ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவராத்திரி ஸ்பெஷல்!

Go down

சிவராத்திரி ஸ்பெஷல்! Empty சிவராத்திரி ஸ்பெஷல்!

Post by krishnaamma Thu 23 Feb 2017 - 23:59

சிவராத்திரி ஸ்பெஷல்! D8AEsCGuQ0SQJC4E2C4B+E_1487327532(1)

எண் குணத்தான்சிவபெருமானுக்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்று, எண் குணத்தான். அவை:பிறப்பின்மை, இறப்பின்மை, பற்றின்மை, பெயரின்மை, உவமையின்மை, வினையின்மை, குறைவில்லா அறிவுடைமை மற்றும் கோத்திரம் இன்மை.*பார்வதி தேவி, நீரில் லிங்கம் அமைத்து, சிவனை வழிபட்ட தலம், திருவானைக்காவல். சிவலிங்கத்தின் வகைகள்:தானே தோன்றியது, சுயம்பு லிங்கம்; கரிமுகன் மற்றும் ஆறுமுகன் போன்ற கணங்களால் தோற்றுவிக்கப்பட்டது,

கண லிங்கம்; தேவர்களால், ஸ்தாபிக்க பெற்றது, தெய்வீக லிங்கம்; முனிவர்களால், ஸ்தாபிக்கப் பெற்றது ஆர்ஷிக லிங்கம்; மண், கோமேயம், அன்னம், சந்தனம், மலர் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை லிங்கமாக்கி பூஜிப்பது, கூணிக லிங்கம்; திரவலிங்கம் அல்லது பாதார்த்த லிங்கம் என்பது, சிவன், சங்கரா காலம் வரைக்கும், அன்பர்களுக்கு அருள் செய்வது; ராட்ஷசர்களால் உண்டானது, ராட்ஷச லிங்கம்; மனிதர்களால் உண்டானது மனுஷ்ய லிங்கம்.*

எல்லா சிவ ஆலயங்களிலும், அம்பிகை சன்னதி, இடது புறமே இருக்கும்; ஆனால், ராமேஸ்வரத்தில் வலப்புறம் இருக்கும். பாதாள லிங்கம்!சுயம்புவாய் தோன்றிய, பாதாள லிங்கங்கள் இரண்டு. ஒன்று, வடக்கே உத்தரகாசியில் உள்ளது; மற்றொன்று, தென்கயிலாயம் எனப்படும், உத்தரகோசமங்கையில் உள்ள மங்களநாதர்.

சிவபூஜை செய்து பேறு பெற்றோர்:திருமயிலை - கற்பகாம்பிகைகாஞ்சிபுரம் - காமாட்சிதிருவானைக்காவல் - அகிலாண்டேஸ்வரிஅவிநாசி - கருணாம்பிகைதிருச்செந்தூர் - சுப்ரமண்யர்செங்காட்டங்குடி - விநாயகர்ராமேஸ்வரம் - ராமர்இமயம் - அர்ச்சுனன்திருக்கடவூர் - மார்க்கண்டேயர்சீர்காழி - பிரம்மன்

சிவபெருமான் விரும்பும் மலர்களான, கொன்றை, வன்னி, எருக்கு, வில்வம், ஊமத்தை, கோங்கம், குரவம், ஆம்பல், தாளிக்கொடி, அருகம்புல், செங்கழுநீர் மற்றும் தும்பை போன்ற மலர்கள் சிவாலயங்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படுகிறது.

திருவீழிமிழலையில், ஸ்ரீநேத்திரர்ப்பணேஸ்வர ஸ்வாமி லிங்க திருமேனியின் பின், பார்வதி பரமேஸ்வரர் நின்ற கோலத்தில் காட்சி தருகின்றனர். சாதாரணமாக, சிவாலய கர்ப்பகிரகங்களில், காணமுடியாத சிறப்பு இது.

சிவபெருமானுக்கு, அகில், சந்தனம், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனை, கஸ்தூரி ஜவ்வாது மற்றும் புனுகு இவற்றால், அபிஷேகம் செய்வது சிறப்பு.

தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சிவராத்திரி ஸ்பெஷல்! Empty Re: சிவராத்திரி ஸ்பெஷல்!

Post by krishnaamma Fri 24 Feb 2017 - 0:03

சிவராத்திரி ஸ்பெஷல்! LORIcJaR7a1JQp18ZYPQ+E_1487327699

சிவன் என்றால் ஜீவன் (உயிர்) மற்றும் மங்கலம் தருபவர் என்று பொருள். உயிர் இருந்தால் தான், உடலுக்கு மங்கலம். அருவமாகவும், அருவுருவமாகவும் இருக்கும் சிவபெருமான், தட்சிணாமூர்த்தி கோலத்தில் ஞானத்தை அருளி, பைரவராகவும், வீரபத்திரராகவும் இருந்து தன் பக்தர்களை காக்கிறார்.
மேலும், லிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவபெருமான், தனக்கும் தன் மனைவிக்கும் இடையே முருகனை, அமர வைத்து, சோமாஸ்கந்தர் என்ற பெயர் பெறுகிறார்.

உருவம் இல்லா ஜோதி வடிவான இறைவனை, திருமந்திரத்தில், 'அன்பே சிவம்' என்கிறார், திருமூலர். வள்ளலாரோ, சிவனிடம், 'அப்பா... நான் வேண்டுதல் கேட்டருள் புரிய வேண்டும்; ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு காட்ட வேண்டும்...' என்று வேண்டுகிறார்.

இத்தகைய சிறப்புடைய சிவனை, மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியன்று வரும் சிவராத்திரி அன்று விழித்திருந்து வழிபடுகின்றனர் பக்தர்கள்.

பாற்கடலில் இருந்து, சாகா மருந்தான அமுதம் பெற, வாசுகி எனும் பாம்பை கயிறாகவும், மேரு மலையை மத்தாகவும் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் கடலை கடைந்தனர். வாலையும், தலையையும் பிடித்து இழுத்ததால், வலி பொறுக்காத வாசுகி, விஷத்தை கக்கியது. இதனால் தேவர்கள் இறந்து விடுவரே எனக் கருதி அவ்விஷத்தை அருந்தினார், சிவன்.

பதறிப் போன பார்வதி, கணவரின் கழுத்தைப் பிடிக்க, விஷம் அதற்கு மேல் போகாமல் நீல நிறத்தில் சிறு உருண்டையாக கழுத்திலேயே தங்கி விட்டது. இதனால், நீலகண்டன் என பெயர் பெற்றார், சிவன். கண்டம் என்றால் கழுத்து என்று பொருள்.இந்நிகழ்ச்சி நடந்தது, ஒரு சதுர்த்தசி திதியில்! அன்று மாலையில், தன் பக்தர்களை மகிழ்விக்க நடனமாடினார், சிவன்.

இதனால், மகாசிவராத்திரியன்று, மாலையில், முதலில் நடராஜரை வழிபட வேண்டும் என்பது மரபு. தொடர்ந்து, இரவின் முதல் ஜாமத்தில் சோமாஸ்கந்தரையும், இரண்டாம் ஜாமத்தில் தட்சிணாமூர்த்தியையும், மூன்றாம் காலத்தில் லிங்கோத்பவரையும், நான்காம் காலத்தில், காளையில் அமர்ந்து அருள்பாலிக்கும் சந்திரசேகரரையும் வழிபட வேண்டும்.சிவராத்திரியன்று காலையில் விரதத்தை துவங்கி, இரவில் கண்விழித்து,

'சிவாயநம...' என ஜெபித்தபடி, நான்கு கால அபிஷேகத்தை தரிசிக்க வேண்டும். மேலும், சிவபுராணம், தேவாரம் மற்றும் திருவாசகம் படிப்பதும் நன்மை தரும். மறுநாள் காலையில் அன்னதானம் செய்த பின் சாப்பிட வேண்டும்.

இந்நாளில், சிவனுக்கு வில்வார்ச்சனை செய்தால், ஈரேழு ஜென்மத்தில் செய்த பாவம் நீங்கி விடுவதுடன், செல்வ வளமும் பெறுவதோடு, மறுமையில் கைலாயத்தில் வாழும் பேறும் பெறுவர். அத்துடன், பெற்றோருக்கு பெருமை தேடித்தரும் நற்குழந்தைகள் பிறப்பர். மங்களகரமான இவ்விரதத்தை, அனைவரும் அனுஷ்டித்து, சிவன் அருள்பெறுவோம்!

- தி.செல்லப்பா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum