ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்

Go down

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்  Empty சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்

Post by ayyasamy ram Wed Mar 08, 2017 10:05 am

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்  Zh2TomPQSwCVRvMoQlI6+Tamil-Daily-News-Paper_75308954716
--

‘‘நல்லூர் பெருமணமேவி யென் நெஞ்சு
நின்றாடி யல்லலறுத்தே புவியோம்பும் பிரானை
தொழுதார் பிறவாரே பிறந்தடித்த பண்டை
வினை யறுப்ப மிருகண்டு சாட்சியே”

                                - என்றார் அகப்பைச் சித்தர்.

நல்லூர் பெருமணம் என்பது கோயில் இருக்கும் இடம்.
இது ஆச்சாள்புரத்தின் முன்னைப் பெயர்.

பிறவாமை வேண்டும் என்று ஒவ்வொரு அடியவரும்  
முயல்கின்றனர். சிலர் வெற்றி பெறுவதும் பலர் தோல்வி
அடைவதும் உண்டு. ஆனால், இத்திருக்கோயிலின்
சிவபெருமானாம் அருள்மிகு சிவலோகத்தியாகர்  
பெருமானை அடி தொழ, பிறவாமை கிட்டும். பிறவி என்னும்
பெரும் பிணிக்கு இது மருந்து என்றுணர்க.

மிருகண்டு தீர்த்தம் முழுகி இறைவனைத் தொழுவார்
இம்மையிலும் முன்னை பற்பல பிறவிகளிலும் செய்த
பாவவினைகள் வேருடன் களையப்படும் என்று சித்தர்
கூறுவதில் இருந்து இத்திருக்கோயிலின் வலிய  சக்தி
புலப்படுகிறது அன்றோ!

‘‘சுவேத விபூதியாள் குடியமர் அம்பலத்தே கூடிய
தீர்த்தமதனை பஞ்சாக்கர வசுவ பிருகு வசிட்ட
வத்திரி, வியாசமதக் கிணிமிகு கண்டென
அறிந்திறும் பூரெய்தினோமே’’


- என்றார் கொங்கணர். இத்தீர்த்தமாடியே இயலொழித்து
ககண வழியேக கற்றோஞ் சொன்னோமே”
‘இயல்பான வாழ்வை ஒழிக்க இத்திரு தீர்த்தத்தில் நீராடி  
நின்றேன். வான்வெளியில் பறக்கும் கலையை இத்
திருக்குளத்தில் நீராடிப் பெற்றேன், என்று கொங்கணர்
பேசுகின்றார்.

இத்திருக்குளத்தில் பஞ்சாக்கர தீர்த்தம்,  பிருகு தீர்த்தம்,
அசுவ தீர்த்தம், வசிஷ்ட தீர்த்தம், அத்திரி தீர்த்தம்,
சமதக்கினி தீர்த்தம், வியாச தீர்த்தம், மிருகண்டு தீர்த்தம்
என எட்டு தீர்த்தங்கள் உள்ளன.  

அபரிமிதமான தெய்வ சக்திகளை அடைய விரும்புவோர்,
இத்திருக்குளத்தில் மூழ்கி ஒரு மனதுடன் இறைவனை ஆ
ராதிக்கலாம் என சித்தர் வாக்கால்  உணரலாம்.

தேவாரப் பாடல் பெற்ற காவிரியின் வடகரையில் விளங்கும்
இத்திவ்விய தலத்தில் வந்து தொழாதே சித்தர்களே இல்லை
எனலாம். வசிஷ்டர்  உள்ளிட்ட ரிஷிகளும், கொங்கணர்,
கோரக்கர், அகத்தியர் உள்ளிட்ட எண்ணற்ற சித்தர்களும்
அனுதினமும் வந்து ஆராதிக்கும் பூலோக புண்ணிய
க்ஷேத்திரமிது.

‘‘புண்ணியங் கோடி செய்தார்
அல்லல் மற்றாருக்கில்லை
சிவலோக புரத்தாந் தரிசனமே”

                      - என்றார் காக புஜண்டர்.

எப்படிப்பட்ட தோஷமாயினும், ருணலிங்கேஸ் வரனைத்
தொழத் தொலையும் என சித்தர் பெருமக்கள் கூறுவது
வழக்கம். அப்படி ருணலிங்கேஸ்வரர்  இத்திருக்கோயிலின்
பிராகாரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.


Last edited by ayyasamy ram on Wed Mar 08, 2017 10:06 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்  Empty Re: சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்

Post by ayyasamy ram Wed Mar 08, 2017 10:05 am



சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்  RdZZ9qXhQUyJEIOBdQ1n+201609061121426520_Thiru-Nindraseer-Nedumara-Nayana_SECVPF
--
சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்  OjCB2SVRk6BI64QSK8Sd+Achalpuram
-
மகா சிவராத்திரி கண் விழித்து விரதங்கொண்டு அகச்
சுத்தியோடு ஆராதிப்போருக்கு, ஏவல்,  சூனியம், திருஷ்டி
எல்லாம் நாசமாகும் என சிவவாக்கியர் பிரமாணஞ் செய்கிறார்.

காகமுனி எனும் சித்தர், மேன்மையை
பின்வரும் பாடலினால்  பறைசாற்றுகின்றார்.

‘‘எம்மொடு மாலுஞ் சமதக்னி பராசரனும்
வசிட்ட வழி நின்று போற்றி கண்ணார
கண்டு களிப்பெய்தினமே”


- என்பதிலிருந்து வசிஷ்டர், ஜமதக்னி, பராசரர் ஆகியோருடன்
திருமாலும் தொழுது இறைவனைக் கண்ணார கண்டு
களித்தனர் என உணர்கின்றோம்.

இத்தலத்து இறைவனை பூஜிப்பதினால் கிடைக்கும்
நன்மைகளை பட்டியல் இடுகின்றார் கொங்கணர்.

‘‘இறையை யாண்டாராதிப்பார் பிறவி
பயனடைவரேயன்றி கடனுபாதையில் வாடார்.
தாரித்ர்ய மகன்று செல்வங் கொழிக்க
முத்தேவர் மேலானை மொழிந்தோம்...


- என்றார். இறந்தபின் அல்ல, வாழுங் காலத்திலேயே
முக்தியும், செல்வச் சிறப்பும், கடனு பாதைகளிலிருந்து
நிரந்தர விடுதலையும் சேரும் என்றார்.

இத்திருத்தலத்தில் தான் திருஞானசம்பந்தப் பெருமான்-
பூர்ணாம்பிகை திருமணம் நடைபெற்றது. திருமணத்தில்
சிவபெருமானே கலந்து கொண்டு ஆசி கூறினார்.  

மணவிழா சடங்குகளை நீலக்க நாயனார் முன்னின்று
நடத்தினார். அப்போது சம்பந்தப் பெருமாள்
‘‘கல்லூர்ப் பெருமணம்’’ என்ற பதிகம் பாட, இறைவன்  
ஜோதிப்பிழம்பாய் தோன்ற, தன் துணைவியுடன்
திருமணத்தில் கலந்துகொண்ட சிலரும் ஜோதியில் கலக்க,
சம்பந்தப் பெருமானும் ஜோதியில் இரண்டரக்  கலந்தார்.
இதனை பாம்பாட்டி சித்தர் கண்ணீர் மல்க பாடுகின்றார்
பின்வருமாறு.

‘‘ஞானமே அமுதாய் அருந்தி அருந்தமிழ்
செய் ஞானச் சேயோன் தம் மணத்தை
நீலக்கன் தானிருந்து சடங்கு பலசெய
கல்லூர்ப் பெருமண பதிகந் தன்னால்
சிவப் பிழம்பு கூடி கூட்டத்தோடிக்
கரைந்தனனே... விழி நீர் வற்றாது வழியுதே”


Last edited by ayyasamy ram on Wed Mar 08, 2017 10:09 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்  Empty Re: சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்

Post by ayyasamy ram Wed Mar 08, 2017 10:05 am


சம்பந்தப் பெருமானின் ‘‘காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி’’
என்று தொடங்கும் கடைசித் திருப்பதிகம், இத்திருத்தலத்தில்
தான் பாடப்பெற்றது. இத்திருத்தலத்தை காகபுஜண்ட சித்தர்
கால்களால் நடந்து மாசுபடுத்த முற்படாது தலையால் நடந்து
இறைவனை வழிபட்டு நிருதிதிசையில் அமர்ந்து தவமிருந்தார்.

காரைக்கால் அம்மையாரை வழி பற்றியோன் இச்சித்தர்.
இதனை கோலர் என்னும் சித்தர்,

‘‘இறைக்கு யம்மை யானாலொப்பா
சிரம் பதித்தே இறை சுற்றித் தொழுது
நிருதி யமர்ந்து தவமாட்டுங் காகமுனிக்
கிடேது யியம்பு”

- என்றார். இப்பாடல், காக முனிவரின் பக்தியைப் பறை
சாற்றுவதுடன் இந்தக் கோயிலின் மகிமையையும் நமக்கு
உணர்த்துகின்றது அன்றோ. எந்தக் காரியத்தை எடுத்தாலும்
தடங்கல், எதைத் தொட்டாலும் சஞ்சலம், விரயம் என நொந்து
வாழ்பவர்கள் கண்டிப்பாக ஆராதிக்க வேண்டிய மூர்த்தி
இத்திருத்தலத்தில் கொலு விருக்கும் திருஞானசம்பந்த மூர்த்தி
ஆவார். இவரை தொழ,

‘‘தொட்டது துலங்கி துயரமே விலகி
யோட மேனி மெருகுண்டு
ஞானமோடு பசிப்பிணி யறுபட்ட
வாழ்வு வந்திடுமொன்றும் பொய்யிலையே”

- என்ற சிவ வாக்கியப் பாடலால் அறியலாம்.
பசிப்பிணியை கலியுகத்தில் நீக்கும் திருத்தலம் இது.
இத்திருத்தலத்தின் தலவிருட்சம் ‘‘மாமரம்’’ வம்ச விருத்தி,
கலை, கல்வி, ஞானம், கீர்த்தி, ஐசுவரியம், நீண்ட ஆயுள், நல்ல
வாழ்க்கைத்துணை என எல்லா சுகங்களையும் தந்து கொடிய
ஆட்கொல்லி நோய்களான புற்றுநோய், காசநோய், ஈரல் பீடை
, மூளையில் கட்டி, இருதய கோளாறு போன்றனவற்றை
மேனியில் அண்டாது தடுக்கும் தலவிருட்சமிது.

மிகவும் புண்ணியம் வாய்ந்தது, போற்றத்தக்கது. வாழ்நாளில்
ஒரு முறையேனும் இத்திருவிருட்சத்தை தொழுது பிறவி
பயனை அடைதல் நன்று என்று அகத்திய முனிவர்
பேசுகின்றார்.


‘‘மாலப் பெரிது வெண்ணீற்றுமை
குடிகொண்ட மா விருட்சமது
சாலப்பெரிது மாண்போதுவங்கேளீர்
கொடிதான பிணியும் வற்றிப்போம்
இதயத் தடைப்பை அகற்றுவதல்லால்
விரிசலை சுருக்கியே படப்பை தடுக்கப்
பாரு கணைய யீரலுடனே காத்த
சுரப்பி யெல்லாம் கணக்காய் பணி
யேத்த வல்லா மா விருட்சமிதனை
கற்பகமென்று போற்றுவர் வானோரே”
-
என்ற பாடலினால் நமது உடல் உபாதைகளுக்கு கற்பக
விருட்சமாக விளங்குகிறது என்கிறார் சித்தர். நாமும் இப்போதே
ஆச்சாள்புரம் சென்று இறைதொழுது இன்புறுவோமே.

----------------------------------
-நாடி ஜோதிட நல்லுரைஞர் கே.சுப்பிரமணியம்
தினகரன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்  Empty Re: சித்தர்கள் நோக்கில் சீர்மிகு கோயில்கள் - ஆச்சாள்புரம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum