ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

+2
krishnaamma
ayyasamy ram
6 posters

Go down

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... Empty குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

Post by ayyasamy ram Sun Jan 01, 2017 7:09 am



துறவி ஒருவர் குடில் ஒன்று அமைத்து, பல சீடர்களுக்கு ஞான உபதேசம் செய்து வந்தார். சாஸ்திரங்களை நன்றாக கற்றிருந்த அந்த குருவால் வாழ்க்கைத் தத்துவங்களை புரிந்து கொண்ட சீடர்கள் ஆன்மிகப் பாதையில் சென்றனர்.

அந்த துறவியிடம், ஒரு சீடனுக்கு பிடிப்பு இல்லாமல் போனது.
‘சாஸ்திரங்களைப் படித்து, அதில் இருப்பதைத்தானே குரு நமக்கு கற்றுத்தருகிறார்.
சாஸ்திரங்களைப் படித்து நாமே அதைக் கற்றுக்கொள்ளலாமே.. இடையில் குரு எதற்கு?’ என்ற எண்ணம் அந்த சீடனுக்குத் தோன்றியது.
அவனது எண்ணத்தை மறுநாளே செயல்படுத்தினான். குருகுலத்தை விட்டு வெளியேறினான். தனியாக குடில் அமைத்து, சாஸ்திர நூல்களைப் படிக்கத் தொடங்கினான். பசிக்கும்போது, துறவி களைப் போலவே கிராமத்திற்குள் சென்று யாசகம் பெற்று உணவு உண்பான்.

ஒரு நாள் சீடன் சாஸ்திர நூல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான்.
அந்த நூலில், ‘எச்சில் பரிசுத்தம். வாந்தி பண்ணினது பரிசுத்தம், இறந்தவன் போர்வை பரிசுத்தம்’ என்ற வாசகங்கள் இருந்தது.
அதை அப்படியே மனதில் பதிய வைத்துக்கொண்டான்.ஒரு நாள் அவன் யாசகம் பெறுவதற்காக கிராமத்திற்குள் சென்றான். அப்போது அங்கு ஒரு வீட்டில் சுப நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு உணவு விருந்து அளிக்கப்பட்டது. உணவு சாப்பிட்ட அனைவரும், எச்சில் இலைகளை கொண்டு போய் குப்பை தொட்டியில் வீசி எறிந்து விட்டுப் போனார்கள்.

இதைக் கண்ட சீடன் கோபமுற்றான். ‘சாஸ்திரம் தெரியாத முட்டாள்கள்’ என்று மனதுக்குள் திட்டியபடியே ஓடோடிச் சென்று, குப்பையில் கிடந்த எச்சில் இலைகளை கையில் எடுக்க முற்பட்டான்.அப்போது அவனை ஒரு பெரியவர் தடுத்து நிறுத்தினார். ‘ஏனப்பா! பார்ப்பதற்கு ஒரு தபஸ்வி போல் இருக்கிறாய். நீ போய் எச்சில் இலைகளை எடுக்க முயற்சிக்கிறாயே...
என்று விசாரித்தார்.

‘உங்களுக்கு சாஸ்திரம் என்ன சொல்கிறது என்று தெரியாது. அதனால்தான் என்னைத் தடுக்கிறீர்கள். எச்சில் பரிசுத்தம் என்று சாஸ்திரம் சொல்கிறது தெரியுமா?’ என்று தனக்கு எல்லாம் தெரிந்தது போல் கூறினான் சீடன்.முதியவர் குழம்பிப் போனார். அதன் பிறகு, அவனிடம் முழுமையாக விசாரித்தார். அப்போது சாஸ்திரத்தில் தான் படித்த வார்த்தைகளை அவன் தெரிவித்தான்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... Empty Re: குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

Post by ayyasamy ram Sun Jan 01, 2017 7:10 am

இப்போது அந்த முதியவருக்கு புரிந்து விட்டது.. ‘இவன் ஒரு அரைகுறை’ என்று.

சீடன் படித்த வாக்கியங்களுக்கான முழு அர்த்தத்தையும் அவனுக்கு எடுத்துச் சொன்னார். ‘எச்சில் பரிசுத்தம்' என்பது நீ நினைப்பது போன்று இல்லை. கன்று வாய் வைத்து பால் குடித்த பிறகே, பசுவின் மடியில் பால் கறப்பார்கள். ஆனாலும் கூட அந்தப் பால் பரிசுத்தமானது. அதைத்தான் 'இறைவனுக்கு' பாலாபிஷேகம் செய்வதற்கும் பயன்படுத்துவார்கள். அதனால்தான் எச்சில் பரிசுத்தம் என்று சொல்லியிருக் கிறார்கள்’ என்று விளக்கினார்.

சீடனின் மனதில் பெரிய குழப்பம். ‘அப்படியானால், வாந்தி பண்ணினது பரிசுத்தம், இறந்தவன் போர்வை பரிசுத்தம் என்பதற்கு என்ன பொருள்?’ என்று வினவினான்.முதியவர் புன்னகைத்துக் கொண்டே அவனுக்கு பதிலளித்தார். ‘தேனீக்களின் வாயில் இருந்து சுரக்கும் தேனைத்தான் அப்படிச் சொல்லி வைத்திருக்கிறார்கள். கடவுளுக்கு தேனைக் கொண்டும் அபிஷேகம் செய்வார்கள். அதனால்தான் அப்படி கூறப்பட்டிருக்கிறது.

பட்டுப்பூச்சிகள் இறந்ததும் அதிலிருந்து பட்டு நூலைப் பிரித்தெடுத்து ஆடை தயாரிப்பார்கள். அந்தப் பட்டாடைகளையும் பரிசுத்தமாகக் கருதி, இறைவனுக்குச் சாத்தி வழிபடுவோம். அதையே இறந்தவன் போர்வை பரிசுத்தம் எனச் சொல்லியிருக்கிறார்கள்’ என்று விளக்கம் கொடுத்தார்.

சீடனுக்கு சாஸ்திரத்தில் கூறியிருந்ததன் அர்த்தம் இப்போதுதான் முழுமையாக புரிந்தது.எதையும் மேலோட்டமாகப் பார்த்து படிப்பது என்பது வாழ்க்கைக்கு உதவாது. அதன் நுட்பத்தை ஆழமாக அறிய, ஒவ்வொருவருக்கும் "குரு"என்பவர் அவசியம் தேவை.
-
வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... Empty Re: குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

Post by krishnaamma Sun Jan 01, 2017 6:42 pm

சூப்பர் விளக்கங்கள் !............. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... Empty Re: குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

Post by T.N.Balasubramanian Sun Jan 01, 2017 7:31 pm

http://www.eegarai.net/t21196-topic ..  Thu Feb 18, 2010 8:32 pm அன்றே
புனிதம் என்ற தலைப்பில் 6 வருடங்களுக்கு முன்பே கவிதை வடிவில்
இதை நான் கூறியுள்ளேன் ,ayyasami ram அவர்களே.
அப்போது நீங்கள் ஈகரையில் இணையவில்லை.

செய்திக்காக கூறுகிறேன் .

அதைதான்   கட்செவியில் இப்போது கதையாக யாரோ பகிர்ந்து உள்ளனர்.

புனிதம்

எச்சில் புனிதம் என்று நான் கூறின்,
எள்ளி நகையாடுவீர் !  
வாந்தியும் புனிதமென்று கூறினால்,
வாங்கி கட்டிக் கொள்வேன் உடனடியாக.  

இறந்தவர் உடையும் புனிதமென்றால்,
பிறந்தாயோ பேத்துவதற்கு என்றிடிவீர்.  

சித்தர் கூறிய வார்த்தைகள் எனின்,
பித்தம் தெளிந்தமாதிரி என்னைப் பார்ப்பீர்.

கழுவிய ஆவின் மடியை கன்றுக்கு காட்டியபின்,
கழுவாது, கறந்திடும் ஆவின்பால், புனிதமென்றிடுவோம்.
எச்சில் என்றாலும் இச்சையுடன் செய்திடுவோம் ,
பச்சைப்பாலை இறைவனுக்கு அபிஷேகமாக .

தேனீக்கள் மலர்களை நாடி ,மது உறிஞ்சி ,
தேனடையில் உமிழிந்திட்ட தேன் தானே ,
தேவனடி சேருகின்ற புனிதப் பொருள்.
மருந்து எனவும் "ஜீரணி" எனவும் மக்களும் ,
விருந்துண்ட பின் இதை ருசிக்கின்றனர் .

தன்னை சுற்றி தானே பின்னிடும் ஆடையே,
தனக்கு எமன் என அறியாப் பட்டுப் புழு,
மடிந்தபின் எடுக்கும் பட்டை தானே ,
"மடி" என்றும் "புனித"மென்றும் கூறுகிறோம்.

தொன்மையாய் கடை பிடிக்கும் வாழ்க்கை வழி முறை என்றாலும்,
அண்மையில் கேட்ட ஆன்மிக நெறிமுறையே இக்கவிதைக்கு ஆதாரம்.




ரமணியன்
@ayyasamiram


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... Empty Re: குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

Post by ராஜா Sun Jan 01, 2017 7:59 pm

T.N.Balasubramanian wrote:http://www.eegarai.net/t21196-topic ..  Thu Feb 18, 2010 8:32 pm அன்றே
புனிதம் என்ற தலைப்பில் 6 வருடங்களுக்கு முன்பே கவிதை வடிவில்
இதை நான் கூறியுள்ளேன் ,ayyasami ram அவர்களே.
அப்போது நீங்கள் ஈகரையில் இணையவில்லை.

செய்திக்காக கூறுகிறேன் .

அதைதான்   கட்செவியில் இப்போது கதையாக யாரோ பகிர்ந்து உள்ளனர்.

புனிதம்

எச்சில் புனிதம் என்று நான் கூறின்,
எள்ளி நகையாடுவீர் !  
வாந்தியும் புனிதமென்று கூறினால்,
வாங்கி கட்டிக் கொள்வேன் உடனடியாக.  

இறந்தவர் உடையும் புனிதமென்றால்,
பிறந்தாயோ பேத்துவதற்கு என்றிடிவீர்.  

சித்தர் கூறிய வார்த்தைகள் எனின்,
பித்தம் தெளிந்தமாதிரி என்னைப் பார்ப்பீர்.

கழுவிய ஆவின் மடியை கன்றுக்கு காட்டியபின்,
கழுவாது, கறந்திடும் ஆவின்பால், புனிதமென்றிடுவோம்.
எச்சில் என்றாலும் இச்சையுடன் செய்திடுவோம் ,
பச்சைப்பாலை இறைவனுக்கு அபிஷேகமாக .

தேனீக்கள் மலர்களை நாடி ,மது உறிஞ்சி ,
தேனடையில் உமிழிந்திட்ட தேன் தானே ,
தேவனடி சேருகின்ற புனிதப் பொருள்.
மருந்து எனவும் "ஜீரணி" எனவும் மக்களும் ,
விருந்துண்ட பின் இதை ருசிக்கின்றனர் .

தன்னை சுற்றி தானே பின்னிடும் ஆடையே,
தனக்கு எமன் என அறியாப் பட்டுப் புழு,
மடிந்தபின் எடுக்கும் பட்டை தானே ,
"மடி" என்றும் "புனித"மென்றும் கூறுகிறோம்.

தொன்மையாய் கடை பிடிக்கும் வாழ்க்கை வழி முறை என்றாலும்,
அண்மையில் கேட்ட ஆன்மிக நெறிமுறையே இக்கவிதைக்கு ஆதாரம்.




ரமணியன்
@ayyasamiram



குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... 3838410834 குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... 3838410834 குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... 3838410834
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... Empty Re: குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

Post by ayyasamy ram Wed Jan 04, 2017 4:09 pm


-
சுமார் ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே
கவிதை வடிவில் நேர்த்தியாக தங்களால் சொல்லப்பட்ட
கருத்தே
தற்போது கதை வடிவில் உலா வருகிறது....
-
கவிதையாக்கம் மிக நேர்த்தியாக அமைந்துள்ளது....
-
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82750
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... Empty Re: குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

Post by T.N.Balasubramanian Wed Jan 04, 2017 5:30 pm

நன்றி ayyasami ram .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... Empty Re: குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

Post by M.Jagadeesan Wed Jan 04, 2017 9:17 pm

இவ்வளவு அழகாக கவிதை எழுதும் இரமணியன் ஐயா , இப்போது ஏன் எழுதுவது இல்லை ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... Empty Re: குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

Post by T.N.Balasubramanian Wed Jan 04, 2017 9:29 pm

நன்றி ஜெகதீசன் ,
சிறப்பு கவிஞராக இருந்த காலத்தே, கவிதைகள் பதிவு செய்தேன்.
இப்பொழுதும் கவிதைகள் எழுத ஆசை.
மனதிற்கு இசைந்த நடப்புகள் நடக்கையில்,கவிதைகளாக உருவெடுக்கும்.
என் மனதிற்கு பிடித்து எழுதிய ஒரு கவிதை என் உயிர் நண்பனின் மரணத்தின் போது வந்தது,ஈகரையில்.
நிர்வாகத்தில் இணைந்த பிறகு சிறிது சுணக்கம்.
எழுதவேண்டும் ,எழுதுகிறேன்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... Empty Re: குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

Post by Hari Prasath Wed Jan 04, 2017 9:38 pm

கதை,கவிதை அருமை



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு... Empty Re: குரு என்றால் என்ன ? சிறிய எடுத்துக்காட்டு...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum