதீர்கள்" என அவர் காலில் விழுந்தாள் பாமதி.

திகைத்தார் மிச்ரர்.

"மனைவியா? நமக்கு எப்போது திருமணமாயிற்று?"

"ஐம்பது ஆண்டுகளுக்கு முன்."

"ஐம்பது ஆண்டுகளாய் எங்கிருந்தாய்?"

"இங்குதான்! இதே குடிசையில் உங்களுடன்தான் இருந்தேன்."

"அப்படியானால் ஐம்பது வருடங்களாகக் கண்மறைவில் நடமாடினாயா?" எதிரில் இருந்தால் யார் என்று கேட்காமல் இருப்பேனா? இன்று கேட்டேனே!" மிச்ரர் வாதித்தார்.

"சுவாமி! கண்களால் பார்ப்பது பார்வையாகுமா? உங்கள் சிந்தனை வேறொன்றில்! சிந்தனையும், மனமும் கண்ணோடு சேர்ந்து செயல்பட்டால்தான் கேள்விகள் எழும். நேற்றே உங்கள் வேலை முடிவுறும் கட்டத்திற்கு வந்துவிட்டது. மூளை இவள் யார் என்று வினா எழுப்பி இருக்கிறது."

"பாமதி! இத்தனை அறிவுள்ள நீ உன்னை எனக்கு உணர்த்தி இருக்க வேண்டாமா? இளமையையும், பருவத்தையும் என்னோடு வீணாகக் கழித்து, பாலைவனத்தில் பெய்த மழையாக்கிக் கொண்டாயே! ஐயோ! தசைகள் தொய்ந்து நடை தளர்ந்து விழிகள் மங்கி, பற்கள் விழும்வரை மோனகுடித்தனம் நடத்தி இருக்கிறாயே! மாதர்குலத் திலகமே! ஆடவனின் கடமை மனைவியைக் காப்பாற்றுவது! கடமையிலிருந்து தவறிவிட்டேனே? உணவுக்கும் உடைக்கும் உதவியவர் யார்?"

"சுவாமி! தங்கள் பெயருக்கு இழுக்கு வரும்படி யாரிடமாவது கையேந்துவேனா? அக்கம் பக்கத்து மாதர்களுக்குச் சங்கீதம் கற்பித்தேன்.

சிலசில சிறு வேலைகள் செய்தேன். அதற்கு ஊதியமாகக் கிடைத்தது நம் தேவைகளுக்குப் போதுமானதாயிருந்தது."

"சதா சர்வ காலமும் என்னோடு இருக்கும் உனக்கு ஏது நேரம்?"

"நீங்கள் மெய்மறந்து எழுதும் போதும், அசதியில் உறங்கும்போதும் போவேன். சில வேலைகளை இங்கே கொண்டு வந்து செய்வேன்."

"தாயே! என்னை மன்னித்துவிடு..." - தடாலென்று பாமதியின் காலில் விழப்போனார் மிச்ரர்.

அவரைத் தடுத்த பாமதி, "இதென்ன தடுமாற்றம்! தங்களுக்குப் பணிவிடை செய்யக் கிடைத்ததை பாக்கியமாகக் கருதுகிறேன் நான்! என்னை சிறுமைப்படுத்தாதீர்கள்! சோற்றுக்கும், துணிக்குமாக அலைந்து திரியும் ஆடவர் அநேகம் பேர். ஓரிரு குழந்தைகளைப் பெறுவதினால் வாழ்வு நிறைவாகுமா? எனக்கென்ன குறை? நமது செல்வமாய் தாங்கள் எழுதிய வேதாந்த தரிசன உரை சிரஞ்சீவி ஆனது. இறவா வரம் பெற்றது. வியாதி கொண்டு படுத்து நம்மை வேதனைப் படுத்தாதது. வீண் சண்டையை விலை கொடுத்து வாங்காதது. இதைவிட நமக்கென்ன வேண்டும்? மனதை வீணாகச் சஞ்சலப்படுத்தாமல் பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். அதுதான் எனக்கு மகிழ்ச்சி. அழியும் இந்த உடல் இன்பமா பெரியது!' என்றார்.

மிச்ரரின் மனம் மகிழ்ச்சியால் பொங்கி வழிந்தது.

"கன்னித்தெய்வமே! மனைவி ஸ்தானமேற்று தோழமையோடு, புது ஓலைகளை வற்றாமல் கொடுத்து, எழுதியதைச் சீர் செய்து தாயைப்போல் உணவூட்டி, சேவகனாய் தொண்டு செய்து... அடாடா...!

உன் சுகத்தை அர்ப்பணித்து இரவு பகலாய் அக்கறையோடு நீ என்னைப் பேணி இருக்காவிட்டால் இன்று இந்த நூல் இல்லை. இது உன் தியாகத்தை நினைவூட்டிக்கொண்டு உன் பெயராலேயே வழங்கும்" என்று குடத்து விளக்கைக் கோபுரத்திலேற்றி வைத்தார் பண்டித சிரோன்மணி வாசஸ்பதி மிச்ரர்.

வேதாந்த தரிசனத்தின் விளக்கவுரைக்கு 'பாமதி' என்றுதான் பெயர்.

நன்றி விகடன் !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!  Empty Re: பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!

Post by krishnaamma Wed Mar 08, 2017 10:59 am

மகளிர் தினத்தில் இந்த அம்மையாரைப் பற்றி அறிந்து கொண்டதற்கு மகிழ்ச்சியடைகிறேன் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!  Empty பாமதியின் தியாகத்துக்குக் கிடைத்த பலன் என்ன?

Post by ayyasamy ram Wed Mar 08, 2017 8:05 pm

பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!  3T2wkf1pQqPJdr1jFlSl+women_(1)_20196
-
பண்டிதமணி வாசஸ்பதி மிச்ரர் வியாசரின் வேதாந்த
தரிசனத்துக்கு விளக்கவுரை எழுதியவர். எப்போது பார்த்தாலும்
படிப்பதும் எழுதுவதுமாகவே இருக்கிறாரே என்று வருத்தப்பட்ட
பெற்றோர், அவருக்கு பாமதி என்ற பெண்ணைத் திருமணம்
செய்து வைத்தனர்.

திருமண மேடையில் கூட அவருடைய கையில் ஓலைச்சுவடியும்
எழுத்தாணியும் இருந்தது.

பாமதி

திருமணத்துக்குப் பிறகு வாசஸ்பதியும் பாமதியும் ஒரு பர்ண
சாலையில் தங்கி இருந்தனர். அழகான இயற்கைச் சூழலில்,
அழகும் இளமையும் பொருந்திய பாமதி அருகில் இருந்தும்கூட,
அவளை ஏறெடுத்தும் பார்க்காமல், படிப்பதிலும் எழுதுவதிலுமே
பொழுதைப் போக்கினார்.

அழகும் இளமையும் கொண்டிருந்த பாமதி, நற்பண்புகளின்
உறைவிடமாகத் திகழ்ந்தாள். தினமும் காலையில் அவர்
நீராடுவதற்கு தண்ணீர் தயாராக வைக்கப்பட்டிருக்கும். அவர்
சிந்தனை செய்துகொண்டே நீராடுவார். நீராடி முடித்ததும்
துவைத்து மடிக்கப்பட்ட ஆடைகள் தயாராக இருக்கும். அணிந்து
கொள்வார். நீராடி முடித்ததும், பக்குவமாக சமைத்த உணவை
அவருக்கு அருகில் கொண்டு வந்து வைப்பாள். அவர்
சாப்பிட்டதும் கை அலம்ப ஒரு சிறு கிண்ணத்தில் தண்ணீரும்
வைப்பாள்.

சாப்பிட்டு முடித்து கை அலம்பியவர் கைகளைத் துடைத்துக்
கொள்ள ஒரு துணி நீட்டுவாள்.

சிலநாள் பாதி குளிக்கும்போதே சொட்டும் நீரோடு கரையில்
வைத்திருக்கும் ஓலைச் சுவடியை எடுத்து எழுத ஆரம்பித்து
விடுவார். பாமதியின் இரண்டு வளைக் கரங்கள் தலையைத்
துவட்டிவிடும். அதுமட்டுமல்ல, அவர் விடிய விடிய எழுதிக்
கொண்டிருக்கும்போது, விளக்கில் எண்ணெய் குறையாமலும்,
திரி கருகாமலும், காற்றில் அணைந்துவிடாமலும் பார்த்துக்
கொள்வாள்.

கோடைக் காலத்தில் அவருக்கு வியர்க்காமல்
இருக்க இதமாக விசிறுவாள். மழைக்காலத்தில் சாரல்
அடிக்காமல் திரை போட்டுத் தடுப்பாள். தன்னை மறந்த நிலையில்
அவர் எழுத்தாணியும் கையுமாக உறங்கும் வேளையில், குவிந்து
கிடக்கும் ஓலைச்சுவடிகளை வரிசைப்படுத்தி வைப்பாள்.
இத்தனை பணிவிடைகளையும் செய்வது யார் என்று ஒருநாளும்
அவர் நினைத்துக்கூட பார்த்தது இல்லை.

அவர் நினைத்தால் பல்விளக்குவார், குளிப்பார், பசிக்கும்போது
வட்டிலில் இருக்கும் உணவை என்னவென்றுக் கூடப் பாராமல்
சாப்பிடுவார். திடீரென்று கை கழுவிவிட்டு எழுத ஆரம்பித்து
விடுவார்.

இப்படி ஒரு நாளா, இரண்டு நாளா… ஐம்பது ஆண்டுகள்!

அன்று விளக்கைத் தூண்டும்போது திரி சுருண்டு விளக்கு
அணைந்துவிட்டது.

பரபரப்பாய் விளக்கை ஏற்றுகிறாள். பஞ்சுப் பொதிபோல்
தலை நரைத்திருக்கும் அந்த மாது.

“அம்மா! தாங்கள் யார்?” என்றார் மிச்ரர்.

“ஐயோ! ஏன் இந்த மரியாதை அழைப்பு! விளக்கை
ஜாக்கிரதையாய் கவனித்துக் கொள்ளாதது குற்றம்தான்! அதற்கு
இவ்வளவு பெரிய தண்டனையா? தங்கள் பணிக்கு இனி ஊறு
நேராது என்றாள் அந்த அம்மாள்.

“இல்லை… நீங்கள் யாரென்று சொன்னால்தான் மேற்கொண்டு
எழுதமுடியும்” என்று கூறி, ஓலைகளையும் எழுதுகோலையும்
கீழே வைத்துவிட்டார் மிச்ரர்.

“சுவாமி! நான் உங்கள் மனைவி பாமதி. பெயர் சொல்லி
ஒருமையில் அழையுங்கள். நீங்கள் என்று கூப்பிட்டு
பாவியாக்காதீர்கள்” என அவர் காலில் விழுந்தாள் பாமதி.

திகைத்தார் மிச்ரர்.

“மனைவியா? நமக்கு எப்போது திருமணமாயிற்று?”

“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்.”

“ஐம்பது ஆண்டுகளாய் எங்கிருந்தாய்?”

“இங்குதான்! இதே குடிசையில் உங்களுடன்தான் இருந்தேன்.”

“அப்படியானால் ஐம்பது வருடங்களாகக் கண்மறைவில்
நடமாடினாயா?” எதிரில் இருந்தால் யார் என்று கேட்காமல்
இருப்பேனா? இன்று கேட்டேனே!” மிச்ரர் வாதித்தார்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!  Empty Re: பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!

Post by ayyasamy ram Wed Mar 08, 2017 8:05 pm


“சுவாமி! கண்களால் பார்ப்பது பார்வையாகுமா? உங்கள்
சிந்தனை வேறொன்றில்! சிந்தனையும், மனமும் கண்ணோடு
சேர்ந்து செயல்பட்டால்தான் கேள்விகள் எழும். நேற்றே
உங்கள் வேலை முடிவுறும் கட்டத்திற்கு வந்துவிட்டது.
மூளை இவள் யார் என்று வினா எழுப்பி இருக்கிறது.”

“பாமதி! இத்தனை அறிவுள்ள நீ உன்னை எனக்கு உணர்த்தி
இருக்க வேண்டாமா? இளமையையும், பருவத்தையும்
என்னோடு வீணாகக் கழித்து, பாலைவனத்தில் பெய்த
மழையாக்கிக் கொண்டாயே! ஐயோ! தசைகள் தொய்ந்து
நடை தளர்ந்து விழிகள் மங்கி, பற்கள் விழும்வரை மோன
குடித்தனம் நடத்தி இருக்கிறாயே!

மாதர்குலத் திலகமே! ஆடவனின் கடமை மனைவியைக்
காப்பாற்றுவது! கடமையிலிருந்து தவறிவிட்டேனே?
உணவுக்கும் உடைக்கும் உதவியவர் யார்?”

“சுவாமி! தங்கள் பெயருக்கு இழுக்கு வரும்படி யாரிடமாவது
கையேந்துவேனா? அக்கம் பக்கத்து மாதர்களுக்குச் சங்கீதம்
கற்பித்தேன்.

சிலசில சிறு வேலைகள் செய்தேன். அதற்கு ஊதியமாகக்
கிடைத்தது நம் தேவைகளுக்குப் போதுமானதாயிருந்தது.”

“சதா சர்வ காலமும் என்னோடு இருக்கும் உனக்கு ஏது நேரம்?”

“நீங்கள் மெய்மறந்து எழுதும் போதும், அசதியில் உறங்கும்
போதும் போவேன். சில வேலைகளை இங்கே கொண்டு வந்து
செய்வேன்.”

“தாயே! என்னை மன்னித்துவிடு…” – தடாலென்று பாமதியின்
காலில் விழப்போனார் மிச்ரர்.

அவரைத் தடுத்த பாமதி, “இதென்ன தடுமாற்றம்!
தங்களுக்குப் பணிவிடை செய்யக் கிடைத்ததை பாக்கியமாகக்
கருதுகிறேன் நான்! என்னை சிறுமைப்படுத்தாதீர்கள்!
சோற்றுக்கும், துணிக்குமாக அலைந்து திரியும் ஆடவர் அநேகம்
பேர். ஓரிரு குழந்தைகளைப் பெறுவதினால் வாழ்வு
நிறைவாகுமா? எனக்கென்ன குறை? நமது செல்வமாய் தாங்கள்
எழுதிய வேதாந்த தரிசன உரை சிரஞ்சீவி ஆனது. இறவா வரம்
பெற்றது.

வியாதி கொண்டு படுத்து நம்மை வேதனைப் படுத்தாதது.
வீண் சண்டையை விலை கொடுத்து வாங்காதது. இதைவிட
நமக்கென்ன வேண்டும்? மனதை வீணாகச் சஞ்சலப்படுத்தாமல்
பணிகளைத் தொடர்ந்து செய்யுங்கள். அதுதான் எனக்கு மகிழ்ச்சி.
அழியும் இந்த உடல் இன்பமா பெரியது!’ என்றார்.

மிச்ரரின் மனம் மகிழ்ச்சியால் பொங்கி வழிந்தது.

“கன்னித்தெய்வமே! மனைவி ஸ்தானமேற்று தோழமையோடு,
புது ஓலைகளை வற்றாமல் கொடுத்து, எழுதியதைச் சீர் செய்து
தாயைப்போல் உணவூட்டி, சேவகனாய் தொண்டு செய்து…
அடாடா…!

உன் சுகத்தை அர்ப்பணித்து இரவு பகலாய் அக்கறையோடு
நீ என்னைப் பேணி இருக்காவிட்டால் இன்று இந்த நூல் இல்லை.
இது உன் தியாகத்தை நினைவூட்டிக்கொண்டு உன்
பெயராலேயே வழங்கும்” என்று குடத்து விளக்கைக்
கோபுரத்திலேற்றி வைத்தார் பண்டித சிரோன்மணி வாசஸ்பதி
மிச்ரர்.

வேதாந்த தரிசனத்தின் விளக்கவுரைக்கு ‘பாமதி’ என்றுதான்
பெயர்.

——————————————–

– க.புவனேஸ்வரி
-விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83735
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!  Empty Re: பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!

Post by krishnaamma Thu Mar 09, 2017 1:22 am

இதை நான் ஏற்கனவே போட்டுவிட்டேன் அண்ணா, எனவே இணைத்தது விடுகிறேன்புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!  Empty Re: பாமதி ! ....மாதர்குல மாணிக்கம் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum