ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரலை உயர்த்தாத சண்டைகள்!

4 posters

Go down

குரலை உயர்த்தாத சண்டைகள்! Empty குரலை உயர்த்தாத சண்டைகள்!

Post by krishnaamma Sun Jan 22, 2017 11:14 am

ஒரு சில மனிதர்களுக்கு பிறக்கும் போதே, தொண்டையில் அலறும் ஒலி பெருக்கியும் இணைந்தே வந்து விடும் போல... எல்லாவற்றிற்கும், எட்டுக் கட்டையில் கத்துவர்.

இவர்கள், சாதாரணமாக பேசுவது கூட, யாரோ சண்டையிடுவதைப் போல் அடுத்தவர்களுக்கு தோன்றும். நான் விரும்புவதெல்லாம், சண்டை போடும் போது கூட, குரலை உயர்த்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தான். இதில், ஒரு உண்மை என்னவென்றால், சம்பந்தமே இல்லாத யாரோ சண்டை போட்டால் கூட, நம்மில் பலருக்கு, பதற்றம் தொற்றிக் கொள்ளும்.நெருங்கிய இருவர் சண்டை போட்டாலோ, கேட்கவே வேண்டாம். உதாரணம்: அப்பா - மகன் வாக்குவாதத்தின் போது, தாயின் படபடப்பு!

காட்டுக் கூச்சல் போடுவோர், யாரை, சொற்களால் தாக்குகின்றனரோ அவர்களையும் தாண்டி, இவர்களது குரல், எல்லாரையும் பதற்றமடைய செய்கிறது. இது, மனிதநேயமற்ற செயல்.

ரயில் பயணத்தில், பெருங்குரலில் சண்டையிடும் இருவர், சக பயணிகளுக்கு, பெரிய கெடுதலை செய்கிறோம் என்பதை உணர வேண்டும். பிறரது மன அமைதியும், தூக்கமும் கெட, நாம் காரணமாக இருக்க கூடாது. இந்த காட்டு கூச்சலை கேட்டு விழித்துக் கொள்வோர், பின், வெகுநேரம் வரை தூக்கம் வராமல் தவிக்கின்றனர் என்பதே உண்மை.

என் வெளிநாட்டு அனுபவங்களை வைத்து சொல்கிறேன்... அங்கெல்லாம், பொது இடத்து வாக்குவாதங்கள் மற்றும் கருத்து மோதல்கள், பெரும்பாலும், சூழ்நிலையை கலவரப்படுத்தாமலேயே நிகழ்கின்றன.

விவாகரத்துகளுக்கு பெயர் பெற்ற மேலை நாடுகளில் கூட, பொது இடங்களில், ஒரு கணவன், தன் மனைவியை திட்டுவது, மட்டமாகப் பேசுவது, அடிப்பது போன்ற காட்சிகளை, இதுவரை நான் கண்டதே இல்லை. நம் நாட்டில், பொது இடம் என்றும் பாராமல், இப்படி பலர் அநாகரிகமாக நடந்து கொள்கின்றனர்.

ஒரு கணவன், தன் மனைவி அடங்கிப் போகும் இடம், பொது இடம் மட்டுமே என்று முடிவு செய்து, திட்டமிட்டே இது போன்று நடந்து கொள்கிறான். ஒருவருக்கொருவர் மட்டுமே ஊறு விளைவிப்பதாக கருதி, சுற்றியுள்ளவர்களுக்கு கெடுதல் செய்கின்றனர், இத்தகைய ஆண்கள்.கருத்து வேறுபாடுகளை, உரத்த குரலின் மூலம் தான் பரிமாறிக் கொள்ள முடியும் என்று, யார் இவர்களுக்கு சொல்லியது?

ஒரு மனைவி, தன் கணவரிடம், 'என்னங்க கோபம்... ஏன் பேச மாட்டேங்கிறீங்க...' என்று கேட்பதும், ஒரு காதலன், தன் காதலியிடம், 'என் மீது கோபம்ன்னா, என்னை நாலு போடு போடு; வாங்கிக்கிறேன். ஆனா, பேசாம இருந்து, என்னை கொல்லாதே...' என்று சொல்வதும், நமக்கு எதை உணர்த்துகிறது... அமைதியான முறையில், மவுனத்தின் வழியிலும் கோபத்தை வெளிப்படுத்தி, சண்டையிட முடியும் என்பதைத் தானே சொல்கிறது!

எதிராளியின் விரும்பத்தகாத செயலை கண்டிப்பது, அவர்களுக்கு ஒன்றை அறிவுறுத்துவது மற்றும் அவர்களை திருத்துவது போன்றவற்றை, குரலை உயர்த்தாமலேயே சாத்தியப்படுத்தினால், அதற்கு பலன் மிக அதிகம்.

எதைக் கூறுவதாக இருந்தாலும் மென்மையாக சொல்லும் போது, அது, எதிராளியின் மனதில் நன்கு தைப்பதுடன், உணரவும் தலைப்படுவார்.

உங்களது ஆட்சேபம், கண்டனம், சலிப்பு, வேதனை மற்றும் உரிமை எது ஒன்றையும், நீங்கள் தாராளமாக சொல்லலாம்; நன்றாகவே வெளிப்படுத்தலாம்; ஆனால், குரலை மட்டும் உயர்த்தாமல்!

லேனா தமிழ்வாணன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குரலை உயர்த்தாத சண்டைகள்! Empty Re: குரலை உயர்த்தாத சண்டைகள்!

Post by M.Jagadeesan Sun Jan 22, 2017 5:10 pm

நம் நாட்டில் குரலை உயர்த்தாமல் குழாயடிச் சண்டைகள் நடைபெறுவதில்லை .வெளிநாட்டில் குழாயடிச் சண்டைகள் கிடையாது ; ஆனால் ஒரு நிமிடத்திற்கு ஒருவிவாகரத்து அங்கே நடைபெறுகிறது . அந்த வகையில் நாம் எவ்வளவோ மேல் !


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குரலை உயர்த்தாத சண்டைகள்! Empty Re: குரலை உயர்த்தாத சண்டைகள்!

Post by ayyasamy ram Wed Jan 25, 2017 4:57 pm

குரலை உயர்த்தாத சண்டைகள்! 103459460 குரலை உயர்த்தாத சண்டைகள்! 3838410834
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குரலை உயர்த்தாத சண்டைகள்! Empty Re: குரலை உயர்த்தாத சண்டைகள்!

Post by T.N.Balasubramanian Wed Jan 25, 2017 6:09 pm

லேணாதமிழ்வாணன் 

உங்களது ஆட்சேபம், கண்டனம், சலிப்பு, வேதனை மற்றும் உரிமை எது ஒன்றையும், நீங்கள் தாராளமாக சொல்லலாம்; நன்றாகவே வெளிப்படுத்தலாம்; ஆனால், குரலை மட்டும் உயர்த்தாமல்!

கல்யாணமான ஆண்களை மனதில் வைத்த சொல்லி இருப்பாரோ !


ரமணியன் 


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரலை உயர்த்தாத சண்டைகள்! Empty Re: குரலை உயர்த்தாத சண்டைகள்!

Post by krishnaamma Wed Jan 25, 2017 11:47 pm

T.N.Balasubramanian wrote:
லேணாதமிழ்வாணன் 

உங்களது ஆட்சேபம், கண்டனம், சலிப்பு, வேதனை மற்றும் உரிமை எது ஒன்றையும், நீங்கள் தாராளமாக சொல்லலாம்; நன்றாகவே வெளிப்படுத்தலாம்; ஆனால், குரலை மட்டும் உயர்த்தாமல்!

கல்யாணமான ஆண்களை மனதில் வைத்த சொல்லி இருப்பாரோ !


ரமணியன் 
மேற்கோள் செய்த பதிவு: 1232320

ஹா..ஹா..ஹா....இருக்கும் இருக்கும் ....... ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குரலை உயர்த்தாத சண்டைகள்! Empty Re: குரலை உயர்த்தாத சண்டைகள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum