புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
59 Posts - 55%
heezulia
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
54 Posts - 55%
heezulia
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_m10தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Poll_c10 
2 Posts - 2%

Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் !

Page 1 of 3 1, 2, 3  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 5:29 pm

தை அமாவாசை அற்புதம் !

தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! 7XRpQ2hnTDKljNr9XzPE+5a6050c7-3322-4e4b-8857-a4dd3835041f

திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் அன்னை அபிராமி மீது மிகுந்தபக்தி கொண்டு எந்நேரமும் அன்னையைத் தியானித்துவந்தார்.ஆனால், ஊராரில் பலர் இவர் ஒரு பித்தர் என்று நினைத்து ஏளனம் செய்வர். ஆனால் அதைப்பற்றி எவ்வித கோபமும் கொள்ளாமல் தம்முடைய கடமை அபிராமியை போற்றி வணக்குவதுதான் என்று கொள்கையை கொண்டிருந்தார்.

அவர் அன்னை அபிராமி மீதும் அமிர்தகடேஸ்வரர்மீதும் பாடல்களை இயற்றி சன்னதியில் பாடி வரலானார்.ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மகராஜா பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக் கடையூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர்.

அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில்ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர்.மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், ‘இன்று என்ன திதி?’ என கேட்டார்... உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர் தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய ‘பவுர்ணமி’ என்று பதிலளித்தார்.

ஆனால், அன்றோ அமாவாசை! கோபமுற்ற மன்னன், இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா என்று கேட்க...அதற்கு பட்டர் முடியும் என்றார்.இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், ‘இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால்உமக்கு சிரச்சேதம்தான்’என்று கூறி சென்றுவிட்டார்.சூரியன் மறைந்தது… அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை.

உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார்.‘இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்’ என்று சபதம் செய்தார்.

பின்பு, உதிக்கின்ற செங்கதிர் எனத்தொடங்கும் அபிராமி அந்தாதி பாடத்தொடங்கினார். ஒவ்வொரு பாடலும் முடியும்போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79–வது பாடலாக விழிக்கே அருளுண்டு எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார்.

உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச... அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது.அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.

‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற, பட்டரும் ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.

ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும்.. அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்…அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 5:29 pm

1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.

2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.

3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.

4. உயர்பதவிகளை அடையலாம்.

5. மனக்கவலை தீரும்.

6. மந்திர சித்தி பெறலாம்.

7. மலை யென வருந்துன்பம் பனியென நீங்கும்.

8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.

9. அனைத்தும் கிடைக்கும்.

10. மோட்ச சாதனம் பெறலாம்.

11.இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.

12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.

13. வைராக்கிய நிலை அடைவார்கள்.

14. தலைமை பெறுவார்கள்.

15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.

16.முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.

17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.

18. மரணபயம் நீங்கும்.

19. பேரின்ப நிலையை அடையலாம்.

20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.

21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.

22. இனிப்பிறவா நெறி அடையலாம்.

23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.

24. நோய்கள் விலகும்.

25. நினைத்த காரியம் நிறைவேறும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 5:30 pm

26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.

27. மனநோய் அகலும்.

28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.

29. எல்லா சித்திகளும் அடையலாம்.

30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.

31. மறுமையில் இன்பம் உண்டாகும்.

32. துர் மரணம் வராமலிருக்கும்.

33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.

34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.

35. திருமணம் நிறைவேறும்.

36. பழைய வினைகள் வலிமை அழியும்.

37. நவமணிகளைப் பெறுவார்கள்.

38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள்.

39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம்.

40. பூர்வ புண்ணியம் பலன்தரும்.

41. நல்லடியார் நட்புப்பெறும்.

42. உலகினை வசப்படுத்தும்.

43. தீமைகள் ஒழியும்.

44. பிரிவுணர்ச்சி அகலும்.

45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.

46. நல்நடத்தையோடு வாழ்வார்கள்.

47. யோகநிலை அடைவார்கள்.

48. உடல்பற்று நீங்கும்.

49. மரணத்துன்பம் இல்லா திருக்கும்.

50. அம்பிகையை நேரில் காண முடியும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 5:31 pm

51. மோகம் நீங்கும்.

52. பெருஞ் செல்வம் அடைவார்கள்.

53. பொய்யுணர்வு நீங்கும்.

54. கடன்தீரும்.

55. மோன நிலை கிடைக்கும்.

56. அனைவரையும் வசப்படுத்தலாம்.

57. வறுமை ஒழியும்.

58. மன அமைதி பெறலாம்.

59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.

60. மெய்யுணர்வு பெறலாம்.

61. மாயையை வெல்லலாம்.

62. எத்தகைய அச்சமும் வெல்லலாம்.

63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம்.

64. பக்திபெருகும்.

65. ஆண்மகப்பேறு அடையலாம்.

66. கவிஞராகலாம்.

67. பகை வர்கள் அழிவார்கள்.

68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும்.

69. சகல சவுபாக் கியங்களும் அடைவார்கள்.

70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம்.

71. மனக்குறைகள் தீரும்.

72. பிறவிப்பிணி தீரும்.

73. குழந்தைப்பேறு உண்டாகும்.

74. தொழிலில் மேன்மை அடையலாம்.

75. விதியை வெல்வார்கள்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 26, 2017 5:32 pm

76.தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள்.

77. பகை அச்சம் நீங்கும்.

78. சகல செல்வங்களை யும் அடைவார்கள்.

79. அபிராமி அருள்பெறுவார்கள்.

80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும்.

81. நன்னடத்தை உண்டாகும்.

82. மன ஒருமைப்பாடு அடையலாம்.

83. ஏவலர் பலர் உண்டாகும்.

84. சங்கடங்கள் தீரும்.

85. துன்பங்கள் நீங்கும்.

86. ஆயுத பயம் நீங்கும்.

87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள்.

88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம்.

89. யோக சித்தி பெறலாம்.

90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும்.

91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள்.

92. மனப்பக்குவம் உண்டாகும்.

93. உள்ளத்தில் ஒளியுண்டாகும்.

94. மனநிலை தூய்மையாக இருக்கும்.

95. மன உறுதி பெறும்.

96. எங்கு பெருமை பெறலாம்.

97. புகழும் அறமும் வளரும்.

98. வஞ்சகர் செயல்களி லிருந்து பாதுகாப்பு பெறலாம்.

99. அருள் உணர்வு வளரும்.

100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நன்றி : whatsup

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Thu Jan 26, 2017 8:32 pm

தை அமாவாசை சிறப்பு மிக்கது தான்>>>>

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 28, 2017 10:52 am

தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! DeJsphEiQpmDMmzfqae6+p26a_17273
-
சோழவளநாட்டின் தஞ்சை நகரிலே உள்ள சிவ தலங்களில்
ஒன்றாக திகழுவது திருக்கடையூர் அபிராமிவல்லி சமேத
அமிர்தகடேஸ்வரர் ஆலயம்.

இந்த ஆலயத்தில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர் வழிபாடு
நடத்தி வந்தவர் அபிராமி பட்டர் என்னும் சுப்பிரமணியன்.

இவர் சிறு வயது முதலே அன்னை அபிராமியிடம், அளவற்ற
அன்பும் பக்தியும் கொண்டிருந்தார்.

அபிராமியின் அற்புதம்

அவர் அன்னையின் மீது கொண்ட அன்பின் விளைவாக பல
துதிகளைத் தாமே இயற்றிப் பாடியும் வந்தார். ஒளி வடிவில்
அன்னையைத் தரிசித்து பேரின்பம் கண்டார்.

ஆனால், இவரின் தெய்வீக நிலையை மற்றவர்களால் புரிந்து
கொள்ள முடியவில்லை. இவரை பித்தன் என்று வசைபாடினர்.
ஆனால் அபிராமி பட்டரோ அதைக் பொருட்படுத்தாமல்,
அபிராமியைத் துதிப்பதும், அன்னையின் பேரில் துதிகள் இயற்றிப்
பாடுவதுமாய் இருந்தார்.

இந்நிலையில், ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையைத்
தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்துவந்த சரபோஜி மன்னர்,
திருக்கடையூருக்குத் தரிசனம் செய்ய வந்தார்.

மன்னனைக் கண்டதும் மக்கள் வணங்கி நின்று வரவேற்றனர்.
ஆனால், மன்னர் வந்திருப்பதை அறியாத பட்டர், அவரை
வணங்காமல், அன்னை அம்பிகையின் சிந்தனையில் கண்மூடிய
யோக நிலையில் ஆழ்ந்து இருந்தார்.

உடனே அங்கிருந்தவர்கள், " மன்னா! தங்களுக்கு தர வேண்டிய
மரியாதையை வழங்காமல் கண்மூடி இருக்கிறார் பட்டர். எ
ந்நேரமும் இப்படித்தான் இருப்பார். இவர் ஒரு பித்தன்" என்று
பட்டரைப் பற்றி மன்னரிடம் புகார்களை அடுக்கினர்.

ஒரு நிமிடம் யோசித்த சரபோஜி மன்னர், உண்மை எதுவென்று
அறிந்து கொள்ள எண்ணி, பட்டரை அழைத்து, 'இன்று என்ன திதி?'
என்று கேட்டார்.

மெய்மறந்த நிலையில் அன்னையின் யோக நிலையிலிருந்து
மீளாத பட்டர், சற்றும் தாமதிக்காமல், "பௌர்ணமி” என்றார்.

'அப்படியென்றால் இன்று இரவு முழு நிலவு வருமா?' என்று மன்னர்
திரும்ப கேட்க, "நிச்சயம் வருமே" என்றார் கண்மூடிய மோன
அபிராமிநிலையிலேயே பட்டர்.

(முழுநிலவாய் அன்னை பக்தனின் உள்ளத்தில் பிரகாசிக்கும்
போது, அடியவனுக்கு எல்லா நாளுமே முழுநிலவு நாள்தானே!
இதனால் சோதிப்பதற்காக, மன்னர் கேட்ட அன்றைய திதி பற்றிய
கேள்விக்கு, பௌர்ணமி என்று திதியை மாற்றிக் கூறி விடுகிறார்
பட்டர் ).
-
---------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 28, 2017 10:53 am

தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! O4ULjUgGRjaBMDBd9UZm+p26b_17001
-

-
இதனால் சரபோஜி மன்னர் கடும்கோபம்கொண்டு, இன்று இரவு
முழுநிலவு வராவிட்டால் உனக்கு மரண தண்டனை.
இது அரசகட்டளை என்று கூறி மன்னர் சென்று விடுகிறார்.

அரசரும் அவருடைய பரிவாரமும் சென்ற பின்னர், தியானம்
கலைந்தெழுந்த அபிராமி பட்டர் நடந்ததை உணர்ந்து மிகவும்
வருந்தினார். ஏற்கெனவே ஊரும், உலகமும் தம்மைப் பித்தன்
என்று சொல்லி எள்ளி நகையாடுவதை மெய்ப்பிப்பது போலவே
நடந்த இந்த நிகழ்ச்சியால் மனம் வருந்திய அவர்.

"இந்த தவறிலிருந்து அன்னையே தன்னைக் காத்தருளவேண்டும்"
என்று அவர் வேண்டிக்கொண்டார்.

பின்னர் அபிராமி சந்நிதி முன் ஒரு ஆழமான ஒரு குழியை வெட்டி,
அதில் விறகை அடுக்கி அனல் மூட்டினார். அதற்கு மேல் ஒரு
விட்டமும், நூறு கயிறுகளாலான உறியையும் கட்டி, அதில் ஏறி
அமர்ந்து கொண்டார். 'அன்னை எனக்குக் காட்சி கொடுத்து,
அற்புதத்தை நிகழ்த்தி இந்தப் பழியை நீக்காவிட்டால், தீயில்
விழுந்து உயிரை துறப்பேன்' என்று சபதமேற்று,

"உதிக்கின்ற செங்கதிர்" என்று ஆரம்பித்து, நூறு பாடல்களை
கொண்ட அபிராமி அந்தாதியை பாடினார். ஒவ்வொரு பாடல்
முடிந்ததும் ஒவ்வொரு கயிறாக அறுத்துக்கொண்டே வந்தார்.
பொழுது சாய்ந்தது; பட்டரின் நம்பிக்கையில் மாற்றமில்லை!
அமாவாசை வானம் இருள தொடங்கியது.
-
-------------------------------------
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jan 28, 2017 10:54 am

தை அமாவாசை அற்புதம் ! - அபிராமியி!ன் அற்புதம் ! Ow6r5gZkTKaWYERWeZNo+thirukadaiyur_abirami_17035
-

அபிராமியின் அற்புதம்...

-
ஆனால், அன்னையின் அற்புதத்தால் நிலவு நிச்சயம் வரும் என்ற
நம்பிக்கையில், தொடர்ந்து கொண்டிருந்தார் பட்டர். 78 பாடல்கள்
பாடி முடிந்தது 78 கயிறும் அறுபட்டு விட்டது மிகுதியாக இருந்த
கயிற்றில் உறியில் இருந்த வண்ணம் பட்டர் நம்பிக்கை இழக்காது
பாடிக்கொண்டே இருந்தார்.

பட்டர் 79 - வது பாடலாக அம்மா! ”விழிக்கே அருளுண்டு அபிராம
வல்லிக்கு” என்ற பாடலைப் பாடி முடித்ததும், அன்னை அபிராமி
அவருக்கு அருட்காட்சி கொடுத்தாள். அபிராமி தனது தாடங்கம்
(தோடு) ஒன்றை கழற்றி வானில் வீசிட, அது பல கோடி நிலவின்
ஒளியாக ஜொலித்தது.

அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.

அபிராமி, தன் பக்தன் பட்டரிடம், "நீ வாய் தவறி மன்னனிடம் கூறிய
சொல்லையும் மெய்யே என நிரூபித்தேன். நீ தொடங்கிய
அந்தாதியை தொடர்ந்து பாடு" என்றாள். பட்டரும்
‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து
100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.

அபிராமிப்பட்டரின் இந்த உறுதியான பக்தியை கண்டு சரபோஜி
மன்னரும், மக்களும் அகமகிழ்ந்தனர். மன்னரிடம் பட்டரை பித்தன்
என்று கூறியவர்கள் எல்லாம் பட்டரிடம் மன்னிப்பு வேண்டினர்.
மேலும் பட்டருக்கு மன்னன் நிலங்களுடன் பல மானியங்களையும்
அளித்தான்.

இந்நாளின் நினைவாக, வருடந்தோறும் தை அமாவாசை அன்று
திருக்கடையூரில் அபிராமி பட்டருக்கு அம்பிகை அருள்புரிந்த நிகழ்ச்சி
விழாவாகக் கொண்டாடப்படுகிறது.
-
--------------------------------------------
-விகடன்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jan 28, 2017 9:36 pm

அபிராமி தாயே!
:வணக்கம்:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக