ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 Empty படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி

krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 3838410834

Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Dec 11, 2019 8:19 pm

krishnaamma wrote:படித்த முட்டாள்!

தோழியும், அவளது குடும்ப உறுப்பினர்களும், மாப்பிள்ளை வீட்டாரும், அதிர்ந்து உறைந்தனர். நான், அவள் மன உறுதியை மனமுவந்து பாராட்டினேன்.
நாட்டில், என் தோழியின் மகள் போல், நான்கு பேர் இருந்தால் போதும், கட்சி, கொடி, தலைவன் என்று அலையும் இது போன்ற படித்த முட்டாள்கள் திருந்துவர்.

வசந்தா சாமிநாதன், சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1309592

உண்மைதான்..... சில படித்த இளைஞர்கள் இப்படி முட்டாள் தனமாக அலைகிறார்கள் ...அவர்களுக்கு சரியான செருப்படி இது... சந்தோஷமாக வரவேற்கிறேன் !..... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon Jun 15, 2020 5:35 pm

பிரச்சனையை கண்டு ஒடாதே...

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார்.,
அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார்.

அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன._

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

_அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது.

அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

_*நண்பர், அவர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார்.*_

ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

_பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது.

அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார்.
அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு.
அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.

அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர்,
*“நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன்.

ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,”*

என்று முடித்தார்.

_*பிரச்சனைகள் வரும் போது நாம் அதை கண்டுகொள்ளாமல் நமது வேலையை மட்டும் செய்தோமானால் அது நம்மை விட்டு ஓடிவிடும்....

வாழ்க வளமுடன்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sat Aug 08, 2020 9:13 pm

எங்களாலும் முடியும்!
வேலை நிமித்தமாக, கோவையிலிருந்து, 5 கி.மீ., தொலைவில் உள்ள, சாயிபாபா காலனிக்கு, இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, வாகனம், 'பஞ்சர்' ஆனது.
அந்த ரோட்டில், 'பஞ்சர்' ஒட்டும் கடையை தேடி சென்று, வாகனத்தை நிறுத்தினால், அந்த கடையை நடத்துபவர், ஒரு திருநங்கை. அவருக்கு உதவியாக பணிபுரியும் இருவருமே திருநங்கையரே.
'பஞ்சர் பார்க்க வேண்டும்...' என்றதும், 'அசால்ட்'டாக சக்கரத்தை கழற்றி, ஐந்து நிமிடத்தில், 'பஞ்சர்' ஒட்டினர்.
சட்டென்று வேலையை முடித்த அவர்களை பாராட்டி, 'இந்த, 'பஞ்சர்' கடை துவங்கும் ஐடியா எப்படி வந்தது...' என்று கேட்டேன்.
'பஞ்சர் ஒட்டும் கடை நடத்தும் நண்பர் ஒருவர் கொடுத்த ஊக்கத்தாலும், பயிற்சியாலும் இக்கடையை ஆரம்பித்தேன்; உதவியாளர் கூட திருநங்கையரையே பணியமர்த்தினேன். எங்களாலும், எந்த தொழிலும் திறம்பட செய்ய முடியும்...' என்று, மலர்ந்த முகத்துடன் கூறிய அவரை, வாழ்த்தி வந்தேன்.
- வெற்றிச்செல்வன், கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sat Aug 08, 2020 9:14 pm

கருப்பே அழகு!
பக்கத்து வீட்டில் இருக்கும் பெண்ணிற்கு, ஆறு மாதத்திற்கு முன்பு தான் குழந்தை பிறந்தது. கணவரும், அவளும் நல்ல நிறம். ஆனால், தாத்தா - பாட்டி போல், கருப்பான நிறத்தில் குழந்தை பிறந்திருந்தது.
குழந்தை வயிற்றில் இருக்கும்போது, நிறைய குங்குமப்பூவை சாப்பிட்டும் பலன் இல்லையே... குழந்தை கருப்பா பிறந்துடுச்சே என்ற கவலையில், 'யூ டியூபில்' குழந்தையின் நிறத்தை அதிகரிக்க, 'டிப்ஸ்' பார்க்க ஆரம்பித்தாள், அந்த பெண்.
முட்டையின் வெள்ளை கருவில் ஊற வைத்த கடலைப்பருப்பு, நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் பலவிதமான பொடிகள் கலந்து, குழந்தைக்காக, பிரத்தியேகமாக குளியல் பொடி தயார் செய்தாள்.
ஒரு மாதமாக குளியல் பொடியை போட்டும், குழந்தையின் நிறம் மாறவில்லை. மாறாக, குழந்தையின் சருமம் வறண்டு, அலர்ஜி வர ஆரம்பித்து விட்டது.
நாங்களும், பெண்ணின் பெற்றோரும், 'அட்வைஸ்' செய்த பின், நிறத்தை கூட்ட பொடி பூசுவதை விட்டு விட்டாள். குழந்தை மருத்துவரிடம் காட்டி, அலர்ஜியை சரி செய்தாள்.
நிறத்தை பற்றிய அறியாமை, எத்தனை தலைமுறை ஆனாலும் மாறுவதில்லை. கருப்பே அழகு என்று தெரியவில்லை. எதற்கெடுத்தாலும், 'யூ டியூப்' பக்கம் போகாமல், வயதானோரிடம் ஆலோசனை கேட்டு செய்வது நல்லது.
குழந்தையின் ஆரோக்கியம் முக்கியம் அல்லவா!
— லஷ்மி நாராயணன், புதுச்சேரி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 Empty நட்பு பாராட்டுங்கள், நலமாக வாழுங்கள்!

Post by krishnaamma Sat Aug 08, 2020 9:14 pm

நட்பு பாராட்டுங்கள், நலமாக வாழுங்கள்!

'ஒவ்வொருவர் வாழ்விலும், மிகப்பெரிய மாற்றம் ஏற்பட காரணமானவர்கள், நண்பர்கள். நட்பு பாராட்டுவது, உங்கள் ஆயுளையும், ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்...' என்று, 12 வகையான ஆய்வுகள் கூறுகின்றன.

தனியாக இருப்பவர்களுக்கும், சரியான நட்பு வட்டம் இல்லாமல் இருப்பவர்களுக்கும், 'ஹார்ட் அட்டாக்' அதிகம் வருவதாக கண்டறிந்துள்ளனர்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கும், நட்பு பாராட்டுவதற்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வயதில் மூத்தவர்களுக்கு, இது மிகவும் பயனளிப்பதாகவும் கண்டறிந்துள்ளனர்.

அதிக நண்பர்களுடன் பழகுபவர்களுக்கு, ஞாபக மறதி நோயின் தாக்கம் குறைவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.

உலகில், உண்மையான நட்புக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. சிறந்த நண்பர்களை அடையாளம் காண, கிட்டத்தட்ட, 2,௦௦௦துக்கும் மேற்பட்டோரை, ஆய்வுக்கு உட்படுத்தி, கண்டறிந்த விதிகள்:

* உங்கள் நண்பர்கள், நீங்கள் எப்போது கூப்பிட்டாலும், உடனே உங்கள் போனை எடுத்து பேச வேண்டும்
* எந்த பிரச்னை என்றாலும், நியாயமான கருத்தை சொல்லக் கூடியவராக இருக்க வேண்டும்
* இக்கட்டான சூழ்நிலையில் தோள் கொடுக்கும் முதல் ஆளாகவும், நீங்கள் சாய்ந்து அழ, தோள் கொடுக்கும் முதல் ஆள் அவராக இருக்க வேண்டும்
* உங்கள் ரகசியங்களை என்றென்றும் காப்பாற்றுகிறவராக இருக்க வேண்டும்
* உங்களுக்கு ஓர் ஆபத்து என்றால், நீங்கள் சொல்லாமலே அவர் களத்தில் குதித்து, உங்களுக்கு உதவுபவராக இருக்க வேண்டும்.
இந்த விதிகளை, உங்கள் நண்பர்களிடம் மட்டும் எதிர்பார்க்க கூடாது; நீங்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

கோவீ.ராஜேந்திரன், மதுரை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sat Aug 08, 2020 9:33 pm

நஞ்சை விதைக்காதீர்!
சமீபத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட சென்றேன். அங்கு, ஒரு பணக்கார குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருந்தது. குடும்ப தலைவர், தன் குழந்தையிடம், 'நல்லா படிக்கணும். இல்லேன்னா, இந்த ஆளை போல, 'சர்வர்' வேலை தான் செய்ய வேண்டும்...' என்று கூறினார்.
இதைக் கேட்ட அந்த, 'சர்வர்' முகம் வாடிப்போனது.
தன் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும் என்று கூறியது தவறில்லை. அதற்காக, 'சர்வர்' தொழிலை கேவலப்படுத்த வேண்டுமா?
எத்தனையோ பேர், 'சர்வராக' இருந்து, ஓட்டல் முதலாளியாகி உள்ளனர். படித்தவர்கள், 'சர்வர்' தொழிலை செய்வதில்லையா?
பிள்ளைகளிடம், இப்படி சொன்னால், 'சர்வர்' வேலை செய்பவர்களை மதிக்க தோன்றுமா?
பெற்றோர்களே... எந்த வேலையும் கேவலமானதல்ல; உண்மையுடனும், நேர்மையுடனும் செய்தால், எப்படிப்பட்டவர்களும் முன்னுக்கு வர முடியும் என்று சொல்லுங்கள். இந்த வேலை தான் சிறந்தது; இது மட்டம் என்று, பிள்ளைகளிடம் சொல்லிக் கொடுத்து வளர்க்காதீர்கள்!
எம்.ஏ. நிவேதா, திருச்சி.

krishnaamma wrote:நஞ்சை விதைக்காதீர்!

உண்மைதான்....

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sat Aug 08, 2020 9:34 pm

இப்படியும் விளம்பரம் செய்யலாமே...
சமீபத்தில், ஒரு திருமண வீட்டிற்கு சென்றிருந்தேன். முகூர்த்தம் முடிந்ததும், சாக்லேட் இணைத்த அட்டைகளை, இளைஞர்கள் வழங்கினர். அதில், மணமக்களை வாழ்த்தி அச்சிடப்பட்டதோடு, அவர்கள் தொழில் விவரம் மற்றும் தொலைபேசி எண் இருந்தது.
குறிப்பாக, புகைப்படக்காரர், சமையல்காரர், 'டெக்கரேட்டர், சவுண்ட் சர்வீஸ், சாமியானா' பந்தல், மெல்லிசை மற்றும் திருமண தகவல் மையம் என, பலதரப்பட்ட நபர்களின் மொபைல் எண்களும் அதில் அச்சிடப் பட்டிருந்தது.
அட்டையை படித்த அனைவரும், பாதுகாப்பாக தங்கள், 'பர்ஸ்'களில் பத்திரப்படுத்தியதை காண முடிந்தது.
அனைவரும் ஒன்று கூடி, வாழ்த்துதல்களோடு, தங்களது தொழில் விளம்பரத்தை சிறு அட்டை வாயிலாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்தியதை எண்ணி வியந்தேன்.

மகேஷ் அப்பாசுவாமி, பனங்கெட்டான்விளை, கன்னியாகுமரி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 Empty நாளைய தலைமுறை பாடசாலை!

Post by krishnaamma Sat Aug 08, 2020 9:34 pm

நாளைய தலைமுறை பாடசாலை!

பள்ளி ஆசிரியையான என் தோழியை சந்திக்க, ஒரு ஞாயிறன்று, அவளது, 'அப்பார்ட்மென்ட்'டுக்கு சென்றேன். அந்த குடியிருப்பை சேர்ந்த, 5 முதல், 10 வயதிற்குட்பட்ட, 20க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியர் கூடியிருந்தனர்.
'என்னடி இது... 'டியூஷன்' எடுக்கிறாயா?' என்றேன்.

'சிறு வயதில் நாம் படித்த, நீதிபோதனை வகுப்பு போன்றது...' என்றாள், தோழி.
என்ன சொல்லிக் கொடுக்கிறாள் என, கவனிக்க ஆரம்பித்தேன்.

முதலில், ஒரு நீதி கதையை சொல்லி, அதன்பின், முதலுதவி செய்வது எப்படி, சாலட் மற்றும் எலுமிச்சம் பழ ஜூஸ் தயாரிப்பது போன்றவற்றின் செயல்முறை விளக்கமளித்தாள்; 10 - 12 வயதுள்ளவர்களுக்கு, டீ போடுவது பற்றியும் சொல்லிக் கொடுத்தாள்.

இது தவிர, பொது அறிவு கேள்வி - பதில் மற்றும் இட்லி மாவு புளிப்பது எப்படி, பால் பொங்குவது ஏன், கடலில், கப்பல் மிதப்பதன் காரணம், பால் தயிராவது எப்படி போன்ற, பல அறிவியல் உண்மைகளையும் விளக்கினாள்.

ஒவ்வொரு குழந்தைகளுக்கும், எளிமையான தலைப்புகளை கொடுத்து, இரண்டு நிமிடம் பேச கூறினாள். ஒவ்வொரு குழந்தையும், அருமையாக பேசி, கைத்தட்டல் பெற்றனர்.
ஒரு மணி நேரத்துக்குள், பல விஷயங்களை சொல்லிக் கொடுத்து, மனதில் பதிய வைத்த தோழியின் அணுகுமுறை ஆச்சரியமளித்தது.

குழந்தைகள் ஒவ்வொருவரும், அண்ணன் - தம்பி, அக்கா - தங்கை என, உறவு முறை கூறி அழைத்துக் கொள்வதாகவும், பெரியவர்களிடம் மரியாதையாய் நடந்து கொள்வது, விட்டுக்கொடுக்கும் பண்பு மற்றும் ஏழைகளுக்கு உதவும் மனப்பான்மையும் வளர்ந்துள்ளது என்றும் கூறி, ஆச்சரியப்படுத்தினாள், தோழி.

நாளைய இந்தியா, இளம் தலைமுறையினரிடம் தான் உள்ளது என்று, அப்துல் கலாம் ஐயா கூறியுள்ளார். அதற்கேற்ப, குழந்தைகள் மனதில் நல்ல விதையை விதைக்கும் தோழியை, மனதார பாராட்டி வந்தேன்.

ஜெனோவா மனோகரன், குன்றத்துார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Sat Aug 08, 2020 9:35 pm

krishnaamma wrote:நாளைய தலைமுறை பாடசாலை!

மேற்கோள் செய்த பதிவு: 1327146

இன்றைய கால கட்டத்துக்குத் தேவையானது தான் இது போன்ற வகுப்புகள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 30 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 30 of 40 Previous  1 ... 16 ... 29, 30, 31 ... 35 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum