புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! I_vote_lcapமுதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! I_voting_barமுதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! I_vote_lcapமுதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! I_voting_barமுதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! I_vote_lcapமுதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! I_voting_barமுதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 24, 2017 5:41 am

முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! EJf06hROSCWsyA22sopa+fadnavis_wife
-
"பெண்களைப் பொறுத்தவரை அவர்களது வாழ்க்கைக்கு
அவர்கள்தான் பொறுப்பு. எந்த ஒரு முடிவானாலும் அதை
நீயே தேர்ந்தெடு'' என்று என் கணவர் எனக்கு சுதந்திரம்
அளித்துள்ளார்'' என்று கூறும் அம்ருதா மகாராஷ்டிரா
முதல்வர் தேவேந்திரா ஃபட்னவிஸின் மனைவி.

தன் கணவரின் தொகுதியில் மக்கள் பிரச்னைகளை தீர்ப்பவர்,
வங்கி நிர்வாகி, 8 வயது மகளின் தாய் என பல்வேறு முகங்கள்
இவருக்குண்டு.

தன் கணவர் மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றவுடன்,
நாக்பூரில் ஆக்ஸிஸ் வங்கி துணைத் தலைவர் பதவியில் இருந்த
இவர், மும்பைக்கு இடமாற்றம் கேட்டுப் பெறாமல் வேலையை
ராஜிநாமா செய்துள்ளார். தற்போது மாநில அரசு கருவூலத்
துறையில் வங்கி நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ளார்.

ஒரு முதல்வரின் மனைவி, தன் கணவரின் அரசு நிர்வாகத்தில்
வங்கி அதிகாரியாக பணிபுரிவது மிகமிக அபூர்வமான ஒரு
நிகழ்வாகும்.

"என்னுடைய 13 ஆண்டுகால வங்கி பணியில் நான் வகித்திராத
பதவி இது. இதன் மூலம் மீண்டும் மக்களுடன் தொடர்பு கொள்வது
மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் அம்ருதா.

நாக்பூரில் அம்ருதாவின் பெற்றோர் இருவருமே டாக்டர்கள்
என்பதால் சிறிய குடும்பமாக கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து வந்தனர்.
திருமணமான உடன் எல்லாமே தலைகீழாகிவிட்டது.

தேவேந்திர ஃபட்னவிஸின் குடும்பம் அரசியல் சார்ந்தது என்பதால்
அவரது வீட்டில் யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் வந்து
சென்று கொண்டிருந்தனர். அந்த சூழ்நிலையை அனுசரித்துச் செல்ல
எனக்கு ஓராண்டு தேவைப்பட்டது. என்னுடைய கணவர் ஏற்கெனவே
எம்.எல்.ஏ வாக இருந்ததால் தொகுதி மக்களின் தேவைகளை எந்த
நேரத்திலும் நிறைவேற்றுவதை கடமையாக கொண்டிருந்தார்.

அவர் முதல்வரானவுடன் மக்கள் தேவைகளை கவனிக்க வேண்டிய
பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டேன். சொந்த பிரச்னைகள் உள்பட
கல்லூரியில் இடம் வாங்கி கொடுப்பது வரை பலவித கோரிக்கைகளை
என் கணவர் கவனத்திற்குக் கொண்டு செல்லாமல் நானே கவனித்து
அனுப்புவேன்.

இதற்காகவே பெரிய பைல் ஒன்றைத் தயாரித்து நானே முடிவெடுத்து
பிரச்னைகளை தீர்க்க தொடங்கினேன். இதில் என் கணவருக்கும்
உடன்பாடுதான்'' என்று கூறும் அம்ருதா, எம்.பி.ஏ முடித்தவுடன் வரிச்
சட்டங்களைப் படித்த பின்னர் ஆக்ஸிஸ் வங்கியில் சேர்ந்தபோது
அவரது வயது 23.
-
-------------------------------



ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 24, 2017 5:43 am

முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! 5BhU4lRKQ2q0NVVscFFH+fadnavis
-
திருமணம் என்பது தொழில்துறையை பாதிக்கக் கூடாது
என்று கருதியதால், திருமணத்திற்காக தேவேந்திரா பெயரை
அம்ருதாவிடம் கூறியபோது தேவேந்திரா தென்மேற்கு நாக்பூர்
தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார். தன் சிநேகிதியின் வீட்டில்
அவரை சந்திக்க ஒப்புக் கொண்ட அம்ருதா. பலமுறை அவரைச்
சந்தித்து எதிர்காலம் மற்றும் கனவுகளை திட்டமிட்ட பின்னரே
2005- ஆம் ஆண்டு தேவேந்திராவை திருமணம் செய்து
கொண்டாராம்.

"தன்னுடைய மனைவி வலிமையுடன் சுதந்திரமாக இருக்க
வேண்டும் என்ற அவரது எதிர்பார்ப்புக்கேற்ப நான் அமைந்தது
போல், ஒருசில அரசியல்வாதிகளை போலின்றி நேர்மையாக
உண்மையானவராக அவர் இருந்தது எனக்கு பிடித்திருந்தது'' எ
ன்கிறார் அம்ருதா.

பாஜகவில் உயரமான இடத்திற்கு வந்த தேவேந்திரா, 2015 - ஆம்
ஆண்டு மகாராஷ்டிரா முதல்வரானவுடன் மும்பைக்கு குடியேறிய
அம்ருதா, மராட்டிய பெண்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்க
கணவரது விருப்பப்படியே அரசுத் துறையில் வங்கி நிர்வாகியானார்.

"கல்வியும் தன்னிறைவான பணபலமும் இருந்தால் இச்சமூகத்தில்
பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியிலிருந்து தங்களைப்
பாதுகாத்துக் கொள்ள முடியும்'' என்பது இவரது கருத்தாகும்.

கணவரின் தேவைகளை உணர்ந்து பலமான நங்கூரமாக இருப்பது
பெருமையாக இருக்கிறது'' என்கிறார் அம்ருதா.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84143
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Feb 24, 2017 5:44 am


கடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தன் கணவருக்காக
தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டபோது, மாநிலத்தின்
தேவைகள் என்ன? எம்.எல்.ஏவாக இருந்தபோது தேவேந்திரா
செய்தது என்ன? இனி செய்யப் போவது என்ன? என்பது
குறித்து கூட்டத்தில் பேசும் போதெல்லாம் அம்ருதாவின் குரல்,
அவரது கணவரின் கொள்கைகளைப் பிரதிபலிப்பதாக கருதி
மக்கள் பாராட்டுவார்களாம்.

மாநிலத்தின் முதல் பெண்மணி என்ற முறையில் இவர்
அரசியல் மற்றும் சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதால்,
உடனடியாக பிரச்னைகளை தீர்ப்பதற்கும் பெண்கள்
பாதுகாப்புக்கும் இவரால் மட்டுமே முடியுமென்று மக்கள்
கருதுகிறார்கள்.

இது இவருக்கு உற்சாகமாகவும் புதிய அனுபவமாகவும்
இருப்பதால் பல்வேறு சமூக நலத்திட்டங்களை அறிவித்து
செயல்படுத்தி வருகிறார் அம்ருதா.

தனக்கு கிடைத்துள்ள அதிகாரத்தை நல்ல வழிகளில் பயன்
படுத்தவே விரும்புகிறேன் என்று கூறினாலும், பிரபலங்களின்
மனைவியைப் போன்று கணவர், குழந்தையுடன் சில மணிநேரம்
செலவிட முடியவில்லையே என்ற ஏக்கம் அம்ருதாவுக்குள்ளும்
இருக்கிறது. எதுவானாலும் போன் தொடர்புதானாம்.
-
சங்கீதத்தில் நல்ல பயிற்சி பெற்றிருப்பதால், பல இசை
நிகழ்ச்சிகளை நடத்தி நன்கொடை திரட்டிக் கொடுத்துள்ள
அம்ருதாவுக்கு பழைய இந்திப் பாடல்கள், பஜனை, மராத்தி
பகவத் கீதை ஆகியவைகளை தனிமையில் அமர்ந்து ரசிப்பது
மிகவும் பிடிக்கும்.

இதற்காக தனியாக ஒரு அறையை அமைத்து நேரம்
கிடைக்கும் போது அங்கு செல்வதுண்டாம். தேவேந்திராவுக்கும்
கவிதை எழுதவும், இசை அமைக்கவும் தெரியும் என்பதால் சில
சமயங்களில் அபூர்வமாக இருவரும் சேர்ந்து
பாடுவதும் உண்டாம். பரபரப்பான அரசியல் வாழ்க்கையில்
ஓரளவு நேரம் கிடைப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார்
அம்ருதா.
-
---------------------------------

- பூர்ணிமா
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Feb 24, 2017 9:45 am

கேரளா முதன் மந்திரியாக இருந்த,ஸ்ரீ AK அந்தோணி இருந்த சமயம்,அவரது மனைவி அவர்களும் 
தன்னுடைய பள்ளிக்கூட தலைமை ஆசிரியை பதவியை  விடாமல் தொடர்ந்தார். 

எளிமைக்கு மறுபெயர் AK அந்தோணி.+அவர் குடும்பத்தினர்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Feb 24, 2017 1:58 pm

கேரள அரசியல்வாதிகள் எப்போதுமே எளிமையாகத்தான் இருப்பார்கள் .
ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் சிறையிலும் ஆடம்பரமாக இருக்க விரும்புகிறார்கள்.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Fri Feb 24, 2017 2:23 pm

சூப்பருங்க பெண்!



முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonமுதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312முதல்வரின் மனைவி என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்?! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக