புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_m10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10 
284 Posts - 45%
heezulia
நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_m10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_m10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_m10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_m10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10 
19 Posts - 3%
prajai
நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_m10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_m10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_m10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_m10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10 
7 Posts - 1%
mruthun
நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_m10நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும். Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடைமுறையை மாற்ற வேண்டுமானால் வழிமுறை தெரிந்திருக்க வேண்டும்.


   
   
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Nov 14, 2016 9:36 pm

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்போது நடைமுறையில் இருக்கும் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று திடீரென்று அறிவித்ததால்  அப்பாவிப் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். ஆனால், அதே நேரத்தில் புதிய 2000 ரூபாய் நோட்டையும் வெளியிட்டு நடைமுறைப் படுத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த நடைமுறை என்பது ஒரே நாளிலோ, ஒரே இரவிலோ நடக்கக் கூடிய விஷயம் அல்ல. மேலும் இதை மோடி மட்டும் செய்யவில்லை. ரிசர்வ் வாங்கிதான் புதிய 2000 ரூபாய் நோட்டை அச்சடித்து வெளியிட்டிருக்கிறது. எனவே ரிசர்வ் வங்கிக்கு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் எவ்வளவு  புழக்கத்தில் இருக்கிறது என்றும், அனைத்து 1000, 500 ரூபாய் நோட்டுக்களும் மாற்றத்திற்கு வரும் என்றும் ரிசர்வ் வங்கிக்கு தெரியுமல்லவா? அப்படியானால் அதற்கு சமமான புதிய 2000 ஆயிரம் நோட்டுக்களையோ அல்லது 100, 50 ரூபாய் நோட்டுக்களையோ அனைத்து வங்கிகளுக்கும் வழங்கவேண்டும் என்ற அடிப்படை விவரம் ரிசர்வ் வங்கிக்கு தெரியாதா? ஏன் ரிசர்வ் வங்கி இந்த முன்னேற்பாடு செய்யவில்லை என்ற கேள்வி எழுகிறது. அல்லது ரூபாய் நோட்டுக்கள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லை, அனைத்தும் மக்களிடம் புழக்கத்தில் இருக்கிறது என்று சொன்னால் எந்தவித முன்னறிவிப்பும் செய்யாமல் திடீரென்று 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது தவறான செயல்தான் அல்லவா? இதனால் பாதிக்கப்படப்போவது அப்பாவிப் பொதுமக்கள்தான் என்பது ரிசர்வ் வங்கிக்கும், பிரதமர் மோடிக்கும் தெரியாதா? ஏனென்றால் கணக்கிற்கு வராத கறுப்புப் பணங்கள் எல்லாம் ஸ்விஸ் வங்கி போன்ற வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில்தான் இருக்கிறது என்பதும், மேலும் தங்கமாகவும், காலி மனைகளாகவும், பல பினாமிகள் பெயரில் இந்திய வங்கிகளில் ரொக்கமாகவும் இருக்கிறது என்பதும் ரிசர்வ் வங்கிக்கும், பிரதமர் மோடிக்கும் தெரியாதா?

எனவே 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததின் நோக்கம் கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவா? அல்லது அதில் பங்கு கேட்பதற்காகவா என்ற சந்தேகம் எழுகிறது. மக்களிடம் நடைமுறையில் இருக்கும் எதையும் திடீரென்று மாற்றினால் அதனால் பல குழப்பங்கள் ஏற்படும் என்பதை ஆராய்ந்து, அதை எப்படி நிவர்த்தி செய்யலாம் என்ற காரணத்தையும் அதன் சாத்தியக் கூறுகளையும்  கண்ட பிறகே அதை நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், பிரதமர் மோடி அவர்கள் இதற்கான முன்னேற்பாடுகளை செய்யவில்லையென்றே தற்போதைய நடைமுறை உணர்த்துகிறது.

ஆனால், புதிய 2000 ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிடவேண்டும் என்றும், அதை வடிவமைத்து அச்சிலேற்றி உருவாக்குவது என்பதும் ஒரே இரவில் முடிவு செய்திருக்க முடியாது. இதற்கு எவ்வளவு கால அவகாசம் தேவைப்பட்டிருக்கும் என்பது படித்தவர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவருக்கும் தெரியும். ஆனால், இந்த கால அவகாசம் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படாதது ஏன்? சுனாமியும், பூகம்பமும் அறிவிப்பு இல்லாமல் உருவாகலாம். அதனால் குழப்பமடைந்து பிறகு தெளிந்து இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் திரும்பலாம். ஆனால், பிரச்சினைகளின்றி மக்களை வழிநடத்த வேண்டிய அரசு இப்படி முன்னறிவிப்பில்லாமல் செயல்படலாமா? என்பதை படித்தவர்கள் அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முன்னறிவிப்பில்லாமல் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்கிவிட்டு, "எனக்கு ஆபத்து வரலாம், நான் கொலை செய்யப்படலாம், 'அவர்கள்?' என்னை விட்டு வைக்க மாட்டார்கள்" என்று முன்னெச்சரிக்கையாக குரல் கொடுப்பது என்ன நியாயம்? என்று பிரதமர் மோடியை படித்த பலதரப்பட்ட மக்களும் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

இதற்கு பிரதமர் மோடி என்ன பதில் சொல்லப் போகிறார் என்பது தெரியவில்லை. 'அவர்கள்' என்னை விட்டு வைக்க மாட்டார்கள் என்று பகிரங்கமாக அறிவிக்கிறார் என்றால் அந்த 'அவர்கள்' என்பது யார்? கருப்புப் பணத்திற்கு எதிராக செயல்பட்டால் நமது உயிருக்கு ஆபத்து வரும் என்பது பிரதமர் மோடிக்கு தெரியும் என்றால், நடைமுறையில் இருக்கும் 1000, 500 ரூபாய் நோட்டுக்களை திடீரென்று செல்லாது என்று அறிவிப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற விவரம் பிரதமர் மோடிக்கு தெரியாமல் இருந்தது ஏன்?

எனவே தற்போது நாட்டின் பல பகுதிகளில் மோடியின் உருவப்படத்தை நெருப்பு வைத்து எரித்தும், மோடி அரசின் முன்னறிவிப்பில்லாத இந்த செயலைக் கண்டித்தும் பல போராட்டங்களிலும் மக்கள் ஈடுபடுவது எதை தெளிவுபடுத்துகிறதென்றால், மக்களிடம் ஒன்றிப்போன நடைமுறையை மாற்றவேண்டுமானால் இனிமேலாவது மக்களுக்கு பாதிப்பில்லாமல், அவர்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் தெளிவாக செயல்படவேண்டும் என்று மோடி அரசுக்கு இந்திய மக்கள் அறிவுறுத்துகிறார்கள்!

இந்திய மக்கள் முட்டாள்கள் இல்லை!!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Nov 14, 2016 9:52 pm

ஆறு மாதமாக திட்டம் செய்யப்பட்டதாக கூறி இருக்கிறாரே .
மோடி , அருண் Jaitly , ரிசர்வ் பேங்க் கவர்னர் ,இரெண்டு நம்பகமான நிதி அமைச்சக அதிகாரிகள் ,
இரெண்டு நம்பகமான ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இதில் ஈடுபட்டுள்ளனர் என்று செய்தி வந்துள்ளதே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Pranav Jain
Pranav Jain
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 14/11/2016

PostPranav Jain Mon Nov 14, 2016 10:44 pm

ஆம், ஆறு மாதங்களுக்கு முன்பே இதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்றால் அப்போதே இதை மக்களுக்கு தெரியப்படுத்தி இருந்தால் அப்பாவிப் பொதுமக்கள் இன்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இன்னல்களுக்கு ஆளாகியிருக்கமாட்டார்கள் அல்லவா? என்பதுதான் மக்களின் சார்பாக கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது.

ஒருவேளை ஆறு மாதங்களுக்கு முன்பே ஊழல் பெருச்சாளிகளுக்கு இந்தத் தகவல் தெரிந்திருக்கவும் வாய்ப்பிருக்கலாமே என்ற சந்தேகமும் எழுகிறதல்லவா?. ஏனென்றால், அன்றாடம் வங்கிகளில் பண பரிவர்த்தனை செய்வது சிறு தொழிலாளர்களும், சாதாரண பொதுமக்களும்தான். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் யாரும் தினமும் கையில் பணத்தை வைத்துக்கொண்டு திரிவதில்லை. கிரெடிட் கார்டு, ஆன்லைன் பர்ச்சேஸ், இன்டர்நெட் ட்ரான்ஸபெர் என்று அவர்களுடைய வாழ்க்கை வேறு. பழைய நோட்டுக்கள் செல்லாது, புதிய நோட்டுக்கள் மாற்ற வேண்டும் என்ற கவலை கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு இல்லை. ஏனென்றால் அவை ஏற்கெனவே வங்கிகளில்தான் இருக்கிறது.

ஆனால், படிப்பறிவில்லாதவர்களும், இணைய பயன்பாடு தெரியாதவர்களும்தான் கையில் 5௦௦, 1௦௦௦ ரூபாய் நோட்டுக்களாக வீட்டிலேயே சேமித்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் பழைய நோட்டுக்களை புதிய நோட்டுக்களாக மாற்றியாக வேண்டிய கவலையும் இருக்கிறது. ஒருவேளை கறுப்புப்பணம் வைத்திருப்பவர்களும் வீட்டில் பணத்தை பதுக்கி வைத்திருந்தால் அது செல்லாமல் போனாலும் அவர்கள் கவலைப் படமாட்டார்கள். ஏனென்றால் வங்கிகளை சேமிக்க முடியாத அளவுக்கு மீறிய பணத்தைத்தான் வீட்டில் பதுக்கி வைத்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. பல ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை லாரியுடன் விட்டு சென்ற சம்பவம் சமீபத்தில்தானே நடந்தது...? இதெல்லாம் ஒரு நாட்டின் பிரதமருக்கு தெரியாதா? அல்லது அவருடன் சேர்ந்து புதிய 2௦௦௦ ரூபாய் நோட்டிற்கான திட்டம் உருவாக்கியவர்களுக்குத்தான் தெரியாதா?

அரசின் உத்தரவிற்கு பயந்து உடனேயே அதை கடை பிடிப்பது அப்பாவி மக்கள் மட்டும்தான். ஆனால், ஊழல் செய்பவர்களும், வரி காட்டாமல் அரசை ஏமாற்றுபவர்களும் கடைசித் தேதியை மாற்றி 2௦ஆம் தேதி என்றும், இந்த மாதம் 30 கடைசி, அடுத்த மாதம் 15 கடைசி என்றும் நாட்களை தள்ளிப்போட்டு தங்களையும், தங்கள் பணத்தையும் எப்படியும் காப்பாற்றிக் கொள்வார்கள்.

ஆனால், எல்லா நேரங்களிலும் பாதிக்கப்படுவதும், ஏமாற்றப்படுவதும் அப்பாவிப் பொதுமக்கள்தான். எனவே மோடி அரசு மக்களைக் காப்பாற்றுமா? உண்மையாகவே கருப்புப்பணத்தை ஒழித்து ஏழைகள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குமா? என்பதே இன்றைய சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கருத்தாக எதிரொலிக்கிறது!

ஜெயின் ஹிந்த்!!


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக