புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10 
1 Post - 50%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10 
284 Posts - 45%
heezulia
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10 
237 Posts - 37%
mohamed nizamudeen
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10 
20 Posts - 3%
prajai
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10 
7 Posts - 1%
mruthun
படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_m10படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது - II :) --குலுக்கல் முறையில் வியாபாரம்!


   
   

Page 14 of 40 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 10:56 pm

First topic message reminder :

வாவ்!....இந்த திரி இரண்டாக பிரிந்து விட்டது....நன்றி நண்பர்களே! ஜாலி ஜாலி ஜாலி


krishnaamma wrote:100 சதவீத ஓட்டு பதிவாக வேண்டுமா?


சமீபத்தில், ரயில் பயணத்தின் போது, கணினி மென்பொருள் பணியாளர் ஒருவரிடம் பேசினேன். எங்கள் பேச்சு, பொதுவான விஷயங்களிலிருந்து தேர்தல், மீட்டிங், வாக்குறுதி, இலவசம், ஓட்டளிக்கும் முறை, விடுமுறை மற்றும் செலவுகள் என்று நீண்டது.

அப்போது, தேர்தல் நடைமுறையில், சீர்திருத்தம் கொண்டு வர, அவர் தெரிவித்த சில கருத்துகள், எனக்கு வியப்பை அளித்தன. அவை நடைமுறைப்படுத்தப்பட்டால், தேர்தலுக்கான பொருட்செலவை, பெருமளவு தவிர்க்கலாம் என்று தோன்றியது.

தற்போது, பெரும்பாலான மக்கள் மொபைல் போன் மற்றும் ஆதார் கார்டு வைத்துள்ளனர். இன்னும் ஓரிரு ஆண்டுகளில், இவை இல்லாதவர்களே கிடையாது எனும் நிலை வரும்.

தற்போது, தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக, மொபைல் போன் மூலம், ஆன்லைன் காஸ், 'புக்கிங்' செய்கிறோம். சூப்பர் சிங்கர் போன்ற, 'டிவி' நிகழ்ச்சிகளில், போன் மற்றும் கம்ப்யூட்டர் மூலம், வீட்டில் அமர்ந்தபடியே ஓட்டளிக்கிறோம். இதுபோல, பொதுத்தேர்தலிலும் ஓட்டளிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அதற்கேற்ற, 'சர்வர்'கள் இருந்தால் போதும்.

முதலில், நம் ஆதார் கார்டு நகல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை நகலுடன், நம் மொபைல் போன் நம்பரை தேர்தல் கமிஷனிடம் தந்து, பதிவு செய்ய வேண்டும். 'ஒன் டைம் பின்' எனப்படும், சங்கேத குறியீடு எண்ணை, கமிஷனின் கணிப்பொறி உருவாக்கும்; நாம், அதை மறக்காமல், மெமரியில், 'ஸ்டோர்' செய்ய வேண்டும்.

தேர்தல் தினத்தன்று எங்கு இருந்தாலும், மொபைல்போன் எஸ்.எம்.எஸ்., மூலம் அல்லது கணிப்பொறி மூலம், 'ஒன் டைம் பாஸ்வேர்டை' பயன்படுத்தி ஓட்டளிக்கலாம். நம் ஓட்டு, தேர்தல் கமிஷன் சர்வரில் சேர்ந்து விடும். இதை, உறுதி செய்யும் வண்ணம், நமக்கு குறுந்தகவல் வரும்.

சிக்னல் பிரச்னை இருக்கலாம் என்பதால், இரண்டு, மூன்று நாட்களுக்கு தேர்தல் கமிஷனின், 'சர்வர்' திறந்தே இருக்கும்.

இதனால், ஓட்டிங் மிஷன், பூத், அதிகாரிகள், நீண்ட வரிசை, பாதுகாப்பு, கலவரம், அடிதடி மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை முற்றிலும் தவிர்க்கலாம்.

ஓட்டளிக்கும் போது, 'ஒன் டைம் பாஸ்வேர்ட்' மட்டுமே, கமிஷனின் கணிப்பொறியில் தோன்றும் வண்ணம், 'புரோகிராமிங்' செய்தால், ரகசியம் காக்கப்படும்.

மென் பொருள் பணியாளர் கூறிய இந்த தேர்தல் சீர்திருத்தத்தை மத்திய மற்றும் மாநில அரசுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் ஏற்று, ஒத்துழைப்பு கொடுத்தால், தேர்தல் பொருட்செலவை பெருமளவு குறைக்கலாம்.

ஆர்.ரகோத்தமன், ஸ்ரீபெரும்புதூர்.
மேற்கோள் செய்த பதிவு: 1208345

படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 3838410834 படித்ததில்  பிடித்தது - II  :) --குலுக்கல் முறையில் வியாபாரம்! - Page 14 3838410834



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

Dr.S.Soundarapandian and mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளனர்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:51 pm

தனிமை துயர் நீங்க...

என் வயது, 77; சிறு வயதில், பல கஷ்டங்களை அனுபவித்து, முன்னுக்கு வந்தவள். கணவர் இறந்து விட, என் ஒரே மகனின் குடும்பத்துடன் வசிக்கிறேன். வீட்டில், மருமகளுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வது மற்றும் வீட்டிற்கு வரும் தமிழ், ஆங்கிலம் மற்றும் மலையாளப் பத்திரிகைகளை படிப்பது என இருந்தாலும், தனிமை என்னை வாட்டியது. கூடவே, மூட்டு வலி; தனிமையை விரட்ட, ஏதாவது வேலை செய்ய விரும்பினேன்; அதற்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

ஒருநாள், பக்கத்து வீட்டு பெண்மணி என்னிடம் வந்து, 'ஆங்கிலம் பேச கற்று தர முடியுமா...' என்று கேட்க, நான் மகிழ்ச்சியுடன் ஒத்துக் கொண்டேன்.

இரண்டு மாதத்திலேயே, அவள் ஆங்கிலத்தில் சரளமாக பேச ஆரம்பித்து, எனக்கு நன்றி கூறி சென்றாள்.
மற்றொரு நாள், என் பேரனுடைய வகுப்பு தோழனுடைய அம்மா, வேறு மாநிலத்தை சேர்ந்தவள்; அவளுக்கு தமிழ் எழுத, படிக்க தெரியாது; பேச தான் தெரியும். என்னிடம், வந்து, தமிழ் கற்று கொடுக்க சொல்ல, நான் அதையும் உற்சாகத்துடன் செய்தேன். அவளும் ஆர்வமுடன் கற்றுக் கொண்டாள். மேலும், மூன்றாம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருத்தி, பள்ளியில் நடக்கும் போட்டி ஒன்றுக்காக, பகவத்கீதையில், குறிப்பிட்ட நான்கு ஸ்லோகங்களை, அட்சர சுத்தமாக, மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டும் என்று கூறி, அதை கற்றுத் தர கூறினாள்.

நானும் சொல்லி கொடுத்தேன்; போட்டியில் முதல் பரிசு வாங்கிய அந்த சிறுமியைக் காட்டிலும், நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு, இதுபோன்ற சேவை செய்ய ஆரம்பித்ததிலிருந்து, நேரம் போவதே தெரியவில்லை; மனமும் நிம்மதியாக உள்ளது.

என்னை போன்ற முதியோர், இதுபோன்ற சேவையில் ஈடுபட்டு, தனிமையை போக்கி கொள்ளலாமே!

சாவித்திரி, சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 20, 2017 12:53 pm

மனமிருந்தால் போதும்!

தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணி புரிகிறேன். எங்கள் நிறுவன ஊழியர்களின் போக்குவரத்து வசதிக்காக, புதிதாக வேன் ஒன்று வாங்கியிருந்தார், முதலாளி. ஆர்.டி.ஓ., அலுவலக சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்த நிலையில், வண்டியை அவரது வீட்டிற்கு கொண்டு வருமாறு உத்தரவிட்டார், முதலாளி.

வண்டியை கொண்டு சென்ற போது, அவரது குடும்பத்தினர் எல்லாரும் தயாராக இருக்க, அவர்களை ஏற்றி, முதலாளி கூறிய இடத்திற்கு வண்டியை செலுத்தினேன்; அது ஒரு ஆதரவற்றோர் இல்லம்! இல்லத்திலிருந்தவர்களை வேனில் ஏற்றி, அருகில் உள்ள புகழ் பெற்ற கோவிலுக்கு சென்று, வேனுக்கு பூஜை செய்து, இல்லத்தினருக்கும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

வந்திருந்த அனைவருக்கும், ஓட்டலில் மதிய உணவுக்கு ஏற்பாடு செய்திருந்தார், முதலாளி. பின், அருகிலிருந்த பூங்காவிற்கு சென்று ஓய்வெடுத்து, சில விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது. மாலையில், அவர்களை இல்லத்தில் இறக்கி விட்டு, விடைபெற்றோம்.

திரும்பி வரும் போது, 'ஆண்டு முழுவதும் நாமும் வேலை வேலைன்னு ஓடிக்கிட்டே இருக்கோம்; அவங்களும் இல்லத்துல முடங்கி இருக்காங்க. இப்ப, அவங்களுக்கு புத்துணர்வு குடுத்த மாதிரி ஆயிடுச்சு; நமக்கும் ஆத்ம திருப்தி கிடைச்சாப்ல இருக்கு. இதைவிட, என்னய்யா சாதிச்சிட போறோம்...' என்றார் முதலாளி.

அத்துடன், 'அவசரத்திற்கு எப்போ வேன் வேணும்ன்னாலும் கேளுங்கன்னு சொல்லியிருக்கேன்; முடிஞ்ச வரைக்கும் நேரம் ஒதுக்கி, அவங்களுக்கும் உதவி செய்வோம்...' என்றார்.

முதல், 'டிரிப்'பே மனநிறைவை தந்தது. இதை, சக ஓட்டுனர்களிடம் சொன்ன போது, அவர்களும் இதுபோன்ற சேவையில் ஈடுபட விருப்பம் தெரிவித்தனர்.

மனமிருந்தால் போதும்... சேவை தானாகவே நடக்கும் என்பதை, கண்கூடாக கண்டேன்.

பா.போத்தி, மதுரை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 22, 2017 12:30 pm

krishnaamma wrote:நேரத்தை பயனுள்ளதாக்கலாமே!

சமீபத்தில், என் தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். அது மதிய நேரம் என்பதால், அவள், 'டிவி' பார்த்துக் கொண்டிருப்பாள் என நினைத்தேன். ஆனால், அவள், பழைய நாளிதழ்களை வெட்டி, பேப்பர், 'கவர்' செய்தபடி இருந்தாள். நான் வியப்புடன் பார்ப்பதை பார்த்து, 'பொழுது போக்க, 'டிவி'யே கதியென்று கிடக்காமல், உருப்படியா ஏதாவது செய்யலாம் என நினைத்து, பேப்பர், 'கவர்' செய்து, அருகில் உள்ள கடைகளுக்கு விற்று வருகிறேன். நாளிதழ்களை எடைக்கு போட்டால் கிடைக்கும் பணத்தை விட, இதில், அதிகப் பணம் கிடைக்கிறது. அதோட, பிளாஸ்டிக், 'கவர்' புழக்கத்தில் வராமல் இருக்க, என்னால் முடிந்த சிறு உதவி...' என்றாள்.

வீட்டிலேயே சிறு தொழில் செய்ய முற்படும் என் தோழியைப் போன்று, பொழுது போகவில்லை என புலம்பும் மற்ற பெண்களும் உருப்படியாக ஏதாவது செய்ய, முன் வரலாமே!

என்.உஷாதேவி, மதுரை.
மேற்கோள் செய்த பதிவு: 1232719

ஆமோதித்தல் ஆமோதித்தல்
பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Mar 22, 2017 7:18 pm

நன்றி பாலாஜி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 27, 2017 11:44 am

சுயத்தை தொலைத்த தோழி!

சில ஆண்டுகளுக்கு பின், என் தோழியை சந்திக்க சென்றிருந்தேன். அவள் புகுந்த வீடு, நல்ல வசதியானது. அவள் கணவர், சொந்த தொழில் செய்கிறார்; நல்ல சம்பாத்தியம். எல்லா வசதிகளோடு அவள் வாழ்வதை பார்த்து, மிக மகிழ்ச்சியடைந்தேன்.

ஆனால், அவளுடன் பேசும் போது தான் தெரிந்தது, அவள் தன் சுயத்தை தொலைத்தவள் என்பது! படிக்கும் போதே, கைவினை பொருட்கள் செய்வது, தையற்கலை என்று பல்வேறு திறமைகள் அவளுக்கு உண்டு.

புதுப் புது விஷயங்களை கற்கும் ஆர்வம் கொண்டவள்; அது சம்பந்தபட்ட வகுப்புகளுக்கும் செல்வாள். தற்போது, அவள் கணவன், 'நமக்கு இருக்கற வசதிக்கு, நீ இதையெல்லாம் செய்து சம்பாதித்து தான் ஆகணும்ன்னு இல்ல...' என்று கூறி, எதற்கும் அனுப்புவதில்லையாம்.
சினிமாவுக்கு போக வேண்டும் என்றால் கூட, நேரமில்லை என்று கூறி, 'வீட்டில, 'சிடி'யில பாரு...' என்கிறாராம்.

'வெளி உலகத்தை பார்த்தே, ரொம்ப நாளாச்சு; வீட்டுக்குள்ளேயே இருப்பது பைத்தியம் பிடிக்கற மாதிரி இருக்கு...' என்று கண் கலங்கியவளை, எப்படி தேற்றுவது என்று தெரியாமல் விழித்தேன்.
கணவன்மார்களே... உங்கள் மனைவியருக்கும் சில ஆசைகள், ஆர்வங்கள் உண்டு என்பதை புரிந்து, அவளுடைய ஆர்வம் மற்றும் தனித் திறமைக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்.

பணம் சம்பாதிக்க மட்டுமே இது போன்ற வகுப்புகளுக்கு பெண்கள் போவதில்லை. அதில் ஒரு மன திருப்தியும், சந்தோஷமும் கிடைப்பதாலேயே செல்கின்றனர். எனவே, அவளை சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வைத்திருங்கள். அதே மிகழ்ச்சியை, அவள் வீட்டிற்குள்ளும் பரவச் செய்வாள்.
சிந்திப்பீரா கணவர்மார்களே!

உமா செந்தில், கோவை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 27, 2017 11:46 am

பசுமையான பரிசு!

நாற்பது ஆண்டுகளுக்கு முன், பள்ளியில் ஒன்றாக படித்த, 35 மாணவிகளும் ஓர் இனிய நாளில் எங்கள் சந்திப்பை வைத்துக் கொண்டோம். அப்போது, பள்ளி காலத்து நிகழ்வுகள், குறும்புகள் மற்றும் தற்போதைய வாழ்க்கை என, பல விஷயங்களை பேசி மகிழ்ந்தோம். கிளம்பும் போது, அனைவருக்கும் மரக்கன்றுகளை வழங்கி, ஆச்சரியப்படுத்தினாள், ஒரு தோழி.

மரம் வளர்க்க இட வசதி இல்லாதவர்களுக்கு, தொட்டியில் வளர்க்கும் மூலிகை மற்றும் பூச்செடிகளை வழங்கி, அவற்றை பராமரிக்கும் முறைகளையும் விளக்கினாள். பசுமையான நினைவுகளோடு, பசுமை புரட்சி செய்த தோழியையும், மனதார பாராட்டி, விடைபெற்றோம்.

ஒரு மாதம் ஆகிவிட்டது. எங்கள் நட்பை போல், வேர் பிடித்து செடிகள் வளர ஆரம்பித்துள்ளது!

என்.சாந்தினி, மதுரை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Mar 27, 2017 11:47 am

இதெல்லாம் ஒரு பெருமையா?

சமீபத்தில், டீ கடை ஒன்றில் நண்பர்களுடன், தேநீர் அருந்தி கொண்டிருந்தேன். அருகே, நண்பர் குழாம் ஒன்று, டீ குடித்தபடி நின்றிருந்தனர். அதில், ஒரு இளைஞர், மற்றவரை பேச விடாமல், தன்னைப் பற்றியே பெருமை பேசியபடி இருந்தார்.

பழைய பைக்குகளை வாங்கி, விற்கும் தரகர் தொழில் செய்யும் அவர், அத்தொழிலில் உள்ள பொய் புரட்டுகளையும், உதவாத வண்டியை, யாரோ ஒருவர் தலையில் கட்டியதை பற்றியும், பெருமையாக அடுக்கினார்.

முக்கியமாக, அவர் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் செயின், மணிக்கட்டில் கட்டியிருந்த பிரேஸ்லெட் மற்றும் மோதிரம் போன்ற நகையெல்லாம், தவணை முறையில் வாங்கியதாகவும், தனக்கு ரெண்டு லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் பீற்றினார்.

எங்களைப் போலவே, இதைக் கேட்டு கொண்டிருந்த முதியவர் ஒருவர், 'தம்பி... சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க... இந்த, 'காம்ப்ளக்ஸ்' என்னோடது தான்; நான், கிராமத்தில் இருந்து, இங்கே வரும் போது, கையில பத்து ரூபாய் கூட கிடையாது. நாலு, 'டிப்போ'விலே, கமிஷனுக்கு பால் வாங்கி, கடைகளுக்கு ஊத்தினேன்; அதோட, டீக்கடையும் நடத்தினேன்.

பின், படிப்படியா அதை ஓட்டலாக மாத்தி, நேர்மையா சம்பாதிச்சேன்... என்னோட, ஆறு பிள்ளைங்களையும், கரை சேர்த்துட்டு, அவங்களுக்கு நிலையான சொத்தா, இந்த கடைகளையும் கட்டி, வாடகைக்கு விட்டுருக்கேன். எல்லாமே, உழைப்பு மற்றும் சேமிப்பு தான். ஒரு ரூபாய் கூட கடன் வாங்கல... நீ என்னடானா, தொழில்ல ஏமாத்தினதையும், கடன் பட்டதையும் பெருமையா சொல்லிட்டு இருக்கே...' என்றார்.

இதைக் கேட்டதும், அந்நபருக்கு முகத்தில் ஈயாடவில்லை. அசடு வழிந்தபடி, தன் இருசக்கர வண்டியை கிளப்பி சென்று விட்டார். ஆக்கப்பூர்வமான விஷயங்களை, மற்றவரிடம் பேசினால், அதனால், நன்மை ஏற்படும். மாறாக, வீண் பெருமை, வெட்டி பந்தா பேசுவது, தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்வதோடு, மற்றவர்களையும் மறைமுகமாக கெடுக்கும் செயல் என்பதை இவரைப் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.

பி.சதீஷ்குமார், மதுரை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 11:40 pm

குழந்தைகளை காப்பகத்தில் விடுகிறீர்களா?

என் மகளும், மாப்பிள்ளையும் வேலைக்கு செல்வதால், தங்களது ஒரு வயது பெண் குழந்தையை, 'க்ரீச்' எனப்படும், குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்வது வழக்கம்.

வெளியூரில் இருக்கும் நான், சமீபத்தில், அவர்களை பார்க்க சென்ற போது, குழந்தை மிகவும் மெலிந்து, பயந்தவளாக காணப்பட்டதுடன், கோபம் வந்தால் தட்டு, முட்டு சாமான்கள் போட்டு வைக்கும், இருட்டான அறைக்கு சென்று, மறைந்து கொள்வதையும் கண்டேன்.

அவளது இந்த நடவடிக்கைகள் புதிராக இருக்கவே, விசாரித்த போது, காப்பக மேலாளர், குழந்தைகளை பயமுறுத்த, இருட்டு அறையை பயன்படுத்தியதுடன், சாப்பிட மற்றும் தூங்க மறுத்தாலோ, கண்ணில் மிளகாய் பொடி தூவி விடுவதாக, பயம் காட்டி இருப்பதும் தெரிய வந்தது.

உடனே, எங்கள் குழந்தையை, அக்காப்பகத்திலிருந்து நிறுத்தி விட்டோம்; இருப்பினும், அப்பழக்கத்திலிருந்து குழந்தை இன்னும் மீளவில்லை; பிரமை பிடித்த மாதிரி இருப்பதுடன், சாப்பிட்டாலும், சாப்பிடவில்லையென்றாலும், குறிப்பிட்ட நேரத்தில் தூங்கியே தீர வேண்டும் என அடம்பிடிப்பது, யாரும் பார்க்காத நேரத்தில், இருட்டான இடத்திற்கு சென்று அமர்ந்து கொள்வது, யாருடனும் ஒட்டாமல் இருப்பது மற்றும் எதை பார்த்தாலும் மிரளுவது போன்ற செயல்கள், அவளை விட்டு அகலவில்லை.

மருத்துவரிடம் காட்டி, சிகிச்சை பெற்று வருகிறோம். 'பூரண நலம் பெற, சில மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகும்...' என கூறுகிறார்.

குழந்தைகளை காப்பகத்தில் சேர்க்கும் போது, பலமுறை தீர விசாரித்து, பின், குழந்தைகள் நலம் பேணும் இடமாக பார்த்து சேருங்கள்.

சி.எஸ்.ராஜேஸ்வரி, குனியமுத்தூர்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 11:43 pm

தாய்நாட்டை காக்கும் வீரர்களுக்காக...

சமீபத்தில், விமானத்தில் டில்லிக்கு பயணிக்க நேர்ந்தது. விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களே இருக்கும் போது, அவசர அவசரமாக, 15 இந்திய ராணுவ வீரர்கள் ஏறி, என் இருக்கையை சுற்றி அமர்ந்தனர். நான், அவர்களுடன் பேசிய போது, ஆக்ராவில் நடக்க இருக்கும், இரண்டு வார பயிற்சிக்கு பின், காஷ்மீர் எல்லையில், பாதுகாப்பு பணிக்காக செல்ல இருப்பதாக கூறினர்.

ஒரு மணி நேரம் சென்றிருக்கும்... விமானத்தில், 'மதிய உணவு தயார்; தேவையானவர்கள் வாங்கிக் கொள்ளலாம்...' என்று அறிவித்தனர்.அப்போது, எனக்கு பின் அமர்ந்திருந்த ராணுவ வீரர்களின் பேச்சை கேட்க நேர்ந்தது.

'ஏன்... சாப்பாடு வாங்கலயா...' என்று ஒருவர் கேட்க, 'வேணாம்; இங்கு விலை அதிகம். என்னால, அவ்வளவு காசு செலவழிக்க முடியாது; மூணு மணி நேரம் போனால், டில்லி வந்துடும்; அங்கு சாப்பிட்டுக்கலாம்; விலை குறைவாக இருக்கும்...'என்றார் மற்றொருவர்.
இதைக் கேட்ட போது, மனம் கனத்துப் போனது. உடனே, உணவுடன் நின்றிருந்த விமான பணிப்பெண்ணிடம், 15 உணவுக்கான காசை கொடுத்து, அவ்வீரர்களுக்கு உணவு கொடுக்கச் சொன்னேன்.

அப்பணிப்பெண், என் கைகளை பிடித்து, கண்ணீர் மல்க, 'இது, கார்கிலில் இருக்கும் என் சகோதரனுக்கும் சேர்த்து...' என்றாள்.

நான் உண்டு முடித்து, 'ரெஸ்ட் ரூம்' சென்ற போது, ஒரு முதியவர் என்னை நிறுத்தி, 'நீங்கள் செய்ததை, நான் பார்த்தேன். நான் வெட்கப்படுறேன்; இந்தாருங்கள், என் பங்குக்கு, 500 ரூபாய்...' என்று, கொடுத்தார்.

என் இருக்கைக்கு திரும்பினேன். அந்த விமானத்தில் பயணம் செய்த விமான பைலட் ஒருவர் என்னிடம் வந்து, கண்ணில் நீர் தளும்ப, என் கைகளை பிடித்து குலுக்கி, 'இது மிக நல்ல செயல்; ரொம்ப சந்தோஷமா இருக்கு...' என்று கூறி சென்றார்.

முன் சீட்டில் அமர்ந்திருந்த, 18 வயது இளைஞன் ஒருவன், என் கைகளை பிடித்து குலுக்கி, ரூபாயை திணித்தான்.

விமானம், டில்லி விமான நிலையத்தை அடைந்தது; நான் இறங்கும் போது, ஒருவர், என் சட்டை பையில் சில நோட்டுக் கற்றைகளை திணித்து விட்டு சென்றார்.

அந்த வீரர்கள், ராணுவ வண்டிக்காக காத்திருந்தனர். அவர்கள் அருகில் சென்று, 'உங்களுக்காக நான் செலவழித்த பணத்தை விட, இப்போது என்னிடம் அதிக பணம் சேர்ந்து விட்டது. இவை அனைத்தும், உங்களுக்கு சேர வேண்டியது...' என்று கூறி, அந்தப் பணத்தை அவர்களிடம் கொடுத்து, 'காஷ்மீர் செல்லும் வழியில், நன்றாக சாப்பிடுங்கள்; கடவுள், உங்கள் எல்லாருக்கும் துணை இருக்கட்டும்...' என்று கூறி வழியனுப்பினேன்.

இந்த இளம் வீரர்கள், தங்களுடைய உயிரை துச்சமாக மதித்து, நம் நாட்டின் எல்லைகளை பாதுகாத்து, நம்மை பாதுகாக்கின்றனர். இவர்களுக்கு நான் கொடுத்த தொகை ஒன்றுமேயில்லை.

ஆனால், இவர்களின் தியாகத்தை புரிந்து கொள்ளாத இவர்களின் வயதை ஒத்த இளைஞர்களோ சினிமா, 'டிவி' 'வாட்ஸ் - ஆப், பேஸ் - புக்' என்று தங்களது வாழ்க்கையை, சீரழித்து கொள்கின்றனரே என்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது.

எஸ்.ஷண்முக சீனிவாசன், சென்னை.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 05, 2017 11:50 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 14 of 40 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 27 ... 40  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக