ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சாரம் - சேவையா - தொழிலா

2 posters

Go down

விபச்சாரம் - சேவையா - தொழிலா Empty விபச்சாரம் - சேவையா - தொழிலா

Post by யாழவன் Wed Nov 25, 2009 8:38 pm








வெவ்வேறு அல்லது ஒத்த பாலினத்தைச் சார்ந்த (சிறியவரோ பெரியவரோ) இருவர் மனமுவந்து அல்லது மனம் வெறுத்து எதிர்வரும் லாபத்திற்காக தன் உடலை விற்பதும் வாங்குவதும் விபச்சாரம் எனப்படுகிறது. இதில் லாபம் என்பதில் பணம் பொருள் பதவி-உயர்வு சுகம் தன்மானம் மற்றும் உயிர்-பயம் ஆகியவை அடங்கும். இத்தொழில் உலகம் முழுக்க மலிந்து கிடப்பதாகவும் அதன் வரலாறையும் விக்கி சொல்கிறது. பண்டைய இந்தியாவில், மருத்துவம் புரோகிதம் நாவிதம் சலவை இடையம் போன்றவற்றோடு தேவதாசி முறையும் குலத்தொழிலாக இருந்திருக்கிறது. கடவுளுக்கு சேவையாற்றல் எனும் பெயரில் ஒரு பெண் பதின் வயதை அடைந்ததும் (அல்லது அதற்கு முன்னரே) அரண்மனைக்கு கொண்டுவரப்படுவாள். அவள் அரண்மைனையில் புளிக்கும்வரை சேவையாற்றிவிட்டு பிறகு பொதுச்சொத்தாக வீதிக்கு தள்ளிவிடப்படுவாள். தேவதாசியாக அரண்மனைக்கு சென்ற பெண் பிறகு நாட்டை ஆண்ட(பெட்டிகோட்) வரலாறும் உண்டு. இன்னும் சிலர் உயர்சாதியினருக்கு மட்டும் சேவை செய்பவளாக இருந்திருக்கிறார்கள்.


புத்த மதம் இந்தியாவில் அழியத்தோன்றியதும் தேவதாசி முறை பரவலாக்கப்பட்டுள்ளது. மடாலயங்கள், கோயில்களாக மாற்றப்பட்டபிறகு அங்கிருந்த துறவிகள் உயர்சாதியினரால் இத்தொழிலுக்கு (சேவைக்கு) இழுத்துவரப்பட்டிருக்கிறார்கள். மேலும் கோவில்களின் நடனப்பெண்களே தேவதாசிகளாக உயர் சாதியினருக்கு சேவை செய்திருக்கிறார்கள். இதை தேவதாசிகளே நடனப்பெண்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்றும் கொள்ளலாம். தென் மாநிலங்களில் பரவலாக இருந்த தேவதாசி முறை பிற்பாடு சோழர் காலத்தில் வட மாநிலங்களுக்கும் பரவியுள்ளது. பிறகு இந்தியாவை கொள்ளையடிக்க வந்து, இந்தியாவின் செல்வ செழிப்பிலும், பெண்களின் அழகிலும் மயங்கிய முகலாயர்கள் இங்கேயே தங்கிவிட்டனர். முகலாய மன்னர்கள், தங்களுக்கு பல மனைவிகளை வைத்துக்கொண்டனர். முகலாய மன்னன் ஜஹாங்கீருக்கு ஆயிரங்கணக்கில் மனைவிகள் இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. எனில் முகலாயர்களுடைய அரண்மனையே விபச்சார விடுதியாக இயங்கியிருக்கிறது போல. ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் படைவீரர்களுக்கு இளைப்பாறுதலுக்காக 'காமதிபுரா' என்ற விபச்சார சேவை நகரம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பிறகு சுதந்திர இந்தியாவில் அதே பாலியல் தொழிலாளர்களால் சிவப்பு விளக்கு பகுதியாக பரிணாமம் பெற்றிருக்கிறது.



நாளடைவில் நாகரீக வளர்ச்சியில் மற்ற தொழில்கள் மற்ற தொழில்கள் போலவே தேவதாசியும் குலத்தொழில் என்ற நிலையிலிருந்து மாறிவிட்டிருக்கிறது. ஏனைய தொழில்கள் போல மாற்றத்திற்கு நீண்ட காலம் எடுக்காமல் மன்னராட்சி ஒழிந்த சில ஆண்டுகளிலேயே பாலியல் தொழிலாக முழுப்பரிணாமம் பெற்றுவிட்ட தேவதாசி முறையை, 1934 இந்திய தேவதாசிகள் பாதுகாப்பு சட்டம், முற்றிலும் தடைசெய்துவிட்டது. பிறகு, 1980ல் இச்சட்டம் மீண்டும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் ஆந்திர கர்னாடக மாநிலங்களின் சில மாவட்டங்களில் இப்போதும் நடைமுறையில் இருப்பதாக சொல்லப்படுகிறது. கடவுள் சேவையாக இப்போதும் அது நம்பப்படுவதே காரணம்.

அண்மையில் மக்களவையில் அளிக்கப்பட்ட தகவல், இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாக சொல்கிறது. இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தை தொழிலாளர்களாம். இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிப்பதாகவும் சொல்கிறது. புதிதாக இத்தொழிலுக்கு நேபாளம் மற்றும் பங்களாதேஷிலிருந்து அதிகமான பெண்கள் மற்றும் குழந்தைகள் இறக்குமதியாவதும், மத்தியகிழக்கு நாடுகளுக்கு வீட்டு வேலை என்ற பெயரில் ஏற்றுமதி செய்யப்படுவதும் தொடர் நிகழ்வு. வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களுக்கான 'வெளிநாட்டு டொமஸ்டிக் ஒர்கர்ஸ்' விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டிருந்தாலும், சென்னை விமானநிலையத்தில் விதிமுறை கடுமையாக பின்படுவதால் திருவனந்தபுரத்திலிருந்து விமானமேற்றுகிறார்கள். வீட்டு வேலைக்கு அனுப்பப்படும் பெண்களில் பெரும்பாண்மையோர், உழைப்போடு உடலையும் விற்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள், அறியாமலேயே இத்தொழிலுக்கு தள்ளிவிடப்படும் அப்பாவி பெண்கள் இவர்கள். இதை தவிர்த்துப் பார்த்தால், சுய விருப்பத்திற்காகவும், அதீத உடல் இச்சையை தீர்த்துக்கொள்ளவும், பதவி உயர்விற்காக அவ்வப்போது இத்தொழிலில் நுழைபவர்களையும் தனிவகைப்படுத்தலாம். அண்மையில் பரவிவரும் எஸ்காட்ஸ் எனப்படுகிற பணத்திற்காக ஊர் சுற்றும் விபச்சார வகையும் வேகமாக பரவிவருகிறது.


விபச்சாரி என்ற வார்த்தையே பெண்களுக்குள் இருக்கும் வலியையும் சிரமத்தையும் சொல்கிறது. பாலியல் தொழிலில் புதியவர்கள் வருகைக்கு மிக முக்கிய காரணமாக இத்தொழிலில் கிடைக்கும் உடனடி வருமானத்தை சொல்லலாம். மற்ற தொழில்களைப்போல உடல் உழைப்பையோ அதிகாரத்தையோ பணத்தையோ மூலதனமாக கொள்ளாமல் உடலையே மூலதனமாக கொண்டுள்ளதும் இத்தொழிலுக்கு பெரும்பாண்மையோரை இழுத்துவரக்காரணம். மேலும்,

  • கூடா நட்பு.
  • மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு.
  • பெற்றோர்களால் மூன்றாம் தரமாக நடத்தப்படுவது.
  • போதிய பாலியல் கல்வி அறிவின்மை.
  • இத்தொழில் குறித்தான விழிப்புணர்வின்மை.
  • ஊடகங்கள்.
  • வன்புணர்ச்சி.
  • காதல், 'ஓடிப்போதல்'.
  • சமுதாய தொடர்பு/பழக்கத்திற்காக.
  • மகிழ்ச்சி, ஆசை, விருப்பம், தேடல்.
  • பணியிடங்களில் மிரட்டல், பதவி உயர்விற்காக இசைதல்.
போன்ற பல காரணங்களே விபச்சாரத்தில் நுழைய காரணமாக இருந்தாலும், அதன் பிறகு இத்தொழிலிலேயே நீடித்திருக்க முழு முதல் காரணமாக இருப்பது மேற்சொன்னவாறு உடனடி லாபம் மட்டுமே. இதற்காக குழந்தைகள் கல்வி, தங்கை திருமணம், அம்மா மருத்துவம் போன்ற அழுவாச்சி காரணங்களும் சொல்லப்படுவதுண்டு. இத்தகைய காரணங்களையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கும் சில சென்டிமெண்டல் இடியட்ஸ், இட்லி வியாபாரம் செய்து மகனை ஐஐடியில் படிக்க வைத்த தாயை வசதியாக மறந்துவிடுகிறார்கள். பாலியல் தொழில் செய்பவளுடைய மகன்/மகள் சாதனையாளராகும் போது, 'என் தாய் விபச்சாரம் செய்து என்னை படிக்க வைத்தாள்' என்று சொல்லிக்கொள்ள முடியாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மட்டுமல்லாது பாலியல் தொழிலாளியுடைய குழந்தைகளும் இத்தொழில் தவறென்பதை உணராது (அல்லது உணர்ந்தாலும்) கண்முன் கிடைக்கும் நிகர லாபத்தால் சட்டென விழுந்துவிடும் ஆபத்தும் அதிகம் இருக்கிறது.



இவற்றையெல்லாம் பாலியல் சேவை என்றும் இச்சேவையை நடைமுறைப்படுத்தி அங்கீகரிக்கப்பட்ட சட்டம் கொண்டுவர வேண்டும் என்று ஒரு சாரார் சொல்லி வருகிறார்கள். அதாவது, குடும்ப பொறுப்புகளாலும், இன்னபிற சமுதாய சூழல்களாலும் திருமணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும், திருமண வாழ்கையில்சுகம் கிடைக்காதவர்களுக்கும், குடும்ப வாழ்வை சுமை என்பவர்களுக்கும் சேவை செய்யவதற்காகவே இயங்கும் இந்த பாலியல் தொழிலை அனுமதிக்க சட்டம் வேண்டும் என்கின்றனர். இன்னும் சிலர், நமக்கு வேண்டாம் என்றால் போகாமல் இருந்துவிடலாம், யாரும் போக வேண்டாம் என்று சொல்வது நியாயமில்லை என்கின்றனர்.


ஊரான் வீட்டு பெண்களிடம் சுகம் அனுபவிக்க நினைக்கும் இவர்களிடம் சில கேள்விகள்,



  1. பாலியல் தொழில் நடைமுறைப்படுத்தப்பட்டால், குடும்ப சூழல் காரணமாக கைதொழில் செய்து பிழைக்கும் பல பெண்களை "அங்கீகரிக்கப்பட்ட தொழில்" உள்ளே இழுத்துவரும் என்பதை சிந்தித்ததுண்டா?
  2. ஊருக்கு நியாயம்/கருத்து சொல்லும் இவர்களால் பாலியல் தொழிலில் இருப்பவர்களை சகோதரிகளாக நினைக்க முடியுமா? எனில்...
  3. இதே சட்டம் அவர்களுடைய குடும்ப பெண்களுக்கும் பொருந்திவரும் என்பதை ஏற்றுக்கொள்கிறார்களா?
  4. தாய்லாந்து, இந்தோனேஷிய பாடாய் தீவு போன்ற பாலியல் தொழில் அங்கீகரிக்கப்பட்ட நாடுகளுக்கு பாலியல் சுகம் அனுபவிக்கவே சுற்றுலா பயணிகள் போவது போல இந்தியாவிற்கும் வருவது இந்தியாவின் எதிர்காலத்திற்கும், பண்பாட்டிற்கும் நல்லதா?
முறையான பாலியல் கல்வி மூலம், திருமண வாழ்வின் மீதிருக்கும் பயத்தை போக்கலாம். குடும்ப வாழ்வை சுமையாக நினைப்பது ஒரு வகை மன வியாதியே, இவர்களுக்கு கவுன்ஸ்லிங் கொடுக்கலாம். இத்தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் மீள்வாழ்விற்கும் மாற்று தொழிலுக்கு ஏற்பாடு செய்யலாம், கடனுதவி வழங்கலாம். துரதிஷ்டவசமாக இவர்களை மீட்டு வருவது அவ்வளவு எளிதல்ல. ஆனாலும், புதியவர்கள் நுழையாமல் தடுக்க பாலியல் கல்வியும் கவுன்ஸ்லிங்கும் நிச்சயம் உதவும்.


நடைமுறையில் இருக்கும் இந்திய தண்டனை சட்டம் என்ன சொல்கிறது?

விபச்சார தடுப்புச்சட்டம் 1956 தான் விபச்சார வழங்குகளில் பரதானமாக பயன்படுத்தப்படுகிறது. இச்சட்டப்படி, பாலியல் தொழிலோ, தொழிலாளர்களோ குற்றவாளிகளாக கருதப்படுவதில்லை. மாறாக விபச்சாரத்திற்கு உதவி செய்யும் மூன்றாம் ஆட்கள், அதாவது விபச்சார விடுதி நடத்துவது, விபச்சாரத்திற்கு இடம் வாடகைக்கு விடுவது மற்றும் விபச்சாரத்திற்கு அழைப்பது போன்றவையே குற்றம் என இச்சட்டம் தண்டிக்கிறது. இவ்வகையில் கைது செய்யப்படுவோர், பரஸ்பர ஒப்பந்த (நீ பணம் தா, நான் உடல் தருகிறேன்) அடிப்படையில் தொழில்/சேவை பெற்றாலும் தண்டனை வழங்கப்படலாம். (கீழே பிடிஎஃப் இணைக்கப்பட்டுள்ளது) இப்போதிருக்கும் சட்டம், விபச்சாரத்தில் ஈடுபடும் பெண்களை தண்டிப்பதாகவே இருக்கிறது அல்லது இச்சட்டத்தால் பெரும்பாலும் பெண்களே பாதிக்கப்படுகிறார்கள். விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களின் போட்டோக்களையோ கைது தகவல்களையோ பார்க்க முடிவதில்லை. முன்பு ரேணுசா சவுத்ரி சொல்லியிருந்தார், 'விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கும் 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும்படியான சட்டத்திருத்தம் வேண்டும். விபச்சார விடுதியில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் விபச்சார உறவு கொண்டு பிடிபடும் ஆண்களுக்கு கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி என வழக்கு தொடரப்பட வேண்டும்' என்பதாக.



ஆம். இது போன்று விபச்சார தடுப்பு சட்டம் கடுமையாக்கப்பட வேண்டும். கடுமையான சட்டத்தாலேயே குற்றத்தை கட்டுப்படுத்த முடியும் என்றாலும் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்... சோகம்
விபச்சாரம்- சேவையாக இருந்தாலும், தொழிலாக இருந்தாலும் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும். அது உண்மையில் சிலருடைய வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரியே. உதாரணமாக சிலருடைய வாழ்வை பிரகாசிக்கச்செய்தாலும், பலருடைய வாழ்வை இருளச்செய்ததால் தடைசெய்யப்பட்டு ஒழிக்கப்பட்ட லாட்டரியை சொல்லலாம்
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Back to top Go down

விபச்சாரம் - சேவையா - தொழிலா Empty Re: விபச்சாரம் - சேவையா - தொழிலா

Post by சபீர் Thu Nov 26, 2009 1:27 am

நான் தரும் விடயம் என்ன அன்பு நன்பர்களே உங்கள் ஆக்கங்கள் திறமையுள்ளதாக இருந்தால் நாம் அதை கண்டிப்பாக இந்த பகுதியில் இடம் பெறச்செய்வோம்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum