ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

Top posting users this week
No user

Top posting users this month
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters

Page 10 of 40 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40  Next

Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 Empty படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 3838410834


Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down


படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 Empty டிஜிட்டலுக்கு தயார்!

Post by krishnaamma Thu Jan 12, 2017 10:37 am

டிஜிட்டலுக்கு தயார்!

வீட்டில், சில மின் சாதனங்களை பொருத்துவதற்காக, எலெக்ட்ரிஷியனை அழைத்திருந்தேன். அவர் வேலையை முடித்ததும், கூலி, 1,200 ரூபாய் கேட்டார். 'என்னிடம் அவ்வளவு பணம் கையில் இல்லை; நிலைமை சரியானவுடன் வங்கியில் இருந்து எடுத்து தருகிறேன்...' என்றேன்.

உடனே, அவர், தன் வங்கி கணக்கு எண்ணை கொடுத்து, 'ட்ரான்ஸ்பர்' செய்யும்படி கூற, பணத்தை, ஒரே நிமிடத்தில், 'ட்ரான்ஸ்பர்' செய்தேன்.

பின், 'வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாதே; எப்படி பொருட்கள் வாங்குவீர்கள்...' என்று கேட்டேன்.

'என் பாக்கெட்டில், 50 ரூபாய் தான் இருக்கு; பெட்ரோல் முதல் எலக்ட்ரிக்கல் சாமான்கள் வரை, வங்கி அட்டை மூலம் வாங்க ஆரம்பித்து விட்டேன்; பணப் புழக்கம், குறைந்து விட்டதே என்று புலம்புவதை விட, மாற்று பண பரிவர்த்தனை முறைக்கு மாறுவதால், பிழைப்பு கெடாமல் பாத்துக்கலாம்...' என்ற அவருடைய பதில், என்னை ஆச்சரியப்பட வைத்தது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவருடைய பொருளாதார பரிவர்த்தனை புரிதல், படித்தவர்களுக்கு ஒரு பாடம்!
— எஸ்.ராமன், சென்னை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Thu Jan 12, 2017 10:39 am

krishnaamma wrote:டிஜிட்டலுக்கு தயார்!

வீட்டில், சில மின் சாதனங்களை பொருத்துவதற்காக, எலெக்ட்ரிஷியனை அழைத்திருந்தேன். அவர் வேலையை முடித்ததும், கூலி, 1,200 ரூபாய் கேட்டார். 'என்னிடம் அவ்வளவு பணம் கையில் இல்லை; நிலைமை சரியானவுடன் வங்கியில் இருந்து எடுத்து தருகிறேன்...' என்றேன்.

உடனே, அவர், தன் வங்கி கணக்கு எண்ணை கொடுத்து, 'ட்ரான்ஸ்பர்' செய்யும்படி கூற, பணத்தை, ஒரே நிமிடத்தில், 'ட்ரான்ஸ்பர்' செய்தேன்.

பின், 'வங்கியில் போட்ட பணத்தை எடுக்க முடியாதே; எப்படி பொருட்கள் வாங்குவீர்கள்...' என்று கேட்டேன்.

'என் பாக்கெட்டில், 50 ரூபாய் தான் இருக்கு; பெட்ரோல் முதல் எலக்ட்ரிக்கல் சாமான்கள் வரை, வங்கி அட்டை மூலம் வாங்க ஆரம்பித்து விட்டேன்; பணப் புழக்கம், குறைந்து விட்டதே என்று புலம்புவதை விட, மாற்று பண பரிவர்த்தனை முறைக்கு மாறுவதால், பிழைப்பு கெடாமல் பாத்துக்கலாம்...' என்ற அவருடைய பதில், என்னை ஆச்சரியப்பட வைத்தது. எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒருவருடைய பொருளாதார பரிவர்த்தனை புரிதல், படித்தவர்களுக்கு ஒரு பாடம்!

எஸ்.ராமன், சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1231078

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sun Jan 15, 2017 12:20 pm

வாயில் முத்தம்!

என் பக்கத்து வீட்டில், குடியிருக்கும் இளம் தம்பதியருக்கு, இரண்டரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. அந்த இளம் தாய், தன் குட்டி மகனுக்கு, வாயில் முத்தம் கொடுப்பதை பார்த்து, அதிர்ந்து போனேன்.

அப்பெண்ணை தனியே கூப்பிட்டு, 'ஒரு தாய், தன் மகனுக்கு வாயில் முத்தம் கொடுப்பது, நம் கலாசாரத்துக்கு எதிரானது. தொடர்ந்து, வாயில் முத்தம் கொடுப்பதன் மூலம் குழந்தையின் உணர்ச்சி தூண்டப்பட்டு, பின்னாளில் தவறான வழிக்கு போக வாய்ப்பிருக்கிறது; தவிர, வாயில் கொடுக்கப்படும் முத்தத்தால் நோய் பரப்பும் கிருமிகள் பரவ வாய்ப்பிருக்கிறது...' என்றேன்.

என் அறிவுரையை கேட்டு அந்த இளம் பெண், மகனுக்கு வாயில் முத்தம் கொடுப்பதை நிறுத்திக் கொண்டாள்.
வேறு யாராவது இது போன்று நடந்து கொண்டிருந்தால், இக்கடிதம் படித்தாவது திருந்தட்டும்.

ஆர்.ஜெயமாலினி, மதுரை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sun Jan 15, 2017 12:21 pm

நிலத்தடி நீரை காப்போம்!

புறநகர் பகுதியில் வீடு கட்டி, சமீபத்தில் குடியேறினேன். புதிதாய் முளைத்த நகர் என்பதால், வீடுகளை விட, புதர்களும், செடிகளுமே மண்டிக் கிடந்தன.

என் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் ஒருவர், எப்போதும், ஏதாவது செடிகளை பிடுங்கியும், முள் மரங்களை வெட்டியபடியும் இருப்பார்.

இதுபற்றி அவரிடம் விசாரித்த போது, அவர் கூறிய விஷயம் சிந்திக்க வைத்தது.

'நம் நாட்டில் நல்ல மழை வளம் இருந்தும், நிலத்தடி நீர் குறைந்து, தண்ணீர் பஞ்சம் வர, இது போன்ற தேவையற்ற செடிகள் தான் காரணம். இவைகள் நிலத்தடி நீரை இழுத்துக் கொள்வதால், விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. அதனால் தான், என்னால் முடிந்த அளவு, ஒரு நாளைக்கு, 200, 300 செடிகளை பிடுங்குகிறேன்.

'ஒவ்வொருவரும் தங்கள் வீட்டருகே இருக்கும், மூலிகை செடிகளை தவிர்த்து, பூண்டு செடி எனப்படும், மூக்குத்தி செடி, முள்வேலி மற்றும் கருவேல மரம் என, தேவையற்ற மரம், செடிகளை அழித்தால், நிலத்தடி நீரை தக்க வைக்கலாம்...' என்றார்.

அவரது இந்த யோசனை, மிகவும் பயனுள்ளதாக தெரிந்தது. இதை, அனைவரும் பின்பற்றலாமே!

பா.ஜெயக்குமார், வந்தவாசி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 Empty பாசம் ஒன்றே போதுமே!

Post by krishnaamma Sun Jan 15, 2017 12:22 pm

பாசம் ஒன்றே போதுமே!

நான், புதிதாக சேர்ந்துள்ள நிறுவனத்தில், அங்குள்ள, 'போர்மேனை' அனைவரும், அப்பா என்றும் சித்தப்பா என்றும் உறவுமுறை சொல்லி அழைப்பதை பார்த்தேன். பதிலுக்கு அவரும், 'மகனே...' என, அழைத்து வந்தார்.

சமீபத்தில், ஒருநாள், என்னிடம், 'மகனே... வர்ற ஞாயிற்றுக்கிழமை, என் பையனுக்கு திருமணம்; அவசியம் வரணும்...' என்று கூறி, பத்திரிகை கொடுத்தார். நானும், அலுவலக ஊழியர்களோடு, திருமண விசேஷத்தில் கலந்து கொண்டேன். அங்கே வந்திருந்த பலரும், அவரை, அப்பா, சித்தப்பா என்று அழைப்பதை கண்டு ஆச்சரியமடைந்தேன்.

விருந்து முடிந்து, புகைப்படம் எடுத்துக் கொண்ட பின், கூட்டமாக அமர்ந்திருந்த போது, ஊழியரில் ஒருவர், 'சித்தப்பா... உங்களுக்கு ஒரே பையன் தானா, அதுக்கப்புறம், 'டிரை' செய்யவேயில்லையா...' என்று நக்கலாக கேட்க, அங்கே சிரிப்பலை எழுந்தது.

அவர் அதை கண்டுகொள்ளாமல், 'எங்களுக்கு திருமணமான ரெண்டு வருஷத்துல, மூணு முறை கரு தங்காமல் கலைஞ்சு போச்சு. டாக்டரிடம் சென்ற போது, 'கர்ப்பப் பையில் கட்டி இருக்கு; உடனடியாக, 'ஆபரேஷன்' செய்து, கர்ப்பப் பையை நீக்கணும்'ன்னு சொல்லிட்டாங்க. வேறு வழியில்லாம கர்ப்பப் பையை நீக்கியாச்சு...' என்று நிறுத்திய போது, அதுவரை கேலியும், கிண்டலுமாக இருந்தவர்கள், அசைவின்றி அடங்கிப் போனோம்.

தொடர்ந்த அவர், 'என் மனைவி, என்கிட்ட, 'நீங்க வேணும்ன்னா, இன்னொரு கல்யாணம் செய்துக்கங்க'ன்னு சொன்ன போது, அவள் என் மீது வைத்திருந்த பாசத்தை நினைச்சு, மறுத்துட்டேன். அப்புறம் நாங்கள், ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தோம். அவனுக்கு தான் இன்னைக்கு கல்யாணம்...' என்றார்.

அனைவரும், அவரிடம் வருத்தம் தெரிவித்த போது, 'விடுங்கடா... எனக்கு எல்லாருமே மகன் தான்டா... என் மனைவி, என் மீது வைத்துள்ள பாசத்திற்கு, இந்த ஜென்மம் பத்தாதுடா...' என்றார்.
குழந்தையில்லாததை, ஒரு குறையாகவே கருதாமல், ஆத்ம திருப்திக்காக ஒரு குழந்தையை தத்து எடுத்து, வளர்த்து ஆளாக்கியதோடு, எல்லாரையுமே தன் பிள்ளையாக பாவித்த அவரின் மனோபாவம், எங்களை வியக்க வைத்தது!

பா.அமலோற்பவநாதன், மதுரை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sun Jan 22, 2017 11:07 am

சித்த மருத்துவத்தில் போலிகள்... உஷார்!

கடந்த வாரம், எங்கள் ஊரில் உள்ள, 'அலோபதி' மருத்துவரை சந்தித்தேன். அப்போது அவர், சித்த மருத்துவம் என்ற பெயரில், போலி மருத்துவர்கள் உலவி வருவதாக கூறி, 'நான் இல்லாத போது, என், 'அலோபதி' கிளினீக்கிற்கு வந்த ஒரு நபர் செவிலியரிடம், குறிப்பிட்ட வலி நிவாரண மாத்திரைகள் நிறைய தேவைப்படுவதாக கூறியுள்ளார். சந்தேகமடைந்த செவிலியர், இரு நாட்கள் கழித்து வருமாறு கூறி, நான் வந்தவுடன் விஷயத்தை என்னிடம் கூறினர்.

'இரு நாட்களுக்கு பின் வந்த அந்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர், சித்த மருத்துவம் என்ற பெயரில், 'அலோபதி' மாத்திரைகளை வாங்கிச் சென்று, கலப்படம் செய்து விற்று வந்தது தெரிய வந்தது. அந்நபரை எச்சரித்து, அனுப்பினோம்...' என்றார். வாசகர்களே... சித்த மருந்துவம் மேற்கொள்ள நினைத்தால், உண்மையான சித்த மருத்துவரை அணுகுங்கள்!

அ.செந்தில்குமார்,சூலூர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sun Jan 22, 2017 11:07 am

இப்படியும் ஒரு கடைக்காரர்!

சமீபத்தில், ஆதார் அட்டையையும், ரேஷன் கார்டையும் நகல் எடுக்க, போட்டோ காபி கடைக்கு சென்றிருந்தேன். அங்கு அமர்ந்திருந்தவர், ஒரு பதிவேட்டை நீட்டி, என் கணவர் பெயரையும், அவரின் கைபேசி எண்ணையும் எழுதச் சொன்னார். எழுதிய பின் தான், நகல் எடுத்து தந்தார்.

அதற்கான காரணத்தை கேட்ட போது, 'இங்க, நகல் எடுக்க வர்றவங்க, அவசரத்துல, 'ஒரிஜினலை' இங்கேயே மறந்துட்டு போயிடறாங்க. அந்த மாதிரி நேரங்களில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தகவல் சொல்லி, திருப்பிக் கொடுக்கத் தான், போன் நம்பர் வாங்குறேன். ஆண்கள்ன்னா அவங்க போன் நம்பரையும், பெண்கள்ன்னா, அவங்க வீட்டு ஆண்கள் போன் நம்பரையும் எழுதச் சொல்றேன்...' என்றார். மற்ற, கடைக்காரர்களும், இதை கடைப் பிடிக்கலாமே!

நர்மதா விஜயன், உளுந்தூர்பேட்டை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sun Jan 22, 2017 11:08 am

முன் யோசனை முத்தண்ணாவாக இருக்கலாமே!

என் உறவினர் ஒருவர், கோவில்களுக்கு பாத யாத்திரை செல்வது, வழக்கம். நடக்கும் போது, ஊன்றுகோலாக, ஒரு மூங்கில் கழியை பயன்படுத்துவார். இம்முறை அவர் பயன் படுத்திய ஊன்றுகோல் வித்தியாசமாக இருக்கவே, அதைப் பற்றி விசாரித்த போது, அவர் கூறியது... 'பல வண்ணங்களில் உள்ள ரிப் ௌக்டர் ஸ்டிக்கர்களை இந்த ஊன்று கோலில் ஒட்டியுள்ளேன்.

பாத யாத்திரையின் போது, பகலில் சாலையின் ஓரங்களில், எதிர்புறம் தான் நடப்பேன்; அப்போது தான், எதிரே வரும் வாகனங்களை பார்த்து, ஜாக்கிரதையாக நடக்க முடியும்; ஆனால், இரவு நேரங்களில், அப்படி நடக்க முடியாது. முகப்பு விளக்குகளால், கண்கள் கூசும். இடது புறம் தான் நடக்க முடியும். அப்போது, பின்னால் இருந்து வரும் வாகனங்களை, நாம் பார்க்க முடியாது.

அச்சமயத்தில், இந்த கைத்தடியில் உள்ள, ரிப் ௌக்டர் ஸ்டிக்கர்கள், நம்மை வாகனங்களுக்கு காட்டிக் கொடுத்து, காப்பாற்றும். அதுமட்டுமல்லாது, இதேமுறையில், கால்நடைகளுக்கும், இப்போது கழுத்துப் பட்டைகள் அணிவிக்கின்றனர்...' என்றார்.

இது, நல்ல விஷயமாக தோன்றியது. பாதசாரிகள் மட்டுமின்றி, இரு சக்கர வாகன ஓட்டிகளும், விளக்குகளை மட்டும் நம்பாமல், இப்படி 'ஸ்டிக்கர்' ஒட்டி வைத்தால், பெரும் விபத்துகளை தவிர்க்கலாமே!

ப.கீதா, போத்தனூர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sun Jan 22, 2017 11:09 am

பெண் என்றால் மட்டமா?

பள்ளியில், உடன் பணியாற்றும் ஆசிரியருக்கு, இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளதை கேள்விப்பட்டு, சக ஆசிரியர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சென்றோம். இன்முகத்துடன் வரவேற்ற ஆசிரியருக்கு வாழ்த்துகளை தெரிவித்த போது, அங்கிருந்த ஒரு சிலர், இரண்டாவதும் பெண் குழந்தை பிறந்ததற்கு ஆறுதல் கூறுகிறேன் பேர்வழி என்று, 'இனி, இந்த சொத்தை யார் சாப்பிடப் போறாங்களோ...' என்றும், 'உங்க கஞ்சத்தனத்திற்கு தான் ரெண்டாவதும் பெண் குழந்தை பிறந்துள்ளது...' என்று கூறி சிரித்தனர். இதைக் கேட்டதும், அவரின் மனைவி வேதனை அடைந்தார்.

நண்பர் அமைதியாக, 'பிரசவங்கிறது பெண்ணிற்கு மறுபிறப்பு போல. ஒரு கருவை சுமந்து, ஆரோக்கியமாய் பெற்றெடுப்பதால் தான், எல்லாரும் தாய்மையடைந்த பெண்ணை பார்க்க வர்றாங்க. குழந்தைகள்ல ஆண், பெண் என, பேதம் பார்ப்பது நம் பார்வையில் தான் இருக்கு. இன்று முதியோர் இல்லத்தில் இருக்கிறவர்களுக்கு ஆண் குழந்தையே இல்லையா...' என்றார். கேலி பேசியோர் வாயடைத்து போயினர்.

முன்பு, பெண் குழந்தைகளை தாழ்வாய் நினைத்து, கருவில் கண்டறிந்தும், பிறந்த சிசுக்களையும் கொன்றனர். ஆனால், இனறோ, உலக அரங்கில், எல்லாத் துறைகளிலும் சாதிப்பது பெண்கள் தான். இதை, கேலி பேசுவோர் நினைத்துப் பார்க்க வேண்டும்!

ப.மணிகண்ட பிரபு, திருப்பூர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sat Jan 28, 2017 10:14 pm

பழையது பயனுள்ளது!

நானும், என் மனைவியும், சமீபத்தில், என் நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த போது, நண்பர், அவரது மற்றும் மகனின் பழைய சட்டைகளை அடுக்கி கொண்டிருந்தார். 'என்ன பழசைப் போட்டு, பாத்திரம் வாங்க போறீங்களா...' என்று கேட்டேன். 'இல்லை...' என்றவர், அந்த உடைகளை எடுத்துக் கொண்டு, அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றார்.

அங்கு, கட்டட வேலை செய்யும் ஒரு நபரிடம் கொடுத்து விட்டு வந்தவர், 'வறுமையில் கஷ்டப்பட்டு, பிழைப்பு தேடி இங்கு வந்துள்ள இவங்க, கிழிந்த ஆடைகளை அணிந்து வேலை செய்றாங்க; அதையும் சிலர், கேலி பேசுறாங்க. அதனால் தான், இந்த துணிகளை எல்லாம் கொடுத்திட்டு வந்தேன்...' என்றார்.
இதைக் கேட்ட போது, எனக்கு சந்தோஷமாக இருந்தது. நமக்கு பயன்படாதவை, மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது நிஜம் தானே!

ரஜினி செந்தில், கோவை.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 10 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 40 Previous  1 ... 6 ... 9, 10, 11 ... 25 ... 40  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum