ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
இன்று தை பூசம்  Poll_c10இன்று தை பூசம்  Poll_m10இன்று தை பூசம்  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று தை பூசம்

2 posters

Go down

இன்று தை பூசம்  Empty இன்று தை பூசம்

Post by sugumaran Thu Feb 09, 2017 9:42 am

இன்று தை பூசம்
- - அண்ணாமலை சுகுமாரன்

தை பூசம் என்றதுமே பெரும்பாலும் நமக்கு வள்ளல்பெருமானின் வடலூர்மட்டுமே நினைவுக்கு வரும் .
"என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே "என இறவாமைக்கு வழிகூறிய வள்ளலாரை நினைவுறுத்தும் நாள் .இது .
இறவாமையை ஏன் ஒழிக்கவேண்டும் என்றால் அப்போதுதான் பிறவாமை கிடைக்கும் .
பிறவாமை கிடைக்க நம்மிடம் சேர்ந்திருக்கும் கர்ம வினைகள் தீரவேண்டும் .
பிறவாமை எனினில் ஆன்மா உற்பத்தி யாகும் இடத்தில் ஒடுக்குதல் வேண்டும் ,அதுவே தானே இறை ஆகுதல் .நிலை ஆகும்
இதற்க்கு வேண்டிய சன்மார்க்க மார்க்கங்களை அருளிய வள்ளல் தான் அருட்பெருஞ்சோதி ராமலிங்கர் .அவர்கள்

வடலூர் சத்திய தருமச்சாலைக்கு அருகில் ஒரு ஒளித் திருக்கோயிலை 1871-ஆம் ஆண்டு வள்ளலார் அமைக்கத் தொடங்கினார். அந்தத் திருக்கோயிலுக்குச் ‘சமரச சுத்த சன்மார்க்க சத்தியஞான சபை‘ என்று பெயர் சூட்டினார்.
25.1.1872, தை மாதம் 13-ஆம் நாள் தைப்பூசத் தினத்தன்று முதல் ஒளி வழிபாட்டு விழா நடைபெற்றது. அது அவரின் அருளால் இன்றுவரை தொடர்கிறது .

ஆயினும் தை பூசத்திருநாள் வடலூரில் மட்டும் கொண்டாடப்படுவதில்லை அது முருகனுக்கும் உகந்த நாள் .
சைவ திருத்தலங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது .
அவர்களைப்பற்றிய வரலாற்று செய்திகளையும் ,இதர செய்திகளையும் இங்கேகாணப்போகிறோம் .

சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சந்திரமானம் என்றும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சவுரமானம் என்றும் பெயர்.
தை என்ற சொல், திஷ்யம் என்ற சொல்லில் இருந்து வந்தது.எனப்படுகிரது திஷ்யம் என்றால் பூச நட்சத்திரம்.
திஷ்யம்-தைஷ்யம்- தைசம்- தை என, மாற்றம் கொண்டது.
தைசம் என்றால் பூச நட்சத்திரம் என, கதிரைவேற்பிள்ளையின் சங்கத்து அகராதி கூறுகிறது.
பூச நட்சத்திரத்தில், முழு நிலா வரும் நாள் தான், தைப் பூசம்.
அந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான், தை மாதத்திற்கு அந்தப் பெயர் வந்தது. சங்க இலக்கியங்களில், 'தைஇயத் திங்கள்' என, தை மாதம் குறிப்பிடப்படுகிறது. தைசப்பூசத்தன்று, முழுநிலா நாளில், நிலத்தில் நீர் ஊறும் என்பது சங்க கால மக்கள் நம்பிக்கை.
புஷ்யம் என்ற சொல்லுக்கு புஷ்டி என்று அர்த்தம். அந்த அடிப்படையில், தையில் நீர் வளம் பெருகி, உணவு உற்பத்தி அதிகரித்து நாடு நலமாக இருக்க வேண்டும் என, நோற்பது தான் தைந்நீராடல்.

சந்திரமான கணக்கின்படி, மார்கழிப் பவுர்ணமியில் விரதத்தை துவக்கி, தை பவுர்ணமியில் அதாவது தைசப் பூசத்தன்று முடிப்பது தைந்நீராடல். சங்க இலக்கியம் இதனை 'தவத் தைந்நீராடல்' என, குறிப்பிடுகிறது
இந்த விரதத்தை பெண்கள் தான் இருப்பர்.
மேலும் தைப்பூசம் பற்றிய குறிப்பு, மகாவம்சம் என்ற இலங்கை வரலாறு பற்றிய நூலில் முதன்மையாக காணப்படுகிறது. புத்தர் வான்வழியாக இலங்கை சென்ற போது, இலங்கையின் பூர்வ குடிகளான யட்சர்கள், மாவலி கங்கையாற்றின் கரையில், தைப்பூச விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் என, மகாவம்சம் குறிப்பிடுகிறது. யட்சர்கள், மங்கோலிய இனத்தவர்கள். அவர்களின் தலைவன் குபேரன். மிகப் பழமையான, தர்ம சூத்திர நூலான ஆபஸ்தம்ப சூத்திரத்தில், தைப்பூசத்தன்று, குபேரனுக்கு பால் பொங்கல் படைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உள்ளது.அதைக்கொண்டு தைப்பூசம் கொண்டாடும் வழக்கம் மிக நீண்ட காலமாகவே வந்திருக்கிறது என்பது தெரியவருகிறது .

தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும்.
27 நட்சத்திர மண்டலங்களில் எட்டாவது நட்சத்திரம் பூசம் ஆகும்.
தை மாதத்திலே வரும் பூச நட்சத்திரம் புண்ணிய நாள் தைப்பூச விழாவாக இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது.
தைப்பூசம் வரும் நாள் பெரும்பாலும் நிறைமதி நாளாக (பூரணை நாளாக) இருக்கும்.

தைப்பூசம் முருகப்பெருமானுடைய விஷேட தினமாகும். அன்றைய தினம் அடியார்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்.
இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில் களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

தேவர்களின் குருவாகக்கொள்ளப்படும்( பிரகஸ்பதி )குரு பகவான்,பூச நட்சத்திரத்தின் தேவதையாகக் கொள்ளப்படுகின்றார். இவர் அறிவின் தேவதையாகவும் போற்றப்படுகின்றார். பதஞ்சலி, வியாக்கிரபாதர் ஆகிய முனிவர்கள் இருவருக்கும் சிவபிரானாகிய நடராசப்பெருமான் சிவதாண்டமாடிக் காணுப்படி செய்தநாளாகவும் தைப்பூசம் விளங்குகின்றதுஇது நிகழ்ந்த இடம் சிதம்பரம் .
அந்த சிதம்பரத்தில் தை பூசம் சிறப்பாகக்க்கொண்டாடப்பெறுகிறது .
அன்று "திருப்பாவாடை" எனும் மிகுதியான திருவமுது விதவிதமாக செய்து இறைவனை ஆராதிப்பது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடந்து வருகிறது .
அதற்க்கு தேவையான கட்டளைகளை தக்க சாசனங்கள் மூலம்
தரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது .சோழர்களின் கல்வெட்டுகளும் இது குறித்து உள்ளதாகக் கூறப்படுகிறது .
ஆறுமுகப் பெருமானின் அருளை அடைவதற்கு தைப்பூசம் உகந்த நாள். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுளிலும் முருகனடியார்கள் பலர் பாதயாத்திரையாகச் சென்று தைப்பூசத்தன்று முருகனை தரிசித்து விரதத்தை நிறைவு செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.
இத் தைபூசத்திருநாளிலே தொடங்கும் செயல்கள் தொய்வின்றி இனிதே நிறைவேறும் என்பது காலம் காலமாக நாம் கொண்டுள்ள நம்பிக்கையாகும் “தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்” என்பது பழமொழியாக அமைந்துள்ளது .
இன்று வியாழக்கிழமை பூச முழு நிலவு சேர்ந்து வருவது மிக சிறப்பானது
இவ்வாறு இன்னமும் பல தகவல்கள் தைப்பூசம் பற்றி இருக்கின்றது .
பிறகு காணலாம் .
அண்ணாமலை சுகுமாரன்
9/2/17
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

இன்று தை பூசம்  Empty Re: இன்று தை பூசம்

Post by T.N.Balasubramanian Thu Feb 09, 2017 11:05 am

"தை" விளக்கம் , வடலூர் ஒளி வழிப்பாட்டு திருவிழா,  “தைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும்”,
செய்திகள் ,பதிவு அருமை. நன்றி சுகுமாரன் அவர்களே.
ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று தை பூசம்  Empty Re: இன்று தை பூசம்

Post by sugumaran Fri Feb 10, 2017 8:46 am

தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி நண்பரே
எனக்கு ஒரு சந்தேகம் பொதுவாக ஈகரையில் கட்டுரைகள் பொது எனும் பிரிவில் நான் பதிவிட்டு வருகிறேன் .
இப்போது வரலாறு என்பதற்குத் தனிப் பிரிவு இருப்பதை காண்கிறேன் .
கட்டுரைகள் பொதுவில் இடும் கட்டுரையை வரலாறு பிரிவிலும் பதிவிடலாமா ?
எழுதினால் வரும் பாவம் படித்தால் தான் போகும்
அதிகம் படித்தால் எழுதியதின் பயன் கிடைக்கும் என நம்புகிறேன்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Back to top Go down

இன்று தை பூசம்  Empty Re: இன்று தை பூசம்

Post by T.N.Balasubramanian Fri Feb 10, 2017 9:26 am

sugumaran wrote:தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி நண்பரே
எனக்கு ஒரு சந்தேகம் பொதுவாக ஈகரையில் கட்டுரைகள் பொது எனும் பிரிவில் நான் பதிவிட்டு  வருகிறேன் .
இப்போது வரலாறு என்பதற்குத் தனிப் பிரிவு இருப்பதை காண்கிறேன் .
கட்டுரைகள் பொதுவில் இடும்  கட்டுரையை வரலாறு பிரிவிலும் பதிவிடலாமா ?
எழுதினால் வரும் பாவம்   படித்தால் தான் போகும்
அதிகம்  படித்தால்  எழுதியதின் பயன் கிடைக்கும் என நம்புகிறேன்
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
மேற்கோள் செய்த பதிவு: 1233596

இரு பிரிவில் போடவேண்டிய அவசியமில்லை என்றே படுகிறது.
பொது பிரிவில் இடும் கட்டுரைகள் உங்கள் சொந்த கட்டுரையாக இருக்கலாம்.
சொந்த கட்டுரையில் பெரும்பான்மையாக  மத சம்பந்தமான விஷயங்கள் ,புராணங்கள் மேற்கோள் இடும்போது , அவைகளை ஆன்மீக பிரிவில்  போடலாம்.
மத சம்பந்தமற்ற அரசியல் வரலாறுகள் "வரலாறுகள்" பகுதியில் பதிவிடலாம்   
தெளிவு படுத்தி உள்ளேன் என நினைக்கிறேன்.


ரமணியன்  


Last edited by T.N.Balasubramanian on Fri Feb 10, 2017 9:33 am; edited 1 time in total (Reason for editing : addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

இன்று தை பூசம்  Empty Re: இன்று தை பூசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum