ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Poll_c10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Poll_m10பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

4 posters

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Go down

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Empty பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Post by krishnaamma Sat Jan 14, 2017 1:56 am

First topic message reminder :

பொலிக! பொலிக! - ராமானுஜர் 1000 மாவது ஆண்டு கொண்டாடப்படுவதால் தினமலரில் 108  நாட்களுக்கு ஒரு தொடர் வருகிறது. அதை இங்கு பகிர விரும்புகிறேன். படித்து மகிழுங்கள் !

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 CVQDaTLrRZS6bKX1DYcx+ramanujar

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 IcQ0c5fS3GOBeFIzAanW+poliga_poliga_ramanujar


Last edited by krishnaamma on Tue Jan 17, 2017 10:16 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Empty Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Post by krishnaamma Mon May 01, 2017 12:44 am

வாழும்!108

எல்லாம் சரியாக உள்ளதாகவே பட்டது. சீடர்கள் அனைவரும் வந்து சேர்ந்து விட்டிருந்தார்கள். அரங்க நகர்வாசிகள் அத்தனை பேரும் சேரன் மடத்தின் வெளியே குவிந்திருந்தார்கள். யாரும் விரும்பாத ஒரு சம்பவம் நடந்துவிடத்தான் போகிறதென்ற, அறிந்த துயரத்தின் சுவடுகள் அவர்கள் முகமெங்கும் நிறைந்திருந்தன.

'சுவாமி, நீங்கள் இல்லாமல் நாங்கள் எப்படி உயிருடன் இருப்போம்? இருத்தல் என்பதே சுமையாகி விடாதா?' கண்ணீரோடு கேட்ட சீடர்களைக் கருணையுடன் பார்த்தார் ராமானுஜர். 'அப்படி எண்ணக்கூடாது. பிறவி என்பது கர்மத்தினால் வருவது. கணக்குத் தீரும்போது யாரானாலும் விடைபெற்றே ஆக வேண்டும்.

ஆனால் ஒன்று. கிடைத்த பிறவியை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோமா? அது முக்கியம். நாம் கட்டிக்காக்க நினைக்கும் தருமம் தழைக்கப் பணியாற்றியிருக்கிறோமா என்பது அதனினும் முக்கியம். இருப்பது பற்றியும் போவது பற்றியும் கவலை கொள்வது ஒரு வைணவனின் லட்சணமல்ல. செயல் ஒன்றே நமது சீலம்.' என்றவர், பராசர பட்டரை அருகே அழைத்தார்.

'பட்டரே, ஒன்று சொல்ல மறந்து விட்டேன். நான் சிலகாலம் வசித்த ஹொய்சள தேசத்தில் மாதவாசாரியார் என்றொரு அபாரமான ஞானஸ்தர் இருக்கிறார். அங்கே அவரை வேதாந்தி என்று குறிப்பிடுவார்கள். யாரும் இது வரை வாதில் வென்றிராத பெரும் பண்டிதர்...''சொல்லுங்கள் சுவாமி. அடியேன் என்ன செய்ய வேண்டும்?'

'அரங்கன் சாட்சியாக வைணவ தரிசன நிர்வாகப் பொறுப்பை உம்மிடம் கொடுத்திருக்கிறேன். ஞானஸ்தரான அந்த வேதாந்தியை நமது சித்தாந்தத்துக்குத் திருத்திப் பணி கொள்ளும்.''அப்படியே!' என்றார் பட்டர். ராமானுஜருக்குப் பின் சிறிது காலம் எம்பாரின் வழிகாட்டலில் மெருகேறி, பொறுப்புக்கு வந்த பட்டர், தனக்குப் பின் அப்பொறுப்பை ஏற்கவிருக்கும் 'நஞ்சீயர்' அந்த வேதாந்திதான் என்பதை அப்போது அறிந்திருக்கவில்லை.'திருக்கோயில் பணியாளர்களை வரச் சொல்லுங்கள்' என்றார் ராமானுஜர்.

அவர் உருவாக்கிய பணிக் கொத்து ஊழியர்கள். தமது முப்பத்தி ஒன்றாவது வய
தில் திருவரங்கத்துக்கு வந்து கைங்கர்யப் பொறுப்பை ஏற்றபோது அவர் உருவாக்கிய சீர்திருத்தங்களின் மகத்தான பெரும் விளைவு அவர்கள். கோயில் கைங்கர்யங்களில் அனைத்து சாதியினருக்கும் அவரளித்த முக்கியத்துவம் தேசத்துக்கே முன்னுதாரணமாயிற்று.

'வந்துவிட்டார்களா?''ஆம் சுவாமி. இதோ!' என்று கோயில் ஊழியர்கள் முன்னால் வந்து கரம் குவித்து நின்றார்கள். தன்னலமில்லாமல், பூசல் இல்லாமல், அரங்கன் பணி ஆற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தைச் சில சொற்களில் அவர்களிடம் எடுத்துச் சொன்னார்.

'நீங்கள் வருந்தும்படி நான் எப்போதாவது நடந்து கொண்டிருந்தால் அதைப் பொறுக்க வேண்டும்!'ஐயோ என்று அவர்கள் பதறித் தடுத்தார்கள். இன்னொருவர் வாழ முடியுமா இப்படியொரு வாழ்க்கை? ராஜேந்திர சோழன் காலத்தில் ராமானுஜர் பிறந்தார். பிறகு ராஜாதிராஜ சோழன் பட்டத்துக்கு வந்தான். இரண்டாம் ராஜேந்திரனும் வீர ராஜேந்திரனும் அதிராஜேந்திரனும் அடுத்தடுத்து வந்தார்கள்.

முதலாம் குலோத்துங்கன் வந்தான். விக்கிரம சோழன் வந்தான். அடுத்தவன் வந்தான், அவனும் போனான்...எத்தனை மன்னர்கள்! எத்தனை ஆட்சிகள், நல்லதும் கெட்டதுமாக எத்தனை எத்தனை சம்பவங்கள்! எதிலும் சமநிலை குலையாமல், எத்தருணத்திலும் விட்டுக்கொடுக்காமல், எவர்க்கும் அஞ்சாமல், தன்னெஞ்சு அறிந்ததைத் தயங்காமல் எடுத்துச் சொல்லி, எல்லாக் காலங்களுக்கும் சாட்சியாக இருந்துவிட்டுப் படுத்திருக்கும் பெரியவர்.

'சுவாமி, உங்கள் சொற்கள் எங்களிடம் இருக்கின்றன. என்றென்றும் உங்கள் ஆசியும் இருக்கப் போகிறது. கோயில் பணிகள் குறைவற நடக்கும்!' என்று அவர்கள் நம்பிக்கை சொன்னார்கள். 'சரி. அவ்வளவுதானே?' என்பதுபோல் அனைவரையும் ஒரு
பார்வை பார்த்தார் ராமானுஜர். உதட்டில் சிறு முறுவலொன்று பிறந்தது. அந்தப் புன்னகையே அவரது ஆசியாக இருந்தது. மெல்லக் கண்களை மூடிக்கொண்டார். நெஞ்சில் த்வயம் நிறைந்தது.

அது உடையவர் பிறந்த அதே பிங்கல வருடம். மாசி மாதம். வளர்பிறை தசமி திதி. அதே திருவாதிரை நட்சத்திரமும்கூட.சீடர்கள் ஒருபுறம் தைத்ரீய உபநிடதத்தில் இருந்து பிருகுவல்லி, ஆனந்தவல்லி என்ற பகுதிகளை ஓதினார்கள். திருவாய்மொழி சேவித்தார்கள். கட்டுக்கடங்காத கண்ணீரோடு காரியங்கள் நடைபெறத் தொடங்கின.

ஞான புத்திரனாக அவர் சுவீகரித்திருந்த திருக்குருகைப் பிரான் பிள்ளான் அந்திமக் கிரியைகளைச் செய்தார்.
ராமானுஜர் ஒரு தத்துவத்தை நெஞ்சில் சுமந்தார். எளிய, பாமர மக்களுக்கான மோட்ச உபாயம். மூச்சிருந்த நுாற்றி இருபதாவது வயது வரை தான் நம்பிய விசிஷ்டாத்வைத சித்தாந்தத்தையும் சரணாகதி என்கிற பெருந்தத்துவத்தையும் மட்டுமே போதித்து வந்தார்.

பேதமற்ற ஒரே பெரும் சமூகமென்ற வண்ணமயமான கனவைத் தரையில் இறக்கி வைத்து, அதை நெருங்கப் பாதை அமைத்துக் கொடுத்தார். நிகரற்ற செயல்வீரராகத் திகழ்ந்து, பரவி, அடங்கிய தனது புத்திரரை அரங்கன் தனது திருக்கோயிலுக்குள்ளேயே ஐந்தாம் சுற்றில் பள்ளிப்படுத்தத் திருவுள்ளம் கொண்டான். அது அரங்கனின் வசந்த மண்டபமாக இருந்த இடம். அங்கே ராமானுஜரின் திருவுடலைப் பள்ளிப்படுத்தினார்கள்.

'தானுகந்த திருமேனி'யைச் சுமந்து சென்று ஸ்ரீபெரும்புதுாரில் பிரதிஷ்டை செய்துவிட்டு மகிழ்ச்சியுடன் திரும்பியிருந்த கந்தாடையாண்டான், இப்போது மடை திறந்த கண்ணீர் வெள்ளத்துடன் அங்கே உடையவரின் இன்னொரு திருமேனிச் சிலையைப் பிரதிஷ்டை செய்ய, அது 'தானான திருமேனி' ஆயிற்று. தனது சூட்சுமத்தில் என்றும் உறங்காத எம்பெருமானாரின் ஞானச்சுடர் விழிகள் அவரது ஸ்துாலத்தில் இருந்து எழுந்து வந்து பொருந்தி ஒளிர்ந்தன.

அதே முகம். அதே தோள்கள். அதே பத்மாசனம். அதே தவத்திருக்கோலம்.உடையவரின் சீடர்கள் அனைவரும் சன்னிதியில் கரம் கூப்பிக் கண்ணீரோடு நின்றிருந்தார்கள். அது சொற்கள் கைவிட்ட பெருந்து யரத்தின் தருணம்.

அத்தனை பேரின் மானசீகத்திலும் அவரது குரல் ஓங்கி ஒலித்தது.'அறியவொண்ணாப் பெருந்தத்துவமான பிரம்மத்தின் வெளிப்பாடுகள் இரண்டு. ஒன்று ஜீவாத்மா. இன்னொன்று பரமாத்மா. நீ பரமாத்மாவைச் சரணடைந்து விட்டால் உன் பொறுப்பு அவனுடையது. மோட்சத்துக்கென்று தனியே மெனக்கெட அவசியமில்லை. அவன் பார்த்துக் கொள்வான்.

'வைணவம் அநாதியானது. ராமானுஜர் அத்தத்துவத்துக்கு ஒரு வண்ணமும் வடிவமும் அளித்தார். வையமெங்கும் அதைப் பரப்பும் பணியில் வாழ்நாள் முழுதும் ஈடுபட்டார். மனித குலத்தின் மீதான மாசற்ற நேசம் ஒன்றே அவரை இதைச் செய்ய வைத்தது. தாம் பிறந்து ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு இன்றும் அவர் வாழ்வது நிகரற்ற அப்பெரும்பணியால்தான். ராமானுஜ சித்தாந்தம் இன்னொரு ஆயிரமாண்டுகள் தாண்டியும் வாழும்.

(நிறைந்தது)

பா.ராகவன் .

நன்றி தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Empty Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Post by krishnaamma Wed May 03, 2017 1:09 am

//அகோபில மடத்தின் 46-ம் பட்டத்து அழகியசிங்கர் தங்கத்தாலும்
வெள்ளியாலும் செய்யப்பட்ட இரண்டு நவகிரந்த
மாலைகளைச் சமர்ப்பித்தார். //


பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Bg0rvmuQRJlAEfV3Go21+IMG-20170421-WA0003


Last edited by krishnaamma on Wed May 03, 2017 1:12 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Empty Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Post by krishnaamma Wed May 03, 2017 1:09 am

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 UZ8oni0IQylTaa9dzfSc+IMG-20170420-WA0014


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Empty Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Post by krishnaamma Wed May 03, 2017 1:09 am

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Vt2knrTT3KeggiTVNnog+IMG-20170421-WA0005


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Empty Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Post by krishnaamma Wed May 03, 2017 1:10 am

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 ZvuTf9tVRdOSeUAEgliA+IMG-20170420-WA0013


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Empty Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Post by krishnaamma Wed May 03, 2017 1:10 am

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 UV11TcqwRFCwuLZzZJnx+IMG-20170421-WA0004


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Empty Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Post by krishnaamma Wed May 03, 2017 1:11 am

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Knyc4iSeGETR6WUNREwi+ramanajur

தங்க முலாம் பூசப்பட்ட பல்லக்கு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Empty Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Post by krishnaamma Wed May 03, 2017 1:13 am

இரண்டரை கிலோ எடையுள்ள தங்கக் குடம்! புன்னகை
பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 1xv1ru5eSFCiuV8GqzBQ+34564be8-ce88-4488-8b49-43086146bbab


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Empty Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Post by விமந்தனி Wed May 03, 2017 2:05 pm

மிக்க நன்றி கிருஷ்ணாம்மா. மின்னூலாய் இப்போது தான் தரவிறக்கம் செய்தேன். முழுவதுமாக படிக்க வேண்டும். :வணக்கம்:


பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Empty Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Post by krishnaamma Thu Jun 01, 2017 12:48 pm

விமந்தனி wrote:மிக்க நன்றி கிருஷ்ணாம்மா. மின்னூலாய் இப்போது தான் தரவிறக்கம் செய்தேன். முழுவதுமாக படிக்க வேண்டும். :வணக்கம்:  

இன்னும் ஒன்று பாக்கி இருக்கு விமந்தனி புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 ! - Page 13 Empty Re: பொலிக! பொலிக!-ராமானுஜர் 1000 !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum