புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
91 Posts - 67%
heezulia
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
3 Posts - 2%
prajai
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
3 Posts - 2%
Barushree
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
2 Posts - 1%
sram_1977
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
1 Post - 1%
nahoor
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
145 Posts - 74%
heezulia
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
8 Posts - 4%
prajai
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
3 Posts - 2%
Barushree
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
2 Posts - 1%
nahoor
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_m10சதாசிவம் சுவாமிகளின் கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சதாசிவம் சுவாமிகளின் கதை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 4:44 pm

சதாசிவம் சுவாமிகளின் கதை KOdu93jNTWK5B1qTCX5o+amman-arul
-

ஒரு பெரிய ஞானி இருந்தார். அவர் பெயர் சதாசிவம். முன்பெல்லாம் பால்ய வயதிலேயே விவாகம் நடந்துவிடும். பெண்ணுக்கு ஏழெட்டு வயதிலும் பையனுக்கு பத்துப் பதினொரு வயதிலும் திருமணம் நடப்பது அன்று இயல்பான விஷயம்.

திருமணம் முடிந்ததும் பெண்ணை தாய்வீட்டுக்கே அழைத்துச் சென்றுவிடுவார்கள். அவள் பெரியவளானதும் அழைத்துவந்து கணவன் வீட்டில் விட்டுச்செல்வார்கள். அவ்வகையில் சதாசிவத்துக்கும் இளமையில் திருமணம் முடிந்திருந்தது. அவர் பாடசாலையில் பயின்றுகொண்டிருந்தார்.

இப்படியே சில வருடங்கள் போனது. ஒருநாள் அவர் வழக்கம்போல் மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்தார். வீட்டு வாசலில் நிறைய பேர் இருந்தார்கள். அனைவரும் அவரை நலம் விசாரித்தார்கள். அவர் கூச்சத்துடன் தலையாட்டியபடியே வீட்டுக்குள் நுழைந்தார்.

வடை சுட்டுக்கொண்டிருந்த அவரது தாயார், ""எல்லாரையும் வாங்கனு சொன்னியா?'' என விசாரித்தார். அவரோ, ""சாப்பாடு கொடும்மா, பாடசாலைக்குப் போறேன்'' என்றார். அம்மாவும் விடாமல், ""ஏண்டா, இவ்வளவுபேர் வந்திருக்காங்க. ஏன்னு கேட்டியா'' என்றாள். அவர் ""ஏன்?'' என்றார்.

""உன் மனைவி பெரிய மனுஷி ஆயிட்டாளாம். இங்க எப்ப கொண்டுவந்து விடறதுனு நாள், நட்சத்திரம் பார்க்க வந்திருக்காங்க.''

""சரி, சாப்பாடு போடு. நான் பாட சாலைக்குப் போகணும்.''

மகன் இப்படிச் சொன்னதைக்கேட்டு தாய்க்கு கோபம் வந்துவிட்டது. "மனைவி பெரிய மனுஷியாகிவிட்டாள் என்று சொல்கிறேன். இதைக்கேட்டு சந்தோஷப்பட வேண்டாமா இவன்? அதை விட்டுவிட்டு சோறு சோறு என்கிறானே' என்ற கோபத்தில், ""அப்படிப் போய் உட்காரு, கூப்பிடுறேன்'' என்றாள்.

அவரும் ஒரு ஓரமாகப் போய் அமர்ந்து யோசித்தார். "வழக்கமா எனக்கு சரியா பன்னிரண்டு மணிக்கு சாப்பாடு கிடைக்கும். மழைபெய்யுதோ வெயிலடிக்குதோ,

அம்மாவுக்கு உடம்பு நல்லாயிருக்கோ இல்லையோ- எப்படியிருந்தாலும் சோறு கிடைச்சுடும். ஆனால் மனைவி வரப்போறாங்கிற தகவல் வந்ததுக்கே, கிடைக்கவேண்டிய நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கவில்லை. மனைவி வந்துவிட்டால் நிலைமை என்னாகும்?'

இந்த எண்ணம் வந்ததும் யாரிடமும் சொல்லாமல் வீட்டின் பின்பக்கமாக நழுவியவர் சந்நியாசியாகப் போய்விட்டார். ஞானம் அவருக்கு ஒரு கணத்தில் வந்தது. பின்னாளில் ஒரு ஆசிரமத்தில் சேர்ந்த அவர் எப்போதும் படித்துக்கொண்டே இருப்பார். தன்னுடைய சந்தேகங்களையெல்லாம் தெளிவுபடுத்திக்கொள்வார். நம்மைப் போலதானே எல்லாருக்கும் சந்தேகமிருக்கும் என்றெண்ணிய அவர், எல்லாரையும் கூப்பிட்டுக் கூப்பிட்டு சொல்லித் தருவார்.

அவரது அக்கறையைப் புரிந்துகொள்ளாத சீடர்கள் அனைவரும் குருநாதரிடம் போய், ""குருநாதா, இந்த சதாசிவம் எந்நேரமும் பேசிக்கொண்டேயிருக்கிறார். சற்றுநேரமும் வாய் ஓய்வதில்லை. அவரை நீங்கள்தான் கொஞ்சம் கண்டிக்கவேண்டும்'' என்றார்கள்.

குருநாதருக்கு வருத்தம். ரொம்பவும் நல்ல பையன் சதாசிவம். அவனைப் பற்றி குறைகூறுகிறார்களே என்று சற்று கோபமும் வந்தது. சதாசிவத்தைக் கூப்பிட்டார். ""ஏண்டா சதாசிவம்... தொணதொணன்னு பேசிக்கிட்டிருக்கியாமே, உன் வாய் மூடாதா?'' என்றார்.

அன்றைக்கு வாயை மூடியவர்தான்; இறுதிவரை அவர் வாயே திறக்கவில்லை. மௌனியாகிவிட்டார்.

அன்ன ஆகாரம் தவிர்க்கும் விரதத்தைவிட சிரமமான விரதம் மௌன விரதம். ஒருநாள் மௌன விரதமிருந்து பாருங்கள். அன்று மனது மிகவும் அமைதியாக இருக்கும்.

விரதத்தின் மேன்மையைப் பற்றிக் கூறுகையில் வாரியார் சுவாமிகள், ""நாம எந்த விரதம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், திருக்கார்த்திகை தீபத்திருநாளன்று மௌன விரதமிருந்தால் ஆண்டுமுழுவதும் விரதமிருந்த பலன் கிடைக்கும்'' என்கிறார்.

சரி, சதாசிவம் சுவாமிகளின் கதைக்கு வருவோம்.

குருநாதரின் உத்தரவையேற்று சதாசிவம் வாழ்நாள் முடியும்வரை பேசவேயில்லை. குருநாதரே அவரிடம், ""உன் பெருமை தெரியாமல் பேசிவிட்டேன். வாய் திறந்து பேசு'' எனக் கூறினார். ஆனால் அவர் தன் முடிவிலிருந்து மாறவேயில்லை.

சதாசிவம் சுவாமிகள் நாளாக ஆக ஒவ்வொன்றாகத் துறந்துவந்தார். பேச்சைத் துறந்தார். பின் ஒருநாள் உடையைத் துறந்து திகம்பரராகிவிட்டார். கடைசியில் உணவையும் துறந்தார். நாளைக்கு ஒருவேளைதான் உணவு. யார் வீட்டு வாசலிலாவது போய்நிற்பார். அவர் நிற்பதைப் பார்த்து யாராவது உணவிட்டால் மட்டும் சாப்பிடுவார்.

அதுவும் மூன்று கவளம் உணவு மட்டுமே.

அத்தகைய சதாசிவம் சுவாமிகளுக்கு ஒரு சந்தேகம். நமக்கு அடுத்த பிறவி உண்டா, இல்லையா- இதுதான் அவரது சந்தேகம். யாரிடமும் கேட்கவும் முடியாது. அவரைவிட பெரிய ஞானிகளும் அங்கில்லை. தன் கேள்விக்கு விடைதெரியாமல் கடவுளிடம் முறையிட்டார்.

ஒருநாள் அவர் ஒரு வீதிவழியாக வந்தார். அந்த வீதியில் அவர் பெயருள்ள குடும்பஸ்தர்- அதாவது சதாசிவம் என்பவர் இருந்தார். அவர் திண்ணையில் அமர்ந்திருந்தார். சதாசிவத்தை தூரத்திலேயே பார்த்த அவர் தன் மனைவிக்கு குரல் கொடுத்தார் ""அம்மா, சதாசிவம் தெருமுனை திரும்பிட்டது. ஆகாரம் கொண்டா''.

அவரது மனைவியும் வெள்ளிக் கும்பாவில் பச்சரிசி சோறிட்டு, பருப்பு ஊற்றி, நெய்யிட்டுப் பிசைந்து உருட்டிக்கொண்டு வாசல் வந்தாள். அன்றைக்கு சதாசிவம் அவள் வீட்டு வாசலிலேயே வந்துநின்றார். அவள் அவரை வணங்கி, உணவுருண்டையை அவர் கையில் எடுத்துவைத்தாள். ஒன்று, இரண்டு, மூன்று....

வழக்கம்போல மூன்றாவது கவளத்துடன் கையைத் துடைக்கப்போனார். சாப்பிட்டபின் கையை அவர் தன்மேலேயே துடைத்துக்கொள்வதுதான் வழக்கம். அந்தப் பெண்மணி, ""நாளைக்கு ஒருவேளைதான் சாப்பிடுறீங்க. அதுவும் என்னைக்கு, எங்க சாப்பிடுறீங்களோ தெரியாது. இன்னைக்கு எனக்காக இன்னுமொரு உருண்டை சாப்பிடுங்க'' என்றபடி இன்னொரு கவளம் சோற்றை வைத்தாள். அவரும் அதை வாங்கி சாப்பிட்டார்.

அப்போது திண்ணையில் அமர்ந்திருந்த அந்தப் பெண்மணியின் கணவன், ""டேய் சதாசிவம், உனக்கு அடுத்த ஜென்மம் இருக்கு, போடா'' என்று சொன்னார்.

சந்நியாசி சதாசிவம் அவரைப் பார்த்தார். ""என்னடா பார்க்கிற? ஏன் இன்னொரு ஜென்மானுதானே? உன் கணக்கு மூணுதானே. முடிஞ்சதும் கிளம்பிப் போகவேண்டியதுதானே. அவளுக்காக ஒரு உருண்டைச் சோறு ஏன் வாங்கிச் சாப்பிட்ட? இந்த ஒரு உருண்டைக்கு அவளுக்கு நீ கணக்கு சொல்லணும். அதனால உனக்கு இன்னொரு ஜென்மா இருக்குடா'' என்றார்.

ஒரு உருண்டைச் சோற்றுக்கே ஒரு ஜென்மம் என்றால் நமக்கெல்லாம் எத்தனை ஜென்மம்?

ஞானமென்பது ஒரு மனிதனுக்கு எப்படி, எந்த நிமிடத்தில் வருமென்று தெரியாது.

-

நன்றி-நக்கீரன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Feb 27, 2017 4:55 pm

ஒரு உருண்டைச் சோற்றுக்கே ஒரு ஜென்மம் என்றால் நமக்கெல்லாம் எத்தனை ஜென்மம்?

பயம் பயம் பயம் .
.
.
.
.
நல்ல பகிர்வு அண்ணா ! புன்னகை............ :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Feb 27, 2017 7:01 pm

அறியாத தகவல்.
மிக்க நன்றி.
ரமணியன்
T.N.Balasubramanian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் T.N.Balasubramanian



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84660
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Feb 27, 2017 7:26 pm


தேச.மங்கையர்க்கரசி
-
பிறப்பு -19 மே 1984
-
இவர் பெற்ற விருதுகள்
-
தமிழ் நாட்டின் மிக உயரிய விருதான “கலைமாமணி” விருதை
தமிழ் நாடு அரசு இவருக்கு அளித்து சிறப்பித்துள்ளது.

சமய சொற்பொழிவாளர் வரிசையில் மிகவும் குறைந்த
வயதில் இந்த விருதினை பெற்றவர் என்ற பெருமை
தேச மங்கையர்க்கரசி அவர்களையே சாரும்.


ராஜீவ் காந்தி-மூப்பனார் நினைவு விருதினை 2011 ஆம் ஆண்டு
பெற்றார்.

செந்தமிழ் நாவுக்கரசி என்கிற பட்டத்தினை திருவாவடுதுறை
ஆதீனம் 2017 ஆம் ஆண்டு அளித்து சிறப்பித்தது .
--

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக