ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 12:49 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Today at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்!

2 posters

Go down

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்! Empty இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்!

Post by ayyasamy ram Thu Nov 10, 2016 8:34 am

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்! KifwVXcwTB8kQMQPGThA+tessy_thomas
-
நவீன போர்க்களத்தின் அத்தியாவசிய ஆயுதமாகிவிட்ட ஏவுகணைகளுக்கு பிற நாடுகளைச் சார்ந்திராமல், நமக்கு நாமே சுயசார்புடன் இருப்பதற்காக, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (Defence Research and Development Organization- DRDO) மேற்கொண்டுள்ள ஏவுகணைத் தயாரிப்புத் திட்டத்தின் (IGMDP) சூத்திரதாரி, இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்று அழைக்கப்படும் ஏ.பி.ஜே.அப்துல் கலாம்.

அதேபோன்று, அப்துல் கலாமினால் அடையாளம் காணப்பட்டு, இந்தியாவின் ஏவுகணைப் பெண்மணி என்று பெயரெடுத்தவர், கேரளத்தைச் சேர்ந்த விஞ்ஞானியான டெஸ்ஸி தாமஸ்.

கேரள மாநிலம், ஆலப்புழாவில், 1963, ஏப்ரலில் டெஸ்ஸி தாமஸ் பிறந்தார். தந்தை வனத்துறை அதிகாரி. இளம் வயதில் தும்பா ஏவுதளத்தின் அருகே அவர்களது குடும்பம் குடியிருந்தது. அப்போது அங்கிருந்து ஏவப்பட்ட ராக்கெட்களைக் கண்டு, டெஸ்ஸிக்கு அதன்மீது ஈர்ப்பு ஏற்பட்டது.

திருச்சூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக். படித்த அவர், அடுத்து புனேவிலுள்ள ஆயுதத் தளவாட தொழில்நுட்பக் கல்லூரியில் சேர்ந்து, ஏவுகணைக் கல்வியில் எம்.டெக். பட்டம் பெற்றார். கல்லூரிப் படிப்பின்போது சிறந்த பாட்மின்டன் வீராங்கனையாகவும் அவர் விளங்கினார்.

அடுத்து குடிமையியல் தேர்வு எழுதினார். அதற்கான மற்றொரு தேர்வுக்கு அழைப்பு வந்த அதே நாளில், டிஆர்டிஓ அமைப்பிடமிருந்து பணி நேர்காணலுக்கும் அழைப்பு வந்தது. ராக்கெட்கள் மீதான ஆர்வத்தால், ஐஏஎஸ் கனவைத் துறந்து டிஆர்டிஓ சென்றார். ஹைதராபாத் மையத்தில் (Advanced System Laboratory- ASL) 1985-இல் இளநிலை விஞ்ஞானியாக இணைந்தார்.

அங்கு ராக்கெட் ஆய்வுகளில் ஈடுபட்டிருந்த அப்துல் கலாம் டெஸ்ஸியின் திறமையை உணர்ந்து, அவரை ஏவுகணை திட்டக்குழுவில் (1988) சேர்த்தார்.
ஆரம்பத்தில் அக்னி-3 ஏவுகணைத் திட்டத்தின் உதவி திட்ட இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டார். அதன் ஆரம்பகட்டத் தோல்விக்கான காரணங்களைக் கண்டறிந்து சரிப்படுத்தியதில் டெஸ்ஸியின் பங்களிப்பு முக்கியமானது. 3,000கி.மீ. தொலைவிலுள்ள இலக்கைத் தாக்கும் வல்லமை கொண்ட அக்னி-3, மே 2008}இல் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. அதையடுத்து, 4,000 கி.மீ. தொலைவுக்கு பாயும் அக்னி- 4 ஏவுகணைத் திட்டம் துவங்கியது. அதன் திட்ட இயக்குநராக டெஸ்ஸி நியமிக்கப்பட்டார்.

இத்துறையில் முதல்முறையாக ஒரு பெண்ணாக அதனை டெஸ்ஸி சாதித்தார். அதற்கு அவரது தொழில்நுட்பத் திறனும், எடுத்த பணியை முடிக்கும் ஈடுபாடும் காரணமாகின. 2011-இல் அக்னி-4 வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது.

இதனிடையே 5,000 கி.மீ. தொலைவுக்கு கண்டம் விட்டு கண்டம் தாண்டும் அக்னி-5 ஏவுகணைத் திட்டம் 2009-இல் துவங்கப்பட்டது. அதன் திட்ட இயக்குநராகவும் டெஸ்ஸி தாமஸ் பொறுப்பேற்றார். அக்னி-5 ஏவுகணை 2012, ஏப்ரல் 19-இல் வெற்றி இலக்கை எட்டியது.

இதில் டெஸ்ஸியின் குறிப்பிடத்தக்க பணியாகக் கருதப்படுவது, வளிமண்டலத்தில் அதீத திசைவேகத்தில் செல்லும் ஏவுகணையின் வெளிப்புறம் உருவாகும் உச்சபட்ச ( சுமார் 3,000 டிகிரி செல்சியஸ்) வெப்பத்தைச் சமாளிக்கும் தொழில்நுட்பமாகும். வளிமண்டல ஏவுகலன் நுழைவு முறை என்று அழைக்கப்படும்(Re entry Vehicle System- RVS) அந்தத் தொழில்நுட்பம் டெஸ்ஸி தாமஸின் நிபுணத்துவத்தை வெளிப்படுத்தியது.

அதுமட்டுமல்ல, ஏவுகணையின் தாக்குதல் இலக்கில் ஏற்படும் உத்தேசப் பிழையின் அளவு (Circular error probable- CEP) 40 மீட்டருக்குள் கட்டுப்படுத்தப்பட்டது. தற்போது, உலக அளவில் மிகத் துல்லியமானவையாக அக்னி ஏவுகணைகள் மதிக்கப்படுகின்றன.

விஞ்ஞானி என்பதால் தனது குடும்பக் கடமைகளை டெஸ்ஸி தாமஸ் கைவிட்டுவிடவில்லை. அவர் புனே கல்லூரியில் படித்தபோது சக மாணவர் சரோஜ்குமார் படேலைக் காதலித்து, மதம் கடந்த மணம் புரிந்தார்.

சரோஜ்குமார் கப்பற்படையில் கமாண்டராக உள்ளார். அவர்களுக்கு தேஜாஸ் என்ற மகன் உள்ளார். ஒரு சிறந்த குடும்பத் தலைவியாகவும், அதேசமயம் திறமையான விஞ்ஞானியாகவும் டெஸ்ஸி தாமஸ் விளங்குவதாக ஊடகங்கள் பாராட்டுகின்றன.

டெஸ்ஸி தாமஸின் சாதனைகளுக்காக அவருக்கு லால்பகதூர் சாஸ்திரி விருது, மதிப்புறு முனைவர் பட்டம் உள்ளிட்ட கௌரவங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் அக்னிபுத்ரி என்று பாராட்டப்படும் அவரது ஏவுகணை திட்டப் பணிகள் இன்றும் தொடர்கின்றன.
– வ.மு.முரளி.

லைஃப் ஸ்டைல் ஸ்பெஷல் – தினமணி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84090
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்! Empty Re: இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்!

Post by ராஜா Thu Nov 10, 2016 11:50 am

இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண்மணி டெஸ்ஸி தாமஸ்! 3838410834 நன்றி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum