புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 21/06/2024
by mohamed nizamudeen Yesterday at 6:58 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:57 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:57 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Yesterday at 12:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 12:06 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:51 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:40 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 8:05 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 6:45 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
69 Posts - 36%
heezulia
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
65 Posts - 34%
Dr.S.Soundarapandian
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
34 Posts - 18%
T.N.Balasubramanian
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
9 Posts - 5%
mohamed nizamudeen
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
5 Posts - 3%
ayyamperumal
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
2 Posts - 1%
manikavi
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
2 Posts - 1%
prajai
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
320 Posts - 48%
heezulia
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
212 Posts - 32%
Dr.S.Soundarapandian
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
64 Posts - 10%
T.N.Balasubramanian
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
23 Posts - 3%
prajai
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
சமூக விழுமியம் – மயிர்  Poll_c10சமூக விழுமியம் – மயிர்  Poll_m10சமூக விழுமியம் – மயிர்  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமூக விழுமியம் – மயிர்


   
   
முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Sun Feb 12, 2017 7:10 pm

நீண்ட நாட்களுக்குப் பிறகு என் பதிவை இடுகிறேன்.

தொடர் - ௫

சமூக விழுமியம் – மயிர் தொடர் 5
(ஐங்குறுநூற்றிலிருந்து)

முன்தொடர் சுருக்கம்

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இருக்கிறது என்றாலும் அது செயற்கை மணம் ஊட்டப்பெறுகின்ற போதுதான் மற்றவர் மனம் விரும்பும் வகையில் இருப்பதனைக் குறுந்தொகைப் பதிவிலிருந்து கண்டோம். இனி……………….

தொடர் – 5

ஐங்குறுநூற்றில் இடம்பெறும் மயிர் எனும் உறுப்பு குறித்த பதிவுகளை இத்தொடர் முன்வைக்கிறது. ஐங்குறுநூற்றில் இடம்பெறும் ஐவகை நிலம் சார்ந்த பாடல்கள் ஐநூறும் ஐந்து புலவர்களால் பாடப்பட்டிருக்கின்றன.

மகளிர் கூந்தல்

ஐவகை நிலத்தினில் எந்நிலத்துப் பெண்களாயினும் அவர்களையும் அவர்களின் கூந்தலைப் பற்றியும் குறிப்பிடும்போது அம்சில் ஓதி அசைநடைப் பாண்மகள் ( ஐங். 49:1,299:3,391:6,394:3, 448:5) ஓதி ஒண்ணுதல் பசப்பித்தோர் (ஐங். 67:5), துயல் வரும் கூந்தல் (ஐங். 72: 2), தண்ணருங் கதுப்பே (ஐங். 74: 4) பைஞ்சாய் கூந்தல் (ஐங். 76:1), போது ஆர் கூந்தல் (ஐங். 82:4, 232:1, 417:4), நல்நெடுங் கூந்தல் (ஐங். 153:5), பின் இருங் கூந்தல் (ஐங். 173:4, 285:1, 294:5), நீர் வார் கூந்தல் (ஐங். 186:2) இரும்பல் கூந்தல் (ஐங்.191:2, 231:1, 281:3), கொழும்பல் கூந்தல் (ஐங். 197:2), சில்நிறை ஓதி (ஐங். 222:4), வண்டுபடு கூந்தல் (ஐங். 256:2,267:4), இணைஈர் ஓதி (ஐங்.269:4), பூக்கமழ் கூந்தற் கொடிச்சி (ஐங். 290:3), புயல் நெடுங் கூந்தல் (ஐங். 304: 4), தேம்பாய் கூந்தல் (ஐங். 324:5), முடிஅகம் புகாஅக் கூந்தலள் (ஐங். 374:3), அம்சாய் கூந்தல் (ஐங். 383: 6), தாழ்இருங் கூந்தல் (ஐங்.411: 4), பல் இருங் கூந்தல் (ஐங். 429:1), முல்லை நாறுங் கூந்தல் (ஐங். 446: 1) எனப் பலவாறாகக் கூறப்படுவதனை அறியமுடிகிறது.


ஐங்குறுநூற்றின் பல சுவையான தகவல்களுடன் தொடர் பயணிக்கும்.

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu Feb 23, 2017 12:09 pm

தொடர்ச்சி ...................

சமூக விழுமியம்  -  மயிர் தொடர் - ௫ ( ஐங்குறுநூற்றிலிருந்து)

கூந்தல் உவமை – மயிற்தோகை

தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தால் தலைவி தலைவன் மீது ஊடல் கொண்டிருக்கிறாள். அவள் ஊடலைத் தலைவன் தணிக்க நினைக்கிறான். அவ்வமயம் மழைபெய்தமையால் நீர் நிலைகளில் புதுவெள்ளம் (புதுப்புனல்) பெருகிவருகிறது. அதைக் கண்ணுறும் தலைவனுக்குக் களவுக்காலத்தில் தானும் தலைவியும் இதுபோன்று பெருகி வந்த புதுப்புனலில் மகிழ்ந்து விளையாடியபோது இருந்த அவள் தோற்றம் கண்முன் வருகின்றது. அதனைத் தலைவிக்கு நினைவூட்டும் விதத்தில் அவள் கேட்கும்படியாகத் தோழியிடம் இப்படி

விசும்பு இழிதோகைச் சீர் போன்றி சினே
பசும்பொன் அவிர்இழை பைய நிழற்ற
கரைசேர் மருதம் ஏறிப்
பண்ணை பாய்வோள் தண்நறுங் கதுப்பே (ஐங்.74)

என்றிருந்ததாக ஓரம்போகியார் குறிப்பிடுகின்றார். அதாவது, தலைவனுடன் விளையாடும் போக்கில் ஒளிவீசும் அணிகலன்களை அணிந்திருந்த தலைவி அருகாமையில் உள்ள மருத மரத்தில் ஏறி அதன் கிளைகளிலிருந்து நீருக்குள் பாய்ந்தெழுந்து நீராடியது பார்ப்பதற்கு மயில் போலவும் அவள் கூந்தல் மயிற்தோகை போலவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இங்குக் கூந்தல் மயிற்தோகைக்கு உவமை காட்டப்பட்டுள்ளது.

பைஞ்சாய்க் கூந்தல்

தலைவன் பரத்தையோடு புனலாடி மகிழ்கிறான். இதைத் தலைவி அறியமாட்டாள் என்ற நினைவில் தலைவியிடம் வரும்போது ஏதும் அறியாதவன்போல பேசுகிறான். அப்போது தலைவி தலைவன் பரத்தையுடன் புனலாடி மகிழ்ந்த நிகழ்வைத் தான் அறிந்திருக்கிறேன் என்பதை உணர்த்தும் வகையில் அன்று தலைவனோடு பரத்தை புனல் விளையாட்டில் ஈடுபட்ட பொழுது  அவளின் அழகில் ஈர்க்கப்பட்ட  பலரும்  அவளை வானுலகப் பெண்களுக்கு இணையாகப் போற்றிப் புகழ்ந்ததை நினைவூட்டுகிறாள். அன்று நீருள் அமிழ்ந்தருந்த பரத்தையின் அழகிய கூந்தலைப் பைஞ்சாய்க் கூந்தல் என்றும் குறிப்பிடுகிறாள். (ஐங்.76:1) இதன்மூலம் நிகழ்வை என்னிடம் மறைக்காதே என்ற தலைவன் மீதான தலைவியின் ஊடல் புலப்படுகிறது.  

இதில் வரும் பைஞ்சாய் கூந்தல் என்பதற்கு முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் பைஞ்சாய்க் கோரை போல் நீண்ட கூந்தல் (பக். 167, ஐங்குறுநூறு தொகுதி – 1, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், 2004) என்றும் அதன் உரை விளக்கத்தில் பைஞ்சாய் என்பது மருத நிலத்தில் வளரும் ஒரு கோரை வகை. அது நீண்டு வளரும் இயல்பினது ஆதலின் புனலாடிய பரத்தையின் கூந்தலுக்கு உவமையாயிற்று என்பதோடு இறுதியில் பைஞ்சாய்க் கூந்தல் என்பதனை அதன் நாரால் தொடுத்த மாலையணிந்த கூந்தல் என்று கொள்வாரும் உளர் என்றும் குறிப்பிடுகின்றார். (பக்.168, ஐங்குறுநூறு தொகுதி – 1, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 2004) மேலும் அதற்கு ஏற்ற வகையில் பெரும்பாணாற்றுப்படையில் கோரையால் மலர் தொடுக்கப்பட்டதைக் கூறும்

பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டிப்
புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி (பெரும். 217 – 18)

என்ற பதிவொன்றனையும் எடுத்துக்காட்டுகிறார். இதற்கு உரைதரும் நச்சினார்க்கினியர் பல்லிற் சவட்டிய நாரினால் மாலை கட்டல் என்பதோடு பல்லினாற் சுகிர்ந்த நாரிற் பனிமலர் பயிலப் பெய்த, முல்லையங் கண்ணி” (சீவக. 438) பல்லினாற் சுகிர்ந்த நாரிற் …………..’’ போது கட்டிய குழங்கன் மாலை (கூர்ம. பிலக்க. 43) என்று பல்லின் உதவியால் நாராக்கப்பட்ட கோரையினைக் கொண்டு மலர் தொடுக்கப்பட்ட தகவலை மேற்கோள்களுடன் சுட்டிக்காட்டுகின்றார். (பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், பக். 193, பெரும்.217 – 218 க்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்) இதில் கோரை நாராக்கப்படுவதும் அதன்மூலம் மலர் தொடுக்கப்படுவதும் பாடலடிகளினாலேயே விளக்கம்பெறுகிறது. ஆனால் பைஞ்சாய்க் கூந்தல் என்பதில் அவ்விளக்கம் இல்லை.

உ.வே.சா அவர்கள் பைஞ்சாய்க் கூந்தல் என்பதற்கு தண்டான் கோரை நாரால் புனைந்த மாலையை அணிந்த கூந்தல் என்று பொருள் தருகிறார். தான் இப்படி பொருள் தருவதற்கு ஆதாரமாக

…………………………………………………………………..வந்த
பைஞ்சாய்க் கோதை மகளிர்க்கு (ஐங். 54: 4,5)

எனும் பாடலடியை உதாரணம் காட்டுகிறார். இதற்குத் தண்டான் கோரையின் நாராற் புனைந்த மாலை? பஞ்சாய்க் கூந்தல்? என்பர் என்று வினாவுடன் முடித்துள்ளார். ( உ.வே.சா அராய்ச்சி உரை பதிப்பு, பக். 76. பாடல் 76 மற்றும் பக். 54. பாடல் 54-ற்கான உரைப்பகுதி, தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்) வேறுவிளக்கம் இல்லை. ஆயினும் பைஞ்சாய்க் கூந்தல் என்பதற்கும் பைஞ்சாய்க் கோதை மகளிர் என்பதற்கும் வேறுபாடு உள்ளது.

கோதை எனும் சொல்லிற்கு மாலை, முத்தாரம், பூமாலை என்பது பொருள். ஆகையினால் 54ஆம் பாடலடிக்குச் சொல்லப்பட்ட உரை சரியானதாக இருக்கின்றது. ஆனால் அப்பொருளையே 76ஆம் பாடலடிக்கும் சொல்வது பொருத்தமாக இல்லை. அதனால்தானோ உ.வே.சா அவர்கள் பொருளோடு வினாவையும் சேர்த்துள்ளார் என்று எண்ணத்தோன்றுகின்றது.

இதற்கு முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் தமது உரையில் பஞ்சாய்க்கோரையாற் புணர்க்கப்பட்ட மாலையை அணிந்த மகளிர் என உரை கொள்ளப்பட்டது. இவ்வாறன்றி, பஞ்சாய்க் கோரை போல் நீண்ட கூந்தலையுடை மகளிர்’ என உரைப்பாரும் உளர் என்று விளக்கம் தருகின்றார்.
இவர் உரையில் முன்னதாகச் சொல்லப்பட்ட உரை பொருத்தமாக உள்ளது. ஆனால் பின்னது பொருத்தமாக இல்லை. ஐங்குறுநூற்றின் 383 ஆவது பாடலில் பைஞ்சாய்ப் பாவை எனும் சொல் வருகின்றது. இதற்கு அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் தண்டான் கோரையால் செய்த பாவை என்று விளக்கம் தருகின்றார்.

மேற்கண்ட தகவல்களின் அடிப்படையில் பைஞ்சாய்க் கூந்தல் என்பதற்கு முனைவர் அ. தட்சிணாமூர்த்தி அவர்கள் தரும் பைஞ்சாய்க் கோரை போல் நீண்ட கூந்தல் எனும் பொருளே இத்தொடரில் ஏற்கப்படுவதால் உவமைக்குள் சேர்க்கப்படுகிறது.

GunasekarenS
GunasekarenS
பண்பாளர்

பதிவுகள் : 135
இணைந்தது : 22/06/2016

PostGunasekarenS Thu Feb 23, 2017 5:23 pm

சமூக விழுமியம் – மயிர்  3838410834  சமூக விழுமியம் – மயிர்  103459460
முடி, கேசம் என்று அழைத்தாலும் "மயிர்" என்பது நல்ல தமிழ் வார்த்தை. பயன்படுத்துவோம்.
சமூக விழுமியம் – மயிர்  1571444738

முனைவர் ப.குணசுந்தரி
முனைவர் ப.குணசுந்தரி
பண்பாளர்

பதிவுகள் : 141
இணைந்தது : 18/07/2015

Postமுனைவர் ப.குணசுந்தரி Thu Feb 23, 2017 11:31 pm

வணக்கம்.

தாங்கள் சொல்வது சரிதான் ஐயா. பெரும்பாலானோர் மயிர் எனும் சொல்லை இழி சொல்லாகவே கருதுகின்றனர். பயன்பாட்டு அடிப்படையில் சொற்கள் காலப்போக்கில் வழக்கில் மதிப்பிழந்து போனதில் இச்சொல்லும் ஒன்று. அத்தகு சொற்களைக் கண்டறிந்தால் அவை நம் பண்பாட்டை எடுத்துக்காட்டுவனவாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை.

நன்றி.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9754
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue May 16, 2017 6:03 pm

அப்படியல்ல நண்பர்களே ! நானாக இந்தக் கருத்தை முன்வைக்க வேண்டாம் என்றுதான் பார்த்தேன் ; ஆனால் நீங்கள் தொடங்கிவிட்டீர்கள் !
தமிழ் மொழி மட்டுமல்ல எந்த ஒரு மொழியுமே மரபைப் பின்பற்றித்தான் செல்லவேண்டும் !
புதியன புகும்போதும் மரபை ஒட்டித்தான் புகவேண்டும் ! ‘மயிர்’ என்பது , தமிழ் மரபு அடிப்படையில் , அவ்வளவாகக் கட்டுரைகளில் இடம்பெற ஏற்றதில்லைதான் ! ‘முடி’ போதுமே! அதிலும் நுணுகிப் பார்த்தால் , ‘மயிர்க் கூச்செறிந்தது’ என்பதுபோன்ற தொடர்களில் பயிலும் ‘மயிர்’ என்ற சொல்லுக்கும் , தனியாக வரும் ‘மயிர்’ என்ற சொல்லுக்குமே வேறுபாடு உள்ளது !மொழி என்பது நுட்பமானது (Languge is a very sensitive tool)



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue May 16, 2017 7:29 pm

" மயிர் " என்னும் சொல் தற்போது அமங்கலச் சொல்லாகக் கருதப்பட்டாலும் ஐயன் வள்ளுவர் தம் குறட்பாவில் " மயிர் " என்னும் சொல்லைக் கையாண்டுள்ளார் .

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் .

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35014
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed May 17, 2017 7:38 am

" மயிர் " என்னும் சொல் தற்போது அமங்கலச் சொல் என்பதைவிட ,
வசைச்சொல்லாக பயன் படுத்துவதே அதிகம்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக