ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 Empty படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி

krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 3838410834

Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon Mar 07, 2022 9:12 pm

கவனம் மக்களே...

திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை செல்ல வேண்டியிருந்தது. காரில் சென்று கொண்டிருந்தேன். வழியெங்கும் பெரிய பெரிய, 'பிளக்ஸ் பேனர்'கள். அதில் ஒன்று, பூப்புனித நீராட்டு விழாவுக்கானது. அலங்காரத்திலிருந்த பெண், வெவ்வேறு, 'போஸ்'களில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, 'பேனர்' அருகில் வந்தான், ஒருவன். அவன் கிறுக்கனா அல்லது போதை ஆசாமியா என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணின் படத்தை தடவி, முத்தமிட்டதை பார்த்து அதிர்ந்து போனேன். பெண் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கிறோம். ஆனால், அந்தக் குழந்தையை இந்த காமுகனோ... 'பிளக்ஸ் பேனர்' வைப்பவர்களுக்கு இது தெரியுமா?
தம் வீட்டுக் குழந்தைகளைப் படம் பிடித்துத் தெருவில், 'பேனர்' ஆக வைப்போர், இதைப் படித்த பிறகாவது திருந்துவரா!

- ஜெயலட்சுமி அண்ணாமலை, துாத்துக்குடி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 Empty கவனம் மக்களே...

Post by krishnaamma Mon Mar 07, 2022 9:12 pm

krishnaamma wrote:கவனம் மக்களே...

திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மதுரை செல்ல வேண்டியிருந்தது. காரில் சென்று கொண்டிருந்தேன். வழியெங்கும் பெரிய பெரிய, 'பிளக்ஸ் பேனர்'கள். அதில் ஒன்று, பூப்புனித நீராட்டு விழாவுக்கானது. அலங்காரத்திலிருந்த பெண், வெவ்வேறு, 'போஸ்'களில் சிரித்துக் கொண்டிருந்தாள்.

அப்போது, 'பேனர்' அருகில் வந்தான், ஒருவன். அவன் கிறுக்கனா அல்லது போதை ஆசாமியா என்று தெரியவில்லை. அந்தப் பெண்ணின் படத்தை தடவி, முத்தமிட்டதை பார்த்து அதிர்ந்து போனேன். பெண் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கிறோம். ஆனால், அந்தக் குழந்தையை இந்த காமுகனோ... 'பிளக்ஸ் பேனர்' வைப்பவர்களுக்கு இது தெரியுமா?
தம் வீட்டுக் குழந்தைகளைப் படம் பிடித்துத் தெருவில், 'பேனர்' ஆக வைப்போர், இதைப் படித்த பிறகாவது திருந்துவரா!

- ஜெயலட்சுமி அண்ணாமலை, துாத்துக்குடி.

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by T.N.Balasubramanian Mon Mar 07, 2022 9:20 pm

பதிவு எண் 378 & 379 தலைப்பை விளையாட்டே வினையானது & கேட்டாரே ஒரு கேள்வி என மாற்றிவிடலாமே ..
பட்டாவிற்கும் இவைகளுக்கும் சம்பந்தமே இல்லையே.

நன்றி.

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35056
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 Empty இப்படி கெடுக்கலாமா?

Post by krishnaamma Tue Mar 29, 2022 9:02 pm

இப்படி கெடுக்கலாமா?

சமீபத்தில் திருப்பூருக்கு சென்றிருந்தபோது, பின்னலாடை கம்பெனி ஒன்றின் விளம்பரம் பார்த்து அதிர்ச்சியடைந்தேன்.
அதில், 'கட்டிங் மாஸ்டர் தேவை. வாரம் முழுவதும் வேலைக்கு வருபவர்களுக்கு, மூன்று, 'குவாட்டர்' இலவசம்...' என, இருந்தது. ஏற்கனவே, 'குடிமகன்'களால் சமூகம் கெட்டு சீரழிந்து உள்ளது. இந்த லட்சணத்தில், சமுதாயத்தை குட்டிச்சுவர் ஆக்கும் விதமாக இதுபோன்ற, 'குவாட்டர்' கலாசார விளம்பரங்கள், அனைத்து இடங்களிலும் பரவி வருகிறது.
படித்து, பிறருக்கு வேலை தரும் அளவிற்கு திறமையும், பணமும் படைத்தவர்கள், இப்படி தவறான வழிகாட்டி, ஆட்களை வேலைக்கு அழைப்பது சரியா?
மாறாக, வாரம் முழுவதும் வேலைக்கு வருபவர்களின் குழந்தைகளுக்கு தேவையான நோட்டு, புத்தகம் அல்லது சிறிய அளவிலான சமையலறை உபகரணம் தருவதாக அறிவிக்கலாமே!
'குவாட்டர் தருகிறோம்... தொட்டுக் கொள்ள ஊறுகாய் தருகிறோம்...' என, அறிவிக்கும் விளம்பரம், தமிழகத்தையே இழிவுபடுத்துவது போல் உள்ளது. இப்படிப்பட்ட அறிவிப்புகள், ஒரு தனி நபரை மட்டுமின்றி, அவர்களது குடும்பத்தையும் சேர்த்து கெடுப்பதாக இருக்கிறது.
பிறரை கெடுத்து தான் வாழ வேண்டுமா?
சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து, திருத்திக் கொள்ளுங்கள்.
—எ. மகேஷ், கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Tue Mar 29, 2022 9:05 pm

krishnaamma wrote:இப்படி கெடுக்கலாமா?

மேற்கோள் செய்த பதிவு: 1360292

ம்ம்.. கட்டிங் மாஸ்டருக்கு கட்டிங் தராங்க...சோகம்.. .... எங்கே போகிறது உலகம்?????

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon Apr 04, 2022 9:05 pm

மாற்றி செய்வார்களா?!
கோடை காலம் துவங்கி விட்டது. இப்போதெல்லாம் தெருவுக்கு தெரு, கம்பங் கூழ், கேழ்வரகு கூழ் என்று, வண்டிகளில் வைத்து விற்க துவங்கி விட்டனர். இயற்கை உணவு உடம்புக்கு நல்லது தான். அதை விற்கும் விதம் தான் சரியில்லை.
ஒரு சில இடங்களில் எவர்சில்வர் சொம்பு இரண்டு அல்லது நான்கு வைத்திருப்பர். அதில் கூழை, எடுத்துக் கொடுக்கின்றனர். அதை வாங்கி குடிப்பவர்கள், சில நேரம் வாய் வைத்து கூட குடிக்கின்றனர். இப்படி குடித்து முடித்தவர்கள், சொம்பை கொடுத்ததும், அதை, பேருக்கு தண்ணீரில் அலசுகின்றனர்.
பின்னர், அதே சொம்பில் இன்னொருவருக்கும் கொடுக்கின்றனர். இதனால், தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளது. இப்போது தான் பெரிய காகித கப்புகள் விற்பனைக்கு வந்திருக்கிறதே... அதில் ஊற்றிக் கொடுத்தால், குடித்துவிட்டு, துாக்கி எறிந்து விடலாமே... செய்வர்களா?
எஸ். பிரேமாவதி, சென்னை.

Last edited by krishnaamma on Mon Apr 04, 2022 9:11 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon Apr 04, 2022 9:06 pm

புகழ்ச்சி எனும் மாமருந்து!
புதிதாக திருமணமான தன் பெண்ணுக்கு, வாடகைக்கு வீடு பார்த்து தரும்படி என்னிடம் கேட்டாள், தோழி.
கோபக்கார உறவினர் வீடு ஒன்று காலியாக இருந்தது, நினைவுக்கு வந்தது.அடிக்கடி கோபப்படும் அந்த உறவினருடன் எப்போதோ ஏற்பட்ட சிறு பிரச்னையில், பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தோம்.
'நான் அனுப்பியதாக சொல்லாமல், அவரிடம் வீடு கேட்டுப் பார்...' என்று கூறி அனுப்பினேன்.
சில நாட்களுக்கு பின், அந்த உறவினர் வலிய என்னைத் தேடி வந்து, பழைய சண்டையெல்லாம் மறந்து விடும்படி அன்பாக பேசினார். காரணம் புரியாமல், தோழியிடம் கேட்டேன்.
அவள் சிரித்தபடி, 'என் பெண்ணை நீங்க நல்லா பார்த்துக் கொள்வீர்கள். வேணுங்கிற உதவியெல்லாம் செய்வீங்கன்னு சொல்லி, என் தோழி தான் இங்கு அனுப்பியதாக, உன் பெயரை சொன்னேன்.
'அவர்களுக்கு ஒரே சந்தோஷம். 'அப்படியா...' என்று, உடனே வீடு கொடுத்து விட்டனர். எனக்கும் வேலை முடிந்தது; உங்கள் சண்டையும் தீர்ந்தது...' என்றாள்.
புகழ்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டால், எந்த பிளவுகளையும் இணைக்க முடியும்; விலகல்கள் விலகி, புரிதல்கள் ஏற்படும் என்று புரிந்து கொண்டேன். என் தோழியின் அணுகுமுறையையும் பாராட்டினேன்.
- என். விஜயலக்ஷ்மி, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon Apr 18, 2022 9:13 pm

ஊருக்கு போறீங்களா?
சமீபத்தில், பழனிக்கு சென்றேன். பேருந்து நிலையத்தில் இறங்கியவுடன், ஒரு ஆள் ஓடி வந்து, 'சார்... லாட்ஜ் வேணுமா...' என்றார். நள்ளிரவு, 1:00 மணியை தாண்டி விட்டதால், வேறு இடம் தேட சிரமப்பட்டு, 'சரி...' என்றேன்.
ஒரு சந்து வழியாக அழைத்துச் சென்றவர், தேவையில்லாமல் ஏதேதோ பேசிக் கொண்டே வந்தார்.'இருங்க சார், ஒரு டீ சாப்பிடலாம். இந்த கடையில டீ நல்லா இருக்கும்...' என்றவர், இரண்டு டீ போடச் சொல்லி, 'சார்... டீக்கு, 30 ரூபா கொடுங்க...' என்றார்.
கொடுத்தேன். டீ குடித்த பின், மீண்டும் நடந்தோம். எதிரே ஒரு பையன் வந்தான். 'சாரை கூட்டிக்கிட்டு போடா...' என்று அவனோடு என்னை அனுப்பிவிட்டு, மீண்டும் அவர் பேருந்து நிலையம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
லாட்ஜில் விட்டு விட்டு, 'சார்... ஒரு, 100 ரூபா எனக்கு கொடுங்க...' என்று உரிமையோடு கேட்டான், அந்த பையன். வேறு வழியின்றி கொடுத்தேன்.
'அறை வாடகை, 1,500 ரூபாய்...' என, மேனேஜர் கூற, இரவு நேரம் ஆகிவிட்டதால், எதுவும் சொல்ல முடியாமல், அறை எடுத்து தங்கினேன். மறுநாள் குளித்து முடித்து, மேனேஜரிடம் வந்து, 'சார், அறையை காலி செய்கிறேன்...' என்றேன்.
'சார், நீங்க அப்பாவியா தெரியறீங்க... இனிமே, இந்த ஊருக்கு வந்தா, நேரா இங்க வந்துடுங்க; புரோக்கர்கிட்ட போகாதீங்க...' என்றார். 'என்னது, அவங்க புரோக்கர்களா... உங்க லாட்ஜ்ல வேலை செய்யுறவங்க இல்லையா?' என்றேன்.
'இல்ல சார், அவங்க எல்லாம் புரோக்கர்ங்க. நீங்க தங்கின அறை வாடகை, 800 ரூபா தான். புரோக்கருக்கு கமிஷன் தர வேண்டும் என்பதால், 1,500 ரூபா வாங்கினேன். அதுமட்டுமல்ல, புரோக்கர்ன்னு சொல்லிட்டு சிலர், நள்ளிரவுல வர்றவங்ககிட்ட வழிப்பறியும் செய்வாங்க.
'அதனால, இனிமே நீங்க இங்க வந்தா, யாராவது கூப்பிட்டா, 'இல்ல, எனக்கு தெரிஞ்ச லாட்ஜ் இருக்கு. போன்ல, 'புக்' பண்ணிட்டேன்'னு சொல்லிடுங்க. உங்களுக்கு பணமும் மிச்சம், பாதுகாப்பும் கூட...' என்றார். அவர் சொன்னது நியாயமாக பட்டது. இனி, நீங்களும் இதை பின்பற்றுங்களேன்.
- சி. ரகுமுருகன், விழுப்புரம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon Apr 18, 2022 9:15 pm

krishnaamma wrote:ஊருக்கு போறீங்களா?

நல்ல காலம் அந்த ஆளை நல்லபடி வர விட்டர்களே... மட்டமான லாட்ஜ் போலீஸ் என்று வம்பாகாமல் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon Apr 18, 2022 9:15 pm

மாறுபட்ட அனுபவம்!

அண்மையில், ஒரு ஆட்டோவில் பயணித்தபோது, சொற்பொழிவாளர் ஒருவரின் பேச்சை, ஒலிக்க விட்டார், ஆட்டோக்காரர். சிந்தனையைத் துாண்டும் குட்டிக் கதைகள் அடங்கிய அந்த சொற்பொழிவு, என்னை மிகவும் கவர்ந்தது.

இதுபற்றி அவரிடம் கேட்டதும், 'என் வண்டியில் ஏறுபவர்களுக்கு, பயணம் போரடிக்காமல் இருக்கவும், வாழ்க்கைக்கு தேவையான விஷயங்களை தெரிந்து கொள்ளவும், 'யூடியூபில்' இருந்து, இதுபோன்ற நல்ல விஷயங்களை தேடி, 'பென் டிரைவில்' பதிவிறக்கம் செய்து, ஆட்டோவில் ஒலிபரப்புவேன்...' என்றார்.

திரைப்பட குத்துப் பாடல்களை மிக சத்தமாக ஒலிக்கச் செய்து வரும் பிற ஆட்டோக்காரர்களிடம் இருந்து மிகவும் வித்தியாசமாக தெரிந்த, இவரின் முயற்சியை பாராட்டினேன்.

- சு. லெட்சுமணசுவாமி, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 39 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 39 of 40 Previous  1 ... 21 ... 38, 39, 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum