ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

+2
சசி
krishnaamma
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Empty பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

Post by krishnaamma Tue 20 Dec 2016 - 12:34

ஒனக்கு இனிமே எந்தக் கொறையும் இருக்காது…

பல வர்ஷங்களுக்கு முன்னால், உபன்யாஸ சக்ரவர்த்தி சேங்காலிபுரம் ஶ்ரீ அனந்தராம தீக்ஷதர், ஶ்ரீமடத்தில் இருந்தபோது, நடந்த மெய்சிலிர்க்க வைக்கும் ஸம்பவம்.

ஒரு வெள்ளிக்கிழமையன்று, ஶ்ரீமடத்தில் ஸுவாஸினி பூஜைக்கு ஏற்பாடாகியிருந்தது. ஸாக்ஷாத் பெரியவாளே அங்கே அமர்ந்திருக்க, பல ஊர்களிலிருந்து ஏகப்பட்ட ஸுமங்கலிகள் வந்திருந்தது, கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

இவர்களிடையே ஒரு பெண்மணி மட்டும் சற்று வித்யாஸமாக இருந்தாள். ஸுமார் நாற்பது, நாற்பத்தஞ்சு வயஸிருக்கும். வைதவ்ய கோலமாக, நெற்றியில் குங்குமம் இல்லை. தலையில் பூ இல்லை. அவளைப் பார்த்தவர்களுக்கோ, ஒருவேளை குங்குமம் இட்டுக்கொள்ள மறந்துவிட்டாளோ! என்ற ஸந்தேஹம். ஒரு பெண் அவளிடம் குங்கும சிமிழை நீட்டியதும், ஏதோ பார்க்கக் கூடாததை பார்த்த மாதிரி, ஒதுங்கி ஓடினாள்.

பெரியவாளின் கருணாகடாக்ஷம் இவளை தப்பிக்க விடுமா?

அவளை கூப்பிட்டார்.

தயங்கி தயங்கி அந்த தெய்வத்தின் முன் நின்ற போது, அந்தப் பெண்ணுக்கு அழுகைதான் பொத்துக்கொண்டு வந்தது.

“அழாத!…. ஸுவாஸினி பூஜை நடக்கற எடத்ல குங்குமம் இல்லாம மூளி நெத்தியோட நிக்கறியே! இது பகவத் ஸன்னதி. எத்தன
ஸுவாஸினி வந்திருக்கா பாரு! மங்களகரமா இருக்கோல்லியோ? இந்த வேளைல நீ மாத்ரம் கண்ணீரும் கம்பலையுமா நின்னா
நன்னாருக்குமா? நெத்தில குங்குமம் வெச்சுக்கோ”

தாயினும் மேலான தயாபரனின் வார்த்தைகள் அவள் அழுகையை அதிகமாக்கியது.

“இல்ல பெரியவா, நா… குங்குமம் வெச்சுக்க கூடாது”

பெரியவா பதிலே சொல்லவில்லை.

“எங்காத்துக்காரர் military-ல வேலை பாத்தார். ஆறு மாஸம் முந்தி டெல்லிலேந்து எனக்கு ஒரு லெட்டர் வந்துது. அதுல…. அவர்
சண்டைல செத்து போயிட்டதா எழுதியிருந்தது. நா….நம்பலை பெரியவா! வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டிண்டேன். டெல்லிக்கு
போன் பண்ணினா, அவாளும், border-ல இருக்கறவாகிட்ட பேசி, அவர் செத்துப் போய்ட்டார்னு confirm பண்ணிட்டா! பேப்பர்ல கூட
ரெண்டு மூணு தடவை ந்யூஸ் வந்துடுத்து. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல..! கார்யம்-லாம் அப்போவே பண்ணிட்டோம். இன்னிக்கு நா…
மடத்துக்கு வந்ததே, அவரோட அகால மரணத்துக்கு அவருக்கான கர்மாவை இனிமே எப்படி பண்றது-ன்னு கேக்கத்தான் வந்தேன். இந்த மாதிரி ஸுவாஸினி பூஜை நடக்கப்போறதுன்னு தெரிஞ்சிருந்தா இன்னிக்கு வந்திருக்கவே மாட்டேன் பெரியவா….”

நாதியில்லாமல் இருந்தவள், இன்று ஆத்மநாதனிடம் கதறிவிட்டாள்.

பரப்ரஹ்மம் பேசாமல் இருந்தது.

“அவரோட ஆத்மா ஶாந்தி அடையணும். இதுதான் என் ப்ரார்த்தனை. நீங்கதான் எனக்கு உபாயம் சொல்லணும். பெரியவா… இப்போ
போகச்சொன்னா போய்ட்டு, இன்னொருநாள் வரதுக்குகூட தயாராயிருக்கேன்”

பெரியவா பதிலேதும் சொல்லாமல், கண்ணை மூடிக்கொண்டு கொஞ்சநேரம் இருந்தார்.

ஸாக்ஷாத் காலஸம்ஹாரமூர்த்தியாக ஜ்வலித்தார். தன் முன்னால் இருந்த மரடப்பாக்குள் கையை விட்டு, கை நிறைய குங்குமத்தை
அள்ளினார், அழகான புன்முறுவலுடன் அவளிடம் நீட்டினார்.

அவளோ முழித்தாள். அவளுடைய கை, குங்குமத்தை பெற்றுக்கொள்ள முன்வரவில்லை!

” வாங்கிக்கோங்கோ ! பெரியவா தன் கையாலேயே குங்குமம் தரார்னா, ஒங்களோட பாக்யம்ன்னா! நீங்க ஸுமங்கலிதான்!

பக்கத்தில் இருந்தவர்கள் முடுக்கியதும், நடுங்கும் கைகளில் குங்குமத்தை வாங்கிக்கொண்டாள்.

“நெத்தில இட்டுக்கோ! ஓன்னோட மனக்லேஸம் அவஶ்யமில்லாதது. ஒம்புருஷன் உஸுரோட இருக்கான். ஸீக்ரமா ஒங்கிட்ட வரப்போறான்.”

“உயிரோடு இல்லை” என்று ஆறு மாஸமாக அரஸாங்கம் முதல், அத்தனை பேராலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்ட ஒரு விஷயம், ஒரே நொடியில்
தெய்வத்தால், “பொய்” என்று தள்ளப்பட்டது.

அந்த பெண்ணோ, ஸந்தோஷத்தில், பெரிய பொட்டாக இட்டுக்கொள்ளவும், அங்கிருந்த பல ஸுவாஸினிகள் அவளுக்கு வெற்றிலை, பாக்கு,
மஞ்சள், பூ, திருமாங்கல்யம் என்று வாரி வழங்கினார்கள். க்ஷணத்தில், அந்த இடம் குதூகலமானது.

அன்று அவளும் ஒரு ஸுவாஸினியாக வரிக்கப்பட்டு பூஜையில் அமர்ந்தாள்.

ஒருவாரம் கழிந்தது.

பெரியவாளின் திருவாக்கு, பொய்யாகுமா?

இறந்ததாக கருதப்பட்டு, கருமாதியும் பண்ணப்பட்ட அவளுடைய புருஷன்….. மெலிந்து, சோர்ந்து ஒரு அதிகாலை வேளை வீட்டுக்குள்
நுழைந்தான்..!

அவனைக் கண்டதும், அவளுக்கு என்ன பேசுவதென்றே புரியாமல், ஆனந்தத்தில் ஏதேதோ உளறினாள்.

“எப்டி இருந்தேள்? எங்க இருந்தேள்?…. ஏன் ஒங்க head-quarters-ல கூட அப்டி சொன்னா?….”

“நீ கேள்விப்பட்டதெல்லாம் நெஜந்தான். கிட்டத்தட்ட ஸாவோட விளிம்புக்கே போய்ட்டேன்.! குண்டு பாய்ஞ்ச வலியில, மயக்கமாய்ட்டேன்..!
சலனமே இல்லாம, ஸன்னமான மூச்சுகூட இல்லாம இருந்த என்னை, செத்த பொணம்-னு நெனச்சிண்டு எதிரிகள்…. எங்கியோ இழுத்துண்டு
போய் அநாதரவா போட்டுட்டு போய்ட்டா…! யாரோ சில மலைவாஸிகள் என்னை எடுத்துண்டு போயி ஸொஸ்தமாக்கினா..! அவா புண்யத்ல,
எனக்கு புனர்ஜன்மா கெடச்சுது. அங்கேர்ந்து எந்தவிதமாவும் யாரையும் contact பண்ணக்கூட முடியல….! நன்னா நடக்க முடிஞ்சதும்,
ஒடனே கெளம்பிட்டேன். ஒன்னோட ப்ரார்த்தனை வீண் போகல..!”

ப்ரார்த்தனையா! !

மலைவாஸியான பரமேஶ்வரனுடைய பரமக்ருபையன்றோ!

“பெரியவா…. தெய்வம்னா….! எனக்கு குங்குமத்தை அள்ளி குடுத்தாரே!…”

அழுது கொண்டே, ஶ்ரீமடத்தில் நடந்ததைச் சொன்னாள்.

அவ்வளவுதான்! இருவரும் விழுந்தடித்துக்கொண்டு காஞ்சியில் பீடத்தில் அமர்ந்து அன்பைச் சுரந்து கொண்டிருக்கும், பரப்ரஹ்மத்தின்
திருவடிகளில் வந்து விழுந்தார்கள்.

“என்ன?….. ஆத்துக்காரர் வந்துட்டாரா?…ஒனக்கு இனிமே எந்த கொறையும் இருக்காது…”

திருவாய் மலர்ந்தது காலனை எட்டி உதைத்த காலடி தெய்வம்!

whats up இல் வந்தது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Empty Re: பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

Post by சசி Tue 20 Dec 2016 - 19:45

கண்களில் கண்ணீரை வரவழைத்து விட்டது


மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
சசி
சசி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Back to top Go down

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Empty Re: பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

Post by T.N.Balasubramanian Tue 20 Dec 2016 - 19:54

ஆனந்த அழுகை ஆனந்த அழுகை ஆனந்தஅழுகை ஆனந்த அழுகை ஆனந்த அழுகை ஆனந்தஅழுகை
ஆனந்த அழுகை ஆனந்த அழுகை ஆனந்தஅழுகை ஆனந்த அழுகை ஆனந்த அழுகை ஆனந்தஅழுகை
ஆனந்த அழுகை ஆனந்த அழுகை ஆனந்தஅழுகை ஆனந்த அழுகை ஆனந்த அழுகை ஆனந்தஅழுகை

ரமணியன் பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... 3838410834 பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... 1571444738 பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... 1571444738


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Empty Re: பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

Post by M.Jagadeesan Tue 20 Dec 2016 - 21:45

அறிவுடையார் ஆவது அறிவார் என்பது அய்யன் வள்ளுவனின் வாக்கு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Empty Re: பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

Post by Hari Prasath Tue 20 Dec 2016 - 21:53

உணர்ச்சிகரமான பகிர்வு...பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... 3838410834


தவிர்க்க முடியக்கூடிய பல இடங்களில் கூட வடமொழி எழுத்துக்கள் திணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதை தவிர்த்து பகிர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.புன்னகை



அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன்,
உ.ஹரி பிரசாத்
முகநூலில் தொடர................
avatar
Hari Prasath
தளபதி

தளபதி

பதிவுகள் : 1039
இணைந்தது : 08/10/2015

Back to top Go down

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Empty Re: பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

Post by krishnaamma Tue 20 Dec 2016 - 23:54

சசி wrote:கண்களில் கண்ணீரை  வரவழைத்து விட்டது

ஆமாம் சசி , படிக்கும் போதே சிலிர்ப்பாக இருந்தது புன்னகை :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Empty Re: பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

Post by krishnaamma Tue 20 Dec 2016 - 23:54

T.N.Balasubramanian wrote:ஆனந்த அழுகை ஆனந்த அழுகை ஆனந்தஅழுகை ஆனந்த அழுகை ஆனந்த அழுகை ஆனந்தஅழுகை
ஆனந்த அழுகை ஆனந்த அழுகை ஆனந்தஅழுகை ஆனந்த அழுகை ஆனந்த அழுகை ஆனந்தஅழுகை
ஆனந்த அழுகை ஆனந்த அழுகை ஆனந்தஅழுகை ஆனந்த அழுகை ஆனந்த அழுகை ஆனந்தஅழுகை

ரமணியன் பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... 3838410834 பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... 1571444738 பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... 1571444738

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... 1571444738 ஐயா !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Empty Re: பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

Post by krishnaamma Tue 20 Dec 2016 - 23:54

M.Jagadeesan wrote:அறிவுடையார் ஆவது அறிவார் என்பது அய்யன் வள்ளுவனின் வாக்கு .

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Empty Re: பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

Post by krishnaamma Tue 20 Dec 2016 - 23:56

Hari Prasath wrote:உணர்ச்சிகரமான பகிர்வு...பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... 3838410834


தவிர்க்க முடியக்கூடிய பல இடங்களில் கூட வடமொழி எழுத்துக்கள் திணிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இதை தவிர்த்து பகிர்ந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1229411

நன்றி ஹரி,............ நன்றி அன்பு மலர் whats up இல் வந்ததை அப்படியே போட்டுவிட்டேன்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Empty Re: பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

Post by ayyasamy ram Wed 21 Dec 2016 - 8:20

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... 103459460
-
பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... GrjTsB5oQKGm5Fcqi5yl+images
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83988
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பெரியவாளின் கருணாகடாக்ஷம்...... Empty Re: பெரியவாளின் கருணாகடாக்ஷம்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum