புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 29 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 29 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 29 I_vote_rcap 
30 Posts - 83%
heezulia

2 Posts - 6%
வேல்முருகன் காசி

dhilipdsp

1 Post - 3%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி

krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 29 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 29 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 29 3838410834

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Nov 12, 2019 10:54 pm

இயற்கையின் ரகசியம்!

கல்லாறு காட்டில், மரங்கள் நிறைந்த பகுதியில், கூடு கட்டி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தன பறவைகள். அங்கு, பூ, காய், கனிகள் நிறைந்திருந்தன; மிகவும் செழிப்பாக காட்சியளித்தது.

கனிகளை வீணாக்காமல் சாப்பிட, ஒப்பந்தம் செய்துகொண்டன பறவைகள். இதனால், அந்த பகுதி, மிகவும் ரம்மியமாக இருந்தது.

ஒரு நாள் -
அங்கு, இரண்டு குரங்குகள் வந்தன. அந்த சூழலையும், பழங்களையும் பார்த்தவுடன், மரத்துக்கு மரம் தாவி குதித்தன. பழங்களை பறித்து வீசி வீணாக்கின. மரக் கிளைகளை முறித்து, பூ, பிஞ்சுகளை உதிர்த்து நாசமாக்கின.

இதைக் கண்ட பறவைகள், 'தேவைக்கேற்ப சாப்பிடுவதில் தவறு இல்லை... இப்படி உணவை வீணாக்க கூடாது; சில நேரம், பழங்கள் கிடைக்காமல் போகலாம்; அப்போது பட்டினி கிடக்க நேரிடும்... எனவே, இயற்கை வளத்தை அழிக்காமல் காக்க வேண்டும்...' என, அறிவுரை கூறின. அதை கேட்கும் நிலையில் இல்லை குரங்குகள்.
அறிவுரை சொன்ன பறவைகளின் கூடுகளை கோபத்துடன் பிய்த்து எறிந்தன.

கவலையடைந்த பறவைகள், காட்டு ராஜாவிடம் முறையிட்டன. குரங்குகளைக் கூப்பிட்டு எச்சரித்த காட்டு ராஜா, ஒரு குறிப்பிட்ட பகுதியை காட்டி, 'எக்காரணத்துக்காகவும் இங்கிருந்து வெளியேற கூடாது...' என, உத்தரவிட்டது.

அந்த இடத்தில், பழங்களை பறித்து வீணாக்கி ஆட்டம் போட்டன குரங்குகள்; இலைகளையும் கிளைகளையும் ஒடித்து நாசமாக்கியதால், அந்த பகுதியே வெறிச்சோடியது.

பசுமை மங்கியதால் வெயில் தீயாக சுட்டது. மரங்கள் காய்ந்து, உணவு பஞ்சம் ஏற்பட்டது. உணவின்றி தவித்த குரங்குகள், உடல் மெலிந்து பரிதாபமாக அலைந்தன.

இதைக் கண்ட பறவைகள் மனம் இரங்கி, 'இப்படி ஒரு நிலைமை வரும் என்று தான், முன்பே எச்சரித்தோம்; எதையும் காதில் வாங்காமல் ஆட்டம் போட்டீர்கள்... இப்போது அனுபவிக்கிறீர்கள்...' என்று உணர்த்தின. அத்துடன், பழங்களைக் கொடுத்து, அவற்றின் பசி தீர உதவின.

மனம் திருந்திய குரங்குகள், பறவைகளின் அறிவரைப்படி நடக்க ஆரம்பித்தன. தக்க நேரத்தில் உணவளித்து, உதவியதற்கு நன்றி கூறின.

குட்டீஸ்... இயற்கையை பாதுகாப்பது நம் கடமை; காடுகளுக்கு இடையூறு செய்யாமல் இருந்தால், உலகை பசுமையால் போர்த்தி, நம்மை சிறப்பாக வாழ வைக்கும்.

நன்றி சிறுவர் மலர் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 7:53 pm

உறவும், நட்பும் மலர...

நண்பர் ஒருவர், ரத்த தானம் செய்வதை, ஒரு சமூக சேவையாக செய்து வருகிறார். சில தொண்டு நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் அவசரத்திற்கு ரத்தம் தேவைப்படும்போது, உடனே, நண்பரை தொடர்பு கொள்ளும் அளவுக்கு பிரபலமானவர்; 'ஏபி' என்ற, அபூர்வ ரக ரத்த வகையை கொண்டவர்.

சமீபத்தில், விபத்துக்குள்ளாகி, மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்த ஒருவருக்கு, ரத்தம் தேவைப்படவே, நண்பருக்கு அழைப்பு வந்தது.

மருத்துவமனையில் சென்று பார்த்தபோது, ரத்தம் தேவைப்பட்ட அந்த நபர், நண்பரின் தந்தைக்கு, தொழில் முறை போட்டியில் பகையாளி; குடும்ப ரீதியாக, ஜென்ம விரோதியாகவும் இருப்பவர்.

இவருக்கா ரத்த தானம் செய்யப் போகிறோம் என்ற கேள்வி மனதில் எழுந்தது. இருப்பினும், பகைவரே என்றாலும், ஒரு உயிரை காப்பாற்றுவது தான் மனிதாபிமானம் என்ற உயர்ந்த நோக்கத்துடன், ரத்தம் கொடுத்து திரும்பினார்.

தீவிர சிகிச்சைக்கு பின், பூரண குணமாகி வீடு திரும்பினார், அவர். ரத்தம் கொடுத்தது யார் என்பதை, தன் குடும்பத்தார் மூலம் அறிந்து, நெகிழ்ந்துள்ளார்.

ஜென்ம விரோதியாக இருந்த நண்பரின் வீட்டுக்கு, குடும்ப சகிதமாக போய், 'இனி, நமக்குள், தொழில் முறையிலோ, வேறு எந்த வகையிலோ துளியும் பகை வேண்டாம். தொழில், பணம் என, எல்லாவற்றையும் விட, மனிதாபிமானமே உயர்ந்தது என்பதை உணர்த்தி விட்டீர்; மிக்க நன்றி...' என, கண்ணீர் தளும்ப கூறியுள்ளார்.

ஆபத்தான சூழ்நிலைகளில், பகையாளியானாலும், வன்மத்தை வெளிப்படுத்தாமல், மனிதமும், மன்னிக்கும் குணத்துடன் நடந்து கொண்டால், மனித உறவுகளுக்குள் நட்பு மலரும். இதற்கு, இச்சம்பவம், சிறந்த உதாரணமாக அமைந்தது.

— ஆர். ரவிகுல ரகுவர்மன், தஞ்சாவூர்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 7:53 pm

ayyasamy ram wrote:படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 29 103459460 சூப்பருங்க சூப்பருங்க

நன்றி அண்ணா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 7:57 pm

குழந்தைகள் முன், மனைவியை குறை சொல்லாதீர்!

சமீபத்தில், என்னுடன் படித்த தோழி வீட்டுக்கு சென்றிருந்தேன். தோழியின் மகளுக்கு, வயது, 27. கம்பெனி ஒன்றில், மாதம், 20 ஆயிரம் ஊதியம் பெறுகிறாள். அவளுக்கு, மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தோழியிடம், 'ஏதாவது வரன் வந்ததா, எப்போது திருமணம்...' என, வினவினேன்.
'என் மகளுக்கு வரும் மாப்பிள்ளை, 70 - 80 ஆயிரம் சம்பளம் பெறுபவராக இருக்கின்றனர். அவர்கள் அளவுக்கு, சம்பளம் உயரும்போது, திருமணம் செய்து கொள்வதாக, மகள் கூறுகிறாள்...' என்றாள், தோழி.

'என் தந்தையை விட, சம்பளம் குறைவாக வாங்குகிறார், தாய். நான் சிறு வயதாக இருக்கும்போது, என் தந்தை, 'நீ என்னை விட குறைவான சம்பளம் வாங்கும்போதே திமிராக பேசுகிறாய்...' என, தாயை குத்திக்காட்டி, இழிவான வார்த்தைகளால், மனசை புண்படுத்துவார்.

'எனக்கும், இந்த நிலை வரவேண்டாம். மேலும், எனக்கு வயதானாலும் பரவாயில்லை. அதிக ஊதியம் பெறும்போது, மணம் செய்து கொள்கிறேன்...' என்று, வருத்தத்துடன் கூறினாள், தோழியின் மகள்.

'அவளுக்கு எப்போது சம்பளம் உயர்வது, திருமணம் நடப்பது. அதற்குள் வயதாகி விடுமே...' என்று வருத்தப்பட்டேன்.

பெற்றோரே... குழந்தைகள் முன், ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசுவதை தவிருங்கள். அது, உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

அமோகி, உளுந்துார்பேட்டை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 7:58 pm

வாழ்வு ஒருமுறைதான் வாய்க்கும்!

குழந்தை பருவத்திலிருந்தே என்னுடன் பழகி வந்த தோழி, இயல்பிலேயே நகைச்சுவை உணர்வும், இனிய சுபாவமும், யாரையும் புண்படுத்தாத மலரினும் மெல்லிய உள்ளம் கொண்டவள்.

அவள், எங்களுடன் இருந்தாலே, அந்த இடம் கலகலப்பாக அமைந்து விடும். குடும்ப கவலைகளை மறந்து, நாங்களும், அவளுடன் உரையாடி மகிழ்வது வழக்கம்.
சில நாட்களுக்கு முன், ஒரு நிகழ்ச்சியில் அவளை சந்தித்த போது, வயது கூடியது போன்ற தோற்றத்துடன், களையிழந்து, சோகமாக காணப்பட்டாள்.

'எப்போதும் கலகலவென்று இருப்பாயே... என்ன ஆயிற்று...' என்று கேட்டதும், அவள் சொன்ன விஷயம் கேட்டு, மிகுந்த அதிர்ச்சியானேன்.

திருமண விழாவிற்கு சென்றிருந்தவளை, அவளின் புகுந்த வீட்டு உறவினர் ஒருவர், 'நீ, பணி ஓய்வு பெற இன்னும் எத்தனை ஆண்டு இருக்கிறது...' என்று கேட்டிருக்கிறார்.
'இன்னும், 10 ஆண்டு இருக்கிறது...' என்று, தோழி கூற, 'ரொம்ப அதிக ஆண்டுகள் இருக்கிறதே... அதுவரை நீ இருப்பாயா?' என்று கேட்டிருக்கிறார்.

சமீபத்தில் தான், மிகப்பெரிய அறுவை சிகிச்சை செய்து, உடம்பை தேற்றிய அவளுக்கு, உறவினர் இப்படி கேட்டது, மன ரீதியாக பாதித்து விட்டது.

இப்போது, யார் என்ன ஆறுதல் சொல்லியும் கேட்காமல், தனக்கு ஏதோ ஆகிவிட்டது என்றும், தான் சீக்கிரம் இந்த உலகத்தை விட்டே போகப் போவதாகவும் புலம்பி வருகிறாள்.
வாசக நண்பர்களே... நாளை நடப்பதை யார் அறிவார்... நம்மால் மற்றவருக்கு உதவ முடியாவிட்டாலும் பரவாயில்லை, அவர்களின் மன, உடல் நலத்தை கெடுக்காமல் இருக்கலாம் அல்லவா?

வாழ்வது ஒருமுறை தான்; நல்லதையே நினைப்போம், பேசுவோம்!

சங்கமித்ரா நாகராஜன், கோவை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 8:00 pm

krishnaamma wrote:குழந்தைகள் முன், மனைவியை குறை சொல்லாதீர்!

சமீபத்தில், என்னுடன் படித்த தோழி வீட்டுக்கு சென்றிருந்தேன். தோழியின் மகளுக்கு, வயது, 27. கம்பெனி ஒன்றில், மாதம், 20 ஆயிரம் ஊதியம் பெறுகிறாள். அவளுக்கு, மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தோழியிடம், 'ஏதாவது வரன் வந்ததா, எப்போது திருமணம்...' என, வினவினேன்.
'என் மகளுக்கு வரும் மாப்பிள்ளை, 70 - 80 ஆயிரம் சம்பளம் பெறுபவராக இருக்கின்றனர். அவர்கள் அளவுக்கு, சம்பளம் உயரும்போது, திருமணம் செய்து கொள்வதாக, மகள் கூறுகிறாள்...' என்றாள், தோழி.

'என் தந்தையை விட, சம்பளம் குறைவாக வாங்குகிறார், தாய். நான் சிறு வயதாக இருக்கும்போது, என் தந்தை, 'நீ என்னை விட குறைவான சம்பளம் வாங்கும்போதே திமிராக பேசுகிறாய்...' என, தாயை குத்திக்காட்டி, இழிவான வார்த்தைகளால், மனசை புண்படுத்துவார்.

'எனக்கும், இந்த நிலை வரவேண்டாம். மேலும், எனக்கு வயதானாலும் பரவாயில்லை. அதிக ஊதியம் பெறும்போது, மணம் செய்து கொள்கிறேன்...' என்று, வருத்தத்துடன் கூறினாள், தோழியின் மகள்.

'அவளுக்கு எப்போது சம்பளம் உயர்வது, திருமணம் நடப்பது. அதற்குள் வயதாகி விடுமே...' என்று வருத்தப்பட்டேன்.

பெற்றோரே... குழந்தைகள் முன், ஒருவரை ஒருவர் மட்டம் தட்டி பேசுவதை தவிருங்கள். அது, உங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

அமோகி, உளுந்துார்பேட்டை.
மேற்கோள் செய்த பதிவு: 1309583

உண்மை, பாவம் அந்த பெண்....தாய் தந்தையர்களின் சண்டை எவ்வளவெல்லாம் குழந்தைகளை பாதிக்கிறது என்று அறிந்து அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 8:12 pm

குணம் அறிந்து, பிரச்னையை சொல்லுங்கள்!

திருமணம் செய்த ஒரு வாரத்திலேயே, 'என் தந்தை, ஒரு குடிகாரர்; கிராமத்தில், அவருக்கு, இன்னொரு மனைவி உண்டு. அதனால், ஐந்து ஆண்டுகளாக, தாயும், நானும், பாட்டி வீட்டில் இருந்தோம். தந்தை, வீட்டு செலவுக்கு, பணம் கொடுக்க மாட்டார்; தாய் மாமன்கள் தான், செலவுக்கு உதவினர். கடந்த, நான்கு ஆண்டுகளாக தான், என் தந்தை திருந்தி வாழ்கிறார்...' என்று, தன் குடும்ப விபரங்கள் அனைத்தையும், கணவரிடம் கூறியுள்ளாள், என் தோழி.
இவை அனைத்தையும், தன் அம்மாவிடம் அப்படியே ஒப்பித்து விட்டார், தோழியின் கணவர்.

வீட்டில் நடக்கும் சிறு பிரச்னைக்கு கூட, 'உங்க அப்பன் சரியா இருந்தாதானே, நீ சரியா இருப்பே... உன் அம்மா, வாழாம இருந்தவதானே, உன்னையும் கூட்டிகிட்டு போய் வீட்டில் வெச்சுக்கலாம்ன்னு பாக்குறா போல...' என்று, தினமும் ஏதாவது ஒன்றை சொல்லி, குத்திக் காட்டுகிறார், மாமியார்.

'நான், சாதாரணமாக தான் சொன்னேன்... அவங்க, இப்படி நடந்து கொள்வாங்கன்னு எதிர்பார்க்கலை... வயதானவர்கள் தானே, விடு...' என்கிறாராம், தோழியின் கணவர்.
தோழியரே... வீட்டு பிரச்னைகளை, கணவரிடம் சொல்வதில் தவறு இல்லை. அதற்கு முன், அவரின் குண நலன்களை தெரிந்து, பகிர்வது நல்லது; இல்லையேல், இதுபோன்ற அவஸ்தைகளை நீங்களும் சந்திக்க நேரிடும்.

எஸ். செந்தில், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 8:14 pm

ஓவியமாகும், குழந்தைகளின் கிறுக்கல்கள்!

நண்பரின் புதுமனை புகு விழாவுக்கு சென்றிருந்தேன். வீட்டின் சுவர்களில், அழகாகவும், நேர்த்தியாகவும் ஓவியங்கள், 'பிரேம்' போட்டு மாட்டப்பட்டிருந்தன.

நண்பர், கலா ரசிகர். எனவே, அவை, ஏதோ, பெரிய ஓவியரின் படங்கள் போல என, நினைத்து, அருகில் சென்று பார்த்து, வியந்தேன். அந்த ஓவியங்கள், குழந்தை தனமாகவும், சாதாரணமாகவும் இருந்தன. ஆனால், ஓவியங்களின் நேர்த்தி அருமையாக இருந்தது. சில, குழந்தைகளின் கிறுக்கல்களாகவும் இருந்தது.

அவரிடம் விசாரித்ததில், 'இவை அனைத்தும், என், 10 வயது மகள் வரைந்த ஓவியங்கள் மற்றும் பழைய வீட்டில் இருந்த சுவர் கிறுக்கல்கள். ஏதேதோ படங்கள் வாங்கி மாட்டுகிறோம்.

'நம் குழந்தையின் ஓவியத்தை மாட்டி வைத்தால் என்ன என்ற எண்ணத்தில், அவள் வரைந்த பெரிய ஓவியங்களை தனியாகவும், சின்ன சின்ன ஓவியங்களை ஒன்றாக சேர்த்து, ஒரே படமாகவும், பல, 'பிரேம்'களில் மாட்டி விட்டேன். சிறு வயது சுவர் கிறுக்கல்களை புகைப்படம் எடுத்து, அதையும் தனியே, 'பிரேம்' போட்டு விட்டேன். இதை பார்த்த என் மகளுக்கு, ஒரே சந்தோஷம்...' என்றார்.

அவரின் மகளுக்கோ, பெருமையும், சந்தோஷமும் தாள முடியவில்லை.
அழகும், ரசனையும் நம்மிடமே தான் இருக்கிறது என்று தெரிந்து, அவரையும், மகளையும் பாராட்டி வந்தேன்.

கி. ரவிக்குமார், நெய்வேலி.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 8:14 pm

krishnaamma wrote:ஓவியமாகும், குழந்தைகளின் கிறுக்கல்கள்!

பெரியவர்கள் ஆனதும் கூட இதை பார்க்கும் பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கும்... சந்தேகமே இல்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Dec 11, 2019 8:16 pm

படித்த முட்டாள்!

தோழியின் மகளை, பெண் பார்க்க வந்தனர். முதுகலை பட்டம் பெற்று, ஓ.எம்.ஆரில்., ஒரு எம்.என்.சி., கம்பெனியில், மாதம், 60 ஆயிரம் சம்பளம் வாங்குகிறார், மாப்பிள்ளை. வசதியான குடும்பம்.

இரு வீட்டாருக்கும் பிடித்து போக, அடுத்து, திருமண ஏற்பாடுகள் குறித்த, பேச்சு வந்தது.
அப்போது, ஒரு அரசியல் கட்சியின் பெயரை குறிப்பிட்டு, 'எங்க அப்பா காலத்துலேர்ந்து எங்க குடும்பம், அந்த கட்சியின் அபிமானிகள்; என் திருமணம், அந்த அரசியல் கட்சி தலைவர், தாலி எடுத்துக் கொடுத்து தான் நடக்க வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளை செய்யுங்கள்...' என்று, கட்டளையிட்டுள்ளான், மாப்பிள்ளை.

இந்த நிபந்தனையை கேட்ட தோழியின் மகள், 'எனக்கு, இந்த திருமணம் வேண்டாம்; இந்த மாப்பிள்ளை, குடும்பம் நடத்த தகுதி இல்லாதவன். அக்கட்சித் தலைவனின் கையால் தாலி எடுத்துக் கொடுத்து தான், திருமணமே நடைபெற வேண்டும் என்று, இப்போது நிபந்தனை போடுகிறான்.

'நாளையே, அக்கட்சித் தலைவன் கைது செய்யப்பட்டு, சிறை சென்றால், அவரின் விடுதலைக்காக, தனக்குத் தானே நெருப்பு வைத்து, தற்கொலை செய்து கொள்ள மாட்டான் என்பது என்ன நிச்சயம்... அக்கட்சி தலைவன் வீட்டிலேயே ஏதாவது பெண் இருந்தால், அவனை கட்டிக்க சொல்லுங்க... எனக்கு வேண்டாம்...' என்று, ஆவேசத்துடன் கூறினாள்.

தோழியும், அவளது குடும்ப உறுப்பினர்களும், மாப்பிள்ளை வீட்டாரும், அதிர்ந்து உறைந்தனர். நான், அவள் மன உறுதியை மனமுவந்து பாராட்டினேன்.
நாட்டில், என் தோழியின் மகள் போல், நான்கு பேர் இருந்தால் போதும், கட்சி, கொடி, தலைவன் என்று அலையும் இது போன்ற படித்த முட்டாள்கள் திருந்துவர்.

வசந்தா சாமிநாதன், சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 29 of 40 Previous  1 ... 16 ... 28, 29, 30 ... 34 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக