புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸர்மிளா ஸைய்யித் கவிதைகளில் வெளிப்படும் பெண் இயங்கியல் (சிறகு முளைத்த பெண், ஒவ்வா என்ற கவிதைத்தொகுதிகள் ஊடாக)
Page 1 of 1 •
ஸர்மிளா ஸைய்யித் கவிதைகளில் வெளிப்படும் பெண் இயங்கியல் (சிறகு முளைத்த பெண், ஒவ்வா என்ற கவிதைத்தொகுதிகள் ஊடாக)
#1227113- ஜா.கிரிஜாபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 14/11/2016
ஸர்மிளா ஸைய்யித் கவிதைகளில் வெளிப்படும் பெண் இயங்கியல்
(சிறகு முளைத்த பெண், ஒவ்வா என்ற கவிதைத்தொகுதிகள் ஊடாக)
முன்னுரை
பெண் இயங்குத்தளம் சமுதாயக்கட்டுக்குள் அடங்கியது. பெண்ணானவள் தன் நிலை சார்ந்து விருப்பத்துடன் செயலாற்ற இச்சமுதாயம் அனுமதிக்கவில்லை. சமுதாய கட்டமைப்புக்குள் அடங்கிச் செயல்படும் பெண், அதிலிருந்து விடுபட நினைக்கும் பெண் இவ்வாறு பெண்களின் மன உணர்வு எவ்வாறு வெளிப்படுகிறது என்பதினைக் கவிஞர் ஸர்மிளா ஸைய்யித் கவிதைத்தொகுதிகளான சிறகு முளைத்த பெண், ஒவ்வா இவற்றின் ஊடாக வெளிப்படுத்துகிறது இக்கட்டுரை.
பெண்ணின் இருப்பு
ஆண்கள் எந்தச் சூழ்நிலையிலும் சுதந்திரத்துடனும் விரும்பியபடியும் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்கின்றனர். ஆனால் பெண்ணினுடைய வாழ்க்கை அப்படி அமைவதில்லை. ஒரு கட்டுக்குள்ளே அடக்கப்பட்டு முடக்கப்படுகிறது. இதனை, “கடலும் ஒரு காட்சியும்” என்ற கவிதை காட்டுகிறது. அதாவது தன் துணைவன் கடற்கரையில் இயற்கையை ரசித்து மகிழ, அவளோ தன் குழந்தையைப் பாதுகாக்கும் பணியில் அமர்ந்திருக்கிறாள். இதனை
“அலைக்கரங்களுக்குப் பாதங்களைத் தடவத் தருகிறான்
புரண்டுவரும் அலையை உதைத்துக் குதிக்கிறான்
அரண்டு அழும் குழந்தைக்கு
பால்புட்டியைத் திணித்தபடி
வியர்வை வழியும் முகத்துடன்
கரையோர மணல்மேட்டில் குந்தியிருக்கிறாள் அவள்” என்று காட்சிபடுத்தியுள்ளார் கவிஞர்.
தாய்மகன் உறவு
கவிஞர் பெண் என்பதால் அவரது கவிதைகளில் தாய்மையின் வெளிப்பாடும் காணப்படுகிறது. குழந்தையாக இருக்கும் பொழுது அவனின் மனவுணர்வினையும் அவன் பெரியவன் ஆனதும் ஏற்படும் மனவுணர்வினையும் ஒரு தாயாக இருந்து அவர் பதிவு செய்திருக்கும் தன்மை பெண்மன உளவியலை எடுத்துரைக்கிறது “முன்பும் இப்போதும்” என்னும் கவிதை. இதில் இயற்கையைக் கற்பனைக்குள் கொணர்ந்து ஓவியங்களோடு விளையாடும் குழந்தை பெரியவன் ஆனதும் மனிதக்கூட்டங்களோடு விளையாடும் மனவுணர்வு சித்தரிக்கப்பட்டுள்ளது.
“இப்போது -
தவிர்க்க ஒண்ணாமல்
சூரியனும் மேகமும் வரைகிறான்” என்ற வரிகள் குழந்தைகள் சமுதாய கட்டமைப்புக்குள் உருவாக்கப்படுவதினை உணர்த்துகின்றன.
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்” என்ற வள்ளுவர் வாக்குக்கிற்கேற்ப ‘ஒலை’ என்னும் கவிதை உள்ளது. இக்கவிதையானது தன் மகன் எதிர்காலத்தில் சிறந்த தலைமகனாக உருவாக வேண்டும் என்று விரும்பும் தாயின் உள்மன உணர்வினை வெளிப்படுகிறது.
‘உன்னை முன்னேற்றுவதிலே
கண்ணாயிரு
உற்சாகமாயிரு
கடினமாய் உழை
கடின உழைப்பு’ எனத் தொடரும் இக்கவிதை நல்லொரு மகனை உருவாக்க நினைக்கும் தாயின் அறிவுரைகளைக் கழறுகிறது.
பெண்களுக்கான கற்பிதம்
பெண்களுக்கெனச் சமுதாயம் வரையறுக்கப்பட்டுள்ள கற்பிதங்களிலிருந்து பெண்கள் விலகிச் சுதந்திரமாகச் செயல்பட்டால் அவளுக்குச் சமுதாயம் என்ன கற்பிதங்களைக் கற்பிக்கிறது என்பதை “அடையாளம்” என்ற கவிதை பதிவுசெய்கிறது.
‘இப்போது அவர்கள் சொல்கிறார்கள் என்னை
முர்தத் ஆனவள் இப்லீசுவின் சிநேகிதி என்று
எப்போதும் எவருக்கும் எந்நிலையிலும் குற்றமேதும் புரிந்திலாத
அகன்ற பரந்த என் நெற்றியில் இருப்பது
தினமும் முப்பத்திநான்கோ அல்லது அதிகமாகவோ
நான் சுஜூது செய்ததன் அடையாளம்!
மேற்குறிப்பிட்டுள்ள வரிகளிலிருந்து பெண்ணானவள் புரட்சிகரமாகச் செயல்பட்டால் அல்லது தன் கருத்தை வெளிப்படுத்தினால் முர்தத் (இஸ்லாத்தை விட்டு நீங்குதல்) இப்லீசுவின் சிநேகிதி என்றும் அடையாளப்படுத்தப்படுகிறாள். ஆனால் அவளின் நெற்றியில் அல்லாவைத் தரையில் வீழ்ந்து வணங்கியதால் ஏற்பட்ட வடு ‘சுஜூது’ காணப்படுகிறது. இதன்மூலம் மதம் சார்ந்த கொள்கைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தாலும் அவள் தன்னிச்சையாகச் செயல்பட்டால் அவளைச் இந்தச் சமுதாயம் ஐயக்கண்ணோடுதான் நோக்குகிறது என்பது விளங்குகிறது.
சுதந்திரபெண்
சமுதாயக்கட்டுகளை உடைத்துப் பெண் சுதந்திர உணர்வுடன் வாழ விரும்பும் பெண்ணின் மனவுணர்வை ‘ஒரு பாடலை எழுதிக்கொண்டிருக்கிறேன்’ என்ற கவிதை சித்திரிக்கிறது.
“நான் நடக்கும் சாலை
நான் படிக்கும் புத்தகம்
எனதாகவே இருக்கும்படி
நான் விரும்புவதாக இருக்கும்படி
வாழ்வேன்
இறுதி மில்லி வினாடி வரையும்
நான் வாழ்வேன்”
பெண்களுக்கான வரையறைகள்
சமுதாயம் பெண்களுக்குச் சில வரையறைகளைக் கட்டுரைக்கின்றன. அதிலும் மூஸ்லீம் இன மக்களுக்கு இன்னும் அதிகமாகவே வரையறைகள் நீள்கின்றன. இதனை ‘இருண்ட ஒற்றை நிறம்’ என்ற கவிதை, தலைப்பே உருவகத்தில் அமைந்து பெண்களுக்குச் சமுதாயம் வடித்துள்ள கட்டுக்களைப் பட்டியலிடுகிறது.
“ஒற்றை நிறம்
உனக்கான முன்தண்டனை
உன்னைத் திறக்காதே
……………………….
அவர்களுக்காகவே நீ அம்மணமாய்க் கிடப்பாய்
சில ஜாமங்களில்
சில பகல்களில்
சில பனி பூத்த காலைகளில்
உன்னில் கவிந்து கிடக்கும் இருண்ட ஒற்றை நிறம்” இக்கவிதை பெண்கள் ஆண்களின் கைப்பொம்மைகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் சமுதாயத்தை எடுத்துரைக்கிறது.
புறக்கணிக்கப்பட்ட பெண் நிலை
ஏதேனும் ஒரு காரணங்களால் பெண் சமுதாயத்தினரால் ஒதுக்கப்பட்டால் அவளின் கனவும் அழிக்கப்படுவதோடு அவளின் குழந்தையும் துயரத்தை அனுபவிக்கிறது என்பதினை ‘அவளுக்குத் தெரியாது’ என்ற கவிதை வலியுறுத்துகிறது.
“ஒவ்வொரு அதிகாலை எழுந்தும் கேட்கிறான்
இன்று நாம் வெளியே போகலாமா என்று
ஒவ்வொரு இரவும் உறங்க முன்னும் கேட்கிறான்
நாளை நாம் வெளியே போகலாமா என்று
இருள் கவிந்த இந்தத் திகில் வழியில்
என்னைத் தள்ளிவிட்டவர்களுக்குத் தெரியாது
எனக்கொரு பையன் இருக்கிறான்
அவனுக்கொரு உலகம் இருக்குதென்று”
சமுதாயம் இழைக்கும் அநீதிகளில் பெண் மட்டுமல்லாமல் அவளின் குழந்தையும் பாதிக்கப்படுகிறது என்பதை எடுத்தியம்பும் இக்கவிதை மூலம் தவறிழைக்கமாலே தண்டனை அனுபவிக்கும் தன்மை உணர்த்தப்படுகின்றது.
‘நீ அப்படியேதான் இருக்கிறாய்’ என்ற கவிதை வறட்சியான நிலத்தில் வளரும் ‘அகேசியா’ தாவரத்தைக் குறியீடாகக் கொண்டு பெண்ணின் இயல்பு விளக்கப்பட்டுள்ளது.
“உன் சின்ன இதழ்களையும் பூக்களையும்
நாங்கள் துவம்சம் செய்கிறோம்
எப்போதும் எதுவுமே சொல்வதில்லை நீ
அத்துணை கொடிய வெப்பத்திலும்
கொத்துக் கொத்தாய் உன்னை நாங்கள் விழுங்கியும்
நீ அப்படியேதான் இருக்கிறாய்
உன் தாட்சண்யத்தை என்னென்பது அகேசியா” இக்கவிதை பெண்ணானவள்
துயரங்களையும் இன்னல்களையும் தாங்கும் சுமைதாங்கி என்பதை வலியுறுத்துகிறது.
மனுக்குலத்தின் மாகௌரவம்
சமுதாயம் பெண்களுக்கு என்று வரையறுத்துள்ள செயல்பாடுகளைக் கட்டுடைத்துச் சுயாதீனத்துடன் செயல்பட்டால் அவளைப் பாவி எனக் கருதித் தண்டிக்கும் வன்முறையை எடுத்துரைக்கும் ‘அவளுக்கான அஞ்சலி’ என்ற கவிதை உள்ளத்தை உருகச்செய்கிறது. மேலும் இக்கவிதை தவறிழைத்தவர்களுக்குப் பதவியும் சிறப்பும் வழங்கப்பட்டு அவர்கள் சமுதாயத்தில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் வெட்கம் கெட்ட நிலையையும் உணர்த்துகிறது.
‘முகத்தைக் காண்பித்தபடி
தன்னந்தனியாய் ரயிலேறிப் பயணித்திருக்கிறாள்
வட்டமேசையில் ஆடவர் சிலரோடு சம்பாஷித்திருக்கிறாள்
……………………………………………..
அவளைக் கொன்றதால்
மனுக்குலத்தின் மாகௌரவம்
மேலும் மகத்தானதாக்கப்பட்டதாக
மார் தட்டிச் சொல்கிறார்கள்” இக்கவிதை சமுதாயத்தில் நிலவும் ஆணாதிக்கத்தின்
உச்சகட்டநிலையை எதிரொலிக்கின்றது.
வாழ்க்கையில் ஏமாற்றம்
வாழ்வின் இன்பத்தைப் பருகாமல் ஆண், பெண் என்ற முரண்பாட்டு நிலையில் வாழ்ந்து வாழ்வின் யதார்த்தத்தை இழக்கிறார்கள் என்பதை,
“எல்லாமும் மாய அர்த்தங்களால்
அலைக்கழிக்கும் வெற்றுச்சொற்கள்
நான் பெண், நீ ஆண்
பிரபஞ்சங்களின் முழுமை
நமக்குள்தான் புதைந்து கிடக்கிறது
தேடுவதும் அடைவதுமான வாழ்வில்
நான் உன்னையும் நீ என்னையும்
ஏமாற்றுகிறோம்!” என்று ‘வெற்றுச்சொற்கள்’ கவிதையில் புரிதல் இல்லாமல்
வாழ்ந்து, ஆண் பெண் என்ற கட்டுக்குள் வாழ்க்கையை இழக்கும் பரிதாப நிலையை விளக்கிக்காட்டுகிறார் கவிஞர்.
கைக்கிளை
பெண்கள் தங்கள் காதலை வெளிபடுத்துவதினை இச்சமுதாயம் அங்கீகரிக்கவில்லை. கவிஞர் ‘நெய்தல் பூக்களுக்கு இது தெரியாது’ என்ற கவிதையில் உள்ளத்தில் தோன்றும் காதல் உணர்வினை வெளிப்படுத்தி, கைக்கிளைத் திணையில் கவிதையைப் புனைந்துள்ளார்.
“அவனது மேடைப்பேச்சில் ஒரு சொற்கூட நினைவில்லை எனக்கு
நான் கவனித்துக் கொண்டிருந்ததெல்லாம்
மலை ஆடுகளின் கால்நகங்களாகத் தெரிந்த அவன் கண்களையும்
……………………………………………………………………………
திருட்டுத்தனமாகக் காதல் வளர்த்தேன்
இறக்கைகளால் அலாதியாக மூடி அடைகாத்தேன்
காதல் முட்டைகள் குஞ்சுகளாகிப் பறந்து
எனது வானத்தை அழகு செய்தன” என்று அவர் குறிப்பிட்டுள்ள வரிகள், தன்னைக்
கவர்ந்தவனை மனதுக்குள் அடைக்காத்து அதன் உணர்வில் வாழும் தன்மையை எடுத்துரைக்கின்றன.
காதல் வாழ்வில் பெண்களின் விருப்பங்கள் எல்லாம் கனவு நிலையிலேயே இருக்கின்றன என்பதை ‘வீணையின் பானம்’ என்ற கவிதை இனம்காட்டுகிறது. பெண்மன விருப்பங்கள் எல்லாம் நனவிலி நிலையிலேயே பரிணமிக்கின்றன என்பதைச் சுட்டும் கவிதையானது,
“மேகத்தின் யன்னல்களை உடைத்தெறி
புரவிகளென்ன, சிறு தேரைகள் நெருங்காத
இடம்தேடிச் செல்வோம்
நதிகளுக்கடியில் நமக்காகக் கூடமைப்போம்
கண்ணாடியில் படுக்கை சமைப்போம்
நம் கனிகளை அடைகாப்போம்” என்ற இக்கவிதை வரிகள் பெண்களின் நனவிலி
மனத்தை எடுத்துரைக்கின்றன.
‘பித்து’ என்னும் தலைப்பில் அமைந்த பாடல் தலைவன் இல்லாத இரவுபொழுதில் தலைவியின் தனிமையுணர்வைச் சித்திரிக்கிறது. இது சங்க இலக்கியங்கள் உணர்த்தும் முல்லைத்திணையின் இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்ற அகவொழுக்கத்தை வலியுறுத்துகிறது.
“பூமி வாயைப் பிளந்துக்கொண்டு
வாவெனக் கைநீட்டி அழைப்பதுமாய்…
பைத்தியம் முற்றிய இரவின் தாண்டவம்
கருமை இருளையும் என் காதுகளையும் கிழிக்கிறது
………………………………………………………………
நீ இல்லாத இரவு என் கழுத்தை நெரிக்கிறது” எனப் பிரிந்த தலைவனை நினைத்து
வருந்தும் பெண்மனம் சித்திரிக்கப்பட்டுள்ளது.
முடிவுரை
கவிஞர் ஸர்மிளா கவிதைகளில் தலைவனை நினைத்து வருந்தும் பெண், சமுதாயக்கட்டுக்களை உடைத்து வெளியேற நினைக்கும் பெண், அதனால் பெண்ணுக்கு இழைக்கப்படும் துன்பம் எனப் பெண்ணின் தளம் இயங்குகிறது, இயக்கப்படுகிறது என்பதைக் காட்சிபடிமத்துடனும், ஏக்கஉணர்வுடனும், ஆணாதிக்கத்தின் உச்சக்கட்டநிலையினையும் வலியுறுத்துகின்றன.

Similar topics
» சிறகு முளைத்த பூக்கள் ! நூல் ஆசிரியர் கவிஞர் கவிவாணன் ! நூல் விமர்சனம் . கவிஞர் இரா .இரவி !
» ஆபிரிக்காவில் கண்டு பிடிக்கப்பட்ட கொம்பு முளைத்த அதிசய பெண் பாம்பு!
» தா என்ற எழுத்தில் பெண் குழந்தை தமிழ் பெயர்கள் யாவை?
» பெண் என்ற காரணத்திற்காக கனிமொழிக்கு ஜாமீன் வழங்கிட கூடாது!: ஜெயலலிதா
» சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழ் பெற 10 ஆண்டாக போராடிய பெண் வக்கீல்

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1