ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமரன் கவிதாவெளி ! AMARAN’s POESY (தமிழ் ஹைக்கூ – ஆங்கிலத்திலும்) (முதல் பாகம்) நூல் ஆசிரியர் : கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Go down

அமரன் கவிதாவெளி  ! AMARAN’s POESY (தமிழ் ஹைக்கூ – ஆங்கிலத்திலும்) (முதல் பாகம்) நூல் ஆசிரியர் :  கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Empty அமரன் கவிதாவெளி ! AMARAN’s POESY (தமிழ் ஹைக்கூ – ஆங்கிலத்திலும்) (முதல் பாகம்) நூல் ஆசிரியர் : கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

Post by eraeravi Fri Dec 09, 2016 3:47 pm

அமரன் கவிதாவெளி !
AMARAN’s POESY
(தமிழ் ஹைக்கூ – ஆங்கிலத்திலும்) (முதல் பாகம்)
நூல் ஆசிரியர் : கவிஞர் அமரன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


வெளியீடு : ஓவியா பதிப்பகம், 17-3-11, ஸ்ரீராம் காம்ப்ளெக்ஸ், காந்தி நகர் மெயின் ரோடு, வத்தலக்குண்டு-624 402. திண்டுக்கல் மாவட்டம். பேச : 04543-262686, பக்கம் : 256, விலை : ரூ. 250.


*****
நூல் ஆசிரியர் கவிஞர் அமரன் அவர்கள் மீன்வளத்துறையில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பின் ஓய்வு இன்றி ஹைக்கூ உலகில் இயங்கி வருபவர். இனிமையாகப் பேசுபவர். நல்ல பண்பாளர். மதுரையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் தவறாமல் பங்கேற்றவர். தற்போது மகனோடு பெங்களூருவில் வாழ்ந்து வருகிறார். என் அலுவலகம் வந்து நேரடியாக இந்த நூலை வழங்கினார். அஞ்சலில் அனுப்புவதை விட நேரில் சந்தித்துத் தர வேண்டும் என்ற ஆவலில் வந்தேன் என்றார்.

இந்த நூலின் பதிப்பாளர் மகாகவி இதழ் ஆசிரியர் இனிய நண்பர் வதிலை பிரபா அவர்களும் நான் மதிப்புரை எழுது வேண்டும் என்று விரும்பினார். மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ளமைக்கு முதல் பாராட்டு. அற்புதமான உள்ளடக்கத்திற்கு அடுத்த பாராட்டு.

மகாகவி பாரதியாருக்கு நோபல் பரிசு கிடைக்காத்தற்குக் காரணம் அவரது கவிதைகள் அக்காலத்திலேயே ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை என்பதே. தாகூரின் கவிதைகள் ஆங்கில் மொழிபெயர்ப்பு அன்றே வந்ததால் தான் அவருக்கு நோபல் பரிசு சாத்தியமானது. மகாகவி பாரதியார் தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவ வேண்டும் என்றார்.

அவரது பெயரில் நடத்தும் மகாகவி இதழ் ஆசிரியர் இனிய நண்பர் வதிலை பிரபா அவர்கள் தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் ஆற்றல் உலகெலாம் பரவ வேண்டும் என்ற எண்ணத்தில் நூல் ஆசிரியர் அமரன் அவர்களிடம் அவரது தமிழ் ஹைக்கூ கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டி மகாகவி இதழில் பிரசுரம் செய்தது மட்டுமன்றி அவர் மனிதநேயம், அருவி, பொதிகை மின்னல் உள்ளிட்ட பல்வேறு இதழ்களில் எழுதியவற்றையும் தொகுத்து சிறப்பான நூலாக வெளியிட்டமைக்கு பாராட்டுகள். வாழ்த்துகள்.

நூல் ஆசிரியர் கவிஞர் அமரன் அவர்கள் முதலில் அவர் ஒரு படைப்பாளி ஹைக்கூ கவிஞர். அதன் காரணமாகவே தமிழ் ஹைக்கூ கவிதைகளை அதன் உட்பொருள் மூலம் சிதையாமல் மிக நுட்பமாக ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். பாராட்டுக்கள்.

புதுச்சேரி திரு. ஆ. பஞ்சாங்கம் அவர்களின் அணிந்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக அமைந்துள்ளது. அணிந்துரையில் ‘வார்த்தைகளுக்கு வெளியில் இருக்கிறது கவிதை’ என்று தலைப்பிட்டுள்ளார். ஆனால் ஹைக்கூ கவிதை என்பது வார்த்தைகளுக்கு வெளியே தான் கவிதை இருக்கும் என்பது உண்மை. ஒரு ஹைக்கூ, படிக்கும் வாசகர் அனைவருக்கும் ஒரே பொருள் தந்தால் அது சிறந்த ஹைக்கூ அன்று. படிக்கும் ஒவ்வொருவருக்கும் வேறுவிதமான பொருள் தந்தால் தான் சிறந்த ஹைக்கூ. ஹைக்கூ படைப்பாளி நினைத்து எழுதியது ஒன்றாக இருக்கும். ஆனால் வாசகர்களின் புரிதல் மற்றொன்றாகவும் இருக்கும். பல பொருள்களை ஒரே ஹைக்கூவில் புதைத்து வைப்பது என்பது படைப்பாளியின் கைவண்ணம்.

எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ஹைக்கூவிற்கு ஒரு இலக்கணம் சொல்வார். மூன்று வரி , இரண்டு காட்சி, ஒரு வியப்பு என்பார். அந்த இலக்கணத்திற்குப் பொருத்தி பாருங்கள் இதோ!

அலைகள் ஆர்ப்பரிப்பு
கையில் தேநீர் கோப்பையுடன்
அமைதியாய் நான்!

BOISTEROUS WAVES
WITH A TEA CUP IN HAND
MYSELF, CALM!

இந்த ஹைக்கூ கவிதையைப் படிக்கும் வாசகர்களின் மனக்கண்ணில் கடல் அலையும், தேநீர்க் கோப்பையும் காட்சிகளாகி விடும். ஆர்ப்பரிப்பு, அமைதி என்ற முரண்சுவை உள்ளது. ஆங்கிலத்திலும் சிறப்பாக WAVES , CALM என்ற முரண்சுவையை அப்படியே மொழிபெயர்த்த்து சிறப்பு. நூல் ஆசிரியர் கவிஞர் அமரன் இந்த ஹைக்கூ வேறு கோணத்தில் எழுதி இருக்கலாம். ஆனால் என்னுடைய புரிதலாக நான் இப்படிப் பார்க்கிறேன். கடல்அலை போல உனது எண்ண அலைகள் ஆர்ப்பரித்தாலும் நீ கவலை கொள்ளாதே. தேநீர் குடித்து விட்டு அமைதியாகு. எதற்கும் அலட்டிக் கொள்ளாதே. இதுவும் கடந்து போகும், இயல்பு நிலை மாறாதே, நீ நீயாகவே இரு. சலசலப்புக்கு அஞ்சாதே. கவலை கொள்ளாதே, அமைதியாக சிந்தித்துப் பார்த்தால் தீர்வு கிடைக்கும்
. பதற்றப்படாதே. கோபப்படாதே. இப்படி பல்வேறு சிந்தனைகளை நமக்குள் தோற்றுவித்து வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கவிஞர் அமரன். ஆங்கிலத்தில் படிக்கும் அமெரிக்கர்களையும் இக்கவிதை ஆற்றுப்படுத்தும்.

பத்திப் புகைச்சுருளில்
பத்தி மை நடனம்
கலைதல் அதன் சுபாவம்.

IN FUMING INCENSE
THE PIOUS RHYTHUM
RECEDING INNATE !

இந்த ஹைக்கூ படிக்கும் ஒவ்வொரு வாசகர்களும் இனி பத்தியிலிருந்து வரும் புகையை ரசிப்பார்கள் என்று உறுதி கூறலாம். பத்தியிலிருந்து வரும் புகையை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் அப்புகை நடனமாடும் அழகை நூலாசிரியர் ரசித்ததோடு நில்லாமல் அதனை அழகிய ஹைக்கூ ஆக்கி உள்ளார். கலைதல் அதன் சுபாவம் என்கிறார் உண்மை தான். அப்புகை சில நிமிடங்களில் கலைந்து விடும், மாயமாகி விடும். வானவில் போல இப்புகையும் நிரந்தரமன்று. வாழ்க்கையும் நிரந்தரமன்று. நிலையாமை என்ற தத்துவத்தையும் உள்ளடக்கிய ஹைக்கூவாக நான் காண்கிறேன்.

ஆங்கிலத்திலும் பொருள் குன்றாமல் குறையாமல் அப்படியே மொழிபெயர்த்து இருப்பது சிறப்பு.

FUMING, RECEDING என்று இறுதி எழுத்து ஒன்றி வரும் இயைபுச்சுவை போல ஒலிக்க சிறந்த விதமாக சொற்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி உள்ளார். தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிப் புலமையும் சிறப்பாக உள்ள காரணத்தால் இவை சாத்தியமாகி உள்ளன.

பதச்சோறாக சில ஹைக்கூ மட்டும் இங்கே எழுதி உள்ளேன். நூலில் உள்ள எல்லா ஹைக்கூ கவிதைகளும் தமிழ் ஆங்கிலம் இரண்டு மொழிகளில் படிக்கும் வாசகர் உள்ளத்தில் சிந்தையில் சிறு மின்னலை ஏற்படுத்தி வெற்றி பெறுகின்றன.

எங்கோ சிறு பொறி
மூளும் கலகம்
மானுடப் பேரழிவு !

AN AFFRAY SOMEWHERE
BY ULTIMATUM
HUMAN DEVASTATION.

இந்த ஹைக்கூ கவிதை படித்ததும் நம் மனக்கண்ணில் சாதி, மத மோதல்கள் தோன்றி மறைகின்றன. சிறு பொறி தீ காட்டுத் தீ போல பரவுவதைப் போல, ஒரு சிறு விசயத்தை ஊதிப் பெரிசாக்கும் மனிதர்கள் உள்ளனர். இரண்டு தனி மனித சண்டையை இரண்டு சாதி சண்டையாகவோ அல்லது இரண்டு மதச் சண்டையாகவோ மாற்றி மோதல் தீ வளர்த்து அதில் குளிர் காயும் மனிதர்கள் அல்ல, மிருகங்கள் இன்றும் உள்ளனர்.
காதலில் கண்ணியம் வேண்டும் என்று வலியுறுத்தும் விதமான வித்தியாசமான ஹைக்கூ ஒன்று நன்று.

காதல் மொழி வேறு
கரை கடக்கும்
காம வேலைகள் !

ENTIRELY ELUSIVE
TITE TONGUE OF LOVE
LUST – WAVES OVER FLOWN.

OVER FLOWN என்ற ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தியது சிறப்பு. உண்மை தான், காம்ம் எல்லை மீறியதால் முறிந்திட்ட காலும் உண்டு. சங்க கால இலக்கியத்திலும் காதல் கண்ணியம் பற்றிய பாடல்கள் உண்டு. தலைவன், தலைவியை தழுவ முயலும் போது என்னுடைய சகோதரி போன்ற புங்கை மரம், நம்மை பார்க்கின்றது சொல்லி விலகும் காட்சியை இந்த ஹைக்கூ எனக்கு நினைவூட்டியது. இது தான் ஹைக்கூ படைப்பாளியின் வெற்றி. இந்த ஹைக்கூ எழுதும் போது படைப்பாளிக்கு சங்ககால காட்சி நினைவிற்கு வந்து இருக்காது. ஆனால் படிக்கும் வாசகர்களுக்கு வரும். அதனால் தான் சொற்களுக்கு வெளியே உள்ளது கவிதை என்பது முற்றிலும் உண்மை.

நூலில் உள்ள எல்லா ஹைக்கூ கவிதைகளும் எனக்குப் பிடித்து இருந்தாலும் எல்லாவற்றையும் விமர்சனத்தில் மேற்கோள் காட்டுவது மரபன்று. தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் நல்ல சொற்களஞ்சியமாக நூல் உள்ளது. வளரும் ஹைக்கூ படைப்பாளிகள். ஹைக்கூ கவிதை ஆய்வாளர்கள் அனைவரும் படிக்க வேண்டிய அற்புத நூல்.

சரித்திரப் பொன்னேடு
யாரெவர்க்கோ ... நமக்காகவும்
புரளட்டும் சில பக்கம்!

PRECIOUS HISTORIC PAGES
FOR ANYONE … ATLEAST
A NOTE FOR US !

வரலாறு படிப்பதை விட வரலாறு படைப்பது முக்கியம், பிறந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை. பிறந்தோம், பிறருக்குப் பயன்பட்டோம், சாதித்தோம் வரலாற்றில் இடம் பிடித்தோம் என்று இருக்க வேண்டுமென்ற வாழ்வில் உண்மைய உணர்த்துகின்றது நூலின் பாதிக்கும் தான் இந்த மேற்கோள்கள் இன்னும் பாதி இருக்கின்றது. ஹைக்கூ எழுத வேண்டும் என்ற ஆவல் உள்ள அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டிய நூல். ஹைக்கூ பற்றிய புரிதலை வாசகர்களுக்கு ஏற்படுத்தி ஹைக்கூ படைப்பாளியாக்கும் நூல். நூல் ஆசிரியர் கவிஞர் அமரனுக்கும் பதிப்பாளர் வதிலை பிரபாவிற்கும் பாராட்டுக்கள்.
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆயிரம் ஹைக்கூ ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் விமர்சனம் தமிழ் அறிஞர் ம .பெ .சீனிவாசன் !
» நம்பிக்கையுடன் பாகம் - 2 நூல் ஆசிரியர் வித்தகக் கவிஞர் பா .விஜய் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
» உழைப்பின் நிறம் கருப்பு ! ( ஹைக்கூ கவிதைகள் ) நூல் ஆசிரியர் கவிஞர் ஆரிசன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கொஞ்சம் ஹைக்கூ, கொஞ்சும் சென்ரியூ ! நூல் ஆசிரியர் : கவிஞர் சென்னிமலை தண்டபாணி. நூல் விமர்சனம்[size=13] : கவிஞர் இரா. இரவி
» இதயத்தில் ஹைக்கூ நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி நூல் விமர்சனம் கவிஞர் பொன்.குமார்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum