ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! Empty ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!

Post by ayyasamy ram Fri Dec 30, 2016 8:12 pm

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! QWujFhcHQiq0cSyWfBjg+je_14495
-

என்.எஸ்.ஜி பாதுகாப்புப் படையினர், மறைந்த முதல்வர்
ஜெயலலிதாவை, P.P. 27 (Protected Person) என்று
அழைப்பார்கள். அதாவது, என்.எஸ்.ஜி.-யால் பாதுகாக்கப்படும்
27-வது வி.வி.ஐ.பி- என்பது அதன் பொருள்.

N.S.G. எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையான கருப்புப்
பூனைப்படை 1984-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. முன்னாள்
பிரதமர் இந்திரா காந்தி தன் பாதுகாவலர்களாலேயே சுட்டுக்
கொல்லப்பட்டதையடுத்தும், அதிகரித்து வரும் பயங்கரவாதத்
தாக்குதல்களைக் கருத்தில் கொண்டும் இதுபோன்றதொரு
சிறப்புப் படையை உருவாக்க வேண்டும் என மத்திய அரசு
முடிவு செய்தது.

இவர்களின் பணி, ரெகுலர் போலீசாரோ, துணை ராணுவப் படையோ,
ராணுவமோ செய்யும் பணிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது.
பயங்கரவாதத் தாக்குதலை எத்தகைய நிலையிலும் முறியடிப்பதே
இவர்களின் முக்கியப்பணி. மும்பை பயங்கரவாதத் தாக்குதலின்போது
கூட இவர்கள்தான் களமிறங்கி பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி,
வீழ்த்தினர்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை பயங்கரவாதிகள் ஆக்கிரமித்து விட்டால்,
இவர்கள் அங்கே களமிறக்கப்படுவார்கள். பின்னர் கனகச்சிதமாக
இவர்கள், காரியத்தை முடிப்பார்கள். அதில் இவர்கள் வல்லவர்கள்.
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! Empty Re: ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!

Post by ayyasamy ram Fri Dec 30, 2016 8:13 pm


இந்தப் பணி தவிர, இவர்களில் 515 வீரர்களுக்கு மற்றொரு முக்கியப்
பணியும் அளிக்கப்பட்டது. அதாவது கொலை மிரட்டல், தாக்குதல்
அச்சுறுத்தல் உள்ள வி.வி.ஐ.பி-க்களுக்கு பாதுகாப்பு அளிப்பது.
இவர்கள் அளிக்கும் பாதுகாப்புக்கு Z-பிளஸ் பாதுகாப்பு என்று பெயர்.

பொதுவாக, வி.ஐ.பி-க்கள், வி.வி.ஐ.பி-க்களுக்கு அளிக்கப்படும்
பாதுகாப்பானது Y, Y-பிளஸ், X, X-பிளஸ், Z, Z-பிளஸ் என வகைப்
படுத்தப்படும். மாவட்ட ஆட்சித் தலைவர், முக்கிய அரசியல் பிரபலங்கள்,
எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் என்ற ரேங்கில் உள்ளவர்களுக்கு ஒய் மற்றும்
ஒய் பிளஸ் பிரிவில் உள்ளவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

முதலமைச்சர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு
Z- பிளஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்தக் கருப்புப்பூனைப்
படையினர் அனைவரும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக்
கட்டுப்பாட்டில் உள்ளவர்கள்.
-
இந்தியாவிலேயே மொத்தம் 16 வி.வி.ஐ.பி-க்களுக்கு மட்டுமே,
என்எஸ்ஜி படையினரின் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டைப்
பொறுத்தவரை மறைந்த முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள்
முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியும் இசட் பிளஸ்
பாதுகாப்புக்கு உரியவர்கள். ஜெயலலிதா மறைவுக்குப் பின், தற்போது
கருணாநிதிக்கு மட்டுமே இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படடுகிறது.

ஒரு வி.வி.ஐ.பி-க்கு 40 என்.எஸ்.ஜி வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
ஷிப்ட் அடிப்படையில் செயல்படும் இவர்களில் ஒரு ஷிப்டில் ஒருகுழு
பாதுப்புப் பணியில் ஈடுபடும். அந்தக் குழுவில் ஐந்து ரேஞ்சர்கள் இருப்பார்கள்
ஒரு உதவி ஆணையர் ரேங்க்கில் உள்ளவர் தலைமை தாங்குவார்.

கைகளில் எந்திரத் துப்பாக்கியும், ஊடுருவிப் பார்க்கும் கூர்மையான
ண்களும், வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பும் மட்டுமே இவர்களின் சொத்து.
வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பு மட்டுமே இவர்கள் இலக்கு.

இவர்கள் பாதுகாக்கும் அந்த வி.வி.ஐ.பி-க்களை P.P. என்று அழைப்பார்கள்.
Protected Person அதாவது பாதுகாக்கப்பட்ட மனிதர் என்பது அதன்
அர்த்தம். அந்த வகையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, P.P 27 என்று
அழைக்கப்பட்டார்.

என்.எஸ்.ஜி யைப் பொறுத்தவரை ஒரு வி.வி.ஐ.பி அவரது வீட்டில் இருந்து
இன்னொரு இடத்திற்குப் பயணம் செய்துவிட்டு, மீண்டும் தன்
இருப்பிடத்திற்கு திரும்பி வரும்வரை சம்பந்தப்பட்ட வி.வி.ஐ.பி-யின்
பாதுகாப்பு இவர்களின் பொறுப்பில்தான் இருக்கும்.

ஒவ்வொரு வி.வி.ஐ.பி-க்கும் தனிப்பட்ட மெய்க்காவலர்கள்,
பாதுகாவலர்கள் தவிர, மாநில அரசு அளிக்கும் கமாண்டோ பாதுகாப்பும்
இருக்கும். அவர்களுக்கும் அடுத்த உயர் பாதுகாப்புதான் என்.எஸ்.ஜி.
-
-------------------------------------------
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! Empty Re: ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!

Post by ayyasamy ram Fri Dec 30, 2016 8:14 pm


ஒரு வி.வி.ஐ.பி வீட்டில் இருந்து புறப்படுவதற்கு 15 நிமிடங்கள்
முன்னதாக, இவர்கள் தயாராக இருப்பார்கள். அதுவரை வி.வி.ஐ.பி-யின்
தனிப் பாதுகாவலர்கள் மற்றும் மாநிலப் பாதுகாப்புப் படை வசம் உள்ள
வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்பு என்.எஸ்.ஜி-யிடம் ஒப்படைக்கப்படும்.

மீண்டும் இருப்பிடத்திற்கு வந்த பிறகு உள்ளுர் பாதுகாப்பு மற்றும்
மெய்க்காவலர்களிடம் வி.வி.ஐ.பி-யை ஒப்படைத்து விட்டு எழுத்துப்
பூர்வமாக ஒப்புதல் பெற்ற பிறகே, என்.எஸ்.ஜி அங்கிருந்து நகரும்.

ஒருவேளை அந்த வி.வி.ஐ.பி வெளியே ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு
செல்கிறார் என்றால், அவரோடு மெய்க்காவலர்கள் தவிர, ஒரு
தலைமை என்.எஸ்.ஜி ரேஞ்சரும் உடனிருப்பார். வி.வி.ஐ.பி-யின் உயிரைப்
பாதுகாக்க, இவர்களுக்கு எந்த சட்ட விதிமுறைகளும் தடையாக இருக்காது.

அதே சமயம், முதல்வர் அலுவலகம், சட்டசபை ஆகியவற்றினுள் இவர்கள்
வி.வி.ஐ.பி-க்களுடன் செல்ல மாட்டார்கள். ஏனெனில் சட்டசபை என்பது
மக்கள் பிரதிநிதிகள் அரங்கம் என்பதால் அங்கு சபைக்காவலர்களைத்
தவிர, வேறு எவரும் நுழையக்கூடாது.
-
உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின்
தலைவருமான மாயாவதிக்கும், இசட் பிளஸ் பாதுகாப்பு உண்டு. ஒருமுறை
உத்தரபிரதேச சட்டசபையில் அவர் இருந்தபோது கடும் அமளி காரணமாக,
சட்டசபைக் கதவுகள் இழுத்து மூடப்பட்டு விட்டன.

முதல்வரின் மெய்க் காவலர்களாலேயே ஒன்றும் செய்ய இயலாத நிலை
ஏற்பட்டபோது, வெளியே நின்று இருந்த என்.எஸ்.ஜி கருப்புப் பூனை
கமாண்டோக்களுக்குத் தகவல் பறந்தது. சட்டசபைக் கதவுகளை எட்டி
உதைத்து திறந்துகொண்டு மாயாவதியைச் சூழ்ந்து கொண்டு, அவரைத்
தங்கள் தோள்களில் சுமந்து பாதுகாப்பாய் வெளியே கொண்டு வந்தார்கள்
என்.எஸ்.ஜி படையினர்.

அந்த அளவுக்கு, தாங்கள் பாதுகாக்கும் வி.வி.ஐ.பி-க்களின் உயிரைக் காக்க
வேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் எந்த ரேஞ்சுக்கும் இவர்கள் இறங்கலாம்
என்பதுதான் இவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகார வரம்பு.
-
---------------------------------------------------


Last edited by ayyasamy ram on Fri Dec 30, 2016 8:18 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! Empty Re: ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!

Post by ayyasamy ram Fri Dec 30, 2016 8:16 pm

தங்கள் பாதுகாப்பில் உள்ள வி.வி.ஐ.பி-க்களின் நகர்வுகள் பற்றியும்
அவர்களின் உடல்நிலை உட்பட அனைத்து விவரங்களையும் தினசரி
காலை ஆறு மணிக்கும் மாலை ஆறு மணிக்கும் தங்கள் உயர்
அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. அதன்படி
ஒவ்வொரு வி.வி.ஐ.பி பற்றிய விவரங்கள் உள்துறை அமைச்சகத்திற்கு
தினசரி காலை மற்றும் மாலை தெரிவிக்கப்படும்.

என்.எஸ்.ஜி பாதுகாப்பில் உள்ள எந்த வி.வி.ஐ.பி-யும், அவர்களுக்குத்
தெரியாமல் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஒருவேளை
மிகமிக அவசரமாக செல்லவேண்டி இருந்தாலும்கூட, அவர் வெளியே
புறப்பட்டு விட்டார் என்ற தகவலும் எங்கே செல்கிறார் என்ற தகவலும்
என்.எஸ்.ஜி-க்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும்.

அந்த வி.வி.ஐ.பி அந்த இடத்திற்குச் செல்வதுற்குள் என்.எஸ்.ஜி அங்கே
சென்று பாதுகாப்பை டேக் ஓவர் செய்து கொள்வார்கள். ஒருவேளை
உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அந்த வி.வி.ஐ.பி
அனுமதிக்கப்பட்டால், என்.எஸ்.ஜி குழுவின் உதவி ஆணையர்,
வி.வி.ஐ.பி-யைப் பார்த்து (அவர் ஐசியூவில் இருந்தாலும்கூட) தங்கள்
தலைமை வாயிலாக, உள்துறை அமைச்சகத்திற்கு காலை மற்றும்
மாலை ஆறு மணிக்கு வி.வி.ஐ.பி-யின் உடல்நிலை குறித்து அறிக்கை
அனுப்ப வேண்டும்.

கண்களால் பார்க்காமல் என்.எஸ்.ஜி அறிக்கை அனுப்ப மாட்டார்கள்.
ஒரு வி.வி.ஐ.பி-யின் பாதுகாப்புக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் ஆறு
கோடியில் இருந்து பத்து கோடி வரை மத்திய அரசு செலவிடுகிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு, கடந்த 1991-ம் ஆண்டில் இருந்து
என்.எஸ்.ஜி பாதுகாப்பு வழங்கப்பட்டது. விடுதலைப்புலிகள், தமிழ்
தீவிரவாதக் குழுவினர், வீரப்பன் குழுவினர் எனப் பல்வேறு வகைகளில்
கொலை மிரட்டல் இருந்ததாகவும், இரண்டு முறை லாரி ஏற்றிக் கொலை
முயற்சி நடைபெற்ற காரணத்தினாலும் ஜெ,-வுக்கு கருப்புப் பூனைப்
படை பாதுகாப்பு கோரப்பட்டு, அதன்படி அளிக்கப்பட்டு வந்தது.

அன்றிலிருந்து ஜெயலலிதா இறுதியாக மருத்துவமனைக்குச் செல்லும்
வரையிலும் என்.எஸ்.ஜி கமாண்டோ கருப்புப் பூனைப் படையினர்
ஜெயலலிதாவைக் கண்போல பாதுகாத்து வந்தனர்.
-
-------------------------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! Empty Re: ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!

Post by ayyasamy ram Fri Dec 30, 2016 8:17 pm


கேள்விகள் இங்கேதான் எழுகின்றன.


1. ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது,
அதுபற்றி என்.எஸ்.ஜி படையினருக்குத் தகவல் சொல்லப்பட்டதா?

2. அவ்வாறு சொல்லியிருந்தால் மருத்துவமனைக்கு உடனடியாக
என்.எஸ்.ஜி படையினர் சென்றார்களா?

3. மருத்துவமனைக்கு என்.எஸ்.ஜி போயிருந்தால் அந்தப் படையின் உயர் அதிகாரி,
ஜெயலலிதாவைப் பார்க்க அனுமதிக்கப்பட்டாரா?

4. அதுபோன்று என்.எஸ்.ஜி படை உயர் அதிகாரி, உள்துறை அமைச்சகத்திற்கு
என்ன அறிக்கை அனுப்பினார்?

5. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் தவிர, 75 நாட்கள்
என்எஸ்ஜி அனுப்பிய தினசரி அறிக்கை என்ன? 75 நாட்களுமே காலை, மாலை
ஆகிய இரண்டு வேளைகளிலும் என்.எஸ்.ஜி அதிகாரிகள் ஜெ-வை பார்க்க
அனுமதிக்கப்பட்டார்களா?

6. அப்படிப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்றால், ஜெ-வின் உடல்நிலை
அறிக்கை பற்றி, என்.எஸ்.ஜி-க்கு இதுபோலதான் அறிக்கை கொடுக்க வேண்டும்
என்று தகவல் கொடுத்தது யார் ?

7. ஜெயலலிதாவை நேரில் சந்திக்காமல் அறிக்கை அனுப்பப்பட்டதா?

8. என்.எஸ்.ஜி அறிக்கையில் என்ன சொல்லப்பட்டிருந்தது?

9. இவை அனைத்தும் முறைப்படி நடக்காமல் இருந்திருந்தால் என்.எஸ்.ஜி
ஏமாற்றப்பட்டதா?

10. அறிக்கை அனுப்பி இருந்தும் அதனை, உள்துறை அமைச்சகம் மறைத்து
விட்டதா ?

11. ஜெயலலிதா போன்ற வி.வி.ஐ.பி-க்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்த
வேண்டிய என்.எஸ்.ஜி அதில் இருந்து தவறி விட்டதா? அல்லது உள்துறை
அமைச்சகம் தவறு செய்துள்ளதா ?

பதிலளிக்க வேண்டியது, மத்திய உள்துறை அமைச்சகமே!
-
---------------------------------------------------
நன்றி- விகடன்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82744
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! Empty Re: ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!

Post by T.N.Balasubramanian Fri Dec 30, 2016 8:47 pm

சிங்கப்பூரிலிருந்து அதிர்ச்சி தரும் வேறு சில விஷயங்கள் வருகின்றன .
மர்மம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மேலும் பலர் ,பல விஷயங்கள் தெரிந்து இருந்தும்
தங்கள் நலம் கருதி வாய் மூடி மெளனமாக இருக்கிறார்களோ என்று
இருக்கிறது . சிலருக்கு வாய் பூட்டு . சிலருக்கு பதவி . ஒரு சிலருக்கு பதவி பறிப்பு
வருங்காலங்களில்.
எது எப்பிடி இருந்தாலும் இந்த முடிவு வந்திருக்க வேண்டாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! Empty Re: ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!

Post by ராஜா Fri Dec 30, 2016 9:26 pm

T.N.Balasubramanian wrote:சிங்கப்பூரிலிருந்து அதிர்ச்சி தரும் வேறு சில விஷயங்கள் வருகின்றன .
மர்மம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மேலும் பலர் ,பல விஷயங்கள் தெரிந்து இருந்தும்
தங்கள் நலம் கருதி வாய் மூடி மெளனமாக இருக்கிறார்களோ என்று
இருக்கிறது . சிலருக்கு வாய் பூட்டு . சிலருக்கு பதவி . ஒரு சிலருக்கு பதவி பறிப்பு
வருங்காலங்களில்.
எது எப்பிடி இருந்தாலும் இந்த முடிவு வந்திருக்க வேண்டாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1230181

அப்படி என்ன செய்தி ஐயா சிங்கப்பூரில் இருந்து வந்தது , ?! கொஞ்சம் சொல்லுங்களேன் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! Empty Re: ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!

Post by T.N.Balasubramanian Fri Dec 30, 2016 9:34 pm

வாட்சப் பில் வந்தது.
வெளியிடலாமா கூடாதா என்று சிறு சந்தேகம்.
யோஜித்துக் கொண்டு இருக்கிறேன். நாளை பார்ப்போம்.
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! Empty Re: ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!

Post by கண்ணன் Sat Dec 31, 2016 1:37 pm

தமிழக மக்கள் அனைவரிடத்திலும் நிறைய கேள்விகள் இருக்கின்றன. பதில் சொல்ல வேண்டியவர்களோ அமைதி காக்கின்றனர். மனத்திற்க்குள்ளேயே  புதைத்து விடலாம் முதல்வரைப் போல.
கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Back to top Go down

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! Empty Re: ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!

Post by T.N.Balasubramanian Mon Jan 02, 2017 8:09 pm

ராஜா wrote:
T.N.Balasubramanian wrote:சிங்கப்பூரிலிருந்து அதிர்ச்சி தரும் வேறு சில விஷயங்கள் வருகின்றன .
மர்மம் அதிகரித்துக் கொண்டே போகிறது.
மேலும் பலர் ,பல விஷயங்கள் தெரிந்து இருந்தும்
தங்கள் நலம் கருதி வாய் மூடி மெளனமாக இருக்கிறார்களோ என்று
இருக்கிறது . சிலருக்கு வாய் பூட்டு . சிலருக்கு பதவி . ஒரு சிலருக்கு பதவி பறிப்பு
வருங்காலங்களில்.
எது எப்பிடி இருந்தாலும் இந்த முடிவு வந்திருக்க வேண்டாம்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1230181

அப்படி என்ன செய்தி ஐயா சிங்கப்பூரில் இருந்து வந்தது , ?! கொஞ்சம் சொல்லுங்களேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1230183

சொல்லிவிட்டேன் உங்களுக்கு .
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35023
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்! Empty Re: ஜெயலலிதாவும் என்.எஸ்.ஜி. பாதுகாப்பும்... கிளைவிடும் 11 சந்தேகங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum