புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_m10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_m10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_m10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10 
3 Posts - 6%
heezulia
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_m10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_m10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_m10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_m10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_m10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_m10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_m10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_m10ரொக்கமில்லா பண பரிவர்த்தனை! Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரொக்கமில்லா பண பரிவர்த்தனை!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 12, 2017 10:44 am

நவ., 8, 2016 - அன்று தான், 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்தது, மத்திய அரசு.
கறுப்பு பணம் ஒழியுமா, இல்லையா என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, மக்கள் வேறொரு நிலைக்கு தள்ளப்பட்டு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு தயாராக வேண்டிய நிலைக்கு வந்து விட்டனர்.
ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை, எப்படியெல்லாம் செய்யலாம், அவற்றிற்கான சாதனங்கள் எவை, அவற்றை எப்படிப் பெறுவது மற்றும் பயன்படுத்துவது என்பதை பார்ப்போம்:

டெபிட் கார்டு - பற்று அட்டை:

'டெபிட்' கார்டு அதாவது, பற்று அட்டை என்றால் என்ன?

நீங்கள் எங்கே போனாலும், உங்கள் நண்பர் ஒருவர் கூடவே வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரிடம், உங்கள் சேமிப்பை கொடுத்து வைத்திருக்கிறீர்கள். கடைக்கு போனதும் சில பொருட்களை வாங்குகிறீர்கள். பின், அந்த நண்பரிடம் அதற்கான தொகையை சொல்கிறீர்கள்; உடனே, அந்த நண்பர் அத்தொகையை, கடைக்காரரிடம் கொடுத்து விடுவார்.

இங்கு, நண்பருக்கு பதிலாக, வங்கி செயல்படுகிறது; அவ்வளவு தான். நண்பரை போல், வங்கி உங்களுடன் கூடவே வர முடியாது; எனவே, தன் சார்பாக, 'டெபிட்' அட்டையை உங்களுக்கு தருகிறது, வங்கி. கடையில், பொருட்கள் வாங்கியவுடன், 'டெபிட்' அட்டையை, கடைக்காரரிடம் இருக்கும், சிறு கருவியில், 'ஸ்வைப்' செய்தால் போதும்; அதிலுள்ள காந்தப் பெட்டியில் உங்கள் வங்கி கணக்கு விவரங்கள் பதிவாகி, உங்கள் கணக்கிலிருந்து, அத்தொகை கழிக்கப்பட்டு, கடைக்காரரின் கணக்குக்கு, வங்கியால் மாற்றப்பட்டு விடும். 'டெபிட்' அட்டையை, 'செக்கிங்' அட்டை என்றும் கூறுவதுண்டு.

தொடரும்.............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 12, 2017 10:45 am

கிரெடிட் கார்டு - கடன் அட்டை:

கிரெடிட் கார்டு - கடன் அட்டை என்றால் என்ன?

உங்களுடன் வரும் நண்பரிடம் உங்கள் சேமிப்பான, 2,500 ரூபாயை கொடுத்து வைத்துள்ளீர்கள். கடையில், நீங்கள் மொத்தம், 3,500 ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளதாக, கடைக்காரர் தெரிவிக்கிறார். இதை, நண்பரிடம் கூறுகிறீர்கள். அவர், நீங்கள் கொடுத்த, 2,500 ரூபாயுடன், தன் பணமான, 1,000 ரூபாயை சேர்த்து கடைக்காரருக்கு கொடுக்கிறார். அவர், அதை சும்மா கொடுத்து விடவில்லை. அந்த, 1,000 ரூபாயை, நீங்கள் அந்த நண்பருக்கு, மாதக் கடைசிக்குள் கொடுத்து விட வேண்டும். இந்த நண்பரை, வங்கி அளிக்கும், கடன் அட்டையுடன் ஒப்பிடலாம்.

இப்படி செய்வதால், வங்கிக்கு நஷ்டம் இல்லையா என்று நீங்கள் கேட்கலாம்; இல்லை என்பது தான் பதில். ஏனென்றால், கடன் அட்டை மூலம் பொருட்களை வழங்கும் கடைக்காரர்கள், மாத கடைசியில் தான், இந்த பரிவர்த்தனை விவரங்களை, வங்கிக்கு அளித்து, அப்பணத்தை பெற்றுக் கொள்வர். மாத கடைசிக்குள், நீங்கள், உங்கள் வங்கி கணக்கில் உரிய பணத்தை செலுத்தவில்லை என்றால் கூட, வங்கி, கடைக்காரருக்கு உரிய முழு தொகையை செலுத்தி விடும்; ஆனால், உங்களிடம் அதிகப்படி தொகையை, கொழுத்த வட்டியுடன், திரும்ப வசூலித்து விடும்.

தொடரும்............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 12, 2017 10:46 am

டெபிட் அல்லது கிரெடிட் - எந்த அட்டையை நீங்கள் பெற வேண்டுமென்றாலும், உங்களுக்கு, வங்கி கணக்கு இருக்க வேண்டும். பொதுவாக, டெபிட் அட்டையை, வங்கி, எளிதில் வழங்கி விடும். ஆன்லைனில் கூட, 'டெபிட்' அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.

ஆனால், கடன் அட்டையை, அவ்வளவு சுலபத்தில் தந்து விடாது. அதற்கு, சிறிது காலமாவது, வங்கியில், நீங்கள், உங்கள் கணக்கை எந்த சிக்கலுமின்றி இயக்கியிருக்க வேண்டும். அதில் வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச தொகையை, நீங்கள் தொடர்ந்து வைத்திருக்க வேண்டும். நீங்கள், அந்த வங்கியில், ஏதாவது கடன் பெற்றிருந்தால், அதற்கான தவணைகளை, உரிய காலத்தில் செலுத்தியிருக்க வேண்டும். இதிலெல்லாம் அந்த வங்கி திருப்தியானால் மட்டுமே, உங்களுக்கு கடன் அட்டை வழங்கும்.

நீங்கள் விண்ணப்பித்த சிறிது நாட்களில், உங்களுக்கு, 'டெபிட்' அட்டை அல்லது கடன் அட்டை வந்து சேர்ந்தவுடன், அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம்.

வங்கியில், உங்களுக்கு ரகசிய எண்ணை கொடுப்பர். இந்த ரகசிய எண்ணை, நீங்கள் குறிப்பிட்டால் தான், அட்டை பயன்பாட்டை துவக்க முடியும். வங்கி அளித்த ரகசிய எண்ணை தான், நீங்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. நீங்களாகவே, நான்கு இலக்கு கொண்ட ரகசிய எண்ணை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கடன் அட்டையை பயன்படுத்துவதில் பல ஆதாயங்கள் உண்டு. உங்கள் கணக்கில், இப்போதைக்கு தொகை இல்லையென்றால் கூட நீங்கள், கடன் அட்டை மூலம் பொருட்களை வாங்க முடியும். தவிர, கடன் அட்டையை அதிகமாக பயன்படுத்தும் போது, உங்களுக்கு பாயின்ட்கள் வழங்குவர். இதைக் கொண்டு, நீங்கள், சில கடைகளில், பரிசு பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

தொடரும்............



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 12, 2017 10:46 am

சில வகை கடன் அட்டைகளை பயன்படுத்தும் போது, விற்பனை தொகையில், ஒன்றிலிருந்து, ஐந்து சதவீதம் வரை தள்ளுபடியும் அளிப்பதுண்டு.

கடன் அட்டையை பயன்படுத்தும் போது, சில விமான சர்வீஸ்கள், தங்கள் கட்டணத்தில், சலுகை கொடுக்கும். வங்கிகள் வழங்கிய கடன் அட்டை என்றாலும், இவற்றில் மாஸ்டர் கார்டு, விசா கார்டு என்றெல்லாம் போட்டிருப்பர். இந்த அமைப்புகளுக்கும், விமான சர்வீஸ் நிறுவனங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தம் இது!

எனினும், நீங்கள் கீழ்காணும் குணம் கொண்டவராக இருந்தால், கடன் அட்டையை தவிர்ப்பது நல்லது.
உங்களால் குறிப்பிட்ட காலத்துக்குள், சரியான தொகையை உங்கள் கணக்கில் செலுத்த முடியவில்லை என்றால், எக்கச்சக்கமான வட்டியை செலுத்த வேண்டியிருக்கும். நீங்கள், இயல்பாகவே வரவுக்கு மீறி செலவு செய்பவர் என்றால், 'டெபிட்' அட்டை தான் உங்களுக்கு லாயக்கு!

உங்கள், 'டெபிட்' அட்டை தொலைந்து விட்டால், அதிகபட்சம், உங்கள் கணக்கிலுள்ள தொகை தான், களவு போகும்; ஆனால், கடன் அட்டை தொலைந்து விட்டால், நீங்கள், உடனடியாக வங்கிக்கு தெரிவிக்கா விட்டால், ஏமாற்றப்படும் தொகை, மிக அதிகமாக இருக்க வாய்ப்பு உண்டு.

'டெபிட்' அட்டையோ, கடன் அட்டையோ தொலைந்தால், நீங்கள் உடனடியாக உங்கள் வங்கியின் தலைமை அலுவலகத்துக்கு தெரிவித்து, அதை பெற்றதற்கான, 'அக்னாலட்ஜ்மென்ட்' வாங்கிக் கொள்ளுங்கள். மேலும், அருகிலுள்ள காவல் நிலையத்தில், தொலைந்து போன விவரத்தை பதிவு செய்து, எப்.ஐ.ஆர்., பெற்றுக் கொள்வது நல்லது.

உங்களுக்கு வங்கியில் கணக்கே இல்லையென்று வைத்துக் கொள்வோம். அதேசமயம், கையில் தொகையை எடுத்துக் கொண்டு வெளியே செல்லப் பிடிக்கவில்லை. அதுவும், வெளியூர் செல்லும் போது, உங்களுக்கு, 'டெபிட்' அட்டையோ, கடன் அட்டையோ அதிகம் பயன்படும். என்ன செய்யலாம்?

ப்ரிபெய்ட் டெபிட் கார்டு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அதாவது, வங்கியில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி, அத்தொகைக்கான, 'டெபிட்' அட்டையை பெற்றுக் கொள்ளலாம். அந்த வங்கியில், உங்களுக்கு கணக்கு இருக்க வேண்டும் என்பதில்லை. பின், வழக்கமான, 'டெபிட்' அட்டை போலவே, அதை நீங்கள் பயன்படுத்தலாம்.

ஆனால், ஒரு முக்கிய விஷயம். இந்த ப்ரீபெய்டு டெபிட் அட்டை தொலைந்து விட்டால், வங்கி உங்களுக்கு உதவிக்கு வராது. இந்நிலை மாற வேண்டும் என்றும், 'பிற வழக்கமான டெபிட் அட்டைதாரர்களுக்கு உள்ள பாதுகாப்புகளை இவர்களுக்கும் வங்கி தர வேண்டும்...' என்றும் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. ஆனால், அது, அக், 1, 2017லிருந்து தான் நடைமுறைக்கு வர இருக்கிறது.
இவை மட்டுமல்ல, ரொக்கமில்லா பண பரிவர்த்தனைகளை நடைமுறைப்படுத்த, வேறு பல, 'ஆயுதங்களும்' உள்ளன.

அவற்றை அடுத்த இதழில் பார்ப்போம்...

நன்றி : வாரமலர்
ஜி.எஸ்.சுப்ரமணியன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 12:24 pm

இ.சி.எஸ்., முறை (Electronic Clearing System) எனும் வசதி, ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
உங்கள் பெயரிலும், குடும்ப நபர்களின் பெயர்களிலும், நான்கைந்து ஆயுள் இன்ஷூரன்ஸ் பாலிசிகளை எடுத்திருப்பீர்கள். ஒவ்வொன்றுக்குமான பிரீமியத்தை, வெவ்வேறு மாதங்களில் செலுத்த வேண்டி இருக்கலாம். சில பாலிசிகளை பொறுத்தவரை ஆண்டுக்கு ஒரு முறையும், வேறு சிலவற்றை, ஆண்டுக்கு, நான்கு முறையும் செலுத்த வேண்டியிருக்கும். இதில், எந்த தவணையை செலுத்த மறந்தாலும் சிக்கல் தான்.

நீங்கள், ஜனவரி மாதம் கட்ட வேண்டிய ஆயுள் காப்பீடு பிரீமியத் தொகையை, மறந்து, ஏப்ரல் மாதத்தில் கட்டுகிறீர்கள் என்றால், அப்பாலிசி, காலாவதியானதாக கருத வாய்ப்பு உண்டு. அதாவது, உரிய காலத்திற்கு பின், நீங்கள் செலுத்திய தொகை வந்து விடும். ஆனால், இடையில் சம்பந்தப்பட்டவர் இறந்து விட்டால், குடும்பத்துக்கு அளிப்பதாக உறுதியளிக்கப்பட்ட தொகை வராது.

இதை தவிர்க்க, நீங்கள், இ.சி.எஸ்., வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். அது, எப்படி என்று பார்ப்போம்...

இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில், ஒரு விண்ணப்பம் தருவர்.

அதில், உங்கள் பெயர், பாலிசி எண் போன்ற விவரங்களை நிரப்பி, அதை, உங்கள் வங்கி கிளை மேலாளரிடம் அளிக்க வேண்டும். 'இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து, மேற்படி பாலிசிகளுக்கான பிரீமியத்தை அனுப்புமாறு, எங்கள் வங்கிக்கு நோட்டீஸ் வந்தால், நாங்கள், இந்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து, அத்தொகையை கட்ட சம்மதிக்கிறோம்...' என்ற உறுதிமொழியின் கீழ், வங்கிக் கிளை அதிகாரி கையொப்பமிட வேணடும். பின், இந்த விண்ணப்பத்தை, இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு நீங்கள் அளிக்க வேண்டும்.

அதற்கு பின், நேரடியாக, இன்ஷூரன்ஸ் நிறுவனம், உரிய நாளில், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து, பணத்தை எடுத்துக் கொள்ளும். எந்தத் தவணையாவது பிடித்தம் செய்யப்படவில்லை என்றால் கூட, அது, உங்கள் உரிமைகளை பறித்து விடாது; ஆனால், உங்கள் வங்கிக் கணக்கில், போதிய இருப்பு, தொடர்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் தொலைபேசி கட்டணம் போன்ற, பல சேவை கட்டணங்களை, இ.சி.எஸ்., முறையில் கட்டலாம்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 12:25 pm

மின்னணு பணம் !

இதுவும் ரொக்கமில்லாத பண பரிவர்த்தனைகளுக்கு, வழிவகுக்க கூடியது. அதாவது, நீங்கள் நேரடியாக சென்று செலுத்தாமல், கணினியில், இணையதளம் மூலம், மின் கட்டணம், சொத்து வரி மற்றும் தண்ணீர் வரி போன்றவற்றை செலுத்த முடியும். மேலும், உங்கள் வங்கி கணக்குகளில், ஒன்றிலிருந்து, மற்றொன்றிற்கு தொகையை மாற்றலாம். அவ்வங்கியில் உள்ள பிறரது கணக்கிற்கும், உங்கள் கணக்கிலிருந்து தொகையை மாற்றிக் கொள்ளலாம்.

இ பே., (Epay)

'இ.பே.,' என்ற அமைப்பு, 2001ல் உருவானது. இன்டர்நெட் வசதியுள்ளவர்கள், தங்களது வணிகம் தொடர்பான, கொடுக்கல், வாங்கல்களை, கணினி மூலமாக, ஒருவருக்கொருவர் செலுத்திக் கொள்வதற்காக, இதை துவக்கினர்.

பே டி எம் (Paytm)

பே டிஎம், பே யு மணி மற்றும் மொபிக்விக் என்று, பல, 'ஆப்'களின் மூலம், தொலைபேசியிலிருந்தே, பணத்தை செலுத்தலாம். இந்த ஆப்களை, உங்கள் மொபைல் போனிலுள்ள, 'ப்ளே ஸ்டோர்' என்பதிலிருந்தோ, உரிய வலைத்தளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவற்றில், இந்தியாவில் அதிக பேர் பயன்படுத்துவது, 'பேடிஎம்!'



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 12:26 pm

நீங்கள் கடைக்கு சென்று, 1,500 ரூபாய்க்கு, பொருட்கள் வாங்குகிறீர்கள். உங்கள் மொபைல் போனில், 'பேடிஎம் - ஆப்'பை ஏற்கனவே தரவிறக்கம் செய்திருப்பீர்கள். அதை அழுத்தியவுடன், யாருக்கு செலுத்த வேண்டும் என்று விவரம் கேட்கும். கடைக்காரர்களின் தொலைபேசி எண்ணை நிரப்ப வேண்டும். அடுத்து, எவ்வளவு தொகை என்று கேட்கும். நீங்கள் நிரப்பிய பின், முடிவு என்ற பொத்தானை அழுத்தினால், அது, உங்கள் கணக்கிலிருந்து, கடைக்காரர்களின் கணக்கிற்கு, மாறி விடும்.

இது எப்படி சாத்தியம்? நீங்கள், உங்கள் வங்கி கணக்கிலிருந்து, பணத்தை எடுத்து, பர்சில் அல்லது பாக்கெட்டில் வைத்து, செலவு செய்வீர்கள். அதற்கு பதில், வங்கியிலிருந்து, உங்கள், 'பேடிஎம்' நிறுவனத்தின் பாக்கெட்டுக்கு, முதலில் பணத்தை மாற்ற வேண்டும். இதற்காக, வங்கிக்கு போக வேண்டாம்; தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவே இதை செய்ய முடியும்.

ஒவ்வொரு மாதமும், 20,000 ரூபாய்க்கு உள்ளாக, நீங்கள், 'பேடிஎம்' மூலம் பண பரிவர்த்தனைகள் செய்தால், உங்கள் தொலைபேசி எண்ணை மட்டுமே அந்நிறுவனத்துக்கு அளித்தால் போதும்; இதை விட, அதிக தொகை என்றால், உங்கள் பான் கார்டு எண் மற்றும் ஆதார் எண் போன்றவற்றையும், பகிர்ந்து கொள்ள வேண்டும்.

'பேடிஎம்' அமைப்பு என்ன சொல்கிறது? 'நீங்கள், ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள்; உங்கள் கடைக்காரர்கள் பல்வேறு வங்கிகளில், கணக்கு வைத்திருக்கிறார். உங்கள் ஒவ்வொருவருக்கும், நான் ஒரு பொதுவான எண்ணை தருகிறேன். அதுதான், உங்கள் தொலைபேசி எண். அதுதான், எங்களிடமுள்ள ஒவ்வொரு பர்சுக்குமான அடையாள எண். இந்த எண்ணை, நீங்கள் எங்களிடம் பதிவு செய்து கொண்டால் போதும்.
ஆனால், மொபைல் போன் மூலம் இதை பயன்படுத்துவது என்றால், அது, 'ஸ்மார்ட்' போனாக இருக்க வேண்டும். மின்னஞ்சல் மூலமும், இதை செய்ய முடியும்.

'மொபிக்விக்' என்பதும், இதே போல தான். தன் மூலம் தொகைகள் செலுத்தப்படும் போது, அதில், ஒரு சிறு பகுதியை, மீண்டும் உங்களுக்கே அளிப்பதால், முன்பை விட, பிரபலமடைந்து வருகிறது. ஒருவேளை, உங்கள் தொலைபேசியை, நீங்கள் தொலைத்து விட்டால், அதில், நீங்கள் பதிவு செய்த, 'மொபிக்விக்' கணக்கை, முழுவதுமாக அழித்து விடும் வசதி உண்டு. அதாவது, உங்கள் பழைய கொடுக்கல், வாங்கல் விவரங்கள், பிறருக்கு தெரிய வராது.

மேலும், 'USSB' (Unstructured Supplementary Service Data) என்பதை பயன்படுத்த, இன்டர்நெட்டோ, 'ஸ்மார்ட்' போனோ தேவையில்லை.

இதற்கு, உங்கள் தொலைபேசி எண்ணை, வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும். உங்கள் தொலைபேசியிலிருந்து, ஒரு குறிப்பிட்ட எண்ணுக்கு, 'டயல்' செய்ய வேண்டும். பின், உங்கள் வங்கியின், ஐ.எப்.எஸ்.சி., எண்ணின், முதல் நான்கு எழுத்துகளை, 'டைப்' செய்ய வேண்டும்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jan 15, 2017 12:26 pm

பின், யாருக்கு பணம் செலுத்துகிறீர்களோ, அவரது தொலைபேசி எண்ணையும், அடையாள எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.

கடன் அட்டையும் இல்லை; டெபிட் அட்டையும் இல்லை. எவ்வித மொபைலும் இல்லை என்றாலும் கூட, நீங்கள் ரொக்கம் இல்லாமலேயே, உங்கள் வங்கி கணக்கிலிருந்து, கடைக்காரர்களுக்கு பணம் செலுத்த முடியும். இதற்கு, நீங்கள் ஆதார் அட்டை பெற்றிருக்க வேண்டும்.

இதை, 'ஏ.இ.பி.எஸ்.,' என்கின்றனர். அதாவது, 'ஆதார் எனேபிள்ட் பேமென்ட் சிஸ்டம்!' இதை பயன்படுத்த, மைக்ரோ

ஏ.டி.எம்., என்கிற சிறு கருவி தேவைப்படும். இக்கருவியை, நீங்கள் வாங்க வேண்டாம்; நீங்கள் பொருட்களை வாங்கும், வணிகர்கள் தான் வாங்க வேண்டும்.

நீங்கள், ஒரு பொருளை வாங்கிய உடன், வணிகர், உங்கள் ஆதார் எண்ணையும், நீங்கள் வாங்கிய பொருட்களின் தொகையையும், அக்கருவியில் பதிவு செய்வர். நீங்கள், உங்கள் கைரேகையை, அக்கருவியில் பதிக்க வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து, இத்தொகை, வணிகரின் கணக்குக்கு சென்று விடும். நீங்கள் குறிப்பிட்ட வங்கிக் கணக்கை, ஆதார் எண்ணுடன் ஏற்கனவே இணைத்திருக்க வேண்டும்.

ரூபே அட்டைகளை பயன்படுத்தியும், நீங்கள், 'ஆன்லைன்' மூலமாக பொருட்களை வாங்கலாம். 'பே செக்யூர்' என்ற பாதுகாப்பு அமைப்பின் மூலமாக தான், இதை செய்ய முடியும்.

இவற்றில், சில வழிமுறைகளை படிக்கும் போது, லேசான குழப்பம் தோன்றுவது இயல்பு. ஆனால், ஓரிரு முறைகள், அவற்றை பின்பற்றி விட்டால், பின் இயல்பாகி விடும். ஏ.டி.எம்., கருவியை பயன்படுத்துவற்கு கூட, துவக்கத்தில், பலருக்கும் தயக்கம் இருக்கத்தானே செய்தது! பின், அது நமக்கு பழக்கமாகிவிட்டதைப் போல், கால ஓட்டத்தில், நம் வாழ்வை, எளிதாக்கிக் கொள்ள, மேற்படி வழிகளை, நாம் பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

ஜி.எஸ். சுப்ரமணியன்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக