புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
90 Posts - 77%
heezulia
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
11 Posts - 9%
Dr.S.Soundarapandian
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
255 Posts - 77%
heezulia
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
38 Posts - 11%
mohamed nizamudeen
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
8 Posts - 2%
prajai
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
3 Posts - 1%
Barushree
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_m10வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 03, 2017 7:25 am

பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை
கயத்தாறில், புளியமரத்தில் மேஜர் பானர்மேன் துாக்கிலிட்டான்.
அப்போது அந்த மாவீரனின் வயது 39.

அதன் பின் அந்த மாவீரனின் உடல் என்னவாயிற்று? என்று இதுவரை
கண்டுபிடிக்க முடியவில்லை.

கட்டபொம்மன் கடைசி காலத்தில் வைத்திருந்த ஆயுதங்கள் பற்றி
தற்போது சில விபரங்கள் தெரியவந்துள்ளன.ஆங்கிலேயருக்கு வரி
செலுத்தாததால் ஆங்கிலேய பிரதிநிதி மேஜர் பானர்மேன் 1799ல்
பாஞ்சாலங்குறிச்சியை தாக்கினான்.

முதல் நாள் போரில் கட்டபொம்மன் வெற்றி பெற்றான். இதை அறிந்த
பானர்மேன், திருநெல்வேலி, கயத்தாறு, பிரிட்டிஷ் கோட்டைகளிலிருந்து
பீரங்கி படைகளைக் கொண்டு வந்து பாஞ்சாலங்குறிச்சியின் மீது
வெறித் தாக்குதல் தொடங்கத் திட்டமிட்டான்.

பீரங்கித் தாக்குதலால் பாஞ்சாலங்குறிச்சி மக்களுக்கு பெரும் உயிர்
சேதம் ஏற்படும் என்று வருந்திய கட்டபொம்மன், தன் தம்பி ஊமத்துரை,
மந்திரி தானாதிபதி மற்றும் சில வீரர்களுடன் பாஞ்சாலங்குறிச்சி
கோட்டையை விட்டு தப்பித்து சென்றான்.
-
தப்பிக்க காரணம் :

-
பானர்மேனின் ஆட்களிடமும், பிரிட்டிஷ்க்கு அடிபணியும் பாளையக்
காரர்களிடமிருந்தும் கட்டபொம்மன் தப்பி, திருச்சியில் ஆங்கிலேய
ஏகாதிபத்திய அதிகார மையத்தின் கவர்னர் ஜெனரலை சந்திக்க
எண்ணினான்.

ஏனென்றால் அப்போது இருந்த மேஜர் ஜெனரல், ஜாக்ஷன்துரைக்கும்,
கட்டபொம்மனுக்கும் ஏற்பட்ட மனக்கசப்பை அறிந்தவர்.
குற்றாலத்திலிருந்து ராமநாதபுரம் வரை படை பரிவாரங்களோடு
கட்டபொம்மனை வீணாக அலைக்கழித்து, ஜாக்ஷன்துரை அவமானப்
படுத்தியதை அந்த கவர்னர் ஜெனரல் நன்கு அறிவார்.

ஒரு பாளையக்காரனை அலைய வைத்தது அவருக்கு எரிச்சலை தந்து,
ஜாக்ஷன்துரையை பதவி நீக்கம் செய்தார். எனவே இவரிடம் பானர்மேனின்
கொடுஞ்செயலை கூறி நீதி கேட்கவே கட்டபொம்மன் தப்பிச்செல்ல
வேண்டிய சூழல் உருவானது.
-

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 03, 2017 7:26 am

பானர்மேன் கடிதம் :

-
கட்டபொம்மன் தப்பியதை அறிந்த பானர்மேன், அவரை மிக பெரிய தேசத்
துரோகியாக சித்தரித்து எல்லா பாளையக்காரர்களுக்கும், 'கட்டபொம்மன்,
உடன் உள்ள ஊமத்துரை, தானாதிபதி மற்றும் அவனிடம் உள்ளவர்களுக்கு
அடைக்கலமோ, உதவியோ கொடுக்க கூடாது.

மேலும் கட்டபொம்மனை பிடிக்க பிரிட்டிஷ் அரசுக்கு உதவி செய்ய வேண்டும்.
அதற்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மீறினால் அடைக்கலம் கொடுத்த
பாளையக்காரரும், அவர் பாளையமும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகும்,'
என்று எழுதினான்.
-
தானாதிபதி கைதும் .. எட்டப்பன் செயலும் ..

-
தப்பிய கட்டபொம்மனும், மற்றவர்களும், கோல்வார்பட்டியில் உள்ள
அரண்மனையில் தங்கியுள்ளனர் என்ற செய்தியை அறிந்த எட்டப்பன்,
பானர்மேனிடம் தனக்கு சில ஆங்கிலேய சிப்பாய்களின் உதவியை வேண்டினார்.
பானர்மேனும் எட்டப்பனுடன் சிப்பாய்களை அனுப்பினார். அவர்கள் துணையுடன்
கோல்வார்பட்டி கோட் டையை எட்டப்பன் தாக்க, தானாதிபதி மட்டும் பிடிபட
மற்றவர்கள் தப்பி சென்றனர்.

தானாதிபதி கைதை எட்டப்பன் பானர்மேனுக்கு தெரிவிக்க, பானர்மேன்
விருப்பப்படி நாகலாபுரம் கடை வீதிக்கு தெற்கில் உள்ள கணேசர் கோவில்
அருகில் உள்ள ஒரு வேப்ப மரத்தில் துாக்கிலிட்டான்.

தானாதிபதியின் தலையை துண்டித்து பாஞ்சாலங்குறிச்சி கோட்டையில்
மக்கள் பார்வை படும்படி எட்டப்பன் வைத்தார்.காட்டிக்கொடுத்த
தொண்டைமான்கோல்வார்பட்டியிலிருந்து தப்பிய கட்டபொம்மன் கூட்டம்,
திருக்களம்பூரில் உள்ள அடர்த்தி யான குமாரபட்டி காட்டில் மறைவாக
இருந்துள்ளார்கள்.

இந்தக்காடு, புதுக்கோட்டை அரசர் தொண்டைமானின் ஆளுகைக்கு உட்பட்டது.
மேலும் முத்து வைரவன் என்ற தொண்டைமானின் தளபதி கண்காணிப்பில்
இருந்தது.

அந்த காலத்தில் வெளி ஆட்கள் நடமாட்டம் இருந்தால் எளிதில் தெரிந்து
விடும். குமார பட்டி காட்டில் அன்னிய நடமாட்டம் இருப்பதை அறிந்த
புதுக்கோட்டை மன்னர், அந்நி யர்கள், பானர்மேன் கடிதத்தில் குறிப்பிட்ட
கட்டபொம்மு பாளையக்காரராக இருக்கும், அவர்கள் தன் ஆளுகைக்கு
உட்பட்ட எல்லைக்குள் இருந்து, பிரிட்டிஷ் படை கைது செய்தால்,
தன் பாளையம் பிரிட்டிஷ் பீரங்கி தாக்குதலுக்கு ஆளாகுமோ என்று அஞ்சி,
பானர்மேனுக்கு உடனே தகவல் கொடுத்தார். அதையடுத்து பிரிட்டிஷ் படை
உடனே வந்து சுற்றிவளைத்து கட்டபொம்மன், ஊமத்துரை மற்றும்
அவர்களுடன் இருந்தவர்களையும் கைது செய்தது.
-
நிராயுதபாணியாக அவர்கள் மதுரை வழியாக கயத்தாறு கொண்டு
செல்லப்பட்டு, பானர்மேனிடம் ஒப்படைக்கப்பட்டனர். போலியான விசாரணை
மூலம் கட்டபொம்மன் பானர்மேனால் துாக்கிலிடப்பட்டார்.திருக்களம்பூர்
குமாரபுரம் காட்டில் கட்டபொம்மனையும், ஊமத்துரையையும் பிரிட்டிஷ்காரர்கள்
கைது செய்தனர்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84770
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jan 03, 2017 7:26 am

கட்டபொம்மன் தற்காப்புக்காக வைத்திருந்த ஆயுதங்கள் என்னவாயிற்று
என்று ஆராயும்போது இன்றும், அவர் பயன்படுத்திய ஆயுதங்களான கத்தி,
ஈட்டி, களரி, குத்துவாள், கட்டாரி போன்றவற்றை முத்துவைரவன் வாரிசுகள்
வீட்டில் வைத்து வழிபடுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜையன்று
அவ்வாயுதங்களை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைத்து பயபக்தியுடன்
பூஜை செய்கின்றனர்.
-
ஊமையன் கோவில்
-

இவ்வூர் மக்கள் திருக்களம்பூர் குமாரப்பட்டி காட்டில் ஊமத்துரைக்கு ஒரு
மேற்கூரை இல்லாத கோயில் கட்டி வழிபடுகின்றனர். அடர்த்தியான
இக்காட்டிற்குள் ஆடு மேய்ப்பவர்கள் துணையுடன், நான் கள ஆய்வு
செய்தபோது இக்காடு சுமார் 30 ஏக்கர் அளவில் உள்ளது. இக்காட்டில் பழ
மரங்கள், தண்ணீர் தடாகமும் இருந்துள்ளன. இங்கு உள்ள மக்கள்
இக்காட்டிலிருந்து காய்ந்த மரங்களை கூட எக்காரணம் கொண்டும் வெட்ட
மாட்டார்களாம்.
-
மேலும் குதிரையில் அமர்ந்த நிலையில் ஊமத்துரை போல் பதுமைகள் செய்து
நேர்த்திக்கடன் செய்கின்றனர்.தங்கள் விளை நிலங்களில் விளைந்தவற்றை
முதலில் ஊமையன் கோயிலுக்குபடைக்கும் வழக்கத்தை வைத்து உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை பவுர்ணமியை அடுத்து வரும் வெள்ளியன்று
ஊமயனுக்கு விழா எடுக்கின்றனர். அப்போது கட்டா யமாக வீரபாண்டிய
கட்டபொம் மன் நாடகத்தையும் நடத்துகின்றனர்.
-
காட்டிக்கொடுத்தது யார்?
-

கள ஆய்வின் மூலம், 'கட்டபொம்மனையும், அவனை சார்ந்த வர்களையும்
பிரிட்டிஷ் சிப்பாய்கள் தான் கைது செய்திருக்க வேண்டும்,' என்று அறிய முடிகிறது.
ஆனால் வரலாற்றில் கட்டபொம்மனை கட்டிக்கொடுத்தது எட்டப்பன் என்று
எவ்வாறு பதிவு செய்தனர் என்று தெரியவில்லை.எட்டப்பன் கைது செய்தது
கட்டபொம்மனின் மதியூக மந்திரி தானாதிபதியை தான் என தெரிகிறது.

கட்டபொம்மனை தேடுவதற்கு உதவி செய்த பாளையக்காரர்களுக்கு பானர்மேன்
வெகுமதி வழங்கியுள்ளான். எட்டப்பருக்கும் சில கிராமங்கள் வெகுமதியாக
கிடைத்துள்ளன. 3.1.1760ல் பிறந்த கட்டபொம்மன், 16.10.1799ல் வீர மரணமடைந்தார்.
அவர் 39 ஆண்டுகள் வாழ்ந்தாலும் நுாறாண்டுகளுக்கு மேலாக அவரது வீரம் இன்றும்
போற்றப்படுகிறது.
-
--------------------------------------

- முனைவர்கே.கருணாகரப்பாண்டியன், வரலாற்று ஆய்வாளர்
தினமணி

Ravi Gopal
Ravi Gopal
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 29/12/2016

PostRavi Gopal Tue Jan 03, 2017 12:41 pm

தகவல் தந்தமைக்கு நன்றி திரு அய்யாசாமி ராம்

இப்படிக்கு
ரவி கோபால்
சவூதி அரேபியா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 04, 2017 10:44 am

மிக்க நன்றி ராம் அண்ணா! ............. வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் இன்று... 103459460

படம் மட்டுமே மிஸ்ஸிங் புன்னகை.............(எனக்கு எந்த படமும் நெட் லிருந்து டவுன்லோட் செய்ய முடியவில்லை, எனவே, என்னால் படம் எதுவும் போட முடியவில்லை அண்ணா சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக