ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!

Go down

திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...! Empty திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!

Post by ayyasamy ram Sat Feb 04, 2017 8:10 am

திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...! YUXp9v8rTaO1wo26F56x+kadhir2
-
எப்போதுமே ஈரானியத் திரைப்படங்களுக்குப் பெருத்த
வரவேற்பு உண்டு; அந்த வகையில் வெளியான "லண்டௌரி'
என்ற இந்தப் படம் சென்னைத் திரைப்பட விழாவில் மிகப்
பெரும் அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
-
வளரும் நாடுகளில் இன்னும் பெண்களின் நிலை தாழ்ந்தே
உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு
நாள் அதிகரித்தே வருகின்றன. இத்தகைய சூழலே
இப்படத்தின் கரு.
-
பெண்களுக்கு எதிரான திராவக வீச்சை மையமாகக்
கொண்டதாகும்.
-
இக்கதையில் வரும் மரியம் என்ற நடுத்தர வயதுடைய பெண்,
சமூகச்சேவையில் நாட்டமுள்ள பத்திரிகையாளர். குறிப்பாக
ஈரானின் "கண்ணுக்குக் கண்' எனப்படும் சட்டத்தை எதிர்ப்பவர்.
-
அவரை எதிர்பாராவிதமாகச் சந்திப்பவன் பாஷா என்னும்
பேட்டை ரௌடி, வழித்திருடன். இவ்விருவருக்குமிடையேயான
கதையே "லண்டௌரி' எனப்படும் இத்திரைப்படம்.
-
இக்கதைச் சூழலில் பல திரைப்படங்கள் தமிழில் வந்திருந்தாலும்,
இப்படத்தில் அழுத்தமாகச் சொல்லப்பட்ட விதமும்,
அது ரசிகர்களின் மனங்களில் ஏற்படுத்தும் தாக்கத்தையும்
சொல்லில் அடக்கிவிட இயலாது.
-
மரியம் என்ற அந்தப் பெண்ணும், பாஷா என்ற திருடனும், தங்கள்
முன் ஏற்பட்ட அனுபவங்களால், தங்கள் இயல்பு நிலையிலிருந்து
முரண்படுவது இப்படத்தின் போக்கை வலுப்படுத்துகிறது எனலாம்.
மரியம் பார்த்தவரையெல்லாம் வசீகரிக்கக் கூடிய கண்களையும்
தோற்றத்தையும் கொண்டவள்.
-
எங்கெல்லாம் பழிவாங்கும் முனைப்பில் சட்டம் திருத்தப்படுகிறதோ,
அங்கெல்லாம் தன் குரலை எழுப்புபவள். பாஷாவோ வழிப்பறி
செய்யும் தொழிலைக் கொண்டவன். அவனும் அவன் கூட்டாளிகளாக
மேலும் இரு ஆண்களும் ஒரு பெண்ணும் சேர்ந்து வழிப்பறி செய்யும்
ஒரு குழு. அந்தக் குழு "லண்டௌரி' என்றழைக்கப்படுகிறது.
அச்சொல்லுக்கான பொருள் கொசு.
-
-------


Last edited by ayyasamy ram on Sat Feb 04, 2017 8:11 am; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...! Empty Re: திரைப்பட விழாவில் பார்த்தது: இங்கே போல அங்கேயும்...!

Post by ayyasamy ram Sat Feb 04, 2017 8:10 am


மரியத்தை எதேச்சையாகப் பார்க்கும் பாஷா அவள்மேல் ஒருதலைக்
காதல் கொள்கிறான். ஆனால் மரியம் அவன் ஒரு கொள்ளைக்காரன்
என்பதை அறிந்துகொண்டு, அவனைத் தன்னுடைய பத்திரிகை
ஆய்வுகளுக்காகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பிக்கிறாள்.
-
அந்த நெருக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்ட பாஷா, அவள்
தன்னை உண்மையிலேயே காதலிக்கிறாள் என்று நினைத்துக்
கொண்டு இருக்கும் வேளையில், மரியம், வேறொரு நபரிடம் பழகுவது
தெரிய வருகிறது. காதலில் மனம் மயங்கிக் கிடக்கும் பாஷா.
மரியத்திடம் மன்றாடுகிறான்; அவள் மறுக்கின்றாள்.
-
ஒரு நாள் அவள் எதிர்பார்க்காத தருணத்தில் அவள் முகத்தில்
திராவகத்தை ஊற்றிவிடுகிறான். தான்தோன்றியாகக் கிடந்த பாஷா
தன் வன்மையை எல்லாம் துறந்து தன் குணத்தையே மறந்து காதலில்
வயப்பட்டு தன்னிலை இழப்பதே முன்கதை.
-
கதையின் பிற்பாதி முழுக்க முழுக்க மரியத்தை மையமாகவே வைத்து
அமைகிறது. இதுவரை "கண்ணுக்குக் கண்' என்னும் சட்டத்தை எதிர்த்து
வந்த மரியம், திராவகத் தாக்குதலால், தன் பார்வை இழந்து, தன் முகம்
சிதைந்த நிலையில், பாஷாவைச் சட்டம் மூலம் பழிவாங்கத்
துடிக்கிறாள்.
-
அவள் விருப்பத்திற்கிணங்க நீதிமன்றம் பாஷாவின் கண்களைச்
சிதைக்கலாம் என்று நீதி வழங்குகிறது. பின்னர் அதன்படி நடக்கிறதா
என்பதே இப்படத்தின் உச்சக்கட்டம்.
-
பெரும்பாலான தவறுகள் கண நேர உந்துதலால்தான் நடைபெறுகின்றன
என்பதால் அவ்வகை வழக்குகளில் தவறு செய்தவர்களுக்கு அவர் திருந்தி
வாழ வழிசெய்தல் வேண்டும் என்பது ஒருபக்கக் கூற்றாக இருந்தாலும்,
அத்தகைய செயல்களுக்குக் கடுமையான தண்டனைகளை அளித்தால்
மட்டுமே அவை சமுதாயத்தில் திரும்பத் திரும்ப நடக்காது என்ற நிலை
வரும் என்று வாதாடும் மறுபக்கக் கூற்றும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.
படம் முழுவதும் கதையின் பாத்திரங்களும், அப்பாத்திரங்களின்
நண்பர்களும் மாறி மாறி விவரித்துச் செல்வதைப்போன்ற நடை பயன்
படுத்தப்படுகிறது.
-
படம் தொடங்கி பத்து நிமிடத்துக்குள் பார்க்கும் நம்மை அக்கதைக்குள்
இழுத்துக் கொள்ளும்விதமாக கதையின் போக்கு அமைந்துள்ளது
குறிப்பிடத்தக்கது. மிகவும் ஆழமான ஒரு கருத்தை, மிக அழுத்தமான
இயக்கத்தால், நம் மனக்கண்களுக்கு முன்னர் விரித்துச் செல்லும்
இயக்குநரின் முயற்சி பாராட்டத்தக்கது.
-
இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப் பெற்ற திரைப்
படங்களில் முதன் மூன்று தரமானவற்றுள் ஒன்றாய் இது அமையும்
என்பது திண்ணம்.
-
-------------------------------------
By - சந்தர் சுப்ரமணியன்  
தினமணி கதிர்











ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum