ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

+10
SK
balakarthik
பாலாஜி
சிவனாசான்
ராஜா
விமந்தனி
கவின்
M.Jagadeesan
ayyasamy ram
krishnaamma
14 posters

Page 26 of 40 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40  Next

Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 Empty படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி

krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?

சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 3838410834

Last edited by krishnaamma on Thu Feb 23, 2017 10:22 pm; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Wed Mar 07, 2018 11:40 am

மருத்துவமனைக்கு செல்லும்போது... 

நோயாளி உறவினரை காண, மருத்துவமனை செல்ல நேர்ந்தது. வழக்கமாக பழங்கள், ஹார்லிக்ஸ் எடுத்துச் செல்லவில்லை. ஒரு ஹாட் பேக்கில், வீட்டில் தயார் செய்த சப்பாத்தி, காய்கறி கூட்டு மற்றும் வெங்காய சட்னி எடுத்துச் சென்றேன். 

இதைப் பார்த்த நோயாளியுடன் இருந்த உறவுக்கார பெண்மணி, 'அம்மாடி... உப்பு சப்பு இல்லாத கேன்டீன் உணவு சாப்பிட்டு, நாக்கு செத்துப் போச்சு. வீட்டிற்கும் போக முடியாது; இங்குதான் இருக்க வேண்டிய நிலை. இந்த சப்பாத்தியும், சட்னியும் அமிர்தமாய் இருக்கு...' என்று கூறி சாப்பிட்டார்.

பெரிய பிளாஸ்கில், மணக்க மணக்க கொண்டு சென்ற காபியை, அருகில் இருந்த உறவினர்கள், ஆளுக்கு ஒரு மடக்கு குடித்து, என்னை கொண்டாடி விட்டனர். 

நோயாளிக்கு, மருத்துவமனையிலேயே உணவு கிடைக்கும். உடன் இருக்கும் உதவியாளருக்கு, நாம் உணவு கொண்டு செல்வது நல்ல உதவி தானே! 

சீனு சந்திரா, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by T.N.Balasubramanian Wed Mar 07, 2018 1:47 pm

உடனே, அனைவர் முன்னிலையிலும், மணப்பெண் அதிரடியாக, 'இந்த மாப்பிள்ளை வேண்டாம்ப்பா... மாப்பிள்ளையோட அப்பாவுக்கு சந்தேக புத்தி இருக்கு; இது கொஞ்ச காலம் கழிச்சு, மாப்பிள்ளைக்கும் வர வாய்ப்பிருக்கு. அப்படி வர்றப்ப நான் நிம்மதியா வாழ முடியாது. அதனால, வேற இடம் பாருங்கப்பா...' என்று சத்தமாக சொல்ல, உறவினர் ஆடிப் போனார்.

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 BF172-11KM

வாழ்த்துகள் சகோதரி, வாங்கிக்கொள்ளுங்கள் அனுப்பியுள்ள பூச்செண்டை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by SK Wed Mar 07, 2018 1:55 pm

இப்போதெல்லாம் பேயறைந்தது போல் திரிகிறார் அந்த உறவினர். பெண் வீட்டார் தம்மை எதிர்த்து பேச மாட்டார்கள் என்ற தைரியத்தில், வாய்க்கு வந்தபடி பேசும் மாப்பிள்ளை வீட்டாருக்கு, இது, சரியான சாட்டையடி!

செருப்படி

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Apr 06, 2018 11:01 am

SK wrote:

இப்போதெல்லாம் பேயறைந்தது போல் திரிகிறார் அந்த உறவினர். பெண் வீட்டார் தம்மை எதிர்த்து பேச மாட்டார்கள் என்ற தைரியத்தில், வாய்க்கு வந்தபடி பேசும் மாப்பிள்ளை வீட்டாருக்கு, இது, சரியான சாட்டையடி!

செருப்படி
மேற்கோள் செய்த பதிவு: 1261579

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Apr 06, 2018 11:50 am

தேவையில்லாத நடைமுறையை மேற்கொள்ளாதீர்!

சமீபத்தில், என் உறவினர் இல்ல திருமணத்திற்கு சென்றிருந்தேன். திருமண மண்டபம், சந்தோஷத்தில் களை கட்டியிருந்தது; எல்லாம் தாலி கட்டும் வரை தான். 

திருமாங்கல்யம் கட்டப்போகும் நேரத்தில், உறவினர் ஒருவர், 'தாலி கட்டும்போது, வெடிப்பதற்கு பேப்பர் வெடி இல்லயா...' என்று கேட்க, அருகிலிருந்த மணப்பெண்ணின் சகோதரர், 'இல்லையே மச்சான்...' என்று அசடு வழிய, 'என்ன மாப்ளே... ஒரே பொண்ணு கல்யாணத்த, 'ஜாம் ஜாம்'ன்னு நடத்த வேண்டாமா...' என்று கொம்பு சீவ, மணப்பெண்ணின் சகோதரர் வீராவேசமாக, 'ஒரு நிமிஷம் மச்சான்...' என்று சொல்லி, தன் இருசக்கர வாகனத்தை எடுத்து, மின்னலென பறந்தார். 

முகூர்த்த நேரம் நெருங்கவே, எல்லாரும் மணமகளின் சகோதரரை தேட, அவர் வரவில்லை. 'முகூர்த்த நேரம் முடிவதற்குள் தாலி கட்ட வேண்டும்...' என்று மணமகன் வீட்டார் வற்புறுத்தவே, சகோதரர் இல்லாமலேயே திருமணம் முடிவுற்றது.

சற்று நேரத்தில், ரத்தம் வழிய வந்தார், சகோதரர்; அவரை பார்த்த அனைவருக்கும் பேரதிர்ச்சி. காரணம், இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றதில், விபத்து ஏற்பட்டுள்ளது. பெற்றோரோ பதறியபடி, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல, மாப்பிள்ளையின் தாயாரோ, 'உன் தம்பிக்கு அறிவில்லையா... அக்கா திருமணத்தில், இப்படியா அடிபட்டு வந்து நிற்பது... சகுனமே சரியில்லை...' என, பொறிந்து தள்ள, மணவறையிலேயே அழுது விட்டார், மணமகள்.

மாப்பிள்ளை, தன் தாயாரை கண்டிக்க, 'தாலி கட்டியவுடனே என் மகனை கைக்குள் போட்டுக்கிட்டயா...' என்று மணமகளை பார்த்து மாமியார் கத்த, அவர், 'ஓ'வென அழ, செய்வதறியாது எல்லாரும் குழம்பி நின்றோம்.

திருமண வீட்டிற்கு வந்தோமா, மணமக்களை வாழ்த்தினோமா என்று இல்லாமல், தேவையில்லாததை செய்து, பிரச்னையை ஏற்படுத்தும் இத்தகைய உறவினர்கள், கல்யாணத்துக்கு வரவே வேண்டாம்!
— ப.சரஸ்வதி, மதுரை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Apr 06, 2018 11:51 am

krishnaamma wrote:தேவையில்லாத நடைமுறையை மேற்கொள்ளாதீர்!

மேற்கோள் செய்த பதிவு: 1265330

உண்மைதான், இது போல பக்கத்தில் இருப்பவர்கள் சொல்வதை கேட்பது என்பது எப்பபோழுதுமே ஆபத்தில் தான் முடியும்............'பியர் பிரஷர்' என்பார்களே அது இல்லாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Apr 06, 2018 11:52 am

இன்னொரு மொழி கற்றுக் கொள்ளலாமே!

சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன்; தோழியின், 25 வயது மகன், மிகவும் சிரத்தையோடு, 'பெங்காலி' மொழியை, ஒரு புத்தகம் மூலம் கற்றுக் கொண்டிருப்பதை பார்த்தேன். அதுபற்றி அவனிடம் விசாரித்தபோது, 'கோல்கட்டாவில் உள்ள பன்னாட்டு கம்பெனியில் வேலை கிடைத்துள்ளது. பெங்காலி தெரிந்தால், அன்றாட பணியை எளிதாக செய்ய முடிவதோடு, பணியாளர்களிடம், அவர்களின் தாய்மொழியான பெங்காலியில் பேசினால், சிறப்பாக வேலை வாங்க முடியும்...' என்று சொன்னான்.

'அந்த மொழியை கற்காதே... இந்த மொழியை கற்காதே...' என, ஆர்ப்பாட்டம் செய்யும் அரசியல்வாதிகளுக்கு செவி மடுக்காமல், கூடுதலாக, ஒரு மொழியை கற்பது, வாழ்க்கையை மேம்படுத்த உதவும்! 

 எம்.முருகலட்சுமி, நெல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Apr 06, 2018 11:52 am

பாடல் பதிவு மட்டுமல்ல; பொது அறிவும் உண்டு!

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையத்தில், 'ஹைதர் காலம் தியாகு பாடல் பதிவகம்' என்ற கடை உள்ளது. எனக்கு நினைவு தெரிந்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது, இக்கடை. சுதந்திரம் அடைந்த பின் வந்த சினிமா படப் பாடல்கள், புதிய பாடல் பதிவுகளும் இங்கு உள்ளன. அந்த பதிவகத்தின் முன், இரண்டு கரும்பலகையில், தினமும், பொது அறிவு கேள்விகளுடன், அதற்கான பதிலையும் எழுதி வைத்திருப்பர்.

சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும் வகையில், கேள்வியை மட்டும் எழுதி வைத்து, 'இதற்கு பதில் தெரியணுமா... நாளை...' என்று எழுதி வைத்து விடுவர். முதல் நாள் எழுதும் கேள்விக்கு, மறுநாள், மற்றொரு கரும்பலகையில், அதற்கான பதிலை எழுதி வைத்திருப்பர். இது, படிப்பவரின் ஆவலை துாண்டும் விதத்தில் இருக்கும். 

அப்பதிவகம் செய்யும் இச்சேவை, பள்ளி மாணவ, மாணவியருக்கும், பொதுத் தேர்வு எழுதுவோருக்கும் மிகவும் உதவியாக இருப்பதால், காலை, மாலை நேரங்களில், 'ஹைதர் காலம்' தியாகு பாடல் பதிவகம் முன், மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பொது அறிவு தகவல்களை படித்தும், எழுதியும் பயனடைந்து வருகின்றனர்.

பொதுசேவை செய்யும் அப்பதிவக அன்பரை, பலரும் பாராட்டுகின்றனர். தன்னலம் கருதாது, நுாலகத்திற்கு சென்று, பல மணி நேரம் அரிய தகவல்களை திரட்டி வந்து, பொதுநலத்தோடு, இப்பணியை இன்முகத்துடன் செய்து வரும் அப்பதிவக அன்பர் பாராட்டுக்குரியவர் தானே!

ஏ.எஸ்.யோகானந்தம், ஈரோடு.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Apr 06, 2018 11:56 am

மல்லிகையின் மணம்!

என் அம்மாவின் தோழியை சந்திக்க சென்றிருந்தேன்; அவர்களது வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை செடிகள் மட்டும் இருக்கவே, 'உங்கள் தோட்டத்தில் ஏன் மல்லிகை பூக்களை மட்டும் வளர்க்கிறீர்கள்...' என்று கேட்டேன். 

அதற்கு அவர், 'எங்க வீட்டுல வேலை செய்யும் பெண், என் தோட்டம் வீணாக கிடப்பதைப் பார்த்து, தான் பராமரிப்பதாக கூறி, மல்லிகை செடிகளை நட்டு வளர்த்து வருகிறாள். வீட்டு வேலை முடிந்ததும், பூக்களை பறித்து கட்டி, விற்று விடுவாள். இந்த கூடுதல் வருமானம் அவளுக்கு மிகவும் உதவியாக இருக்கு...' என்றார்.

அவர்கள் வீடு, மல்லிகை மணத்தால் நிரம்பியிருப்பதுடன், துாய்மையான காற்றும் கிடைக்கிறது. 
வாசகர்களே... நீங்களும், வீணாக இருக்கும் வீட்டுத் தோட்டத்தை, பயன் உள்ளதாக மாற்றலாமே!

ர.சுகந்தி, சென்னை.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by krishnaamma Fri Apr 06, 2018 12:01 pm

krishnaamma wrote:மல்லிகையின் மணம்!

என் அம்மாவின் தோழியை சந்திக்க சென்றிருந்தேன்; அவர்களது வீட்டுத் தோட்டத்தில் மல்லிகை செடிகள் மட்டும் இருக்கவே, 'உங்கள் தோட்டத்தில் ஏன் மல்லிகை பூக்களை மட்டும் வளர்க்கிறீர்கள்...' என்று கேட்டேன். 

அதற்கு அவர், 'எங்க வீட்டுல வேலை செய்யும் பெண், என் தோட்டம் வீணாக கிடப்பதைப் பார்த்து, தான் பராமரிப்பதாக கூறி, மல்லிகை செடிகளை நட்டு வளர்த்து வருகிறாள். வீட்டு வேலை முடிந்ததும், பூக்களை பறித்து கட்டி, விற்று விடுவாள். இந்த கூடுதல் வருமானம் அவளுக்கு மிகவும் உதவியாக இருக்கு...' என்றார்.

அவர்கள் வீடு, மல்லிகை மணத்தால் நிரம்பியிருப்பதுடன், துாய்மையான காற்றும் கிடைக்கிறது. 
வாசகர்களே... நீங்களும், வீணாக இருக்கும் வீட்டுத் தோட்டத்தை, பயன் உள்ளதாக மாற்றலாமே!

ர.சுகந்தி, சென்னை.
மேற்கோள் செய்த பதிவு: 1265334

எல்லாப் பூக்களையும் பறித்து விட்டால் எப்படி வாசம் வரும்?........அதுவும் விற்பதற்கு என்றால் மொக்காகவே பறித்துவிடுவார்களே............. அநியாயம் அநியாயம் அநியாயம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 26 Empty Re: படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 26 of 40 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 40  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum