ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எடப்பாடி பழனிச்சாமி அரசின் அடுத்த வசூல் திட்டம் - குப்பைகள் கொட்ட இனி மாத கட்டணம்!

Go down

எடப்பாடி பழனிச்சாமி அரசின் அடுத்த வசூல் திட்டம் - குப்பைகள் கொட்ட இனி மாத கட்டணம்! Empty எடப்பாடி பழனிச்சாமி அரசின் அடுத்த வசூல் திட்டம் - குப்பைகள் கொட்ட இனி மாத கட்டணம்!

Post by krishnaamma Wed Mar 08, 2017 10:13 am

நகராட்சிகளில் ஏப்ரல் முதல் மேலும் ஒரு புதிய வரி: குப்பைகள் கொட்ட இனி மாத கட்டணம்!

எடப்பாடி பழனிச்சாமி அரசின் அடுத்த வசூல் திட்டம் - குப்பைகள் கொட்ட இனி மாத கட்டணம்! QCRi5hgxQfu3nqeqTWcp+Daily_News_6369091272355

* வீடுகளுக்கு ரூ.30-ரூ.80; நிறுவனங்களுக்கு ரூ.300-ரூ.௫௦௦

* எடப்பாடி பழனிச்சாமி அரசின் அடுத்த வசூல் திட்டம்

சேலம்: வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகளுக்கு இனி மாதம் தோறும் நகராட்சிகளில் கட்டணம் வசூலிக்கப்படும். வீடுகளுக்கு குறைந்தபட்சம் ரூ.30 முதல் ரூ.80 வரையிலும், தனியார் நிறுவனங்களில் அதிகபட்சமாக ரூ.500 வரையிலும் மாதம் தோறும் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் கடந்தாண்டு அக்டோபரில் முடிவுக்கு வந்தது.

தேர்தல் அறிவிப்பு, இட ஒதுக்கீடு செயல்படுத்துவதில் குளறுபடி ஏற்படுத்தப்பட்டதால் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதையடுத்து கிராம ஊராட்சிகள் முதல் மாநகராட்சிகள் வரை தனி அதிகாரிகள் நியமித்து முழுமையாக அதிகாரிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் யாரும் இல்லாததை பயன்படுத்தி மேலும் ஒரு வரி விதிப்பு நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது. தமிழகத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மையான நகராட்சிகளாக மாற்றுதல் என்ற பெயரில் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக திடக்கழிவு மேலாண்மை சட்டம் கடந்த 2016ம் ஆண்டு அனைத்து நகர்ப்புற, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு வகுத்துள்ள இந்த சட்டத்திற்கு ஏற்ப குப்பை சேகரிப்புக்கான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீடு மற்றும் குடியிருப்புகளுக்கும், பல வகை தொழில், வர்த்தக நிறுவனங்களுக்கும் குப்பைக்கான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கட்டணங்கள் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

அதன்படி சொத்துவரி ரூ.500க்குள் இருக்கும் தனி நபர் வீடுகளுக்கு மாதம் தோறும் குப்பை கட்டணம் ரூ.30ம், ரூ. 1000க்குள் சொத்துவரி உள்ள தனி வீடுகளுக்கு மாத கட்டணம் ரூ.40, ரூ. 2000க்குள் சொத்து வரி உள்ள வீடுகளுக்கு மாதம் ரூ.60, ரூ. 2000க்கு மேல் உள்ள வீடுகளுக்கு கட்டணமாக ரூ.80 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு அதன் தன்மைக்கு ஏற்ப மாதம் தோறும் ரூ.100 முதல் அதிகபட்சமாக ரூ.500 வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை மே மாதத்திற்குள் நடத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.

உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை வெற்றி கிடைக்குமா என்ற சந்தேகம் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டுள்ளது. பின்னர் இதை நிறைவேற்றினால் மன்ற ஒப்புதல் கிடைக்காது என்பதால் அவசர, அவசரமாக செயல்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அபராதமும் உண்டு !

குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்காமல் வழங்கினாலோ, பொது இடங்களில் கொட்டினாலோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அதற்கு ரூ.5ஆயிரமும், இறைச்சி கழிவுகளை கொட்டினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும்.

குப்பைகளை பொது இடங்களிலோ, தனியார் இடங்களிலோ கொட்டுதல், வாகனங்களை சுத்தம் செய்து பொது இடங்களில் கழிவை கொட்டுதல், வணிகவளாகங்களை சுத்தம் செய்து பொது வெளியில் எறிதல் போன்ற செயல்களுக்கு ரூ.250, குப்பைகளை தரம் பிரிக்காமல் கொடுத்தால் தனிவீட்டுக்கு ரூ.100, குடியிருப்புக்கு ரூ. 250, தொகுப்பு வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தினகரன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எடப்பாடி பழனிச்சாமி அரசின் அடுத்த வசூல் திட்டம் - குப்பைகள் கொட்ட இனி மாத கட்டணம்! Empty Re: எடப்பாடி பழனிச்சாமி அரசின் அடுத்த வசூல் திட்டம் - குப்பைகள் கொட்ட இனி மாத கட்டணம்!

Post by krishnaamma Wed Mar 08, 2017 10:21 am

அநியாயம் அநியாயம் அநியாயம் இவர் மக்களுக்கு நல்லது செய்கிறாரா அல்லது பாக்கெட்டை நிரப்ப வழி செய்கிறாரா என்று தெரியவில்லையே ! .................

//அபராதமும் உண்டு !

குப்பைகளை மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்காமல் வழங்கினாலோ, பொது இடங்களில் கொட்டினாலோ அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டிட கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் அதற்கு ரூ.5ஆயிரமும், இறைச்சி கழிவுகளை கொட்டினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் வசூலிக்கப்படும்.

குப்பைகளை பொது இடங்களிலோ, தனியார் இடங்களிலோ கொட்டுதல், வாகனங்களை சுத்தம் செய்து பொது இடங்களில் கழிவை கொட்டுதல், வணிகவளாகங்களை சுத்தம் செய்து பொது வெளியில் எறிதல் போன்ற செயல்களுக்கு ரூ.250, குப்பைகளை தரம் பிரிக்காமல் கொடுத்தால் தனிவீட்டுக்கு ரூ.100, குடியிருப்புக்கு ரூ. 250, தொகுப்பு வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ரூ.500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.//


இது எப்படி வசூல் செய்வார்கள்?............'ஸ்பாட் பைன்' ஆ? ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» நிலத்தடி நீருக்கு ரூ.10 ஆயிரம் கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம், தமிழகத்திற்கு பொருந்தாது
» ஆளுநர் அழைப்பு! கூவத்தூரிலிருந்து விரைந்தார் எடப்பாடி பழனிச்சாமி
» பஸ், ரயில்களில் இஷ்டம் போல் கட்டணம் வசூல்
» தாஜ்மகால் நுழைவுக் கட்டணம் மூலம் கடந்தாண்டு ரூ.20 கோடி வசூல்
» Paytm மூலம் பேருந்து கட்டணம் வசூல்- அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் தகவல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum