புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_vote_rcap 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_vote_rcap 
2 Posts - 6%
dhilipdsp
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_vote_rcap 
1 Post - 3%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_vote_lcapபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_voting_barபடித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!


   
   

Page 24 of 40 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 06, 2018 8:16 am

மருமகளை மெச்சும் மாமியார்!
என் உறவுக்கார பெண்ணை சந்திக்க சென்றிருந்தேன். கட்டிலில் அவள், 'ஹாயாக' துாங்கிக் கொண்டிருக்க, அவளது மாமியார், அடுப்படியில் வேலை செய்தபடி இருந்தார். அவருக்கு ஒத்தாசை செய்தபடி இருந்தார், மாமனார். என்னை வரவேற்று உபசரித்த அவர்கள், 'மருமகளுக்கு உடம்புக்கு முடியலம்மா... அதான், ஓய்வுல இருக்கா. நீ விஷயத்தை சொல்; அவள் எழுந்ததும் சொல்லி, போன் பண்ண சொல்றேன்; துாங்கறவள எழுப்ப வேணாம்...' என்றனர்.
வந்த விஷயத்தைக் கூறி விடைபெற்று திரும்பினேன். சில மணி நேரத்துக்கு பின், அவளிடமிருந்து அழைப்பு வந்தது... 'என்னடி உடம்புக்கு?' எனக் கேட்டேன். 


'பீரியட் டைம்டி... அதுதான், அசதியில் துாங்கிட்டேன்...' என்றவள், 'இந்த மாதிரி சமயங்கள்ல நாலு நாளைக்கு என்னை, என் மாமனாரும், மாமியாரும் எந்த வேலையும் செய்ய விட மாட்டாங்க. சமைப்பது, கூட்டுவது, துவைப்பது என, எல்லாமே அவங்க தான்...' என்றாள். 


வியந்த நான், 'கொடுத்து வைச்சவடி நீ...' என, அவளை வாழ்த்தினேன். 'அந்த நேரம்' வந்தாலே, மருமகளை கரித்துக் கொட்டும் மாமியார்களிடையே, தானும், 'அதை' அனுபவித்தவள் தானே என புரிந்து, பரிவு காட்டிய அவளது மாமியாரை, மானசீகமாய் பாராட்டினேன். மற்ற மாமியார்களும் இப்படி இருப்பரா! 


ஜி.சக்தி, திருப்பூர்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 06, 2018 8:20 am

'பள பள' மேனியின் ரகசியம்! 

என் உறவினரின் வீட்டுக்கு சென்றிருந்தேன். உறவினரின் பாட்டி, ஒரு வயது நிரம்பிய, தன் கொள்ளுப் பேத்தியை, ஏதோ பொடியை தேய்த்து குளிப்பாட்டிக் கொண்டிருந்தார். அந்த பொடி நல்ல வாசனையுடன் இருந்தது. 


'இது என்ன பொடி?' என்று கேட்டேன். 'இது, மூலிகை பொடி; பாசிப்பயறு, சந்தனம், வெட்டிவேர், விளாமிச்சை வேர், கார்போகரிசி, கிச்சிலிக் கிழங்கு என எல்லாம் கலந்தது. இவற்றை தனித்தனியாக உலர்த்தி, பொடி செய்து, கலந்து வைச்சுக்கலாம்; இதற்கு பெயர் நலங்கு மாவு. 



இதனுடன், கஸ்துாரி மஞ்சள் துாளையும் சேர்த்துக்கலாம். இதை பூசி குளிச்சா, நாள் முழுவதும் உடலில் மணம் வீசும். இந்தக் கலவையில், அவரவர் விருப்பத்திற்கேற்ப உலர்ந்த ரோஜா இதழ்கள், வேப்பிலை, ஆவாரம்பூ, வெந்தயம், ஏலரிசி மற்றும் அகிற்கட்டை அகியவற்றையும் சேர்த்துக்கலாம்...' என்றார்.

வீட்டிற்கு வந்த பின், இந்த நலங்கு மாவில், அப்படி என்ன இருக்கிறது என்று புத்தகங்களை புரட்டிய போது, கிச்சிலிக்கிழங்கு - வாசனை தரக்கூடியது; தோல் புண் ஆற்றும். கோரைக் கிழங்கு - சொறி சிரங்கு, வியர்வை நாற்றம் போக்கும்; பாசிப்பயறு - குளிர்ச்சி; வெட்டி வேர் - பித்தம் தணிக்கும்; கொப்புளம், வேனல் கட்டியை நீக்கும். சந்தனம் - கிருமி நாசினி, வாசனை. கார்போகரிசி - தோல் நோய், படர் தாமரையை நீக்கும். இப்பொடி குளியல், கொசு கடியிலிருந்து தப்பிக்க உதவுமாம்.


இயந்திர உலகில் நாம் சோம்பேறிகளாக, சோப்புக்கு மாறி விட்டோம். சற்று நிதானமாக, பொறுமையாக நேரம் ஒதுக்கி இந்த குளியல் பொடியை தயார் செய்து பயன்படுத்த பழகினால், ஆரோக்கியமாக, 'மணம்' நிறைவாக உலா வரலாம். என்ன... மூலிகை குளியல் பொடி தயாரிக்க கிளம்பிட்டீங்களா?


எஸ்.ராமு, திண்டுக்கல்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 06, 2018 11:32 am

வித்தியாசமான முயற்சி
என் உறவினரின் மகன் திருமணத்திற்கு சென்றிருந்தேன்; மணமக்கள் இருவரும் சாப்ட்வேர் பணியில் உள்ளவர்கள்.


திருமணத்தில் விருந்து முடிந்ததும், வந்திருந்தோர் மொய் எழுத, மணமகன் வீட்டை சேர்ந்த ஒருவர், ஒரு நோட்டில், மொய் எழுதுவோரின் பெயரையும், அவர்கள் அளிக்கும் மொய் தொகையையும் எழுதிக் கொண்டிருந்தார். அதேநேரம், அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த அவ்வூர் கோவிலை சேர்ந்த சிப்பந்தி ஒருவர், மொய் எழுதுவோரின் பெயரை எழுதி, அவர்கள் அளிக்கும் தொகைக்கு ஏற்ப, கோவில் சார்பாக, நன்கொடை ரசீதை வழங்கிக் கொண்டிருந்தார். இது, எனக்கு வியப்பாக இருந்தது. மணமகனின் தந்தையை அணுகி, விவரம் கேட்டேன். 



விருந்தினர்கள் செலுத்தும் மொய் பணம் முழுவதும் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அளித்து விடும்படியும், அதே நேரத்தில், இதனால் கிடைக்கும் புண்ணியம், எல்லா சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும், விருந்தினர்களுக்கும் போய் சேரட்டும் என்று மணமகன் யோசனை சொன்னதாக கூறினார்.நான் இதுவரை பார்த்த மண விழாக்களிலேயே, இந்த மண விழா, புதுமையானதும், போற்றத்தக்கதாகவும் இருந்தது. இன்றைய படித்த இளைஞர்களிடையே ஆன்மிகம் இன்னும் மடிந்து விடவில்லை என்பதை அறிந்து மகிழ்ந்தேன்.


பெயர், ஊர் வெளியிட விரும்பாத வாசகர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Mar 06, 2018 1:09 pm

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 3838410834



krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 06, 2018 6:00 pm

SK wrote:படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 24 3838410834
மேற்கோள் செய்த பதிவு: 1261410

மிக்க நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 06, 2018 6:03 pm

மருத்துவ பரிசோதனைக்கு போகிறீர்களா பர்ஸ் பத்திரம்!


கடந்த மாதம் வரை ஆரோக்கியமாக வலம் வந்த என் நண்பன், சில நாட்களாக சோர்வுடன், பித்துப் பிடித்தாற் போன்று காணப்பட்டான்.
'என்னடா ஆச்சு... நல்லாத்தானே இருந்தே...' என, வினவினேன். 'ஒண்ணுமில்ல மச்சான்... 'நாலாயிரம் ரூபாய்க்கான முழு உடல் பரிசோதனையை, தள்ளுபடியில ஆயிரம் ரூபாய்க்கு செய்து கொள்ளலாம்!' என்ற விளம்பரத்தைப் பார்த்து, பரிசோதனை செய்தேன். ரிசல்ட்ல எனக்கு, கொலஸ்ட்ரால், பிளட் பிரஷர் மற்றும் சுகர் ஆரம்ப நிலையில இருக்குன்னு சொல்லி, ஒரு மாசத்துக்கு ஆறாயிரம் ரூபாய்க்கு மருந்து, மாத்திரை கொடுத்திருக்காங்க. அதுலேர்ந்து ஒரே பீலிங்கா இருக்கு...' என்றான்.


கார்ப்பரேட் கம்பெனிகளின் பிடியில் மருத்துவத்துறை சென்றது முதல், நாட்டில் உள்ள அனைவரையும் நோயாளிகளாக மாற்றும் ஒரு சூழ்ச்சி, சத்தமில்லாமல் நடந்து வருகிறது. 


'தலைக்கு வந்தது தலைப் பாகையோட போச்சுங்கற மாதிரி, ஏழாயிரம் ரூபாய் நஷ்டம், நஷ்டமாகவே போகட்டும்; உன் மன திருப்திக்கு, தனித் தனியா ஒரு ஸ்பெஷலிஸ்ட் கிட்ட, சுகர், பிரஷர், கொலஸ்ட்ரால் மூணையும், 'செக்' பண்ணி, அந்த ரிசல்ட்டை ஒப்பிட்டுப் பார்த்து, உனக்கு கோளாறு இருக்கா, இல்லயாங்கறதை முடிவு செய்துக்க...' என்று அறிவுறுத்தினேன்.
தள்ளுபடி விலையில் விற்கப் படும் உடைகள் மாத்திரமல்ல, மெடிகல் டெஸ்டுகளும் பிரச்னைக்குரியவை தான்.


ஜி.கோபால கிருஷ்ணன், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Mar 06, 2018 9:23 pm

நன்றி
(ஒரு முறை சொன்னாலே போதாதா ? இரு முறை கூறி அழுத்தம் கொடுக்க நினைத்தீரோ?
உங்கள் பதிவு#237 ஐ நீக்கி எந்தன் மறுமொழிக்கு வழி வகுத்துக்கொண்டேன்
)

ரமணியன் சிரி சிரி சிரி



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 9:01 am

T.N.Balasubramanian wrote:நன்றி
(ஒரு முறை சொன்னாலே போதாதா ? இரு முறை கூறி அழுத்தம் கொடுக்க நினைத்தீரோ?
உங்கள் பதிவு#237 ஐ நீக்கி எந்தன் மறுமொழிக்கு வழி வகுத்துக்கொண்டேன்
)

ரமணியன் சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1261480


நன்றி ஐயா, நெட் ஸ்லொவ் வாக இருந்தது, 'continue '? என்று கேட்டது... மீண்டும் கிளிக் செய்தேன்...எனவே இருமுறை வந்திருக்கும்.............திருத்தியதற்கு நன்றி ஐயா ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Mar 07, 2018 10:07 am

krishnaamma wrote:
T.N.Balasubramanian wrote:நன்றி
(ஒரு முறை சொன்னாலே போதாதா ? இரு முறை கூறி அழுத்தம் கொடுக்க நினைத்தீரோ?
உங்கள் பதிவு#237 ஐ நீக்கி எந்தன் மறுமொழிக்கு வழி வகுத்துக்கொண்டேன்
)

ரமணியன் சிரி சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1261480


நன்றி ஐயா, நெட் ஸ்லொவ் வாக இருந்தது, 'continue '? என்று கேட்டது... மீண்டும் கிளிக் செய்தேன்...எனவே இருமுறை வந்திருக்கும்.............திருத்தியதற்கு நன்றி ஐயா ! புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1261497

எனக்கும் ஏற்பட்டு இருக்கு.
நேற்று சிவனாசான் ஒரு பதிவு மும்முறை வந்திருந்தது..

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 07, 2018 11:28 am

மணப்பெண்ணின் தைரியம்!


என் உறவினர் ஒருவர், எந்த விஷயத்திலும் எளிதில் திருப்தி அடைய மாட்டார். அவர் மகனுக்கு திருமணத்திற்கு வரன் பார்த்து வருகிறார். சமீபத்தில், ஜாதகம் பொருந்தி, எல்லாம் கூடி வந்த நிலையில் பெண்ணை நிச்சயம் செய்ய தயங்கவே, பெண்ணின் தந்தை, 'நீங்க எதிர்பார்த்தபடியே என் பெண் இருக்கிறாள்; நீங்க கேட்ட சீர்வரிசையையும் செய்ய சம்மதிச்சுட்டோம்; அப்புறம் என்ன தயக்கம்...' என்று கேட்டார். 


அதற்கு உறவினர், 'பெண்ணோட அம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருக்கிறதா சொன்னீங்களே... இது, கொஞ்ச காலம் கழிச்சு பெண்ணுக்கும் வர வாய்ப்பிருக்கு; அதான் யோசிக்கிறேன்...' என்று சொல்ல, உடனே, அனைவர் முன்னிலையிலும், மணப்பெண் அதிரடியாக, 'இந்த மாப்பிள்ளை வேண்டாம்ப்பா... மாப்பிள்ளையோட அப்பாவுக்கு சந்தேக புத்தி இருக்கு; இது கொஞ்ச காலம் கழிச்சு, மாப்பிள்ளைக்கும் வர வாய்ப்பிருக்கு. அப்படி வர்றப்ப நான் நிம்மதியா வாழ முடியாது. அதனால, வேற இடம் பாருங்கப்பா...' என்று சத்தமாக சொல்ல, உறவினர் ஆடிப் போனார்.


இப்போதெல்லாம் பேயறைந்தது போல் திரிகிறார் அந்த உறவினர். பெண் வீட்டார் தம்மை எதிர்த்து பேச மாட்டார்கள் என்ற தைரியத்தில், வாய்க்கு வந்தபடி பேசும் மாப்பிள்ளை வீட்டாருக்கு, இது, சரியான சாட்டையடி!


ஆர்.பிரபு, கோவை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 24 of 40 Previous  1 ... 13 ... 23, 24, 25 ... 32 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக